நடப்பு

ஷேர்லக் ஹோம்ஸ்

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி!

மத்திய அரசின் புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் ஷேர்லக்.

''நான் வேணா பிறகு வரட்டுமா...'' என்று வந்த வேகத்தில் புறப்படப் பார்த்தவரை மடக்கி, ''நம்ம அரசாங்கத்தில் எல்லா முக்கியமான போர்ட்ஃபோலியோவும் உங்க கையில்தான்... உட்காருங்க...'' என்று டி.வி-யை அணைத்துவிட்டு கையைப் பிடித்து உட்கார வைத்தோம்.

''புது அரசு மேல பல பொறுப்புகள் இருக்கு... நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு... அதெல்லாம் தனி கட்டுரையாகவே போட்டுட்டோம்... நீங்க இப்போதைய நிலைமையில் சந்தை எப்படி இருக்கும்னு சொல்லுங்க...'' என்று நேரடியாக விஷயத்துக்குள் இழுத்தோம்.

''இன்னிக்கு நிலைமைக்குச் சந்தை ஸ்ட்ராங்காகப் போயிட்டிருக்கு... பட்ஜெட்டுக்குள் சென்செக்ஸ் 16000- 16500 புள்ளிகளுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. பட்ஜெட்டுக்குப் பிறகு ஏறிய விலையிலிருந்து குறைந்து 12400 புள்ளிகளுக்கு வரலாம். ஏறும்போது லாபம் பார்க்கவும், இறங்கும்போது முதலீடு செய்யவும் தயாராக இருந்துக்கோங்கனு சந்தை வட்டாரத்தில் சொல்றாங்க...'' என்று சந்தை விஷயத்தைச் சட்டென்று தாண்டினார்.

''ஆனால், 'உலக நிலவரம் அத்தனை சுகமாக இல்லை'னு ஒரு செய்தி இருக்கு... குறிப்பா அமெரிக்காவின் நிலைமை மோசமாகிட்டே போகுது. சரிபண்ணிட முடியாதானு ஆளாளுக்குப் பார்க்கறாங்க... ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி கதைதான்! ஆனா, டாலரோ சடசடனு மதிப்பு குறைஞ்சுக்கிட்டே போகுது. டாலர் மதிப்பு குறைஞ்சாலே இன்னொருபக்கம் தங்கமும் கச்சா எண்ணெயும் கிடுகிடுனு மேலேறிப் போகத் தொடங்கிடும். டாலர் சரிந்தால் அமெரிக்கச் சந்தையும் சரியும். அங்கே விழுந்தால் உலக மார்க்கெட்டுகள் எல்லாம் இறங்கத் தொடங்கும். இந்தியச் சந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால், நம் சந்தைக்குப் பாதிப்பு நிச்சயமா இருக்கு... அதனால், நீண்டகால முதலீடுனு காத்துக் கிடக்காமல் கிடைப்பதைக் கையில் எடுத்துக்கொண்டு நல்ல சமயம் பார்த்து வெளியேறும் குறுகியகால முதலீடுதான் இப்போதைக்கு லாபகரமானதுனு சொல்றாங்க... நிலவரம் இதுதான்... நம்ம வசதிக்கு ஏற்ப பார்த்துக்க வேண்டியதுதான்...'' என்று கூடுதல் தகவல்களைச் சொன்னார்.

''இந்தச் சூழ்நிலையில் சந்தையில் எந்தத் துறைகளை எல்லாம் கண்காணிக்கலாம்னு சொல்றீங்க..?'' என்று கேட்டதும் சின்ன சிரிப்போடு, ''நான் எதுவுமே சொல்றதில்லை... நிபுணர்கள் பேசும்போது காதில் விழும் தகவல்களை உங்ககிட்டே பகிர்ந்துக்கறேன்... நான் சொல்லும் துறைகளிலோ, பங்குகளிலோ நீங்களும் ஆலோசனை பண்ணி முடிவெடுத்து முதலீடு செய்யுங்க...'' என்று சொல்லிவிட்டுத் துறைகளுக்குள் போனார்.

''இப்போதுள்ள நிலையில் இந்த 2009-ல் டெலிகாம், பார்மா, பவர் மற்றும் சர்க்கரை போன்ற துறைகள் நிலையான வளர்ச்சியைப் பெறும்னு சொல்றாங்க. இதில் எந்தப் பங்குகள் சரியாக இருக்கும்னு பார்த்துத் தேர்ந்தெடுத்துக்கோங்க...'' என்று நழுவப் பார்த்தார்.

''துறைகளில் சில பங்குகளையும் சொல்லலாமே..?'' என்றதும். ''டெலிகாம்னா பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார்னு சொல்ற மாதிரி எல்லாத் துறைகளுக்கும் நீங்களே விசாரிச்சுப் பார்த்துக்கோங்க...'' என்று க்ளூவாகச் சொல்லிவிட்டு வேறு சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.

''விரைவில் ரயில்வே பட்ஜெட் வர இருப்பதால் கலிந்தி ரயில் நிர்மாண் பங்குகள் குறுகிய காலத்தில் லாபம் தரும் என்கிறார்கள். புதிய அரசு கூடிய விரைவில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளைக் கணிசமாக விற்க இருக்கிறது. அந்த வகையில் லாபம் பார்க்க என்.டி.பி.சி., நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பங்குகளை இப்போதே வாங்கிப் போடலாம்'' என்றவர் சப்ஜெக்ட் மாறி வீட்டுக்கடன் பக்கம் திரும்பினார்.

''பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. அறிவித்த 'ஓராண்டுக்கு 8% வட்டி... அதன் பிறகு அன்றைய நிலைக்கு ஏற்ப வட்டி' என்ற வீட்டுக் கடன் திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லைனு சொல்றாங்க..! அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்களும் புதிதாக வாங்க நினைத்தவர்களும் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை. இதனால், வங்கிகள் ரொம்பவே யோசனையில் இருக்கின்றனவாம். வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதத்தில் ஏதாவது மாற்றங்கள் வரலாம் என்கிற நிலைமை உருவாகி இருப்பதால், புதுசா வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களும் சரி, அதிக வட்டிப் பிரச்னையில் வேற வங்கிக்கு மாறக் காத்திருப்பவர்களும் சரி இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்குனு பேசிக்கறாங்க...'' என்றவர் கொஞ்சம் நிறுத்தி,

''ஆனா, வங்கிப் பங்குகளை வெச்சிருக்கறவங்க கொஞ்சம் கவனமாக இருக்கணும்... புதிதாக அந்தத் துறைப் பங்குகளை வாங்க நினைக்கிறவங்க கூடுதல் கவனமாக இருக்கணும்னு ஒரு பேச்சு இருக்கு...'' என்று அடுத்தகட்ட செய்திக்குள் போனார்.

''ஏன்... என்னாகுமாம்?''

''மார்ச் 9-லிருந்து சென்செக்ஸ் 67% ஏறிச்சு. அப்போ பேங்க்கிங் செக்டார் 109% ஏறி பிரமிக்க வெச்சுது. இப்போ கேர்-ங்கற கிரெடிட் ஏஜென்ஸி கொடுத்த ரிப்போர்ட்படி பார்த்தால் 2010-11 ஆண்டில் வாராக்கடன் இப்போ இருக்கறதைப் போல மூணு மடங்கு ஆகிடுமாம். அதோடு, இப்போ கடனைத் திருப்பி செலுத்துதல் மற்றும் வட்டிவிகிதத்தை சீரமைப்புச் செய்ததில் ஏற்பட்ட இழப்புகள் இன்னமும் வெளியே வரலை. அதேபோல கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாராக் கடன் விகிதம் 10 முதல் 12% இருக்கும்னு சொல்றாங்க. எல்லாம் சேர்த்துப் பார்த்தால் வங்கித் துறை கொஞ்சம் அதிக கவனம் எடுத்துப் பார்க்க வேண்டியதாகத்தான் இருக்கு...'' என்றபடி எஸ்கேப் ஆனார் ஷேர்லக்!