. வி.யாபாரத்துக்கு என சில சென்டிமென்ட்கள் இருப்பது போலவே விவசாயத்துக்கும் சில சென்டிமென்ட்கள் உண்டு..
'சித்திரை மாசம் தங்க வளையலை உழவுல போடு’ என்பது சொலவடை. அதாவது, சித்திரை மாதம் கோடை உழவு செய்யும் மண்ணில் பொன் விளையும் என்பதைத்தான் தங்க வளையலை விதைத்தால் கூட தங்கம் விளையும் என்ற அர்த்த தில் சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.

அதே போல விதை ஊன்றுவதில் பல சென்டிமென்ட்கள் உண்டு. மண்ணுக்குள் விளையும் கிழங்கு, நிலக்கடலை மாதிரியான பயிர் களை கீழ்நோக்கு நாளிலும், பூமியின் மேற்பகுதியில் மகசூல் கொடுக்கும் தானியப் பயிர்களை மேல்நாக்கு நாளிலும் விதைப் பார்கள். அமாவாசைக்கு அடுத்த நாள், கரிநாள், அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் விதைக்கும் பணியைச் செய்ய மாட்டார்கள்.

மானாவாரி நிலங்களில் ஆடி மாதம் விதைத்தால் கார்த்திகை வரை மழை கிடைக்கும் என்பதால் ஆடிப்பட்டத்தில்தான் அதிகம் விதைப்பார்கள். 'ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது இதனால்தான். ஆடி மாதத்திலும் ஆடி 18 அன்றுதான் பெரும்பாலும் விதைப்பார்கள்.

நமது பொருளாதாரம் விவசாயத்தை ஒட்டியே ஒடிக் கொண்டிருப்பதால் அனைத்து தொழில்களும் அதைச் சார்ந்தே இருக்கின்றன. 'ஆடித் தள்ளுபடி’ விற்பனை ஆரம்பமாக காரணமே அந்த மாதத்தில் விவசாயிகளிடம் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதே நேரம் விதைப்பு உள்ளிட்ட பணிகளில் பிஸியாக இருப்பார்கள் என்பதால் அந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த மாட்டார்கள். டல்லான விற்பனையைத் துரிதப்படுத்த நகை மற்றும் துணிக்கடை வியாபாரிகள் ஆரம்பித்து வைத்த பிஸினஸ் டெக்னிக்தான் ஆடித் தள்ளுபடி விற்பனை. 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சென்டிமென்டுக்கும் காரணம், அது அறுவடை மாதம். பணப் புழக்கம் அதிகமா இருக்கும் என்பதால்தான்!

- ஆர்.குமரேசன்.