. பொ.ன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைக் கேள்விப்பட்டிருப்போமே... அந்த கதையாகிக்கொண்டிருக்கிறது முதலீட்டு விஷயமும்! குறிப்பாக தங்கத்தில்!! இதுநாள்வரை முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை வாங்கி வந்தவர்கள், இப்போது வேறு எதில் முதலீடு செய்யலாம் என்ற சிந்தனையில் இறங்கிவிட்டார்கள். காரணம் தற்போதைய விலையில் தங்கத்தை வாங்குவது எவ்வளவு தூரம் லாபகரமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்திருப்பதுதான். பூஜை, புனஸ்கார விஷயத்தில் வேண்டுமானல் தங்கத்துக்குப் பதில் பூவை வைத்துக்கொள்ளலாம். ஆனால் முதலீட்டு விஷயத்தில்? தங்கத்துக்கு மாற்று இருக்கிறதா என்றால் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்..
அப்படி அவர்கள் கைகாட்டுவது வெள்ளியைத்தான்!

தங்கத்துக்கு வெள்ளி சரியான மாற்றாக இருக்குமா? அதில் முதலீடு செய்தால் தங்கம் தந்த வருமானத்தை அது தருமா என்பதை எல்லாம் பார்ப்பதற்கு முன்பாக வெள்ளியின் வரலாறையும் அதன் விலை ஏற்ற சரித்திரத்தையும் பார்த்துவிடுவோம்.

சுமார் 8,000 வருடங்களுக்கு முன்பிருந்தே வெள்ளியின் பயன்பாடு உலகளவில் இருந்து வந்திருக்கிறது. தங்கமும் தாமிரமும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அறிமுகமான முக்கியமான உலோகம் வெள்ளிதான். வெள்ளிக்கென தனியாக மூலக்கூறு ஏதும் இல்லை. தாமிரம், காரீயம், துத்தநாகம் போன்ற மற்ற உலோகங்களின் தாதுக்களில் இருந்துதான் பெரும்பாலும் வெள்ளி கிடைக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் நாணயங்கள் தயாரிப்பதற்கும் பண்டமாற்று முறைக்கும் மட்டுமே வெள்ளி பயன்பட்டு வந்தது. அதன்பிறகு வெள்ளியின் பிற பயன்களும் ஆராய்ச்சிகளால் தெரிய வர, அதன் மதிப்பு மெள்ள மெள்ள உயர ஆரம்பித்தது. இன்றைய நிலையில் 95% வெள்ளி தொழிற்துறை, புகைப்படத்துறை, ஆபரணத் தயாரிப்பு இதற்கே பயன்படுத்தப்படுகிறது.

விலை நிலவரம்!

1800-களில் இருந்து வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 1.2 டாலர் என்ற அளவில்தான் இருந்து வந்தது. அதன் பிறகு ஒரு டாலருக்கும் கீழே சென்ற அதன் விலை, அந்த நூற்றாண்டு மட்டுமல்லாமல் அடுத்த நூற்றாண்டின் 60 வருடங்கள் அதாவது 1960 வரை அந்த ஒரு டாலரைத் தாண்டவில்லை. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, 1979-ம் ஆண்டுவாக்கில் ஒன்பது டாலர் என்ற எல்லையைத் தொட்டது. ஆனால், ஆறே மாதத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 50 டாலர் என்ற அளவுக்கு ஏறியது! இதற்கு காரணம் அமெரிக்காவின் ஹன்ட் பிரதர்ஸ். மொத்த வெள்ளிச் சந்தையில் 50 சதவிகிதம் இவர்கள் கையில்தான் இருந்தது. ஆனால் அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளால், ஊக வணிகத்தில் அவர்களின் முதலீட்டை விற்க முடியாமல் போக, பழையபடி ஒரு அவுன்ஸ் 10 டாலர் என்ற அளவுக்கு விலை சரிந்தது. இதையடுத்து ஹன்ட் பிரதர்ஸ் திவால் ஆனது தனிக்கதை! அதன்பிறகு அதன் விலை இறங்குமுகத்தில் செல்ல ஆரம்பித்தது. 2000-த்தில்கூட ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 5.25 டாலர் என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் இப்போது?

தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 30.50 (டிசம்பர் 7) டாலர்கள்! 2000-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 463% உயர்ந்திருக்கிறது! சரி, வெள்ளியின் விலை இப்படி இருந்தது என்றால் தங்கத்தின் விலை? 2000-த்தின் ஆரம்பத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 282 டாலர்கள். இப்போது 1,415 டாலர்கள். லாபம் சுமார் 401 சதவிகிதம்! வெள்ளியை விடக் குறைவு! குறுகிய காலத்தில் வெள்ளியின் விலை சிறிது குறைவதற்கு வாய்ப்பிருந்தாலும், நீண்ட காலத்தைப் பொறுத்தவரை வெள்ளியின் விலை இன்னும் ஏறும் என்பதே சந்தையில் புழங்கிக் கொண்டிருக்கும் முக்கிய புரோக்கர்களின் கணிப்பு.

தற்போது இந்திய சந்தையில் கிலோ

45,000 ஆக இருக்கும் வெள்ளி, கூடிய விரைவில்

50,000 க்கும் இன்னும் ஒரு வருடத்துக்குள்

55,000க்கும் செல்லும் என்று ஆருடம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் நிகழ்ந்த வெள்ளியின் விலை ஏற்றமும், இனி ஏற வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் சொல்வதையும் வைத்துப் பார்க்கும்போது முதலீட்டுக்கான இன்னொரு கதவு திறந்திருப்பதாகவே தோன்றுகிறது.

எப்படி முதலீடு செய்யலாம்?

எப்போதும் போல வெள்ளி நாணயங்கள், வெள்ளி கொலுசுகள், குத்துவிளக்குகள் போன்றவற்றை வாங்கலாம். ஆனால் இதெல்லாம் தேவைகளைப் பொறுத்துத்தான் நாம் வாங்குவோமே தவிர, இவற்றை நாம் ஒரு முதலீடாகக் கருதி பெரிய அளவில் வாங்க மாட்டோம். சரி, நகையாகவோ உபயோகப் பொருட்களாகவோ வாங்காமல் முதலீட்டு நோக்கில் தங்கத்தை கட்டிகளாக வாங்குவது போல வெள்ளியையும் கட்டிகளாக வாங்கலாமா?

அப்படி வாங்குவது சரியல்ல என்பதுதான் முதலீட்டு ஆலோசகர்களின் கருத்து. காரணம், வெள்ளியை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியாது. சில நாட்களிலேயே கறுத்துவிடும். வெள்ளியில் முதலீடும் செய்ய வேண்டும், அதேசமயம் பாதுகாப்பானதாகவும் எளிதில் பணமாக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி இ-சில்வர்தான்.

இ-சில்வர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் குறைந்த அளவில்கூட வெள்ளி வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச். இதன் மூலம் குறைந்தபட்சம் 100 கிராம் வெள்ளியைக்கூட வாங்கலாம். இதற்கு தனியாக டீமேட் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் (பங்குச் சந்தை டீமேட் கணக்கு இதற்கு உபயோகமாகாது- இதற்கு 200 ரூபாய் வரை செலவு ஆகும்). ஆனால் எவ்வளவு கிராம் வெள்ளி வாங்குகிறோமோ அவற்றுக்கான முழுத்தொகையைச் செலுத்தியாக வேண்டும். இந்த வெள்ளியை தேவையானபோது விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம்; அல்லது வெள்ளி தேவைப்படும் எனில் வெள்ளியாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

வெள்ளியை மற்ற கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் மூலமும் வாங்கலாம். இந்த சந்தையில் இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. ஐந்து கிலோவுக்கு மினி லாட்டும், 30 கிலோவுக்கு மெகா லாட்டும் வாங்கலாம். இப்படி வாங்கும்போது 10 சதவிகித தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஆனால் இரண்டு மாதத்துக்குள் லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ 'புக்’ செய்தாக வேண்டும். இல்லையெனில் மொத்தத் தொகையும் செலுத்தி டெலிவரி எடுத்தாக வேண்டும். அப்படியும் இல்லையெனில் கான்ட்ராக்ட்டை 'ஸ்விட்ச்’ ஓவர் செய்யலாம். நம்முடைய தேவை எதுவோ அதற்கேற்ப முதலீடு செய்யலாம்.!

-வா.கார்த்திகேயன்.