. ''க.ல்யாணத்துக்கு முன்னாடி பணம் பத்தின கவலையோ நெருக்கடியோ பெரிசா எதுவும் வந்ததில்ல. எனக்குக் கல்யாணமான புதுசு... என் கணவர் லாரன்ஸ் அப்போ ஒரு பதிப்பகத்துக்கு சுய முன்னேற்ற புத்தகங்கள் எழுதிக் கொடுத்துக் கிட்டு இருந்தாரு. சொந்தமாவும் புத்தகம் போடுவார். ஒருதடவை புத்தகம் ஒண்ணை வெளியிடறதுக்கு 25,000 ரூபாய் அவசரமா தேவைப்பட்டுச்சு. சொந்தக்காரங்க, ஃபிரண்ட்ஸ்னு நிறைய பேர்கிட்டே கேட்டும் யாரும் கொடுக்கல. கடைசியில அலைஞ்சு திரிஞ்சு வட்டிக்கு கடன் வாங்கினோம். பணத்தோட தேவைய புரிய வச்ச முதல் சம்பவம் இது..
அடுத்த சம்பவம்... என் மாமனாருக்கு கிட்னி பிரச்னை. திண்டுக்கல்ல இருந்து சென்னைக்கு ட்ரீட்மென்ட்டுக்காக எங்க வீட்ல வந்து தங்கினாரு. ஆஸ்பத்திரி செலவு, ஆட்டோ செலவுக்குக் கூட பணம் கொடுக்க முடியல. முடிஞ்ச வரைக்கும் பார்த்துட்டு திண்டுக்கல்லுக்கு போயிட்டாரு. மறுபடியும் உடம்பு சரியில்லாம சீரியஸ் கண்டிஷன்னு சொன்னதும் அடிச்சுப் பிடிச்சு நானும் என் கணவரும் திண்டுக்கல் போனோம். அவரோட செலவுக்கு காசு கொடுக்கலாம்னு பர்ஸ பார்த்தா எங்ககிட்ட வெறும் 500 ரூபாய்தான் இருந்துச்சு. அதைக் கொடுத்துட்டா நானும் என் கணவரும் சென்னைக்கு வர முடியாதே. கடைசி நிமிஷம் வரைக்கும் காசு கொடுக்க முடியலை. அடுத்த ஒரே வாரத்துல என் மாமனார் இறந்துட்டாரு. வெளியூர் போயிருந்த என் கணவர் தகவல் தெரிஞ்சு அப்படியே கிளம்பிப் போய்ட்டாரு. என்கிட்ட காசு இல்ல. உண்டியலை உடைச்சுப் பார்த்தாலும் ஒண்ணும் தேறல. நகைய விற்கலாம்னு பார்த்தா அன்னிக்கு செவ்வாய்கிழமை கடை இல்ல. கூனிக்குறுகி நின்ன சமயத்துல பக்கத்துவீட்டு அக்கா பரிதாபப்பட்டு 500 ரூபாய் கொடுத்தாங்க.

கடைசி நிமிஷத்துல கூட என் மாமனாருக்கு உதவ முடியலங்கற வருத்தமும், குற்ற உணர்வும் இன்னும் இருக்கு. பணத்தோட அருமையையும் மதிப்பையும் அப்போதான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன்.

ஏதோ வருது, என்னமோ போகுதுனு இருந்த நான், இந்த சம்பவத்துக்கு அப்புறமா பிளான் பண்ண ஆரம்பிச்சேன். பட்ஜெட் போட்டு செலவுகளைக் கவனிக்க ஆரம்பிச்சேன். குழந்தைகளுக்காக சேமிக்கறதுல அதிகமா கவனம் செலுத்தினேன். நல்லவேளையா அப்போ என் கணவருக்கு கல்லூரியில பேராசிரியர் வேலை கிடைச்சது. வருமானம் கூடுதலா வர ஆரம்பிச்சாலும் செலவைக் கூட்டிடாம பார்த்துக்கிட்டேன். வாடகை, கோயில், உண்டியல், பால், கேஸ், காய்கறி, கரன்ட் பில், அவசரச் செலவுன்னு தனித்தனியா பிரிச்சு கவர் போட்டு வச்சிருவேன். மருத்துவச் செலவுக்குன்னு தனியா பட்ஜெட் போடுறேன். ஆனா மருத்துவச் செலவு வராத அளவுக்குப் பார்த்துக்கிட்டு அந்தக் காசையும் சேமிக்கிறேன்.அம்பது நூறுன்னு எவ்வளவு மிச்சமானாலும் பேங்கல போட்டுருவேன். வருஷத்துக்கு ரெண்டு தடவை மட்டுமே டிரெஸ் எடுப்பேன். மொத்தப் பணம் போட்டு நகை வாங்க முடியாதுங்கிறதால மாதம் ஆயிரம் ரூபாய் நகைச்சீட்டுக் கட்டுறேன். ஒரு முறை என் சித்தப்பா பொண்ணு சடங்குக்கு நகை போட வேண்டிய தேவை வந்துச்சு. மாதச்சீட்டுக் கட்டுனதாலதான் சமாளிக்க முடிஞ்சது. என் கணவர் சுய முன்னேற்றப் பயிற்சியா ளராவும் இருக்கிறதால அதிலேயும், புத்தகம் எழுதுறதுலயும் வர்ற பணத்தை அப்படியே சேமிக்கிறேன். என் குழந்தைகளுக்கு வருஷா வருஷம் பீஸ் கட்டுறது, வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குறதுக்கு மட்டும்தான் இதை எடுப்பேன்.

தீபாவளி, கிறிஸ்துமஸ்னு பண்டிகை டைம்ல டிவி, ஃபிரிட்ஜ், ஏ.சின்னு டிஸ்கவுன்ட்லதான் வாங்குவேன். இதனால ஐநூறுல இருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் மிச்சப்படுத்த முடியுது. அதே சமயம் எந்த கம்பெனி பொருள் எவ்வளவு விலைன்னு அப்டேட் செஞ்சிட்டு, அந்த விலைக்கு அது தரமா, தகுதியான்னு பார்த்துட்டுதான் வாங்குவேன். அடுத்த வருஷம் வாங்கப்போற பொருளைப் பத்தின அத்தனை விவரங்களையும் இப்போ இருந்தே சேகரிக்க ஆரம்பிச்சுடுவேன். முப்பது ரூபாய் கொடுத்து அழுகின வெங்காயம் வாங்கறதவிட ஐம்பது ரூபாய் கொடுத்து நல்ல வெங்காயம் வாங்குறதுதான் லாபங்கறது என்னோட கேஷ் கவுன்டர் ரகசியம். விலை குறைவுங்கறதுக்காக ஆசைப்பட்டு அவசரப்பட்டு வாங்குனா நஷ்டம்தான் வரும்.

கிரெடிட் கார்டு எங்ககிட்ட கிடையாது. அது நம்ம தகுதிக்கு மீறி செலவு பண்ண வைக்கிற சங்கதிங்கறது என் அபிப்ராயம். கண்ணுல கண்டத வாங்கணும்னு தூண்டுற சமாசாரம் அதுன்னு நான் நினைக்கிறேன். எங்க வீட்டுல ஜாயின்ட் அக்கவுன்ட்தான். அதனால பேங்க் டீலிங் மொத்தமும் நான்தான் பார்த்துக்கறேன். அதனால எந்த ஸ்கீம்ல என்ன லாபம்ங்கற விஷயங்கள் எனக்கு அத்துப்படி. மத்தபடி குழந்தைங்க பேர்ல இன்ஷூரன்ஸும் பண்ணியிருக்கேன்.

எதிர்காலத்தோட ஒவ்வொரு அசைவையும் முடிவு பண்ற அளவுக்கு தெளிவா திட்டம் போட்டுருக்கேன். அடுத்த அஞ்சு வருஷத்துல பத்து லட்சம் சேமிக்கணும்றதுதான் என் பிளான்!''

-க.நாகப்பன்.
படங்கள்: என்.விவேக்.