Published:Updated:

குறையும் ஜி.டி.பி: தடுத்து நிறுத்த என்ன வழி?

குறையும் ஜி.டி.பி: தடுத்து நிறுத்த என்ன வழி?

பிரீமியம் ஸ்டோரி
குறையும் ஜி.டி.பி: தடுத்து நிறுத்த என்ன வழி?


ஒரு நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்கிற செய்தி வெளியாகும்போது அந்நாட்டின் பங்குச் சந்தை பொதுவாக மேல் நோக்கிச் செல்லும்.

குறையும் ஜி.டி.பி: தடுத்து நிறுத்த என்ன வழி?

னால், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை யன்று, நம் நாட்டின் ஜி.டி.பி. 8.2 சதவிகிதத்துக்குப் பதிலாக 7.8 சதவிகித வளர்ச்சி மட்டுமே அடையும் என்கிற தகவல் வெளியானபோது நம் பங்குச் சந்தை இறங்குவதற்குப் பதில் ஏறவே செய்தது. பொதுவாக நெகட் டிவ்வாக பார்க்கப்படும் ஒரு விஷயம், திடீரென பாஸிட்டிவ்வாக பார்க்கப்பட்டது ஏன்?

''தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும் பணவீக்கமும், விஷம்போல உயர்ந்துவரும் வட்டி விகிதமும் இனிவரும் காலத் திலாவது குறையும் என்கிற எதிர்பார்ப்பே பங்குச் சந்தை உயர காரணம்'' என்கிறார்கள் சில பங்குச் சந்தை நிபுணர்கள். எப்படி என அவர்களிடமே நாம் கேட்க, விளக்க மான பதிலைச் சொன்னார்கள். முதலில், பணவீக் கத்தை எடுத்துக் கொள்வோம்.    

##~##
''கடந்த வாரம் வியாழனன்று வெளியான தகவல்படி, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 8.06 சதவிகிதமாக இருந்தது. இது, அதற்கு முன்பிருந்ததைவிட 0.5% குறைவென்றாலும் மத்திய ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் அதிகம்தான்.

பண வீக்கத்தின் அளவு 5 முதல் 6% அளவுக்கு மேல் போனால் கஷ்டம் என ஆர்.பி.ஐ. நினைக்கிறது. ஆனால், கடந்த டிசம்பர் 2009-ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை பணவீக்கம் தொடர்ந்து 8 சதவிகிதத்துக்கு மேலேயே இருந்து வந்திருக்கிறது. தவிர, கடந்த அரை நூற்றாண்டில் ஒன்பதுமுறை மட்டுமே 5 முதல் 6% என்கிற அளவிலேயே பணவீக்கம் இருந்திருக்கிறது.  

இந்த பணவீக்கத்துக்கு என்ன காரணம்? விவசாய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்ததுதான். 2009-ல் விவசாய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்ததால், அதன் விலை அதிகரித்து, பணவீக்கம் 11 சதவிகி தத்துக்கு உயர்ந்தது. மக்களுக்குத் தேவையான அளவு உணவுப் பொருள் கிடைக்கும் பட்சத்தில் உணவுப் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்கமும் குறையும்.

ஆனால், எதிர்வரும் ஆண்டில் நல்ல பருவநிலை இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்று நம்பலாம். அப்படி உயரும் பட்சத்தில் உணவுப் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்கமும் குறைய வாய்ப் புள்ளது. இதனால்  கம்பெனிகளின் வருமானம் உயர்ந்து, லாபம் பெருகும்'' என்கிறார்கள் நிபுணர்கள்.

'வட்டி விகிதம் உயர்த்தப்படு வதற்கும் நமது ஜி.டி.பி. வளர்ச்சி குறைவதற்கும் என்ன தொடர்பு?’ என்பது நாம் கேட்ட அடுத்த கேள்வி. அதற்கான பதிலையும் சொன்னார்கள்.  

''நமது மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 3-ம் தேதி 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி வட்டி  விகிதத்தை மாற்றி அமைத்தது. கடந்த ஓராண்டில் மட்டும் 8 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்.பி.ஐ.

குறையும் ஜி.டி.பி: தடுத்து நிறுத்த என்ன வழி?

இப்படி அடிக்கடி வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், நிறுவனங்கள் சம்பாதிக்கும் லாபம் குறைகிறது. நிறுவனங்களின் வளர்ச்சி குறைய, நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி-யும் குறைகிறது. இனியாவது நிறுவனங்கள் லாபம் அதிகரிக்க வேண்டுமெனில், ஆர்.பி.ஐ. வட்டியை உயர்த்தக்கூடாது'' என்று சொல்கின்றன கம்பெனிகள்.  

ஆனால், ஆர்.பி.ஐ. தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் போதே பண வீக்கம் குறைய மறுக்கிறதே! அப்படியானால் நமது ஜி.டி.பி. தொடர்ந்து உயர நாம் என்ன செய்ய வேண்டும் என சென்னையின் பிரபல ஆடிட்டரும் பொருளாதாரச் சிந்தனையாளரு மான எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம்.

''மத்திய, மாநில அரசாங்கங்கள்  வீண் செலவைக் குறைக்க வேண்டும். கமாடிட்டி சந்தையில் உணவுப் பொருட்கள் வர்த்தக மாவதைத் தடுக்க வேண்டும். உணவுப் பதுக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். நமது உணவுப் பொருள் உற்பத்தியை 400 மில்லியன் டன்னுக்குமேல் அதிகரிக்க வேண்டும்.  தண்ணீரின் தேவையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். உணவுப் பொருட்கள் வீணாகாமல் கிடங்குகளில் சரியான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த முக்கியமான வேலைகளை செய்கிற அதேநேரத்தில் வட்டி விகிதத்தை இன்னும் கணிசமாக உயர்த்த வேண்டும். வட்டி விகிதம் உயர்த்துவது மருந்து சாப்பிடுகிற மாதிரி. மருந்து சாப்பிட பயந்தால் நோய் குணமாகாது. இதை எல்லாம் செய்தால் நம் நாட்டின் ஜி.டி.பி.  முதலில் குறையவே செய்யும். பிறகு ஜி.டி.பி. வளர்ச்சியானது ஒரு நிலையில் நின்று மேற்கொண்டு மேலே செல்லத் தொடங்கும்.  இந்த வளர்ச்சியானது ஓரளவுக்கு மெதுவாக இருந்தாலும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்'' என்று முடித்தார் அவர்.

நம் நாட்டின் ஜி.டி.பி. உயர வேண்டும் என்பதைவிட நம் எதிர்பார்ப்பு வேறு என்னவாக இருக்க முடியும்?

- ஏ.ஆர்.குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு