Published:Updated:

ஊரடங்கு காலத்தில் இணையத்தின் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பதற்கான 6 வழிகள்! 

Work From Home
Work From Home

பணம் சம்பாதிக்க என்ன விதமான வழிமுறைகள் எல்லாம் இருக்கின்றன என, இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். பின்னர் அவை நிரந்தர வருவாயைப் பெறுவதற்கும் வழிவகுக்கும்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சில நடைமுறைகள் மட்டும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தை இணையத்திலேயே செலவழிக்கின்றனர். இப்படி இணையத்தில் நேரத்தைச் செலவழிக்கும் அதே நேரத்தில், இணையம் மூலமாக வருவாயும் ஈட்ட முடியும்.

இணையம் மூலம் பணம் சம்பாதிப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. உடனடியாக எந்த வழியிலும் எடுத்தவுடன் பணம் ஈட்ட முடியாது. அதுபோல்தான் இணையமும், கொஞ்சம் கால அவகாசம் தேவை. ஆனால், பணம் ஈட்ட எந்த மாதிரியான வழிமுறைகள் எல்லாம் இருக்கின்றன என இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். பின்னர் அவை நிரந்தர வருவாயைப் பெறுவதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு இணையம் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

Online classes
Online classes

1.இணைய வகுப்பு : (Online Classes)

நீங்கள் குறிப்பிட்ட பாடத்தில் சிறந்து விளங்குபவர் என்றால் இணையம் மூலமாக மற்றவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம். இதற்கு முதலில் நீங்கள் இணைய கல்வி வழங்கும் தளத்தில் ஆசிரியராகப் பதிவு செய்யவேண்டும். இணைய ஆசிரியராகப் பதிவு செய்தபிறகு ஒரு மணிநேரத்திற்கு ₹ 200-ல் இருந்து ₹ 500 வரை நீங்கள் எடுக்கும் பாடத்திற்கு ஏற்ப உங்களால் சம்பாதிக்க முடியம். உங்கள் துறையில் சிறந்து விளங்கினால் அதிகப்படியான வகுப்புகளை உங்களால் எடுக்க முடியும். இதற்கு முன்னர் இணைய வகுப்புகள் எடுப்பதற்கான பயிற்சிகளும் உங்களுக்கு வெபினார் மூலம் வழங்கப்படும்.

இணைய தளங்கள்:

இந்த க்வாரன்டீனில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு 7 தளங்கள்!

2. ஃப்ரீலான்ஸிங்க்: (Freelancing)

ஃப்ரீலான்ஸிங்கில் உங்களிடம் ஏற்கெனவே உள்ள திறமையைப் பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். உதாரணமாக நீங்கள் எழுதுதல், ஓவியம் வரைதல் அல்லது போட்டோகிராஃபி உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கினால் அதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியம். உங்களது திறமைக்கேற்ப வாடிக்கையாளர்கள் அணுகத் தொடங்குவார்கள்.

Freelancing
Freelancing

எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை பார்க்காமல் இருப்பவர்கள் இந்த ஃப்ரீலான்ஸிங் மூலம் வருமானம் ஈட்டலாம். நம் திறமையைப் பொறுத்து ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஃப்ரீலான்ஸிங் பணிகளிலும் ஈடுபடலாம். 2019-ல் நடத்தப்பட்ட `பே பால்' (Pay Pal) சர்வேயின்படி இந்தியாவில் ஃப்ரீலான்ஸிங் பணிகளின் மூலம் சிலர் சராசரியாக ₹19 லட்சம் வரை வருட ஊதியம் பெறுகிறார்கள். ஃப்ரீலான்ஸில் ஈடுபட உங்கள் திறமைகளை அதற்கென இருக்கும் இணையதளத்தில் பட்டியலிடுவதன் மூலம் நமக்கான வேலைகளை நாமே தேடிக் கொள்ளலாம். உங்களது திறமைக்கேற்ற வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

ஃப்ரீலான்ஸிங் வேலை தொடர்பான இணையதளங்கள்:

3. சமூக ஊடக மேலாளர் பணி : (Social Media Manager)

சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுபவராக இருந்தால் சமூக ஊடக மேலாளர் பணி உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பொதுவாக, சமூக வலைதளங்களில் வணிகக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதைப் பராமரிக்க தனியே ஆட்களை நியமிப்பார்கள். உங்களிடம் சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் யுக்தியும், நேர மேலாண்மைத் திறனும் இருந்தால் சமூக ஊடக மேலாளராகப் பணிபுரியலாம். இதற்கு வணிகத்தில் அதிகப்படியான நபர்களுடன் தொடர்பிலிருந்தால் போதும். மேலும், இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் வாடிக்கையாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பணிக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களைத் தெளிவாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான வாய்ப்புகள் ஃப்ரீலான்ஸிங் தளங்களிலேயே கிடைக்கும்.

சமூக ஊடக மேலாளர்
சமூக ஊடக மேலாளர்

4. யூடியூப் சேனல்: (Youtube Channel)

இதைப் பற்றி நாம் தனியாகக் கூறத் தேவை இல்லை. இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியப் பங்கு காணொளிகளுக்கு இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் யூடியூப் சேனல்கள் பல மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கின்றன. காணொளிகளைத் தயாரிக்க உங்களிடமும் வித்தியாசமான யோசனைகள் இருந்தால் நீங்களும் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கலாம். இதில் உடனடியாகச் சம்பாதிக்க முடியாது என்றாலும் உங்களுக்கான பிரத்யேக பார்வையாளர்களை நீங்கள் உருவாக்கிய பிறகு உங்கள் காணொளிகள் மூலம் உங்களால் பணம் ஈட்ட முடியும். யூடியூப்பில் மானிடைசேஷன் (பணம் ஈட்ட வேண்டும் என, காணொளிகள் பதிவேற்றம் செய்பவர்களுக்கான விதிமுறைகள் இருக்கின்றன. இதை அந்தத் தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்) செய்தால் மட்டுமே பணம் ஈட்ட முடியும். இதில் குறிப்பிட்ட இடைவெளியில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலம் சந்தாதாரர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

ராகுல் காந்தி ட்வீட், பிரெஞ்ச் ஹேக்கர், ப்ரைவஸி சிக்கல்... தொடரும் ஆரோக்கிய சேது சர்ச்சைகள்!#FullAnalysis

5. மொழிப் பெயர்ப்பாளர்: (Translator)

உங்களுக்குப் பன்மொழி திறமை இருந்தால் நீங்கள் இணையம் மூலமாக பல நிறுவனங்கள் மற்றும் இணையதளத்திற்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றலாம். இதற்கு ஏதேனும் இரு மொழிகளில் எழுத்துத் திறன் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். நிறுவனங்கள் அல்லது இணையதளங்கள் பல்வேறு வேலை வாய்ப்பு இணையதளங்களில் மொழிப்பெயர்ப்பாளருக்கான தேவை பற்றி அறிவிப்பு செய்யும். இதில் வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் உங்களால் சம்பாதிக்க முடியும்.

online jobs
online jobs

6. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கலை வகுப்புகள்:

உங்களிடத்தில் இருக்கும் கலை சார்ந்த திறமைகளைக் கொண்டு சொந்தமாகவே சம்பாதிக்க வேண்டும் என்றால் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடனம், இசை, உடற்பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கலாம். இதை ஜும் போன்ற வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகள் மூலம் கற்றுக்கொடுக்கலாம். இவ்வாறு வகுப்புகள் எடுப்பதற்கு முன்னர் முறையே அதனை விளம்பரப்படுத்த வேண்டும். அதன் மூலம் அதிகப் பயனர்களைப் பெற முடியும். விளம்பரப்படுத்துவதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் இருக்கும் இடங்களில் அருகிலேயே இது போன்ற வகுப்புகள் எடுப்பதன் மூலம் இந்த க்வாரன்டைனில் நாமும் பணம் ஈட்ட முடியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் இந்த க்வாரன்டைன் உபயோகமாக இருக்கும்.

இந்த ஊரடங்கு நேரத்தில் இதில் ஏதேனும் ஒரு வகை மூலமோ, அல்லது வேறு வழிகளோ பணம் சம்பாதித்து வருகிறீர்களா... உங்களின் அனுபவங்களை கமென்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு