தொடர்கள்

மே, 2004-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவில் புதிய அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கை ஓங்கியிருக்கும் என்று தகவல் வெளியான அன்று பங்குச் சந்தை பத்து சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்து பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. 2009, மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும் என்கிற தகவல் வெளியான அன்று பங்குச் சந்தை 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக எகிறியது! இப்படி முரண்பட்ட இரண்டு விஷயங்கள் நடக்கக் காரணம், பி-நோட்ஸ் என்கிற சமாசாரம்தான்.

அது என்ன பி-நோட்ஸ்? 'பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்' என்பதன் சுருக்கம்தான் பி-நோட்ஸ். தமிழில் இதனை 'பங்கேற்புப் பத்திரம்' என்று சொல்லலாம். இந்த பி-நோட்ஸ் சட்டத்தின்படி வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமலே எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

கேத்தன் பரேக் என்கிற அதிபுத்திசாலி 2001-ல் தன் சித்து வேலையைக் காட்டியதன் விளைவாக, பங்குச் சந்தை பெரும் ஆட்டம் கண்டது. அப்படி ஆட்டங்காணும் அளவுக்கு கேத்தன் பரேக் செய்தது என்ன என்று விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டபோது, பி-நோட்ஸின் மகிமை புரிந்தது. 'இனி வேண்டவே வேண்டாம் இந்த பி-நோட்ஸ். அப்படி வேண்டுமெனில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் யார் என்பதை வெளிப்படையாகச் சொன்னபிறகு, பி-நோட்ஸ் மூலம் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிந்துரை செய்தது.

பி-நோட்ஸ் மூலம் முதலீடு செய்பவர்கள் யார் யார் என்கிற தகவலைப் பெற யுனைடெட் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்து என்கிற நிதிச் சேவை அமைப்பிடம் செபி கேட்டபோது, முதலீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியே சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டது.

இப்படி பி-நோட்ஸ் என்கிற கருவி முறைப்படுத்தப்படாமலே இருப்பதால் யார் யாரோ அதனைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் பணத்தைக் கொண்டுவருவதாக நினைக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. அந்த யார் யாரோ பட்டியலில் ஊழல் பணத்தைக் கள்ளத்தனமாகச் சேர்த்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள், வரி கட்டாமல் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைச் சேர்த்து வைத்திருக்கும் தொழிலதிபர்கள், போதைப் பொருட்களைக் கடத்தி விற்று பணம் சம்பாதிப்பவர்கள் எனப் பலரும் இருப்பதாகக் கருதுகிறது ரிசர்வ் வங்கி. தவிர, சர்வதேச அளவில் இயங்கும் தீவிரவாதிகளும் இந்த பி-நோட்ஸ் மூலம் பணத்தை முதலீடு செய்வதாகச் சொல்லப்படுகிறது!

பி-நோட்ஸ் என்னும் நச்சுக்கிருமி நுழைவதால் சந்தையின் ஆரோக்கியம் கெட்டுவிடுமோ என்று பயப்படுகின்றனர் நிபுணர்கள். எனவே அதை ஒழிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை உயர்மட்ட அளவிலான அமைப்புகளும் தனிநபர்களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். ஆனால் பி-நோட்ஸை ஒழிப்பதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

பி-நோட்ஸ் என்கிற நடைமுறையைப் பயன்படுத்தி திருடர்களும் தீவிரவாதிகளும் திருவிளையாடல் நடத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது. மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்கும் என்று நம்பலாம்.