. அ.ப்பாடா என்று பெருமூச்சு விடுகிற அளவுக்கு உருப்படியான ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறது தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்’. 'வருகிற ஜனவரி முதல் தேதி தொடங்கி எந்த செல்போன் நிறுவனமாக இருந்தாலும் சரி, டெலி மார்க்கெட்டிங் என்ற பெயரில் வாடிக்கையாளருக்கு நேரம், காலம் பார்க்காமல் போன் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அவ்வளவு ஏன், சம்பந்தமில்லாமல் ஒரு எஸ்.எம்.எஸ்.கூட அனுப்பக்கூடாது’ என்று கறார் உத்தரவு பிறப்பித்திருக்கிறது டிராய். .
ராத்திரியும் பகலும் நம்மை ஒருவேலையும் செய்யவிடாமல் ''சார், கடன் வேணுமா? கார் வாங்குறீங்களா? இன்ஷூரன்ஸ் பாலிசி எடுங்களேன்!'' என்று காதை ரத்தகளறியாக்கும் போன்கால்களால் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமில் ஆரம்பித்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய போன்கால்கள் குறித்து அடுக்கடுக்காக புகார்கள் குவியவும், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டிராய் கடைசியில் சவுக்கை எடுத்துவிட்டது!

இது குறித்து 'டிராய்’ அமைப்பின் ஆலோசகர் சுனில்குமார் குப்தாவிடம் பேசினோம்...

''சில ஆண்டுகளுக்கு முன்பே 'டெலிஷாப்பிங்’ நிறுவனங்களுக் கென சில வரைமுறைகளை வகுத்து வெளியிட்டோம். ஆனால் அந்த வரைமுறைகளை அவை முறையாகப் பின்பற்றவில்லை. காரணம், தவறு செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் அபராதமும் குறைவாக இருந்ததுதான். இப்போது நாங்கள் கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகளை நடைமுறைப் படுத்தினால் நிச்சயம் புகார்கள் குறையும்'' என்றார்.

'டிராய்’ அப்படி என்னதான் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது?

'டெலிஷாப்பிங்’ போன்கால்களை இரண்டு விதமாகப் பிரித்திருக்கிறது. ஒன்று முழுமையாக விரும்பத்தகாத போன்கால்கள் [fully blocked]; மற்றொன்று ஒரு பகுதியை [partially blocked] மட்டும் மறுப்பது. இந்த இரண்டில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய லாம். போன்கால்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத பிரிவுக்கு Do Not Call என்றும், ஒரு பகுதியை மட்டும் மறுக்கும் பிரிவுக்கு Do Call என்றும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

Do Call என்கிற பிரிவில் உங்களுக்கு எந்தத் துறை தொடர்பான தகவல் வேண்டுமோ, அது தவிர வேறு துறை தகவல்கள் உங்களுக்கு வராது.

அது மட்டுமல்ல, இனி 'டெலிஷாப்பிங்’ தொடர்பான அழைப்புகள் பகலில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இரவு ஒன்பது முதல் காலை ஒன்பது மணி வரை டெலிஷாப்பிங் நிறுவனங்கள் எந்த தகவலும் அனுப்பக்கூடாது. தவிர, ஒரு சந்தாதாரர் தனக்கு தகவல்கள் வேண்டாம் என்று சொன்ன ஏழு நாட்களுக்குள் அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இந்த வசதியைப் பெற எங்கும் அலைய வேண்டியதில்லை. நீங்கள் எந்த மொபைல் கம்பெனியின் இணைப்புகளைப் பெற்றி ருந்தாலும் 1909 என்கிற எண்ணுக்கு வாய்ஸ்கால் மூலமாகவோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தகவல்களைக் கொடுக்க லாம். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை என்று டிராய் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது.

சரி, 'டெலிஷாப்பிங்’ கால்கள் வேண்டாம் என்ற பிறகும் தொடர்ந்து நமக்கு தொல்லை கொடுத்தால்...? இந்தக் கேள்வியை குப்தாவிடம் கேட்டபோது அதற்கும் பதில் சொன்னார்.

''தவறு செய்யும் டெலிமார்கெட்டிங் நிறுவனங்கள் மீது இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு தவறு செய்தால் வெறும் ஐயாயிரம் ரூபாய் தான் அபராதம் விதித்தோம். இப்போது அதை அதிகரித்திருக்கிறோம். ஆறு முறைக்கு மேல் தவறு செய்யும் நிறுவனங்கள் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப் படும். இத்தகைய டெலிஷாப் நிறுவனத்துக்கு எந்த தொலைபேசி நிறுவனங்கள் மூலமாகவும் இரண்டு வருடங்களுக்கு சர்வீஸ் வழங்கப்பட மாட்டாது' என்றார்.

இந்த வரைமுறைகள் எல்லாம் 'டிராய்’-ல் பதிவு செய்து கொண்ட 'டெலிஷாப்பிங்’ நிறுவனங்களுக்குத் தானே! பதிவு செய்யாத 'டெலி ஷாப்பிங்’ நிறுவனங்களிட மிருந்து தொல்லை அழைப்புகள் வந்தால் 'டிராய்’ நடவடிக்கை எடுக்குமா?

இந்தக் கேள்விக்கும் பதில் சொன்னார் அவர். ''பதிவு செய்யவில்லை என்கிற காரணத்தைச் சொல்லி இனி தப்பிக்க முடியாது. எந்தவொரு நிறுவனமும் நூறு எஸ்.எம்.எஸ்-களுக்கு மேல் அனுப்ப அனுமதி கிடையாது. சில நிறுவனங்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைக்காக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்புவதற்கு 'டிராய்’ அனு மதியளிக்கிறது. உதாரணமாக வங்கி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வர்த்தக தகவல்களை [transactions] அனுப்ப விலக்கு அளித்துள்ளது. ஆனால் புரமோஷனல் [Promotional] தகவல்களை அளிக்க அனுமதி யில்லை. எனவே தேவை இல்லாத போன்கால்கள் என்கிற புகார் இனி வராது. அப்படியே வந்தாலும் அதன் எண் 70 என்கிற நம்பரில் தொடங்கும். நீங்கள் அந்த போனை தவிர்க்க விரும்பினால் உடனே 'கட்’ செய்துவிடலாம்'' என்றார்.

'டெலிஷாப்பிங்’ தொல்லையிலிருந்து நாம் விடுதலை பெற 'டிராய்’ நிறையத்தான் மெனக்கெட்டிருக்கிறது.

- கண்பத்
படங்கள்: எஸ்.ஜி.ஆர்.ஆர்.