கேள்வி-பதில்

''வேலை கிடைக்கவில்லை... பணமாவது திரும்பக் கிடைக்குமா?''

''வேலை வாங்கித் தருவதாகச் சொன்ன மேன் பவர் ஏஜென்ஸி ஒன்றுக்கு மூன்று லட்சம் ரூபாய் செக்காகக் கொடுத்தேன். கொடுத்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் வேலை வாங்கித் தரவில்லை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பணத்தையாவது திரும்பப் பெறமுடியுமா?''

- செந்தில்குமார், சென்னை.

கே.அழகுராமன், வழக்கறிஞர்.

''வேலைக்காகப் பணம் கொடுத்து இரண்டு வருடங்கள் ஆகியும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அது மோசடி (cheating) என்ற பிரிவுக்குள் வரும். பாதிக்கப்பட்ட நீங்கள் முதலில் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் மீது போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்து, விசாரணைக்குப் பிறகு பணத்தைக் கைப்பற்றலாம்.

செக் மூலமான பணப் பட்டுவாடா நடந்திருப்பதால், அதன் அடிப்படையிலும் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெறலாம்.

மேலும் இதுபோன்ற நபர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை இரண்டையுமே மேற்கொண்டு தண்டனை பெற்றுத் தந்து, நீங்கள் கொடுத்த தொகையுடன் கூடுதலாக அபராதத் தொகை, நஷ்டஈட்டுத் தொகை என அனைத்தும் பெறலாம். உறுதியோடு செயல்பட்டு நீதியைப் பெறுங்கள். இது மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும்.''

''என் நண்பர் தன் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியிருக்கிறார். வங்கித் தரப்பில் 'வீடு வங்கியில் அடமானத்தில் வைக்கப்பட்டுள்ளது' என்று பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யச் சொல்லிவிட்டனர். இது அவசியமா?''

- முருகராஜ், சென்னை.

''வீட்டின் உரிமையாளர், வங்கி இரு தரப்புக்குமே இப்படிப் பதிவு செய்துகொள்வது நல்லதுதான்.

உண்மையில் நாம் வாங்கும் கடன் தொகைக்காக வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் ஓர் உத்தரவாதமே இந்தப் பதிவு! கடனையோ, வட்டியையோ கட்டத்தவறும் பட்சத்தில் வங்கிக்கு சொத்தின்மீது எல்லாவித உரிமையும் உள்ளது என சொத்தின் உரிமையாளரால் எழுத்து மூலமாகக் கொடுக்கப்படும் ஓர் ஆவணமே இது!

கடனையோ, வட்டியையோ செலுத்தத் தவறும்பட்சத்தில் சொத்தினை பொதுஏலத்துக்கே கொண்டுவரும் அதிகாரத்தை இந்த அடமானத்தின் மூலம் உரிமையாளர் வங்கிக்கு வழங்குகிறார். அடமானக் காலத்தில் சொத்து உரிமையாளர், சொத்தினைப் பிற நபருக்கு எந்தவித உரிமை மாற்றமும் (title transfer) செய்துகொடுக்க இயலாதபடியும் இந்தப் பதிவு வங்கியைப் பாதுகாக்கும். அதாவது பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் வாங்கும்போது இந்தப் பதிவின் மூலம், சொத்து வங்கி அடமானத்தில் இருப்பது தெரிந்துவிடும்.

உரிமையாளர் கடனை முழுமையாகச் செலுத்திய பிறகு வங்கி 'அடமானக் கடன் ரத்து ரசீது' ஒன்றை உரிமையாளருக்குக் கொடுக்கும். அந்த ஆவணம் பதிவு செய்யப்பட்ட பிறகே, சொத்தின் மீண்ட உரிமை உரிமையாளருக்குக் கிடைக்கும்.

சென்னை போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இது போல் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. தற்போது வங்கிகளைப் பாதுகாப்பதற்கென்றே 'securitization act'-ன் படி நிறைய வாய்ப்புகள் உள்ளன.''

''தேர்தல் முடிவுகள் வரவும் வேகமாக ஏறிய சந்தை, அதன்பிறகு ஏற்றமும் இறக்கமுமாகவே இருந்து வருகிறது. அதேசமயம் சந்தை இறங்கியபோதுகூட (20-5-2009 அன்று) மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகள் 6% ஏறி இருக்கிறது. அதனால் மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகளில் இப்போது துணிந்து முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்கலாமா?''

- லதாகுமார், திருப்பூர்.

ரமேஷ், பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகர், சென்னை.

''தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பங்குச் சந்தை திங்கள் கிழமை 18.8.2009 அன்று துவங்கியபோது சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் உள்ள முக்கியப் பங்குகள் 20% ஏறின. அதனுடைய தாக்கம்தான் 20-ம் தேதி மிட்கேப்பும், ஸ்மால் கேப்பும் 6% ஏறியதற்குக் காரணம்!

மேலும் பங்குச் சந்தை ஏறி, இறங்கியதற்கு முழுக் காரணம் தேர்தல் இல்லை. உலகமெங்கும் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலைதான் பங்குச் சந்தை இறங்கியதற்கான முக்கிய காரணம். வெளிநாடுகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. வெளிநாடுகளில் பல வங்கிகள் திவாலாகி, பொருளாதாரம் சீர்குலைந்து அந்நாட்டுச் சந்தைகளும் விழுந்து கிடக்கின்றன. இந்தத் தேர்தலில் ஒருவேளை நிலையான அரசு அமைந்திராவிட்டால், மோசமான நிலைக்கு நமது பங்குச் சந்தையும் தள்ளப்பட்டிருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது சாதகமான சூழ்நிலை கிடையாது. உலக அளவில் பொருளாதாரம் சீரடைந்தால் மட்டுமே பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருக்கிறது.

புதிய அரசின் பாலிசி, பட்ஜெட், கம்பெனிகளுக்கு கிடைக்க இருக்கும் சலுகைகள் எல்லாவற்றையும் பொறுத்துத்தான் இனி பங்குச் சந்தையின் நிலை இருக்கும். ஆகவே கொஞ்சம் பொறுத்திருந்து பிறகு மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம். இப்போது வேண்டாம்.''

''பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் கடந்த மூன்று வருடங்களாக எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்து வருகிறேன். மார்க்கெட் ஏறி, இறங்கும் இந்தச் சமயத்தில் அதைத் தொடரலாமா அல்லது மொத்த யூனிட்டுகளையும் விற்றுவிடலாமா?''

- மேகநாதன், மதுரை.

சனில்குமார் கே.வி., ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ் தமிழ்நாடு பிரிவு தலைவர்.

''கண்டிப்பாகத் தொடருங்கள். ஏனென்றால் எஸ்.ஐ.பி. முறையில் நீங்கள் சேமிப்பதால் குறைந்தது பத்து வருடங்களாவது முதலீடு செய்துவரவேண்டும். பங்குச் சந்தை முதலில் 3000 புள்ளிகளில் இருந்தது. பிறகு அது 6000 ஆகியது. பிறகு 4000 ஆகி பிறகுதான் 10000-க்கு வந்தது. அதுதான் பிறகு 21000-க்கு வந்தது. சந்தையின் பல்வேறு நிலைகளில் நீங்கள் வாங்கிய யூனிட்டுகள் நிறைய சேர்ந்திருக்கும். 21000-லிருந்துதான் பொருளாதார நிலை நசிந்ததால் 7000-க்கு வந்தது. அதுதான் தற்போது மீண்டெழுந்து 14000-க்கு வந்திருக்கிறது. ஆகவே பத்து வருடங்களுக்குப் பிறகு ஒருவேளை பங்குச் சந்தை கரடியின் பிடியில் இருந்தாலும் கவலைப்படவேண்டாம். பல்வேறு நிலைகளில் முதலீடு செய்யப்பட்ட உங்களுடைய யூனிட்களின் மதிப்பும் கண்டிப்பாக 20% உயர்ந்துதான் இருக்கும். அப்போது சந்தை காளையின் பிடியில் இருந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான், வாழ்த்துக்கள்!''

''எங்களுக்குச் சொந்தமான மூன்று அடி இடத்தை பக்கத்து வீட்டுக்காரர் பல வருடங்களுக்கு முன்பே சேர்த்துக் கட்டிவிட்டார். சமீபத்தில் எங்கள் இடத்தை சர்வே செய்தபோது அதைக் கண்டுபிடித்துவிட்டோம். அவர்களுடைய செப்டிக் டேங்க் எங்கள் இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. எங்கள் இடத்தைப் பெற சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்? இங்கு எங்கள் காலனியில் கமிட்டியும் உள்ளது.''

- எபினேசர், சென்னை-88.

கே.சந்திரகாசபூபதி, வழக்கறிஞர்.

''குறிப்பிட்ட சொத்து எந்த நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதைக் கண்டறிந்து சிவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவேண்டும்.

அதில் பக்கத்து வீட்டுக்காரர் அத்துமீறி கட்டடம் கட்டி யிருக்கும் இடம் சட்டரீதியாக உங்களுக்குச் சொந்தமானது என விளம்புகை (declaration) கேட்கவேண்டும். அதில் உங்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டியுள்ள பகுதிகளை இடித்துவிட்டு அந்த இடத்தைக் காலிசுவாதீனமாகத் தரவேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டையும் குறிப்பிட்டு சிவில் வழக்கு ஒன்றை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போடவேண்டும். இதன்மூலம் சரியான நீதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.''

''மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஃப்ளாட் ஒன்றை வாங்கினேன். அப்போதே பில்டர் கார் பார்க்கிங்க்கான இடத்தை வாங்கிக்கொள்ளச் சொன்னார். விட்டுவிட்டேன். இப்போது கார் வாங்கச் சொல்லி மனைவி வற்புறுத்துகிறாள். இப்போது அதை நிறுத்துவதற்கான இடத்தை எங்கள் ஃப்ளாட்டிலேயே வாங்கினால் அதை தனியே ரிஜிஸ்டர் செய்யவேண்டுமா?''

- ஜெயராமன், சென்னை.

மணிசங்கர், பிரசிடென்ட், தமிழ்நாடு ஃப்ளாட் புரமோட்டர்ஸ் அண்ட் ஹவுஸிங் அசோஸியேசன்.

''தாராளமாக கார் பார்க்கிங்கை மட்டும் தனியாக வாங்கலாம், அந்த பார்க்கிங் இடத்தை பில்டர் வேறு யாருக்கும் விற்காமல் இருந்தால்! அதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு வீடு விற்ற பில்டரிடம் பிரிக்கமுடியாத மனைப்பிரிவின் கீழ் அலாட்மென்ட் லெட்டர் ஒன்றை வாங்கவேண்டும். அக்கடிதத்தில் கார் பார்க்கிங்கின் இடத்தை எழுதி, அதில் நான்கு திசைகளைக் குறிப்பிட்டு 'இந்த நான்கு முனைகள் அமையப் பெற்றிருக்கும் இந்த இடம் இவருக்குச் சொந்தமானது. இதில் மற்றவர்கள் உரிமை கொண்டாட முடியாது' என எழுதி வாங்கிக்கொள்ளவேண்டும். பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் (அடிமனை விகிதாசார முறைப்படி) ரிஜிஸ்டர் செய்யவேண்டும். இதைச் செய்த பிறகு அந்த இடத்தில் மற்றவர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது.''