நடப்பு

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

ஒரு வழியாக புதிய அமைச்சரவை அமைந்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் தேர்வில் இந்தமுறை பிரதமர் அதிகக் கவனம் செலுத்தக் காரணம், இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் அதிவேகமாக மேலே கொண்டு செல்லவேண்டும் என்பதுதான். காரணம், இன்றைய சூழ்நிலையில் மத்திய அரசாங்கத்தின் முன் இருக்கும் சவால் அசாத்தியமானது!

முள்ளாக உறுத்தும் நிதிப்பற்றாக்குறை...

உதாரணமாக, நிதிப் பற்றாக்குறை என்கிற விஷயத்தை எடுத்துக் கொள்வோம்... 2007-08-ல் நம்முடைய நிதிப் பற்றாக்குறை வெறும் 3.1% மட்டுமே. அரசின் வருமானம் கணிசமாக இருந்ததால் அப்போது செலவு என்பது ஒரு பிரச்னையாக இல்லை. ஆனால், 2008-09-ல் நிலைமை தலைகீழ். மோசமான பொருளாதாரம் காரணமாக அரசு வருமானமும் குறைந்து, செலவும் இஷ்டத்துக்கு எகிறி, பெரிய நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இந்த நிதி ஆண்டில் மட்டும் நம்முடைய நிதிப் பற்றாக்குறையின் அளவு சுமார் 10 சதவிகிதத்தைத் தொடலாம் என்கிறார்கள்.

தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளால் மட்டுமே அரசாங்கத்துக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகச் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வருமானத்தைப் பொறுத்தவரை நாம் எதிர்பார்த்ததைவிட 40 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகவே வசூலாகியிருக்கிறது!

அரசாங்கம் சமூகநலத் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடி ரூபாயைச் செலவிடுகிறது. ஆனால், இதன் பலன் மக்களுக்கு முழுவதுமாகப் போய்ச் சேருவதில்லை. மொத்த ஒதுக்கீட்டில் 5% ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்தாலே பெரிய விஷயம் என்று நிதி அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளே கருதுகின்றனர். பட்ஜெட் நிதி மேலாண்மையில் இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் அதிதீவிரமாக இருக்கவேண்டும் என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

பங்குகளை விற்பதால் சரிக்கட்டலாமா?

இவ்வளவு பெரிய நிதிப் பற்றாக்குறையை காங்கிரஸ் அரசாங்கம் எப்படித் தீர்க்கப் போகிறது என்பது முக்கியமான கேள்வி. பல அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்கத்துக்குச் சொந்தமான பங்கு இன்னும் மிகப் பெரிய அளவில் இருக்கிறது.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களான என்.டி.பி.சி., பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், என்.ஹெச்.பி.சி., நார்த் ஈஸ்டன் பவர் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்கத்தின் பற்றுதலைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வதன் மூலம் 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

நிதிப் பற்றாக்குறை என்பது ஒரு சோறு பதம்தான். மற்ற துறைகளில் உடனடியாகச் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவை என்னென்ன என்று சில நிபுணர்களைச் சந்தித்துக் கேட்டோம். நாம் முதலில் சந்தித்தது நிதி ஆவணங்களுக்குத் தரக் குறியீடு வழங்கி வரும் 'ஃபிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனத்தின் இணை இயக்குநர் ஆர்.வெங்கடராமனை.

நெடுஞ்சாலைகள் நாட்டின் நரம்புகள்!

''அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் நாம் பெரிய திட்டங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறிய அளவிலான திட்டங்களுக்குக் கொடுப்பதில்லை. இன்றைக்கும் பல கிராமங்கள் தண்ணீர், மின்சாரம், சாலைவசதி பெறாமல்தான் இருக்கின்றன. இந்த வசதிகளை மேம்படுத்த நகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் சொந்தக் காலில் நிற்கத் தேவையான கொள்கை மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். சொத்து வரி சீர்திருத்தத்தில் தொடங்கி பல முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற கடன் திரட்டும் வசதியைப் பெறுவதோடு, அதைத் திரும்பக் கட்டும் திறனையும் பெறவேண்டும். நகராட்சிகள் தங்களுக்குத் தேவையான நிதியை முனிசிபல் பாண்டுகள் மூலம் திரட்டும்போது, இந்த பாண்டுகளில் அரசுத் துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசு தூண்டவேண்டும். வரிச்சலுகை அளிப்பதன் மூலமே நிறைய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யும். இதுபோன்ற திட்டங்களில் பொதுமக்களும் முதலீடு செய்ய முன்வரவேண்டும்.

சாலைகள் உயர்ந்தால்தான் கிராமங்களும், விவசாயிகளும் வளம் பெறுவார்கள். நாட்டில் பொருளாதார எழுச்சி வரட்டும், அதன்பிறகு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம் என்றால் அது ஆகக்கூடிய காரியம் இல்லை. நெடுஞ்சாலைகள்தான் நாட்டின் நரம்புகள் என்பதை மறந்துவிடக் கூடாது. மேல்நாடுகளில் எல்லாம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குத் தேவையானதை இப்போதே செய்துவிடுகிறார்கள். இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி அடிப்படைக் கட்டமைப்பைச் சார்ந்து இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அடுத்து மிக முக்கியமாக பொதுவாகனப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். இதனால், நாட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும். வளர்ச்சியும் பெருகும்'' என்றார்.

அடுத்து 'இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்ட்' பத்திரிகையின் ஆசிரியர் விஸ்வநாதனிடம் பேசியபோது வேறு சில விஷயங்களை முன்வைத்தார் அவர்.

சலுகைகளைக் குறைக்கவேண்டும்

''கடந்தமுறை போல் இல்லாமல் இந்தமுறை காங்கிரஸ் கட்சியிடம் நிறைய எம்.பி-க்கள் இருப்பதால் யார் தயவையும் எதிர்பார்க்காமல் நினைத்ததைச் செய்யமுடியும். இந்தமுறையும் மீண்டும் புதிய புதிய திட்டங்களைப் போடுவதற்குப் பதிலாக ஏற்கெனவே போட்ட திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் பாடுபடவேண்டும். அரசாங்கத்தைத் திறமையாக நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.

உலகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அற்புதமான சீதோஷ்ணநிலை இந்தியாவில் இருக்கிறது. ஆண்டின் 365 நாட்களும் இங்கே விவசாயம் செய்யமுடியும். விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் இல்லை என்று சொல்ல முடியாது. வெளிநாட்டு மூலதனமோ, தொழில்நுட்பமோ தேவைப்படாத ஒரே துறை விவசாயத்துறைதான். இப்படி நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தும் நம்மால் உணவு உற்பத்தியைப் பெருக்க முடியாமல் போனதற்குக் காரணம், நம்மிடம் இருக்கும் உறுதியின்மைதான்.

உணவு உற்பத்தியைப் பெருக்குவதோடு கிராமப்புற வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கம் பாடுபடவேண்டும். இப்போது கிராமங்களில் விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக இல்லை. எனவே வேலை தேடி நகர்ப்புறங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர் மக்கள். கிராமங்களிலேயே அவர்களுக்குத் தேவையான வேலை கிடைத்தால் அவர்கள் அதை விட்டு வரவேண்டிய நிலை ஏற்படாது. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இப்போது ஒருவருக்கு 100 நாளைக்கு வேலை கொடுத்து வருவது நல்ல விஷயம்தான்! ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் வேலைகள் உண்மையில் நாட்டுக்கு நன்மை தருவதாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். வெறும் பள்ளம் தோண்டுவது அல்லது பள்ளத்தை மூடுவது மாதிரியான காரியங்களினாலேயே நாட்டுக்கு நன்மை விளைந்துவிடாது.

விவசாயத்துக்கு அடுத்து நிர்மாணத் திட்டங்களில் மத்திய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியாக வேண்டும். பெரிய அளவில் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். 'இதோ முடிந்துவிட்டது, அதோ முடிந்துவிட்டது' என்று சொல்லப்பட்ட கூடங்குளம் மின்நிலையம் இன்னமும் உற்பத்தியைத் தொடங்காமல் இருப்பது வருந்தத்தக்கது. நகர்ப்புறங்களில் தடங்கலற்ற போக்குவரத்துக்குத் தேவையான சாலைகள், வீடுகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என பல திட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

கல்வித் துறையைப் பொறுத்தவரை உயர்கல்விக்கு மட்டுமே நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்படி இல்லாமல் ஆரம்பக் கல்வியில் இன்னும் அதிகக் கவனம் செலுத்தி தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்குச் சலுகை அறிவிப்பதால் அரசாங்கத்தின் செலவு மிகவும் அதிகமாகிறது. அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகபட்சம் 4 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், இப்போது நமது பற்றாக்குறை 10 சதவிகிதத்தையும் தாண்டிவிட்டது. இனிவருங்காலத்திலாவது அளவுக்கதிகமான சலுகையைக் குறைக்கவேண்டும். அரசின் வருமானத்தைப் பெருக்க வரியை உயர்த்தவேண்டிய அவசியமில்லை. இப்போதுள்ள வரியைச் சரியாக வசூலித்து முறையாகச் செலவழித்தாலே போதுமானது.

தொழில் துறையைப் பொறுத்தவரை மாநில அரசாங்கங்கள் போட்டி போட்டுக்கொண்டு கம்பெனிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்குகின்றன. குறைந்த விலையில் நிலம், தடையற்ற மின்சாரம் என பல சலுகைகளைக் கொடுப்பதில் தவறில்லை; அந்த நிறுவனத்தால் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன என்று பார்க்க வேண்டியது அவசியம். பல லட்சம் பேருக்கு வேலை தரும் எஸ்.எம்.இ. தொழில்களுக்கு மின்சாரம் இல்லை... சில ஆயிரம் வேலைகளை மட்டுமே கொடுக்கும் பெரிய கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் என்றால் என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் 2002-லேயே டைட்டானியம் தொழிற்சாலையைத் தொடங்க டாடாவை அனுமதித்தது தமிழக அரசாங்கம். ஆனால், எதிர்பாராத சிக்கல்கள் வந்ததால் அந்தத் திட்டம் நிறைவேறாமலே இருக்கிறது. இதேபோல கப்பல் கட்டும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க எல் அண்ட் டி நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தது தமிழக அரசு. ஆனால், அந்தத் திட்டமும் இதுவரை நிறைவேறவில்லை. இவற்றையெல்லாம் இந்தமுறையாவது மத்திய அரசாங்கம் செய்து முடிக்கவேண்டும்'' என்றார் அவர்.

சமூகப் பாதுகாப்பு அளிக்கவேண்டும்...

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் பேராசிரியரான டாக்டர் வி.ஏ.விஜயராகவன், ''நமது நாட்டில் ஆண்டுக்கு 1.36 லட்சம் இன்ஜினீயர்களை உருவாக்குகிறோம். ஆனால், அவர்கள் அத்தனை பேருக்கும் நிறுவனங்களில் சேர்ந்து சிறப்பாகப் பணிபுரியும் ஆற்றல் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை பேருக்குத்தான் பயிற்சி அளிக்கமுடியும்? இந்தப் பணியை புதிய அரசு முக்கியமாகச் செய்யவேண்டும். 'இண்டஸ்ட்ரி ரெடி பீப்பிள்' எனப்படும் தொழிலாளர்களைத் தயார்படுத்தும் பணியை அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் உற்பத்தி துறை மட்டும்தான் பிரமாதமாக இருந்தது. தற்போது சேவை, விருந்தோம்பல், ஓட்டல்கள், சுற்றுலா, மருத்துவம் போன்ற துறைகள் பிரமாண்டமாக வளர்ந்து வருகின்றன. இவற்றின் வளர்ச்சி தொடரவேண்டும் என்றால் நாட்டில் மனிதவளத்தை அவசியம் மேம்படுத்த வேண்டும். அதேநேரத்தில் கட்டுப்பாடுகளையும் விதித்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போல் ஆகிவிடக் கூடாது.

சமுதாயக் கல்லூரிகளை சில அமைப்புகள்தான் நடத்தி வருகின்றன. இவற்றை அதிகப்படுத்தவேண்டும். அவற்றில் எலெக்ட்ரிக்கல், பிளம்பிங், கார்பென்டர் போன்ற கைத்தொழில்களைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் ஒயிட்காலர் வேலைக்கு மட்டும்தான் செல்லவேண்டும் என்ற மனப்பாங்கு மாறும். தற்போது நாட்டில் ஐ.டி.ஐ. சுத்தமான தொழில் படிப்பாகவும், கலை அறிவியல் ஏட்டுப் படிப்பாகவும் இருக்கிறது. இவை இரண்டும் கலந்த படிப்பைக் கொண்டு வருவது அவசியமாக இருக்கிறது.

வாஷிங் மெஷின், ஃப்ரிஜ், கார் போன்ற பொருட்களை வாங்க நம்மூர் மக்கள் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் சேமிப்புத் திறன் குறையலாம். மக்களின் சேமிப்பை அதிகரிக்க... என்.எஸ்.சி. போன்ற சேமிப்புத் திட்டங்களில் வட்டி விகிதத்தை அதிகரிக்கவேண்டும். மேலும், புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு, வட்டி வருமானம், முதிர்வுத் தொகை மற்றும் பென்ஷனுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கவேண்டும். வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகளைப் போல இந்தியாவிலும் பொது மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிக்கவேண்டும். சாதாரண மக்களுக்கு மருந்து மாத்திரைகள் சலுகை விலையில் கிடைக்க ஏற்பாடு செய்வது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவரும் மது அரக்கனை ஒழிக்க பூரண மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்'' என்றார் அவர்.

வரிவிலக்கு வேண்டும்!

'அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு'த் தலைவர் ஏ.சக்திவேல் ஏற்றுமதித் துறையில் செய்யவேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார். ''ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மற்ற நாடுகளின் போட்டிகளைச் சமாளித்து லாபகரமாக ஏற்றுமதி செய்யவும் புதிய அரசு ஏராளமாகச் செய்யவேண்டியிருக்கிறது. டியூட்டி டிராபேக் மற்றும் டி.இ.பி.பி-ஐ ஐந்து சதவிகிதம் உயர்த்திக் கொடுக்கவேண்டும். மேலும், தொழில் கடனுக்கான வட்டியை அனைத்து நிலையிலும் 7 சதவிகிதமாகக் குறைக்கவேண்டும். ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வருமானவரியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். பெரும்பாலான ஏற்றுமதியாளர்களுக்கு சர்வீஸ் டேக்ஸ், ஃபிரிஞ்ச் பெனிஃபிட் டேக்ஸ் பெரும் சுமையாக இருக்கிறது. இவற்றை முற்றிலும் நீக்கவேண்டும்'' என்றார்.

வட்டியைக் குறைக்கவேண்டும்!

சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான 'ஜோன்ஸ் லாங் லாசாலே மெக்ராஜ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் நாயர், ''வீட்டுக் கடனுக்கான வட்டியை இன்னும் குறைக்கவேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களாலும் வீடு வாங்கமுடியும். இதேபோல, அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளைத் தளர்த்தவேண்டும். குறைந்த செலவில் பட்ஜெட் வீடுகளைக் கட்டும் பில்டர்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசாங்கம் அறிவிக்கவேண்டும். ரியல் எஸ்டேட் கட்டுமானத்துக்கு தாராளமாக வங்கிக் கடன் அளிக்கவேண்டும். அடிப்படையான இந்த விஷயங்களை எல்லாம் செய்தால்தான் ரியல் எஸ்டேட் நன்கு வளரும்'' என்றார்.

நிபுணர்கள் கொட்டிவிட்டார்கள். இவற்றைக் கோரிக்கைகளாகப் பார்க்காமல் ஆலோசனைகளாகப் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்... அப்போதுதான் அரசு என்னும் தேர் திருவிழாவை அலங்கரிக்கும்!

- ஏ.ஆர்.குமார், சி.சரவணன்
படங்கள் என்.விவேக்