பிஸினஸ் பக்கங்கள்!

வரப்பு உயர்ந்தால் நீர் உயர்ந்து, கோன் உயர்ந்து, குடி உயரும் என்பதெல்லாம் அந்தக் காலம்... இப்போது வரப்பு மட்டுமல்ல... சாலைகளும் உயர்ந்தால்தான் நாடு உயரும் என்ற நிலை! உலகமெல்லாம் லாஜிஸ்டிக்ஸ் துறை எனப்படும் சரக்குப் போக்குவரத்து விநியோகத் துறை அதிக முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், நமது நாடு இந்தத் துறையில் சொல்லிக்கொள்ளும் நிலையில் இருக்கிறதா?

உலக அளவில் லாஜிஸ்டிக்ஸ் துறையின் தலைமையிடமாக இருப்பது ஐரோப்பா. ஆனாலும் அமெரிக்காதான் இந்த மார்க்கெட்டில் மூன்றில் ஒரு பங்கை தன்வசம் வைத்திருக்கிறது! 1992-ல் உலக அளவில் பத்து பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த இந்தத் துறை, இன்று அதிவேகமாக வளர்ந்து நாலரை டிரில்லியன் என்ற அளவை எட்டிப்பிடித்திருக்கிறது! ஆனால், நம் நாட்டின் நிலை?

1990-ல் தான் நமக்கு இத்துறையின் முக்கியத்துவமே தெரிய வந்தது என்கிறார்கள் வல்லுநர்கள். அதனால் தற்போது தவழும் பருவத்தில்தான் இருக்கிறது! இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால் உள்கட்டமைப்பில் ஆரம்பித்து அனைத்துத் துறைகளும் மெள்ள சீராகிவருகின்றன. அதன் பலனால் லாஜிஸ்டிக்ஸ் துறையும் வளர்ச்சியைக் காணும் என்கிறார்கள். இருப்பினும் பல்வேறு விஷயங்கள் தடைக்கல்லாகவே இருக்கின்றன. குறிப்பாக மிகவும் குறைந்த டிமாண்ட், மோசமான உள்கட்டமைப்பு, அதிகச் செலவு, மற்றும் சிக்கலான அரசாங்க விதிமுறைகள் போன்றவற்றால் வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

முதலில் இத்துறை எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளைப் பார்க்கலாம்...

இந்தியாவைப் பொறுத்தவரை அதிகச் செலவும் குறைந்த லாபமும் உள்ள பிஸினஸ் லாஜிஸ்டிக்ஸ்தான்! போதாக்குறைக்கு ஒழுங்குபடுத்தப் படாத ஏராளமான நிறுவனங்கள் இத்துறையைக் கையில் வைத்திருப்பதால் அந்தப் போட்டியால் வளர்ச்சி பெரிதும் தடைபடுகிறது.

மதிப்புக்கூட்டு வரி போன்ற சட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாதது செலவுகளைக் கூட்டுகிறது. அதிகமான செக் போஸ்ட்டுகள், காவல்துறை கெடுபிடிகள் போன்றவை பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை! நம் நாட்டில் ஒரு லாரி குறிப்பிட்ட இடத்தைச் சென்று அடைவதற்குள் செக்போஸ்ட் மற்றும் கெடுபிடிகளால் சராசரியாக 24 முதல் 48 மணி நேரம் தாமதமாகிறது! அதுமட்டுமல்ல... இரண்டரை மில்லியன் டாலர் அளவுக்கு எரிபொருளும் வீணாகிறது! இதனாலேயே இத்துறையில் முதலீடு செய்யப் பலரும் தயங்குகிறார்கள்.

இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸை அவுட்சோர்ஸ் செய்வது குறித்து பரவலாகத் தெரியவில்லை. வளர்ந்த நாடுகளில் இது 80% என இருக்க, இந்தியாவிலோ 10% தான்!

சர்வதேச தரத்துக்கு மதிப்புக் கூட்டுச் சேவைகளை லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிகள் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் அதேசமயம், அதற்கான பணத்தைத் தர நம்நாட்டில் யாரும் தயாராக இல்லை!

பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் உலகளாவிய நெட்வொர்க்கால் குறைந்த கட்டணம், கடனுக்காக அதிக காலவரம்பு போன்ற சலுகைகளைத் தர முடிகிறது. ஆனால், இந்திய கம்பெனிகளால் அத்த கைய வசதிகளைத் தரமுடியாததால் அவர்களுடன் போட்டி போட முடிவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக நமது நாட்டில் உள் கட்டமைப்பின் குறைவான வளர்ச்சி பெரும் தடை யாக இருக்கிறது. உள்நாட்டுப் போக்குவரத்தில் 60% தரைவழியாகவே நடைபெறுகின்றன. மொத்த தரைவழிப் போக்குவரத்தில் நெடுஞ்சாலைகளின் பங்கு 40%-மாக உள்ளது. மோசமான நெடுஞ்சாலைகள், துறைமுகங்களில் உள்ள நெருக்கடி அரசு கெடுபிடிகள், மின்பற்றாக்குறை, வங்கித் துறையில் ஏற்படும் தாமதம் போன்றவை ஏற்றுமதியாளர் களுக்கு அதிகச் சிரமங்களைக் கொடுக்கின்றன.

இந்தியாவில் கப்பல்கள் சரக்குகளை இறக்கு வதற்கும் ஏற்றுவதற்கும் மிக அதிக காலம் எடுத்துக்கொள்வதால் சிங்கப்பூர், துபாய், கொழும்பு போன்ற நாடுகளின் துறைமுகங்களை அணுகவேண்டிய நிலை பலருக்கு ஏற்படுகிறது. இதனால் செலவு அதிகமாகிறது.

இத்துறையில் தகவல் தொழில்நுட்பம் இன்னும் முழுவதுமாக மேம்படுத்தப் படவில்லை.

முக்கியமான இன்னொரு விஷயம் இத்துறையில் தகுந்த தகுதி வாய்ந்த நபர்கள் பணியில் இல்லை.

இப்படி பல பிரச்னைகளுக்கு ஊடாகவே வளரவேண்டிய நிலையில் இருக்கும் லாஜிஸ்டிக்ஸ் துறையின் எதிர்காலம் குறித்து சென்னை வேளச்சேரியில் உள்ள 'சி.ஐ.ஐ. இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸி'ல் கன்சல்டன்ட்டாக இருக்கும் எம்.குருநாதனைச் சந்தித்துக் கேட்டோம்....

''முன்பு லாஜிஸ்டிக்ஸ் என்றால் வெறும் லாரி சர்வீஸ் என்றுதான் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இன்று ஒரு பொருளைத் தயாரிக்கத் தேவையான சின்னச் சின்னப் பொருட்களை தொழிற்சாலைக்குக் கொண்டு வருவதில் ஆரம்பித்து, தயாரான பொருளை பல ஊர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிற வரையில் லாஜிஸ்டிக்ஸின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்திருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்... ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் அதற்குத் தேவையான பிரேக்கை ஒரு இடத்திலிருந்து வாங்கும். டயரை வேறொரு இடத்திலிருந்து வாங்கும். இப்படி பல இடங்களிலிருந்து பல பொருட்களை வாங்கி ஸ்டாக் செய்வதால் நிறுவனத்தின் மூலதனம் பெருமளவில் முடங்கிப் போய்விடுகிறது. இதனைத் தடுக்க இப்போது புதிய நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு ஷிஃப்ட்டுக்குத் தேவையான உதிரிபாகங்கள் மட்டுமே கையிருப்பில் இருக்கும். அடுத்த ஷிஃப்ட்டுக்குத் தேவையானவை அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்துவிடும். இப்படித் தொடர்ந்து நடப்பதால் நிறுவனத்தின் மூலதனம் முடங்குவதே இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்பதையும் தரம், மார்க்கெட்டிங் போன்ற விஷயங்களையும் தெரிந்துகொண்டுவிட்டோம். அடுத்து நம் மொத்த கவனத்தையும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியா முழுக்க மொத்தம் 3.2 மில்லியன் கி.மீ. தூரத்துக்கான சாலைவசதி இருக்கிறது. இதில் பாதி மட்டுமே ஒழுங்கான வசதிகள் கொண்டவை. 20 சதவிகிதச் சாலைகளே மிகச்சிறந்த முறையில் இருக்கிறது. ஆக சாலைகளை உடனடியாக மேம்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தை நாம் மறுத்துவிட முடியாது.

லாஜிஸ்டிக்ஸ் துறையை மேம்படுத்த அரசு கொண்டுவந்த திட்டங்களில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் முக்கியமானது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா என முக்கிய நகரங்களை இணைக்கும் சுமார் 5,846 கி.மீ. தூரத்துக்கான இந்தத் திட்டம், முடியும் நிலையில் உள்ளது. அடுத்த திட்டம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரியையும் போர்பந்தரிலிருந்து சில்ச்சாரையும் இணைக்கக் கூடியது. இந்த நான்கு ஊர்களுக்கு நடுவே போடப்பட்ட சாலை 7,300 கி.மீ. நீளத்துக்கானது. இந்த இரண்டு திட்டங்களும் முழுவதுமாக நிறைவேறி அதில் சரக்குப் போக்குவரத்து முழுமையாக நடக்க ஆரம்பித்தால் நம் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர ஆரம்பிக்கும்.

இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும் 184 சிறிய துறைமுகங்களும் இருக்கின்றன. இந்தத் துறைமுகங்களில் கப்பல்கள் வந்து நின்றவுடன் அதிலிருந்து சரக்குகளை ஏற்றி, இறக்க ஆகும் நேரம் மிக அதிகமாக இருக்கிறது. ஹாங்காங்கில் சரக்கை ஏற்றி, இறக்க 10 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். இதுவே இந்தியாவில் என்றால் மூன்று நாட்களுக்கும் அதிகமாக ஆகிறது. இதுவும் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும்.

இன்றைக்குப் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து லாரிகளை மட்டுமே நம்பி இருக்கிறது. அரிசி, கோதுமை, கிரானைட், உரங்கள் போன்றவை லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. பெட்ரோல், டீசலின் விலை அதிகம் என்பதால் லாரிகளில் சரக்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவும் அதிகமாகிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரேவழி நீண்ட தூரத்துக்குக் கொண்டு செல்லப்படும் சரக்குகளை கப்பல் மூலம் கொண்டு செல்வதுதான்.

இது மட்டுமல்ல... அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வேர்ஹவுஸ்களை உருவாக்குவதிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். பொதுவாக நம்மூரில் வேர்ஹவுஸ் என்றாலே குடோன் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், இப்போது வைக்கப்படும் பொருளுக்கு ஏற்ப வேர்ஹவுஸின் அமைப்பை மாற்றுவது, வேர்ஹவுஸூக்குள் இருக்கவேண்டிய சீதோஷ்ண நிலை, எந்தெந்தப் பொருட்கள் எங்கு இருக்கின்றன என்கிற விவரங் களை கம்ப்யூட்டர் மூலம் கண்டுபிடிக்கும் திறன் போன்ற வசதிகள் கொண்ட நவீன வேர்ஹவுஸ்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தவிர, லாஜிஸ்டிக்ஸ் பார்க் என்கிற புதிய கருத்தாக்கமும் சமீபமாகப் பிரபலமடைந்து வருகிறது. ஒரு நிறுவனத்துக்குத் தேவையான வேர்ஹவுஸிங்கை ஏற்பாடு செய்து தருவதோடு, அதற்கான கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் உள்பட பல வேலைகளை ஒரே இடத்தில் செய்து கொடுப்பதுதான் லாஜிஸ்டிக்ஸ் பார்க்குகளின் வேலை. டாடா நிறுவனம் துபாயைச் சேர்ந்த 'ஜப்ஷா' என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுக்க ஏழு இடங்களில் லாஜிஸ்டிக்ஸ் பார்க்குகளை அமைக்கப் போகிறது. இதற்காக 2,955 கோடி ரூபாய் செலவிடப் போகிறதாம். 'சேஃப் எக்ஸ்பிரஸ்' நிறுவனம் அகமதாபாத்தில் புதிய லாஜிஸ்டிக்ஸ் பார்க் ஒன்றை சமீபத்தில் திறந்தது. கூர்கான் மற்றும் நாக்பூரில் லாஜிஸ்டிக்ஸ் பார்க்கை வெகுவேகமாகக் கட்டி வருகிறது. இதுதவிர, இந்தியா முழுக்க இன்னும் 32 பார்க்குகளை கட்டப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு பொருளை லாரியில் ஏற்றி அனுப்பினால் லாரி வருமா என்று பழியாகக் கிடக்கவேண்டும். இப்போது ஜி.பி.எஸ். (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) என்கிற தொழில்நுட்பம் வந்துவிட்டதால் நீங்கள் பொருள் அனுப்பிய லாரி எங்கே இருக்கிறது, சரியான நேரத்துக்குப் பொருள் வந்து சேருமா என்பன போன்ற பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடியும். அதனால், பெரிய பிரச்னைகள் ஏற்படுவதில்லை.

இப்படி மிகப்பெரிய வளர்ச்சி கண்டுவரும் நேரத்தில் பிரச்னைகளும் எழாமல் இல்லை. உதாரணமாக, இந்தியா முழுக்க 5 லட்சம் பேர் சுமார் 29 லட்சம் லாரிகளை வைத்திருக்கின்றனர். இது இந்தியாவில் மொத்த லாரி போக்குவரத்தில் 67%. மத்திய அரசாங்கம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனில் இந்த ஐந்து லட்சம் லாரி உரிமையாளர்களையும் கலந்து ஆலோசித்த பிறகே ஒரு முடிவு எடுக்கவேண்டியிருக்கிறது. இவை எல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டால், இத்துறையில் நாம் எங்கோ சென்றுவிடுவோம்'' என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் குருநாதன்.

ஆக மொத்தத்தில் களையவேண்டிய பிரச்னைகள் பல இருந்தாலும் இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறை தனது பயணத்தில் வெற்றிகரமாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு கட்டியம் கூறுவது போல 'டாடா', 'ரிலையன்ஸ்' போன்ற மெகா நிறுவனங்கள் இத்துறையின்பால் தங்கள் பார்வையைத் தற்போது திருப்பியிருக்கின்றன!

மெகா நிறுவனங்கள் மட்டுமல்ல... புதிய தொழில் முனைவோர்களும் இத்துறையில் ஆர்வம் காட்டுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. காரணம் இத்தொழிலில் ஈடுபட பெரிய அளவில் சொத்துக்களில் முதலீடு செய்யத் தேவையில்லை என்பதுதான்!

லாஜிஸ்டிக்ஸ் படித்தால் வேலை நிச்சயம்!

''இன்றுள்ள சூழ்நிலையில் 'லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்' படித்தால் நிச்சயம் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்'' என்கிறார் சென்னை வேளச்சேரியில் உள்ள 'சி.ஐ.ஐ. இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தின் சீனியர் கன்சல்டன்ட் சந்திரமௌலி. ''இன்று லாஜிஸ்டிக்ஸ் துறையில் இந்தியா முழுக்க சுமார் 50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டலாம். முன்பு லாஜிஸ்டிக்ஸ் என்பது மற்ற துறைகளுக்கு உதவியாக இருக்கும் ஒரு சப்போர்ட்டிங் துறையாகவே இருந்தது. ஆனால், இன்றோ அதுவே மிக முக்கியமான துறையாக மாறிவிட்டது. இன்று லாஜிஸ்டிக்ஸ் துறையில் பொறுப்பு வகிக்கிறவர்கள் ஒரு நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட் என்கிற அளவுக்கு பதவி உயர்வு பெறுகிறார். அறிவியலும் தொழில்நுட்பமும் கிரியேட்டிவிட்டியும் கலந்த இந்தத் துறை கொஞ்சம்கூடப் போராடிக்காது'' என்றார் அவர்.

அரசு செய்யவேண்டியது...

இத்துறையில் அதிக அளவு லாபம் இல்லாததால் அரசு இத்துறைக்கு குறைந்த செலவில் முதலீட்டை வழங்க முயற்சிகள் எடுக்கவேண்டும். உள்கட்டமைப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

இத்துறை சரியான வேகத்தில் வளர்ந்தால் 2015-க்குள் 385 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் என்று 'குஷ்மேன்-வேக்ஃபீல்டு' என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

தங்க நாற்கர சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு காரிடார் போன்ற திட்டங்களை விரைவாக முடிக்க முயற்சி எடுக்கவேண்டும்.

எஸ்.இ.இசட். போன்ற தடையற்ற வர்த்தகம் மற்றும் வேர்ஹவுஸிங் மண்டலம் (Free Trade And Warehousing Zone) ஆகியவற்றை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும்.

பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சி போன்றவற்றையும் ஊக்குவிக்க வேண்டும்.

கட்டுமானத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

இந்திய ரயில்வே இத்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யவேண்டும். ஏற்கெனவே எம்.எம். பி.எல். (Multimodel Logistics Parks) என்ற திட்டத்தின் மூலம் ரயில்-ரோடு இணைப்பு, வேர்ஹவுஸிங், வங்கி மற்றும் அலுவலக இடவசதி போன்றவற்றை ஒருங்கிணைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளன. அதை விரைவாகச் செய்துமுடிக்கவேண்டும்.

- ஏ.ஆர்.குமார்
படங்கள் கே.கார்த்திகேயன்