Published:Updated:

அவுட்லயர்ஸ்

அவுட்லயர்ஸ்

அவுட்லயர்ஸ்

அவுட்லயர்ஸ்

Published:Updated:
அவுட்லயர்ஸ்
அவுட்லயர்ஸ்


வெற்றியை தீர்மானிக்கும் நேரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடிபெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்த யூத குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ளோம் எப்படி மிகப் பெரிய வெற்றியாளர் ஆவதற்கான வரம் வாய்த்தது என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த வாரம்... மௌரீஸ் ஜான்க்ளோவ்...

##~##
1919
-ல் புரூக்ளின் சட்டப் பள்ளியில் சேர்ந்தார் மௌரீஸ் ஜான்க்ளோவ்... உயர்ந்த யூதர்கள் குடும்பமொன்றின் மூத்த மகன். அவருக்கு சகோதரர்களும், சகோதரிகளுமாக மொத்தம் 7 பேர். அதில் ஒருவர் புரூக்ளினில் சிறிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வந்தார். இரண்டு பேர் ஆண்களுக்கான உடைகள் சம்பந்தப்பட்ட வியாபாரத் தில் ஈடுபட்டிருந்தனர். மற்றொருவர் கிராஃபிக் ஸ்டூடியோ நடத்தி வந்தார். இன்னொருவர் இறகுகளில் தொப்பி செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தார். இன்னுமொருவர் திஸ்மேன் ரியல்டி என்கிற நிறுவனத்தின் ஃபைனான்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

அந்த குடும்பத்திலேயே மௌரீஸ் கொஞ்சம் கூடுதல் புத்திசாலியானவர். அவர் ஒருவர்தான் கல்லூரிக்குச் சென்றவர். சட்டப் படிப்பு படித்து முடித்துவிட்டு புரூக்ளினில் உள்ள கோர்ட் தெருவில் தனது அலுவலகத்தை அமைத்து பிராக்டீஸ் செய்து வந்தார். இவர் மிகவும் நவ நாகரிகமானவர்.  'புரூக்ஸ் பிரதர்ஸ்’ சூட் அணியக் கூடியவர். கோடைகாலத்தில் 'ஸ்ட்ரா போட்டர்’ அணிவார். யூதர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி நன்கு தெரிந்த பிரபலமான ஒருவரின் மகளான லில்லியன் லெவாண்டின் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். மிகவும் பெரிய காரை உபயோகித்து வந்தார். அவர் 'குயின்ஸ்’ ஏரியாவுக்கு மாறியிருந்தார். அவரும், அவருடைய பார்ட்னரும் பேப்பர் வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தனர். அது மிகப் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என அனுமானிக்கப்பட்டது.

இந்த மாதிரியான ஒருவர் நியூயார்க்கில் வழக்கறிஞராக பின்னியெடுக்க முடியும். இவர் புத்திசாலியானவர், படித்தவர். இவர் படித்தவர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர். உலகத்திலேயே பொருளாதார ரீதியில் மிகவும் துறுதுறுவென்று இருக்கும் நகரத்தில் வசிப்பவர். இப்படியெல்லாம் இருந்தாலும் இங்குதான் ஒரு வினோதமான நிகழ்வு நடந்தது. இவர் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. மௌரீஸ் ஜான்க்ளோவ்வின் தொழில் அவர் எதிர்பார்த்தபடி ஆரம்பமாகவில்லை. அவருடைய மனதில், 'நாம் தெருவைவிட்டு தாண்டி வெற்றிகரமாக கோர்ட்டில் போய் வாதாட மாட்டோமோ?’ என்கிற அளவுக்கு ஐயப்பாடு எழுந்தது.  

இவருடைய மகனின் பெயர் மோர்ட். இவரும் வழக்கறிஞர் ஆனார். ஆனால், இவருடைய கதை அப்பாவின் கதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. 1960-களில் புதிதாக அடிமட்டத்திலிருந்து இவர் தனது சட்ட நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன்பின் ஒரு கேபிள் டெலிவிஷன் ஃப்ரான்சைஸ் ஆரம்பித்து அதை கோக்ஸ் பிராட்காஸ்டிங் நிறுவனத்திற்கு விற்றார். 1970-களில் இலக்கியம் சம்பந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அது இன்று உலகளவில் பிரசித்தம். இவருக்கென்று தனியாக ஒரு விமானம் உள்ளது. இவருடைய அப்பாவை ஏமாற்றிய கனவுகள் இவருக்கு நனவுகளாயின.

அப்பாவினால் அடைய முடியாத வெற்றி மகன் மோர்ட் ஜான்க்ளோவினால் எப்படி முடிந்தது? இதற்கு நூற்றுக்கணக்கான விளக்கங்களைக் கொடுக்க முடியும். ஆனால், நாம் 1830-களில் பிறந்த மிகப் பெரிய பிஸினஸ் புள்ளிகள் மற்றும் 1955-ல்  பிறந்த சாஃப்ட்வேர் புரோகிராமர்கள் மற்றும் இந்த அப்பா - மகன் ஜான்க்ளோவ்கள் போல வேறுவேறு காலகட்ட மனிதர்களின் இடைப்பட்ட வேறுபாடுகள் என்ன வென்பதையும் பார்ப்போம்.

நியூயார்க்கில் குடியேறிய யூத குடும்பம் ஒன்றில், வழக்கறிஞர் தொழிலை எதிர்காலத்தில் ஏற்கக்கூடிய ஒருவர் பிறப்பதற்கான சரியான நேரம் என்று ஒன்று இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு விடை 'ஆமாம்’ என்பதுதான். கடந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த ஃப்ளோம் பிறந்தது அப்படியரு மிகச் சரியான நேரத்தில்!

இதற்கு முன்பு நான் டெர்மன் 'ஸ்டடி' செய்த 'டெர்மைட்' என்ற சிறுவர் - சிறுமியர்களை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். அதில் நாம் அறியாத ஒரு புது விஷயம் - டெர்மனின் ஆய்வு முடிவுகளை டெர்மைட்ஸ் பிறந்த ஆண்டுகளின் அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம். 1903-ம் ஆண்டிலிருந்து 1911-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள்...  1912-லிருந்து 1917-வரை பிறந்தவர்கள்..! முதல் பிரிவைச் சார்ந்தவர்களில் பலர் - எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தபோதும் - பிற்பாடு தங்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்திருந்தனர்.

அவுட்லயர்ஸ்

காரணம் என்ன என மேலும் ஆராய்கையில், 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இரு நிகழ்வுகள் இதில் சம்பந்தப்பட்டு  இருந்தன.  ஒன்று 'கிரேட் டிப்ரஷன்’ என்று சொல்லப்படும் பயங்கர பொருளாதார வீழ்ச்சி. மற்றொன்று - இரண்டாவது உலக யுத்தம். நீங்கள் 1912-க்குப் பிறகு அதாவது 1915-ல் பிறந்தவர் என்றால், நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவந்த சமயத்தில் கிரேட் டிப்ரஷன் முடிவுக்கு வந்திருக்கும். அதற்குப் பிறகு நீங்களும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் ராணுவத்தில் சேவை செய்ய அனுப்பப்பட்டிருப்பீர்கள்.

1911-ம் ஆண்டிற்கு முன் பிறந்த டெர்மைட்ஸ் கல்லூரியிலிருந்து வெளிவந்த சமயத்தில் டிப்ரஷனும் உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் வேலைக்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாக இருந்தன. அதேபோல், இரண்டாவது உலகப்போர் ஆரம்பித்த சமயத்தில் அவர்களுக்கு வயது கிட்டத்தட்ட முப்பது ஆகிவிட்டிருந்தது. அந்த நேரத்தில் அவர்களை ராணுவ சேவைக்கு அமர்த்தியதால் அவர்கள்  வழக்கமாகப் பார்த்து வந்த தொழில் பாதிக்கப்பட்டது. அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்திருந்த நேரம் அது. ஆக 1911-க்கு முன்பு பிறந்திருந்தால் சமூக மாற்றங்களைப் பொறுத்தளவில் அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். 20-ம் நூற்றாண்டை நிலைகுலைய செய்த நிகழ்வுகள் இவர்கள் வளர வேண்டிய வயதில் வாழ்க்கையோடு விளையாடியது.

இதே சமூக மாற்றங்கள் நியூயார்க்கில் வசித்து வந்த யூத வழக்கறிஞர்களான மௌரீஸ் ஜான்க்ளோவ்விற்கும் பொருந் தும். அவர்களுக்கு மிகப்பெரிய சட்ட நிறுவனங்களின் கதவுகள் மூடப்பட்டன. அதனால் அவர்கள் தனித்து பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தார்கள். விளைவு அவர்கள் உயில், விவாகரத்து மற்றும் ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட சிறிய, சிறிய வழக்குகளை மட்டும் கையாள வேண்டியிருந்தது. இதுவும் கிரேட் டிப்ரஷன் சமயத்தில் அவர்கள் கையைவிட்டு போனது. நியூயார்க்கில் கிரேட் டிப்ரஷன் நாட்கள் பற்றி ஜெரால்ட் அவுர்பேக் எழுதும்போது, 'மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் பிராக்டீஸ் செய்து வந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அமெரிக்கர்களின் சராசரி வருமானம்கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வந்தனர்' என்று கூறுகிறார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு வேலை யில் சலுகை பெறுவதற்காக 1500 வழக்கறிஞர்கள் 'பாப்பர்ஸ்’ பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் பாதிக்கும் மேலானவர்கள் யூத வழக்கறிஞர்கள். இவர்கள் தங்களுடைய பிராக்டீஸை 'பட்டினியை நோக்கி இட்டுச் செல்லும் மதிப்புமிக்க ரோடு’ எனக் கருதினர். எத்தனை ஆண்டு காலம்தான் அவர்கள் பிராக்டீஸ் செய்திருந்தாலும் அவர்களுடைய வருமானம் அவர்களுடைய கத்தோலிக்க வழக்கறிஞர் நண்பர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. மௌரீஸ் ஜான்க்ளோவ் 1902-ல் பிறந்தவர். டிப்ரஷன் ஆரம்பமான சமயத்தில் அவர் புதிதாக திருமணமானவராக இருந்தார். அந்த சமயத்தில்தான் அவர் பெரிய கார் ஒன்றை வாங்கியிருந்தார், குயின்ஸிற்கு மாறியதும் அந்த சமயத்தில்தான். இது தவிர்த்து அவர் தனது பேப்பர் வியாபாரத்தை ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான். சொல்ல வேண்டுமா, அடி மேல் அடி வாங்க!

மோர்ட் ஜான்க்ளோவ் கூறுகையில், ''சில காலை நேரங்களில் அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டது இன்றைக்கும் என் நினைவில் உள்ளது. அம்மாவிடம், 'என்னிடம் ஒரு டாலரும் எழுபத்தைந்து சென்ட்டும் இருக்கு. 10 சென்ட் பஸ்ஸிற்கு, 10 சென்ட் சப்வேக்கு, 25 சென்ட் மதியம் சாண்ட்விச்சுக்கு என்று கூறிவிட்டு, மீதமுள்ள பணத்தை அம்மாவிடம் கொடுப்பார். அந்த அளவிற்கு  பொருளாதார விளிம்பின் முனையில் இருந்தோம்'' என்கிறார்.

1910-லிருந்து 1950-வரை ஐக்கிய அமெரிக்க நாட்டில் பிறந்தவர்களின் விகிதாசாரப் பட்டியலை ஊன்றிப் பார்த்தாலும் வேறொரு சுவையான பின்னணி கிடைக்கிறது. 1915-ல் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் குழந்தைகள் இருந்தன. 1935-ல் இந்த எண்ணிக்கையில் ஆறு லட்சம் குறைந்தது. அதற்குப்பிறகு 15 வருடத்தில் இந்த எண்ணிக்கை மீண்டும் மூன்று மில்லியனைத் தொட்டது. இதை மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்ல வேண்டுமெனில், 1915-ல் 1000 அமெரிக்கர்களுக்கு 29.5 சதவிகிதம் என்கிற கணக்கில் குழந்தைகள் பிறந்தன. 1935-ல் இதுவே 18.7 சதவிகிதமாகவும், 1950-ல், 24.1 சதவிகிதமாகவும் இருந்தது. 1930-லிருந்து அடுத்த பத்தாண்டு காலம் வரை  'சமூக மாற்றங்களின் வறட்சி’ என்றே கூறலாம்.

அதாவது,  பொருளாதார டிப்ரஷன் ஏற்பட்டதின் விளைவாக மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதைக் குறைத்துக் கொண்டனர். இதனால் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்த தலைமுறையினரின் எண்ணிக்கை அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்தில் பிறந்த தலைமுறையினரின் எண்ணிக்கையைவிடக் குறைவாகத்தான் இருந்தது.

இந்த காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு பிற்காலத்தில் கிடைத்த நன்மைகள் குறித்து ஹெச்.ஸ்காட் கார்டன் என்கிற பொருளாதார நிபுணர் கூறுகையில்:

''அவர்கள் கண்களை முதன்முதலாக திறக்கும்போது அவர்கள் பார்த்தது மிகப் பெரிய ஆஸ்பத்திரி. இதற்கு முன்பு அதே இடத்தில் அலைபோல கூட்டம் இருந்தது. இப்போதோ பிறக்கிற குழந்தைகளே குறைவு. இதனால், அந்த ஆஸ்பத்திரிகளில் வேலை பார்த்தவர்களுக்கு பிரசவத்துக்கு வந்தவர்களைக் கவனிக்க அதிக நேரம் இருந்தது. அது போல அந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர வேண்டிய நேரத்தில் அவர்களுக்காக மிகப் பெரியப் பள்ளிக் கட்டடங்கள் தாராளமாகத் திறந்திருந்தன. அங்கு இந்த சிறுவர்களை வரவேற்க பல ஆசிரியர்கள் தயாராக இருந்தார்கள். உயர்நிலைப் பள்ளியில் கூடைப் பந்தாட்டக் களம் சிறந்த பயிற்சியாளர்களுடன் இல்லாவிட்டாலும் ஜிம்னாசியம் பழகுவதற்கு தாராளமாக இவர்களுக்கு இடமும் நேரமும் கிடைத்தது. பல்கலைக் கழகம் மிகவும் சந்தோஷம் தரக்கூடிய இடமாக இருந்தது. அங்கு மிகவும் அதிகமான வகுப்பறைகளும், தங்குமிடங்களும் இவர்களுக்குக் கிடைத்தன. கேண்டீனில்கூட கூட்டமில்லை. பேராசிரியர்களை எளிதில் அணுக முடிந்தது. அப்படிப் படித்து வந்தவர்கள் வேலைக்காக முயற்சிக்கும்போது, புதிதாக வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அவர்களுக்கான தேவை அதிகமாகவும் இருந்தது'' என்று விளக்குகிறார்!

நியூயார்க் நகரத்தில் 1930-களில் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை 25 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட பாதிக்கும் குறைவாகவே இருந்தது.  இதற்கு முந்தைய ஆண்டுகளில் பள்ளிக்கூட மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு கட்டப்பட்டதால் பள்ளிக்கூடங்கள் பெரிதாகவும், புதிதாகவும் இருந்தன. இன்னும் சொல்லப்போனால், டிப்ரஷன் வந்து மக்களை பாதித்து பர்ஸில் பணமில்லாமல் பதற வைத்த காலகட்டத்தில் ஆசிரியர்களின் பணி என்பது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இந்த செயல்பாடுகள்தான் அந்த தலைமுறையைச் சேர்ந்த கல்லூரிக்கு சென்றவர்களுக்கு உதவியது. இதில் ஒருவர்தான் நியூயார்க் நகரத்தில் 1970 மற்றும் 80-களில் பிரபலமாக இருந்த வழக்கறிஞர் டெட் ஃப்ரைட்மேன். ஃப்ளோமைப் போல இவரும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய யூதப் பெற்றோர்களுக்கும் வாழ்க்கை ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும், இவருடைய வாழ்க்கையின் வெற்றி மீது அந்த காலச் சூழல் வேறு மாதிரியாக பார்வையைப் பதித்தது...

(விதை விருட்சமாகும்)
Copyright © 2008  by Malcolm Gladwell

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism