பிஸினஸ் பக்கங்கள்!

பிக் நியூ 'ஷ்'..!

'இனி ஆப்பிரிக்கர் கூட எங்கள் தொடர்பு எல்லைக்கு உள்ளேதான் இருப்பார்கள்' என்று மார்தட்டிச் சொன்னது இந்தியா முழுக்கக் கிளை பரப்பியிருக்கும் அந்த செல்போன் நிறுவனம். ஆனால், நிலைமை அத்தனை சுமுகமாக இல்லை. ஆப்பிரிக்க செல்போன் கம்பெனி நாட் ரீச்சபிள் ஏரியாவுக்குள்தான் இன்னமும் இருக்கிறதாம். இந்த முயற்சிக்கு முதலில் முட்டுக்கட்டை போடுவது அந்த கம்பெனியின் ஊழியர்கள்! அடுத்தது நிதிப் பற்றாக்குறை. சுமார் 4 பில்லியன் டாலர் பணத்தைக் கடனாக வாங்கித்தான் ஆப்பிரிக்க செல்போன் கம்பெனியை வாங்கவேண்டிய கட்டாயம் இந்திய செல்போன் கம்பெனிக்கு! தவிர, எஃப்.டி.ஐ. சட்டத்தின் சில ஷரத்துகளும் குறுக்கே வந்து நிற்கிறதாம். சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறது செல்போன் நிறுவனம்.

'பில்டிங் ஸ்ட்ராங்... ஆனா, பேஸ்மென்ட் வீக்'னு வடிவேலுவைப் போல புலம்பிக்கொண்டிருக்கிறது அந்த மூன்றெழுத்து கட்டுமான கம்பெனி. ஃப்ளாட் கட்டி விற்பதில் பட்டையைக் கிளப்பிய அந்த நிறுவனம், இன்று கஷ்டகாலத்தில் இருக்கிறதாம். கடந்த ஓராண்டில் மட்டும் அதன் பிஸினஸ் 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. 30% என்றால் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு! அதேநேரத்தில் கடன் 27% எகிறியிருக்கிறதாம். அதாவது, 9,657 கோடி ரூபாய் கடன் மட்டுமே இருக்கிறதாம். ஏற்கெனவே 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஃப்ளாட்டுகளைக் கட்டி ரெடியாக வைத்திருந்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை.

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' என்று புலம்புகிறது கம்பெனி!

சிங்கம் சிக்கலில் இருக்கிறது. கோடிகளைக் கொட்டி ஆட்களை அள்ளிக்கொண்டு வந்தாலும் கோப்பையை வாங்க வழியில்லாமல் சும்மா விளையாடிவிட்டு வந்த வீரர்களால் இந்த ஐ.பி.எல்-லில் ஏகப்பட்ட நஷ்டமாம். போனமுறை கோப்பையை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் கோப்பை கிடைக்காவிட்டாலும் ஓரளவு லாபம் கிடைத்ததாம். ஆனால், இந்தமுறை வரவுக்கு மீறி செலவு போய்விட்டதால் சுமார் 10 கோடி ரூபாய் ஓட்டைக் கூரையில் விழுந்த தண்ணீர் மாதிரி கைக்காசு கரைஞ்சு போயிடுச்சாம்! எந்த சிமென்டை வெச்சு ஓட்டையை அடைக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறாராம் தலைவர்!

'இனி அவ்வளவுதான்...' என்று நினைக்கப்பட்ட அந்த ஐ.டி. நிறுவனம் நடந்து முடிந்த காலாண்டில் கணிசமான அளவுக்கு லாபமீட்டியுள்ளது! நிதி மோசடியில் சிக்கிய அந்த நிறுவனத்துக்கு சில 100 மில்லியன் டாலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைத்திருப்பது இன்னொரு இன்ப அதிர்ச்சி. இதையெல்லாம் இனிப்பு வழங்கி வெகுவிமர்சையாகக் கொண்டாடியுள்ளனர் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள். ஆனால், அந்த நிறுவனத்தை வாங்கியுள்ள நிறுவனமோ, அளவுக்கு அதிகமாக ஆட்கள் இருப்பதாக தினமும் அறிக்கை வெளியிடுகிறது. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தானாகவே வெளியேறியுள்ளனர். இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பது எத்தனை சத்தியமான வார்த்தை!