பிஸினஸ் பக்கங்கள்!

பிஸினஸ் கிளினிக்

''சலவைத்தூள் உற்பத்தி செய்துவரும் நிறுவனம் ஒன்றை நடத்துகிறேன். இதுநாள்வரை நான் உற்பத்தி செய்த சலவைத்தூளை தமிழகத்தின் ஐந்தாறு மாவட்டங்களில் மட்டுமே விற்று வந்தேன். எங்கள் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள் என்பதால் தமிழ்நாட்டைத் தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்க விரும்புகிறேன். 'நன்றாக பேக்கிங் செய்து விற்றால் வெற்றி நிச்சயம்' என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். பேக்கிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒரு பொருளின் அமோக விற்பனைக்கும் பேக்கிங்குக்கும் என்ன தொடர்பு? நல்ல பேக்கிங் என்றால் என்ன? அதை எப்படி வடிவமைப்பது ஆகியவற்றைப் பற்றி எனக்குச் சொல்ல முடியுமா?''

- வி.எல்.மனோகரன், திருச்சி.

'கெவின்கேர்' சி.கே.ரங்கநாதன், சி.ஐ.ஐ.தமிழ்நாடு தலைவர்.

''ஆள் பாதி, ஆடை பாதி என்பது பழமொழி. நீங்கள் மெத்தப் படித்த மேதாவியாக இருக்கலாம். உயரதிகாரியாக இருக்கலாம். பெரிய பிஸினஸ்மேனாகக்கூட இருக்கலாம். ஆனால், நீங்கள் உடுத்தும் ஆடை மிக மிகச் சாதாரணமாக இருந்தால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்காது. சிலர் டிப்டாப்பாக உடை உடுத்திக்கொண்டு மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களாக இருப்பார்கள். அவர்களை விட்டுவிடுங்கள். உடை விஷயத்தில் நீங்கள் சரியாக நடந்துகொண்டால் மட்டுமே உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்பது அடிப்படையான விஷயம். உடையைப் போலத்தான் பேக்கிங்கும்!

நீங்கள் எந்தவிதமான பொருளைத் தயார் செய்வதாக இருந்தாலும் அந்தப் பொருள் முதலில் தரமானதாக இருக்கிறதா என்று பாருங்கள். அதற்கு அடுத்து, உங்கள் கவனம் முழுக்க அந்தப் பொருளை எப்படி பேக்கிங் செய்வது என்பதில் இருக்கவேண்டும். ஒரு வாடிக்கையாளர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார். அவர் முன்பு ஆயிரக்கணக்கான பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. அத்தனை பொருட்களுக்கு நடுவே கிடந்தாலும் நீங்கள் தயாரிக்கும் பொருள் வாடிக்கையாளரின் கண்ணைக் கொத்தி இழுக்கிற மாதிரி இருக்கவேண்டும். 'வா, வா, என்னை வாங்கு!' என்று அழைக்கவேண்டும். அந்தப் பொருளை வாங்கியே தீரவேண்டும் என்கிற உணர்வை வாடிக்கையாளரின் மனதில் உருவாக்கவேண்டும். நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கான பேக்கிங் அப்படி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அது நல்ல பேக்கிங்.

வெளிப்புறத்தின் வசீகரத்தை மட்டுமே பார்த்து முதல்முறையாக அந்தப் பொருளை வாங்கும் வாடிக்கையாளருக்கு அந்தப் பொருளின் தரமும் பிடித்துவிட்டால், அவர் அடுத்தடுத்து அந்தப் பொருளை வாங்க ஆரம்பித்துவிடுவார்.

நல்ல பேக்கிங் மிக நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்று சொல்வதற்கு உலக அளவில் பல உதாரணங்கள் இருக்கின்றன. என்றாலும் என் அனுபவத்திலிருந்து ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். 'மா' (MAA) என்கிற பெயரில் விற்பனையாகும் குளிர்பானத்தை நீங்கள் வாங்கிக் குடித்திருக்கலாம். ஓராண்டுக்கு முன்பு அந்த நிறுவனத்தை நாங்கள் வாங்கினோம். நாங்கள் வாங்குவதற்கு முன்பே 'மா' குளிர்பானத்துக்கு மார்க்கெட்டில் ஓரளவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால், பேக்கிங்கில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. தேவையான அளவு விளம்பரமும் செய்யப்படவில்லை. நாங்கள் அந்த நிறுவனத்தை வாங்கியபிறகு முதலில் பேக்கிங்கில் கவனம் செலுத்தினோம். வசீகரமான பேக்கிங்கை உருவாக்கியபிறகு ஓரளவுக்கு விளம்பரமும் செய்தோம். இதனால் அந்தக் குளிர்பானத்தின் விற்பனை ஒரே ஆண்டில் மூன்று மடங்கு பெருகி எங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது.

நம்முடைய தயாரிப்புகளைச் சிறந்த முறையில் பேக்கிங் செய்து கொடுக்க தொழில்முறையில் செயல்படும் நிறுவனங்கள் பல இருக்கின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்களை அணுகுவதே சரியான விஷயமாக இருக்கும். அதை விட்டுவிட்டு நம் பொருளுக்கான பேக்கிங்கை நாமே தயார் செய்ய நினைப்பது சரியாக இருக்காது.

உதாரணமாக, 'டாடா எலெக்ஸி' என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. பேக்கிங்குகளை வடிவமைப்பதில் இந்த நிறுவனம் புகழ் பெற்றது. இதேபோல 'யெல்லோ' (Yellow) என்று அழைக்கப்படும் நிறுவனமும் பேக்கிங் டிஸைன்களை உருவாக்குவதில் பெயர் பெற்று விளங்குகிறது.

நம் தயாரிப்புகளை பேக்கிங் செய்து கொடுக்க இந்த நிறுவனங்கள் நிறைய பணம் கேட்கலாம். ஆனால், பணத்தைப் பார்க்காமல் நல்ல பேக்கிங்கை உருவாக்கி, அதில் நம் பொருளை அடைத்து விற்றால் நமக்குக் கிடைக்கும் வருமானம் நிச்சயம் அதிகமாக இருக்கும்.

மிகத் தரமான பொருள் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்படாததால் மக்கள் மனதில் இடம் பெறாமல் போனதும் உண்டு. தரமற்ற பொருள் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்து விற்பனை செய்ததால் சக்கைப் போடு போட்டதும் உண்டு. எனவே தரத்தோடு பேக்கிங்கிலும் கவனம் செலுத்துங்கள். நிச்சயம் ஜெயிப்பீர்கள்.''