பிஸினஸ் பக்கங்கள்!

தமிழ் சி.இ.ஓ.

தோற்றமே ஒருவருடைய குணத்தைச் சொல்லிவிடும் என்பது புனிதா ஆறுமுகத்துக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். அவருடைய தோற்றத்தைப் பார்த்தால் நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அத்தனை துறுதுறுப்போடு இருக்கிறார். 'மேடிசன் மீடியா குரூப்' நிறுவனத்தின் சி.இ.ஓ. என்பதை அவர் விசிட்டிங் கார்டைப் பார்த்துத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. மற்றபடி பேச்சில் தோழமை தெறிக்கிறது.

''போட்டி நிறைந்தது இன்றைய பிஸினஸ் உலகம். ஒரு கணம் கண்ணை மூடினால் போதும், மற்றவர்கள் நம்மை முந்திச் சென்றுவிடுவார்கள். எலியும் பூனையுமாக ஒருவர் இன்னொருவரைத் துரத்தும் இந்த உலகில், வாழ்க்கை என்பதே சுவாரஸ்யம் நிறைந்த போராட்டம்தான். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி, உங்கள் சிந்தனையாலும் செயலாலும் மற்றவர்கள் உங்களைத் தலைமைப் பொறுப்பில் வைத்துப் பார்க்கவேண்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரவேண்டும். இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. இதைச் செய்ய முதலில் நான் பல விஷயங்களைக் கற்க வேண்டியிருந்தது. கற்ற விஷயங்கள் பலவற்றை மறக்க வேண்டியிருந்தது! அப்படி மறந்தால்தானே புது மனுஷியாக நான் உருவெடுக்க முடியும்! புத்தம் புதிதாகச் சிந்திக்க முடியும்!! எனக்கே எனக்கென ஒரு உருவத்தை நான் பெறமுடியும்...'' என்று தெளிவும் தீர்மானமுமாகப் பேசுகிறார் புனிதா.

வித்தியாசம் நிறைந்த விளம்பரத் துறையில் சரளமாகப் புழங்கும் ஆங்கிலம், சொல்ல நினைத்ததை சட்டெனச் சொல்லிவிடும் பழக்கம்... என்பன போன்ற குணங்களே புனிதாவின் ஆயுதங்களாக இருக்கின்றன.

''என் குடும்பம் 'இப்படி இரு... அதைச் செய்யாதே...' என்றெல்லாம் என்னை ஒருபோதும் கட்டுப்படுத்தியது இல்லை... 'யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே, உனக்கு உன் நியாயம் முக்கியம். உனக்கு சரி என்று படுவதை மட்டுமே செய். அதற்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாதே' என்று முழுச்சுதந்திரம் கொடுத்து வளர்த்தார்கள்... அதனாலேயே எனக்குள் எப்போதும் 'நான் செய்வது சரிதானா...' என்று ஒரு அலாரம் அடித்துக் கொண்டேயிருக்கும்'' என்று ஆரம்பித்தவர், தன் வாழ்க்கைச் சம்பவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா ஆறுமுகம் பிஸினஸ்மேன். அம்மா கஸ்தூரி எங்கள் வீட்டின் தலைமை நிர்வாக அதிகாரி. எனக்கு ஒரே ஒரு அக்கா, கற்பகம். அவளை சகோதரி என்று சொல்வதைவிட தோழி என்றுதான் சொல்லவேண்டும். இன்றும்கூட என் வீட்டின் முதுகெலும்பு என்றால் அக்காவைத்தான் சொல்வேன்.

என் குடும்பம் எனக்கு இவ்வளவு தைரியம் கொடுத்து வளர்த்திருக்காவிட்டால் இன்று நான் நானாக இருந்திருக்க மாட்டேன். இன்றைக்கும் திருமணமே செய்துகொள்ளாமல் தன்னந்தனியாக வாழ்கிறேன் என்றால் அது அவர்கள் கொடுத்த தைரியத்தால்தான்!

சென்னையில் பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்ஸி., பிசிக்ஸ் படித்தேன். அடுத்து ஃபோரன்ஸிக் படிப்பு படிக்கப் போனேன். ஆனால், அந்தப் படிப்பு எனக்குச் சரிப்படவில்லை. அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, நிர்வாகம் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தேன். நிர்வாகப் படிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எம்.பி.ஏ. முடித்த கையோடு ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நிர்வாக அதிகாரியாகப் போயிருந்திருக்கலாம். ஆனால், எனக்கோ புதுப்புது அனுபவங்களைக் கொடுக்கும் கிரியேட்டிவ் ஃபீல்டில் பணிபுரிய வேண்டுமென்று ஆசை! தொழிற்சாலைகளைவிட மீடியா துறை சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே சென்னையில் உள்ள 'ஓ அண்ட் எம்' நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பிறகு 'லின்டாஸ்' நிறுவனத்துக்கு மாறினேன். கடந்த எட்டு ஆண்டுகளாக 'மேடிசன் மீடியா குரூப்' நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இயந்திரகதியில் இயங்கும் மும்பையில் எப்போதும் பரபரப்பாக வேலை பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

'அடடா, தெரியாத்தனமாக மீடியா துறைக்கு வந்துவிட்டோமே' என்று நான் ஒருபோதும் வருந்தியதில்லை. காரணம், வேறு எந்தத் துறையைக் காட்டிலும் சுவாரஸ்யங்களால் நிறைந்தது மீடியா உலகம். புதுப்புது நிகழ்ச்சிகள், மனிதர்கள், சிந்தனைகள் என்று மீடியா உலகம் ஒருநாள்கூட போரடிக்காது. இந்தத் துறையில் பிரச்னைகள்கூட விதவிதமாகத்தான் இருக்கும். மற்ற துறையைப் போல ஒரே மாதிரியான பிரச்னைகள் வந்து நம்மைப் போரடிக்காது. இந்த ஒரு துறைதான் என்னை ஒரு கலை நயமிக்க ஆர்ட்டிஸ்ட்டாகவும் அதேநேரத்தில் ஒரு சயின்டிஸ்ட்டாகவும் இருக்க அனுமதிக்கிறது.

மீடியா துறையில் விஞ்ஞானமா என்று நினைக்காதீர்கள். ஒரு நிறுவனம் எடுத்த விளம்பரங்களை எந்தெந்த மீடியாக்களுக்குக் கொடுக்கவேண்டும், எந்த நேரத்தில் எந்த விளம்பரத்தைக் கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து, சர்வே செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவுக்குப் பின்னால் இருப்பது சுத்தமான தர்க்கரீதியான சிந்தனைதான். சர்வேக்கள் மூலம் கிடைக்கும் நம்பர்களை வைத்து, மெக்கானிக்கலான முடிவு எதுவும் நான் எடுப்பதில்லை. உதாரணமாக, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று எல்லோரும் சொல்லிவிடலாம். ஆனால் ஒன்றும் ஒன்றும் பதினொன்று என்று நீங்கள் ஆக்கவேண்டும். அப்படி ஆக்குவதில்தான் உங்கள் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. இப்படி வித்தியாசமான தீர்வுகளை உங்கள் வாடிக்கையாளருக்குக் கொடுப்பதன் மூலமே அவர்களின் நோக்கத்தை அதிரடியாக உங்களால் நிறைவேற்ற முடியும்.

இதற்கு நான் கடைப்பிடிக்க நினைக்கும் ஒரே ஒரு யுக்தி, மாத்தி யோசிப்பதுதான். எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதைத்தான் விரும்புவார்கள். ஆனால், நானோ பாதுகாப்பாக இருப்பதே ரிஸ்க்கானது என்பேன். பாதுகாப்பான அணுகுமுறையால் நாம் பெரிதாக எதுவும் சாதித்துவிட முடியாது. உதாரணமாக, உங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு பிரச்னை. அதற்கு அருமையான தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்கள். அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர் 100% வெற்றி காணுகிறார். அடுத்தமுறை அதே மாதிரியான இன்னொரு பிரச்னை. அதற்கும் அதேமாதிரியான தீர்வைச் சொன்னால் உங்கள் வாடிக்கையாளர் 101% வெற்றி காண்பார். ஆனால், நீங்கள் அவுட்ஆஃப் பாக்ஸ் திங்க்கிங் என்கிற மாதிரி மாற்றி யோசித்து வேறொரு தீர்வைச் சொன்னால் உங்கள் வாடிக்கையாளருக்கு 200% வெற்றி கிடைக்கும். எனவே இப்போது இருக்கிற நடைமுறைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு புதிதாக யோசிக்கவேண்டும் என்று நினைப்பேன்.

நாளை நான் வாழப்போகும் வாழ்க்கை இன்று நான் வாழும் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கவேண்டும். இன்றைய முடிவுகள் இன்றைக்கு மட்டுமே சரியாக இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு அதை நாளையும் தொடர்வது நிச்சயம் சரியாக இருக்காது. இப்படித் தொடர்ந்து வித்தியாசமாக நான் யோசிப்பதால்தான் என்னால் இந்தத் துறையில் சிறப்பாகச் செயல்பட முடிகிறது.

எந்த நேரத்திலும் நிதானத்தைத் தவறவிடக்கூடாது. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் எப்போதுமே தவறாகத்தான் இருக்கும் என்பது நான் கற்ற பாடங்களில் முக்கியமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு பெரிய தவறைச் செய்யப் போனேன். ஆனால், கடைசி நேரத்தில் முழித்துக் கொண்டேன். என் முன்னாள் பாஸ் ஒருவர் வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நிறுவனத்துக்கு வந்துவிடும்படி என்னையும் அழைத்தார். நானும் அவரோடு கொண்ட நட்பின் காரணமாக முதலில் 'ஓகே.' சொல்லிவிட்டேன். ஆனால், அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை என்பதை கடைசி நேரத்தில் புரிந்துகொண்டேன். பிடிக்காத வேலையை ஏற்றுக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை. எனவே 'முடியாது' என்று சொல்லிவிட்டேன். தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, தொழில் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, இனி எந்த விஷயத்தையும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கக்கூடாது என்று அப்போது முடிவெடுத்தேன். இன்றும் அதை ஒரு கடமையாகவே பின்பற்றுகிறேன்.

உயரதிகாரி என்கிற முறையில் எனக்குக் கீழே இருக்கும் ஊழியர்கள் என்னை நம்பி, மதித்து நடப்பவர்களாக இருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். என் ஊழியர்கள் என்னை விரும்பவேண்டும், அவர்களிடம் பாப்புலராக இருக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் இஷ்டப்படி நான் எப்போதுமே நடந்துகொள்ளமாட்டேன். என் ஊழியர்களின் செயல்பாடு நன்றாக இருக்குமெனில் அதற்கான அங்கீகாரத்தை அவர்களுக்குக் கொடுக்கத் தயங்க மாட்டேன். ஆனால், அதேநேரத்தில் அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அதை எடுத்துச் சொல்லவும் தயங்க மாட்டேன். எப்போதுமே குழுவை நம்புபவள் நான். என் குழு செய்த காரியத்தால் வெற்றி கிடைத்திருக்குமென்றால் அந்தப் பெருமையைக் குழுவுக்கே கொடுப்பேன். கடந்த ஆண்டுகளில் என் நிறுவனத்துக்குக் கிடைத்த விருதுகள் எல்லாம் என் குழுவுக்கே சேரும். ஆனால், ஏதாவது ஒரு சிறுதவறு நடந்தால்கூட உயரதிகாரி என்கிற முறையில் அந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொள்வேன்.

என்னிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை, என் கோபம்தான். அரைவேக்காட்டுத்தனங்களை என்னால் சகிக்கமுடியாது. தெரிந்தே தவறு செய்கிறவர்களிடம் என்னால் பொறுமையாக இருக்கவே முடியாது. என்றாலும் சமீபகாலமாக என் கோபத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன். கோபம் வரும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறேன்.

வாழு; வாழவிடு என்கிற ஒற்றை நோக்கமே என் வாழ்க்கையில் அடிப்படையாக இருக்கிறது. இந்த வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து அனுபவிக்கவேண்டும். பணமும், பதவியும் கொடுக்கும் சந்தோஷத்தைவிட, மனிதர்களால் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. எட்டு ஆண்டுகளுக்கு முன் என் அப்பாவை இழந்தபோது அந்த இழப்பைத் தாங்கமுடியாமல் தவித்தேன். இப்போது என் அம்மா கஸ்தூரி, அக்கா கற்பகம், அவளுடைய 14 வயதுப் பெண் பிரியங்கா, என் செல்ல நாய்க்குட்டி ஹனி இவர்களோடு நான் கழிக்கும் நிமிடங்கள்தான் எத்தனை சந்தோஷம்! இருப்பதை வைத்து மகிழ்ச்சி காணவேண்டும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று நினைப்பவர்கள் நிம்மதி இழந்து அலைவார்களே ஒழிய, வாழ்க்கையை அனுபவிக்க மாட்டார்கள்.

ஒரு பெண் வெற்றிகரமான உயரதிகாரியாக இருக்கமுடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். வித்தியாசமான சிந்தனை, சிறப்பான செயல்பாடு, எதையும் நேரடியாக அணுகும் குணம் போன்றவை இருந்தாலே போதும், அவர் நிச்சயம் நல்ல உயரதிகாரியாகத்தான் இருக்கமுடியும். அப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் ஆணா, பெண்ணா என்கிற கேள்வியே தேவையில்லை'' என்று முடித்தார்.

ஒவ்வொரு சி.இ.ஓ. ஒவ்வொரு விதம். புனிதா ஆறுமுகமோ நூற்றுக்கு நூறு வித்தியாசம்!

- ஏ.ஆர்.குமார்