பிஸினஸ் பக்கங்கள்!

ஜீரோவில் தொடங்கிய ஹீரோக்கள்!

அமெரிக்காவிலுள்ள ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட்...

இந்தியாவின் மெகா நிறுவனங்களான இந்தியன் ரயில்வேஸ்... ரிலையன்ஸ்... இன்ஃபோசிஸ்... ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி...

இந்தியா முழுக்க உள்ள 32 ஆயிரத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்-கள்...

- என்ன இது, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பட்டியலாக இருக்கிறதே என்று குழம்பாதீர்கள். இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்களுக்குத் தேவையான பொருட்களை வெவ்வேறு இடங்களில் வாங்கினாலும், ஒரே ஒரு பொருளை மட்டும் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வாங்குகின்றன. அதுவும் சென்னையில் உள்ள மயிலாப்பூரிலிருந்து! மேற்சொன்ன இந்த நிறுவனங்களில் மின்சாரம் ஒரு நிமிடம் தடைபட்டாலும் அடுத்த நொடியே அவற்றுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுக்கும் யூ.பி.எஸ். கருவிகளைத் தயார்செய்து கொடுக்கிறது மயிலாப்பூரில் உள்ள 'நியூமரிக் பவர் சிஸ்டம்ஸ்'.

இந்த நிறுவனத்தின் சொந்தக்காரரான ஆர்.செல்லப்பன் ஒரு சாதாரண இன்ஜினீயராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். வெறும் இரண்டு லட்ச ரூபாயில் இந்த நிறுவனத்தைத் தொடங்கிய செல்லப்பன், இன்று ஐந்நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக டேர்ன் ஓவர் செய்து கொண்டிருக்கிறார். எப்போதும் வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டிருக்கும் செல்லப்பன், முதன்முறையாக தன் வாழ்க்கைக் கதையை தமிழ் வாசகர்களுக்காக எடுத்துச் சொல்கிறார்...

''சேலம் அருகில் உள்ள சங்ககிரிதான் என்னுடைய சொந்த ஊர். விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பாவுக்கு லாரி பிஸினஸ். சொந்தமாக இரண்டு லாரிகளை வைத்து ஓட்டி வந்தார். சிறுவயது முதலே எங்களுக்கு பிஸினஸின் நுணுக்கங்கள் பற்றிச் சொல்லிக் கொடுத்தார். ஜெயிக்கவேண்டும்; பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்ற உணர்வை சிறுவயதிலேயே எங்களுக்கு ஊட்டி வளர்த்தவர் என் அப்பா.

நான் சங்ககிரியில் உள்ள கவர்ன்மென்ட் போர்டு ஹைஸ்கூலில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ முடித்தேன். படித்து முடித்தவுடன் 1972-ல் கோவையில் உள்ள 'ராமகிருஷ்ணா ஸ்டீல்' நிறுவனத்தில் பயிற்சியாளனாக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு வேலை பார்த்தபடியே கோவையில் உள்ள சி.ஐ.டி-யில் பி.இ. இன்ஜினீயரிங் படித்தேன். படித்துவிட்டு வேலை பார்ப்பதைவிட, வேலை செய்துகொண்டே படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னதான் புத்தகங்களில் பல விஷயங்களைப் படித்தாலும் அதை நேரில் கண்டு உணருகிற மாதிரியான அனுபவத்துக்கு ஈடு, இணை இல்லை. பலவிதமான இயந்திரங்கள், அவற்றின் செயல்பாடுகள், வடிவமைப்பு போன்றவற்றை நான் நேரிலேயே பார்த்ததால் என்னால் அவற்றைப் பற்றி வேகமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இதனால் பல்கலைக்கழக அளவில் அதிகமான மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே முதலிடத்தை என்னால் பெறமுடிந்தது. பொதுவாக உயர்படிப்பு படிக்கிற மாணவர்கள் அவர்கள் என்ன படிப்பு படித்தாலும், கொஞ்சம் நேரடி அனுபவத்தையும் சேர்த்துக்கொள்வது மிகப்பெரிய அளவில் பயன்படும்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து முடித்த நிலையில், சென்னைக்கு வரவேண்டும் என்று நினைத்தேன். காரணம், நான் அடைய நினைத்த வளர்ச்சிக்கான வாய்ப்பு கோவையில் முழுமையாகக் கிடைக்கவில்லை. என் விருப்பத்தை நிறைவு செய்கிற மாதிரி சென்னை அசோக் லேலாண்டில் எனக்கு வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தேன். திடீரென ஒரு யோசனை... நான் படித்ததோ எலெக்ட்ரானிக்ஸ். ஆனால், வேலை பார்க்கும் இடமோ... ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம். படித்த படிப்பை என்னால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையே என்கிற கவலை இருந்தது. இந்த உணர்வுதான் எனக்குள் இருந்த உந்துசக்தி. கைநிறைய சம்பளம் கிடைக்கிறதே என்று என்னால் சும்மா இருந்துவிட முடியவில்லை. நான் படித்த படிப்பின் உதவியைக்கொண்டு என்னால் என்ன சாதிக்கமுடியும் என்று சோதித்துப் பார்க்க விரும்பினேன்.

அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் இருந்தபடியே எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான வடிவமைப்பைத் தனியாகச் செய்துகொடுக்க ஆரம்பித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. மூன்றே மாதத்தில் இனி அசோக் லேலாண்ட் வேலை வேண்டாம் என்று முடிவு செய்தேன். தனியாக ஒரு நிறுவனத்தையும் தொடங்க முடிவு செய்தேன். நிறுவனத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தபோது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எல்லாமே நம்பர்களாக வெளிப்படுவதால் 'நியூமரிக் இன்ஜினீயர்ஸ்' என்று பெயர் வைத்தேன்.

அந்த நேரத்தில்தான் கம்ப்யூட்டர் என்கிற வார்த்தை அடிக்கடி கேட்க ஆரம்பித்தது. அப்போது கம்ப்யூட்டர் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால், 'அது மட்டும் வந்தால் பலருடைய வேலை போய்விடும்' என்று பயப்பட்டனர். எனவே வங்கிகளில் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தும்போது அதை கம்ப்யூட்டர் என்று சொல்லாமல், 'அட்வான்ஸ் லெட்ஜர் போஸ்டிங் மெஷின்' என்று சொல்லித்தான் நுழைத்தார்கள். ஆனால், இந்த கம்ப்யூட்டர் பெருமளவில் நம் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை நான் உணர்ந்தேன். எதிர்காலத்தில் என்ன மாதிரியான தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை மாற்றும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சாமர்த்தியம் இருக்கவேண்டும்.

'கம்ப்யூட்டர் என்று வந்தால் அதற்குத் தொடர்ந்து மின்சாரம் வேண்டும். ஒரு நிமிடம் மின்சாரம் தடைபட்டாலும் அதுவரை செய்த வேலை அழிந்துவிடும். எனவே தடையில்லாத மின்சாரத்தைக் கொடுக்கும் யூ.பி.எஸ். கருவிகளை நீங்கள் தயார் செய்யலாமே! இந்தியாவில் இனிவரும் காலத்தில் கம்ப்யூட்டரின் பயன்பாடு பெரிய அளவில் இருக்கும் என்பதால் யூ.பி.எஸ். கருவியின் தேவை பெரிய அளவில் இருக்கும் என்று சில நண்பர்கள் எனக்கு யோசனை சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்தாக நினைப்பது என் நட்பு வட்டாரத்தைத்தான்! என் நண்பர்கள், என் நலம் விரும்பிகள் உலகின் பல இடங்களில் முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள். நான் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப்படி நடந்ததால் என்னால் சரியான பாதையில் செல்ல முடிந்தது.

யூ.பி.எஸ். கருவியை உருவாக்க முடிவு செய்துவிட்டோம். ஆனால், எப்படி அதை உருவாக்குவது? அதைச் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை. எனவே சென்னை ஐ.ஐ.டி. நூலகத்தையும் பெங்களூருவில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நூலகத்திலும் உள்ள புத்தகங்களைப் படித்து யூ.பி.எஸ். கருவிகளை உருவாக்கும் விதத்தைத் தெரிந்துகொண்டோம். சுமார் ஆறு மாதம் கடுமையாக உழைத்ததில் முதல் யூ.பி.எஸ். தயார் ஆனது. 1985 ஜூன் மாதம் அந்த முதல் யூ.பி.எஸ். கருவியை 'சதர்ன் எக்ஸ்ப்ளோசிவ்' என்ற நிறுவனத்துக்குக் கொடுத்தோம். நாங்கள் செய்த அந்த முதல் யூ.பி.எஸ். கருவியே பதினாறு ஆண்டு காலம் ஒரு பிரச்னையும் இல்லாமல் உழைத்தது.

யூ.பி.எஸ்-ஸைத் தயார் செய்யும்போது அதன் தரம் தனித்துத் தெரியவேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன். எனவே அந்த யூ.பி.எஸ்-ஸூக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தரத்துக்குப் பெயர்போன மிகப்பெரிய நிறுவனங்களிலிருந்து வாங்கினேன். அந்த உதிரிபாகங்களின் விலை அதிகம். எனவே நான் தயாரிக்கும் பொருளின் விலையும் உயர்ந்தது. ஆனால், தரமான பொருள் எனில் ஐந்தோ, பத்தோ அதிகம் கொடுக்க வாடிக்கையாளர்கள் தயங்கமாட்டார்கள் என்ற உண்மை எனக்குப் புரிந்துவிட்டதால் என்னால் அதுபற்றிக் கவலைப்படாமல் பொருளைத் தயார் செய்யமுடிந்தது. நாம் தயாரிக்கும் பொருள் தரமானதாக இருந்தால் அதற்கு எந்த விளம்பரமும் செய்யாமலேயே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். முதலாம் ஆண்டிலேயே 'இந்தியா பிஸ்டன்', 'டாடா பேரிங்' என சில பெரிய நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளராக மாறின.

நாங்கள் யூ.பி.எஸ். கருவிகளைத் தயார்செய்ய ஆரம்பித்து, ஓராண்டு முடிவதற்குள்ளாகவே நொய்டாவில் உள்ள ஹெச்.சி.எல். நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அதன்பிறகு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் வாடிக்கையாளர்களாக மாறின. அன்று தொடங்கிய அந்தப் பரபரப்பு இன்றுவரை ஓயவில்லை. எந்த ஓய்வும் இல்லாமல் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறோம்.

என் தொழிலில் நான் மூன்று பேரை எப்போதும் என்னை விட்டுச் செல்ல அனுமதிப்பதே இல்லை. முதலாவது நபர் நமக்குத் தேவையான மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றைக் கொடுப்பவர்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைச் சரியான நேரத்தில் கொடுத்துவிட்டால், அவர்கள் எந்தக் காலத்திலும் நம்மை விட்டுப்போக மாட்டார்கள். மூலப்பொருட்களைக் கொடுப்பவர்கள் நம்மை விட்டுப்போனால் நாம் தயாரிக்கும் பொருளின் தரம் மாறும். இதனால் பல பிரச்னைகள் வரும். எனவே எந்தக் காலத்திலும் அவர்கள் நம்மை விட்டுச் செல்ல அனுமதிக்கக்கூடாது.

அடுத்த முக்கியமான நபர் வாடிக்கையாளர். அவர்களது திருப்தி மிக முக்கியமானது. சிறிது விலை அதிகம் என்றாலும் தரம் நன்றாக இருந்தால் விலையை அவ்வளவாக பொருட்படுத்த மாட்டார்கள்.

மூன்றாவதாக முக்கியமான நபர் ஊழியர்கள். மயிலாப்பூரில் ஒரு சிறு அறையில் என்னோடு வேலை பார்த்த ஐந்து பேர் இன்றும் என் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். ஊழியர்கள் தங்கள் வேலையை அனுபவித்துச் செய்யும்படியான சூழலையும், நல்ல சம்பளத்தையும் கொடுத்தால் யாரும் வேலையை விட்டுப்போக மாட்டார்கள்.

எங்கள் நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்தபிறகு 1996-ல் ஐ.பி.ஓ. வெளியிட்டோம். அதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. 2003-ல் இலங்கையில் தொடங்கி, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா என பல இடங்களில் எங்கள் அலுவலகத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

எங்களது அடுத்தகட்டமாக சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் கருவிகளை வடிவமைத்து மின்சாரமும் தயார் செய்கிறோம். இதுவரை 120 அலுவலகங்களில் அந்தக் கருவிகளை நிறுவி இருக்கிறோம். எதிர்காலம் சூரிய ஒளி சக்திக்கானது. இப்போது சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க அதிகம் செலவானாலும், எதிர்காலத்தில் அதன் செலவு கணிசமாகக் குறையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை'' என்று சொல்லிமுடித்தார்.

எதிர்காலத்தில் என்ன மாதிரியான தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை மாற்றும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சாமர்த்தியசாலிகள் நிச்சயம் ஜெயிப்பார்கள். செல்லப்பன் நல்ல சாமர்த்தியசாலி!

- ஏ.ஆர்.குமார்
படங்கள் கே.கார்த்திகேயன்