Published:Updated:

யாரைத்தான் நம்புவதோ?

யாரைத்தான் நம்புவதோ?

யாரைத்தான் நம்புவதோ?

யாரைத்தான் நம்புவதோ?

Published:Updated:

இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்களின் இன்னொரு பக்கம்...

யாரைத்தான் நம்புவதோ?


கையில் நிறைய பணம் புரள ஆரம்பித்தால் யாருக்கும் கிரிமினல் புத்தி வந்துவிடும்போல! சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை உற்றுக் கவனித்தால், நமது முதலீடுகளாலேயே நம் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயமும் கூடவே வரத்தான் செய்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
டந்த சம்பவம் இதுதான்: ஹைதராபாத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கடந்த வாரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல; அவரது மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக சந்தேகித்தது ஹைதராபாத் காவல் துறை.

இறந்தவரின் செல்போனை எடுத்து ஆராய்ந்ததில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர் ஒருவர் அடிக்கடி அந்த போனுக்கு பேசியது தெரிய வந்தது. அந்த மேனேஜரை விசாரித்தபோது அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சமானது.

இறந்துபோன முதியவர் தன்னிடமிருந்த 45 லட்ச ரூபாய் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய, மேற்சொன்ன தனியார் வங்கியின் இன்வெஸ்ட் மென்ட் மேனேஜரிடம் ரொக்கமாகக் கொடுத்திருக்கிறார். ஆனால், பணம் கொடுத்ததற்கான எந்த ரசீதையும் அவர் வாங்கிக் கொள்ளவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த வங்கியின் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர், முதலீடு செய்யக் கொடுத்த பணத்தை தனதாக்கிக்  கொண்டார். (இது நடந்தது ஜனவரி மாதத்தில்.)

கொடுத்த பணம் என்னாச்சு என முதியவர் கேட்க ஆரம்பிக்க, இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர் எதேதோ சொல்லி சமாளித்திருக் கிறார். ஒரு கட்டத்துக்குமேல்  சமாளிக்க முடியாத நிலையில் அந்த முதியவரையே தீர்த்துக் கட்ட முடிவு செய்தார் இன்வெஸ்ட் மென்ட் மேனேஜர்.   தனது   மைத்துனரையும் இந்த 'காரியத்தில்’ சேர்த்துக் கொண்டார். இருவரும் முதியவரின் வீட்டுக்குப் போய்,  அங்கே அவருக்கு மதுபானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர். அவர் மயங்கிக் கிடந்த நிலையில் அவர் கதையை முடித்தனர். அவரே தூக்குப் போட்டுக் கொண்டு செத்த மாதிரி 'செட்டப்’ செய்தனர். அதோடு அவர் வீட்டிலிருந்த 6.5 லட்ச ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டு போய்விட்டனர்.

யாரைத்தான் நம்புவதோ?

முதலீட்டாளர்களின் பணத்தை நிர்வாகம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவர்களின் பணத்தை கபளீகரம் செய்து ஏமாற்றும் இரண்டாவது சம்பவம் இது. கடந்த ஜனவரி மாதத்தில் கூர்கானில் சிட்டி பேங்கை சேர்ந்த இன்வெஸ்மென்ட் மேனேஜர் ஒருவர், 300 கோடி ரூபாய்க்குமேல் மோசடி செய்து மாட்டினார்.

இதுவரை வெளிச்சத்துக்கு வந்திருப்பது இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமே. இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கும் சம்பவங்கள் எத்தனையோ என்கிற கவலை ஒருபுறமிருக்க, முதலீட்டாளர்கள் இதுபோல போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் மற்றும் வங்கியில் உள்ள இன்வெஸ்ட் மென்ட் மேனேஜர்களிடம் பணம் கொடுப்பது சரியா? அப்படி கொடுக்கும்போது என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒன்றில் போர்ட்ஃபோலியோ மேனேஜராக இருக்கும்  பிரியாவிடம் கேட்டோம்.

''பங்குச் சந்தை பற்றி அனைவருக்கும் முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்திருந்தாலும் தொடர்ந்து சந்தையை கவனித்து முதலீடு செய்வது முடியாத செயல். இதுபோன்ற சமயங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம், அல்லது போர்ட்ஃபோலியோ மேனேஜ் செய்யும் கம்பெனிகளுக்கு நமது முதலீட்டை கொடுத்து நமக்காக நம் முதலீட்டை நிர்வாகம் செய்யும்படி கேட்கலாம்.

நம் முதலீட்டை போர்ட் ஃபோலியோ மேனேஜர்களிடம் கொடுத்து முதலீடு செய்யச் சொல்வதில் தவறில்லை. ஆனால், அப்படி செய்யும்போது அவசியம் பின்பற்ற வேண்டிய விதிமுறை களை கடைப்பிடித்தாக வேண்டும். இந்த விதிமுறைகளை முன்பைவிட கடுமையாக்கி இருக்கின்றன ரிசர்வ் வங்கியும் செபியும்.  

போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சேவைகளைத் தரும் நிறுவனத்தில் ஒருவர் கணக்குத் தொடங்க வேண்டுமெனில், அவர் பெயரில் தனியாக ஒரு வங்கி கணக்கையும், ஒரு டீமேட் கணக்கையும் தொடங்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் வங்கி மற்றும் டீமேட் கணக்கை இதற்குப் பயன்படுத்தக் கூடாது. புதிதாக தொடங்கப்படும் வங்கிக் கணக்கு 'நோ ஃபிரில்ஸ்’ கணக்காகத்தான் இருக்க வேண்டும். அதாவது, அந்த கணக்குக்கு செக் புக், ஏ.டி.எம். கார்டு போன்ற எந்த வசதியும் இருக்காது.

போர்ட்ஃபோலியோ நிறுவனங்கள் குறிப்பிட்ட இந்த வங்கிக் கணக்கில் இருந்து மட்டும்தான் பணத்தை எடுக்க முடியும். வேறு வங்கி கணக்கில் இருந்தோ அல்லது ரொக்கமாகவோ பணத்தை வாங்க முடியாது.

யாரைத்தான் நம்புவதோ?

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் விதிமுறைகள் வேறு மாதிரியாக இருந்தது. வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் சம்பந்தபட்ட நிறுவனம் தனது கணக்கிலே வைத்துக் கொள்ளும். கிடைக்கும் வருமானத்தை மட்டும் முதலீட்டாளர்களுக்கு  பிரித்துக் கொடுக்கும். இம்முறையில் முதலீட்டாளர்கள் ஏமாற நிறைய வாய்ப்பிருந்ததால்தான், தனித்தனியாக கணக்குத் தேவை என்கிற புதிய விதிமுறையை கொண்டு வந்தது ரிசர்வ் வங்கியும் செபியும்.

வங்கியில் தனிக் கணக்கு ஆரம்பித்தால் மட்டும் போதாது, பான் கார்டு, முகவரிச் சான்றிதழ், கே.ஒய்.சி. போன்ற படிவங்களைக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் யாருக்காவது பணம் கொடுப்பதன் மூலம் நீங்கள் ஏமாற வாய்ப்பிருக் கிறது.

செபி விதிமுறைகள்படி, எந்த ஒரு போர்ட்ஃபோலியோ மேனேஜரும் இவ்வளவு சதவிகிதம் வருமானம் தரமுடியும் என்றோ, முதலீட்டை இத்தனை வருடம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றோ கட்டாயப்படுத்த முடியாது. அப்படிச் சொல்பவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தவிர, போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆரம்பிக்க செபியிடம் அனுமதி வாங்க வேண்டும். அதேசமயம், அந்த அனுமதியை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். சில சமயம் அனுமதி வாங்கிவிட்டு, அதைப் புதுப்பிக்காமல் இருப்பார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் செபியின் இணையதளத்தைப் பார்த்தால் அனுமதி வாங்கி இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியும்'' என்று முடித்தார்.

விதிமுறைகளில் பிரச்னை இல்லை. பணத்தை யார், எப்படி கையாள்கிறார்கள் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. எனவே கூடுதல் கவனமாக இருந்தால்தான் நம் பணம் நமது பணமாக இருக்கும்!

-வா.கார்த்திகேயன்.
படம்: சொ.பாலசுப்ரமணியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism