பிஸினஸ் பக்கங்கள்!

நாங்கள் ஒரு படி மேலேதான்...

பின்னி எடுக்கும் பெண் அதிகாரிகள்..!

'அடுப்பூதும் பெண்கள்...' என்ற அலட்சிய மனோபாவம் கொண்ட சமூகத்தில், முட்டிமோதி பல தடைகளைக் கடந்து பதவிகளைப் பிடித்துவிட்டாலும் பெண்கள் என்றால் கொஞ்சம் குறைவாக எடைபோடும் நிலைதான் நேற்றுவரையில் இருந்தது. ஆனால், இன்றைக்கு பல நிறுவனங்கள் பெரிய பெரிய பதவிகளில் பெண்களை உட்காரவைத்திருக்கின்றன. பதவி என்பது பொதுதான்... அதில் ஆண்-பெண் பேதம் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பெண்களும்

தங்கள் பதவிக்கு ஏற்ற வகையில் பணியைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பெண்கள் ஒருபடி மேலேயே இருக்கிறார்கள்.

அதுதான் பெண்மையின் சிறப்பு... எங்கள் இயல்பே எங்களுக்கு ப்ளஸ் பாயின்டாக இருக்கிறது என்கிறார்கள் உயர் பதவியில் இருக்கும் பெண்கள் சிலர். அது எப்படி என்ற கேள்வியோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணை பொதுமேலாளரான ரேணுகா மோகன்ராவைச் சந்தித்தோம்.

''எங்களை, 'சமையலறையைத் தாண்டி வராதே' என்று சொல்லியே பலகாலம் அடக்கி வைத்தார்கள். ஆனால், அந்தச் சமையலறையே எங்களுக்குப் பள்ளிக்கூடமாக இருந்தது. அங்கே கற்றுக்கொண்ட பல விஷயங்கள் எங்களுக்குப் பணியின்போது உதவியாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதன் ஆணிவேர் எதுவென்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும், சமையலில் ருசியைக் கெடுப்பது அதிகமாகிப் போன உப்பா, புளிப்பா என்பதைக் கண்டுபிடிப்பது போல..! அதேபோல, எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் அத்தனையையும் அதற்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் சுலபமாக வரிசைப்படுத்திவிட பெண்களால் முடியும்.

ஒரு பணியைப்பற்றித் திட்டமிடும்போதே அதை பல பிரிவுகளாக்கிக்கொண்டு எல்லாப் பிரிவுகளையும் செயல்பட வைத்து, சீக்கிரம் அந்த வேலையை முடிப்பது பெண்களுக்குக் கைவந்த கலை. சிக்கல்களைத் தீர்ப்பதற்கு என்ன வழிமுறைகள் என்பதை அழகாகத் திட்டமிட்டுக்கொள்வார்கள். எதை முதலில் செய்யவேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்வார்கள். எப்போதுமே சமையலைத் தொடங்கும் முன்னரே பருப்பை வேகப்போட்டு விடுவார்கள் பெண்கள். ஏனென்றால், அது வேக கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆக, சமையல் தெரிந்தால் நல்ல நிர்வாகியாக இருக்கமுடியும்'' என்று சொன்ன ரேணுகா, ஒரு பெண்ணாகப் பெரிய பொறுப்பில் இருப்பதால் உண்டான லாபத்தைப் பற்றிச் சொன்னார்.

''எல்லோருமே மரியாதையோடு பழகுவார்கள்... அதோடு, அலுவலக மரியாதை தாண்டி ஒரு அந்நியோன்யம் இருக்கும். அதை வைத்து அவர்களின் புறச்சூழலை அறிந்து அதற்கு ஏற்ப வேலைவாங்கமுடியும். 'அலுவலக நேரத்தில் நீ எப்படி இருக்கிறாய் என்பதுதான் முக்கியம்... அதன்பிறகு எக்கேடு கெட்டாலும் கவலையில்லை' என்று ஒரு பெண் அதிகாரியால் இருக்கமுடியாது.

நான் ஒரு கிளையில் மேனேஜராக இருந்தபோது புதிதாகத் திருமணமான ஒரு பெண் ஊழியர் தன் குடும்பச் சிக்கலை என்னிடம் சொன்னார். நானும் அதற்கு விடை தேடும் முயற்சியாக அந்தப் பெண்ணை பணிமாற்றம் செய்து அவளுடைய பிரிவை அந்தக் குடும்பத்துக்கு உணர்த்தினேன். பெண் ஊழியர் என்று இல்லை... ஆண் ஊழியர்களும் அவர்களுடைய பர்சனல் விஷயங்களை அன்போடு பகிர்ந்துகொள்வார்கள். அந்த வாய்ப்பு அதிகாரிகளாக இருக்கும் ஆண்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லமுடியாது.

ஓர் ஊழியரின் முழுமையான குணத்தை அறிந்து அதன் அடிப்படையில் வேலை வாங்குவதுதான் பெண் அதிகாரிகளின் சிறப்பு. அதனாலேயே அதிகபட்ச உற்பத்தியை வெளிப்படுத்த முடிகிறது...'' என்றார்.

ரேணுகாவாவது வங்கிப் பணியில் இருக்கிறார், மாயா ராமச்சந்திரனோ தன் தந்தையின் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார், சொந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் பணி என்பதால் சுமையும் அதிகம்.

''நமக்கு ஒரு மகன் இருந்து இந்த நிறுவனத்தை நடத்தியிருந்தால் பெரிசா வளர்த்திருப்பானேனு எங்கப்பா நினைச்சிடக் கூடாதுனு நானும் என் சகோதரியும் அதிகமாக உழைச்சு இந்த நிறுவனத்தை உயர்த்தியிருக்கோம். நான் பொறுப்பேற்று மூன்று வருடத்துக்குள் ஐ.எஸ்.ஓ. 9001 தரச் சான்றிதழ் வாங்கிட்டோம்னா பாருங்க, எங்க உழைப்பு எத்தனை தீவிரமாக இருந்திருக்கும்னு!'' என்று உற்சாகமாகப் பேசினார் மாயா.

இவருடைய 'ஜென்லைட் இன்ஜினீயரிங்' நிறுவனத்துக்கு இன்றைக்கு மூன்று இடங்களில் தொழிற்சாலை இருக்கிறது. எல்லா இடங்களிலும் யாருக்கு என்ன வேலை என்பதைத் தீர்மானிப்பதோடு குவாலிட்டி தொடர்பான வேலைகளையும் இவரே எடுத்துச் செய்கிறார்.

''பெண்கள் பெரிய பொறுப்புகளில் இருந்தால் ஒருவிதமான பர்சனல் டச் இருக்கும். அது எல்லோரையும் உற்சாகமாக வைத்து அதிகமான வேலையைச் செய்ய உதவியாக இருக்கும். நான் சைக்காலஜி படிச்சிருக்கேன். அதனால், ஒரு மெஷினை எப்படி உருவாக்குவது என்கிற இன்ஜினீயரிங் திறமை இல்லாவிட்டாலும் மெஷினை உருவாக்கும் இன்ஜினீயர் என்ன மனநிலையில் இருக்கிறார்னு தெரிஞ்சுக்க முடியும். கொஞ்சம் டல்லாக இருக்கும் பிள்ளையின் முகவாட்டத்தை வெச்சே அம்மா கண்டுபிடிப்பது மாதிரி, சோர்ந்திருக்கும் ஊழியரை என்னால் கண்டுபிடிச்சிட முடியும். அதோடு என் கம்பெனியில் பார்வையற்ற சிலரை பேக்கிங் மாதிரியான பிரிவுகளில் வேலைக்குச் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு ஸ்பெஷல் சலுகை எல்லாம் தராமல் எல்லோரையும் போலவே நடத்துவதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது. மற்றவர்களுக்கு அவர்கள் மேல் மரியாதை கிடைக்கிறது. இதெல்லாம் பெண் என்பதால்தான் சாத்தியம்னு நான் நினைக்கிறேன்...'' என்றார்.

''வெறுமனே கொடுத்த வேலையைச் செய்தாரா என்று மட்டும் பார்க்காமல் அந்த ஊழியரிடம் உள்ள வேறு சில திறமைகளையும் கண்காணித்து அவர்களை ஊக்குவிக்கும் குணம் பெண்களிடம் அதிகமாக உண்டு. எங்கள் அலுவலகத்திலேயே பத்தாவது வரை படித்த பையன் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆர்வத்தின் அடிப்படையில் அவர் சில வேலைகளைச் செய்ய, அந்தத் திறமையைக் கவனித்துவிட்டு அவரை தொழிற்சாலைக்கு மாற்றினோம். அங்கே படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு சி.என்.சி. மெஷின் ஆபரேட்டராக இருக்கிறார். ஒரு திறமைசாலியை அடையாளம் கண்ட சந்தோஷம் எங்களுக்கு... இதுதான் பெண்களின் அணுகுமுறை...'' என்றார்.

''விட்டுக் கொடுப்பதும் வீம்பு பிடிக்காமல் இருப்பதும் பெண்களுடைய இயல்பு... தலைமைப் பண்புகளில் அது மிக முக்கியமானது. யாருடனும் கீழே இறங்கிப் போய்ப் பேசும் பெண்களின் குணம் பல நேரங்களில் கம்பெனிக்குச் சாதகமாக இருக்கும்...'' என்றார் 'ராம்கோ சிஸ்ட'த்தின் ஆன் டிமாண்ட் பிரிவின் தலைவராக இருக்கும் சந்திரா பிரபாகர்.

''என் அறையில் என்னைப் பார்ப்பது அரிது. மற்றவர்களோடு இருப்பதால் மேலதிகாரி, ஊழியர் என்ற இடைவெளி குறைந்துவிடும். நாம் உயரதிகாரி... யாராக இருந்தாலும் என்னைத் தேடித்தான் வரவேண்டும் என்ற மனநிலையில் இருந்தால் பல நேரங்களில் சிக்கலைத் தீர்க்கமுடியாது. நமக்குக் கீழே பணிபுரிபவர்களின் பலம் மட்டுமல்லாமல் பலவீனங்களையும் நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதற்கு எல்லோருடனும் நெருங்கிப் பழகினால்தான் முடியும். இடைவெளியைக் குறைப்பது எப்போதுமே நல்லது...'' என்றார்.

தன்னுடைய துறையைப் பற்றிச் சொல்லும்போது,

''ஐ.டி. துறையில் 25 வருடத்துக்கு முன்பு பெண்கள் வருவது மிகவும் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது நிறைய பெண்கள் வருகிறார்கள். இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும். ஐ.டி. துறையைப் பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த வேலைக்கு லாஜிக் திறன் மட்டும் போதும். ஆனால், இது தனிநபரின் வேலையல்ல... குழுவாகச் செய்யவேண்டியது என்பதால் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைப் பொறுப்புக்கு சில குணாதிசயங்கள் முக்கியம். அது பெண்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கிறது. பெரும்பாலான பெண்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்வார்கள். ஆனால், ஆண்கள் இந்த விஷயத்தில் அப்படி இல்லை... அவர்கள் ஒரு சமயத்தில் ஒரு வேலையை மிகச்சிறப்பாகச் செய்வார்கள், ஆனால், பல வேலை கொடுத்தால் கொஞ்சம் தடுமாறித்தான் போவார்கள்'' என்றவர், அதற்கான காரணத்தையும் சொன்னார்.

''உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு எல்லா பிரச்னைகளையும் தீர்க்கத் தெரியவேண்டிய அவசியமில்லை. ஆனால், யாரிடம் ஒப்படைத்தால் அந்தப் பிரச்னை தீரும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அந்தக் கலையில் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்...'' என்றார் சந்திரா.

'பெப்சிகோ'வின் தலைவராக இருக்கும் இந்திரா நூயி, 'ஹெச்.எஸ்.பி.சி. வங்கி'யின் எம்.டி-ஆக இருக்கும் நைனாலால் கிட்வாய் போன்ற பல பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு உதாரணமாகத் திகழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னமும் அந்த எண்ணிக்கை அதிகமாகும். இப்போதைய சூழலில் பத்து சதவிகிதம் என்ற அளவில்தான் தொழில்துறையில் பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிப்பதுதான் நாட்டுக்கும் நல்லது... அந்தத் துறைக்கும் நல்லது!

- வா.கார்த்திகேயன்
படங்கள் என்.விவேக், 'ப்ரீத்தி' கார்த்தி, வீ.நாகமணி