சகோதரர்களை நம்பினால் சக்சஸ்..!

எதையோ மென்றபடியே அறைக்குள் வந்த ஷேர்லக், ''இந்த சாக்லேட் இருக்கிறதே... இது முதலில் இனிக்கும். ஆனால், கரையக் கரைய ஒரு பதற்றம் வரும்... ஆனாலும் கடைசியாக ஒரு முந்திரியோ, பாதாமோ பல்லிடுக்கில் சிக்க... அட... இதுவும் சுவையாக இருக்கிறதே என்ற இன்ப அதிர்ச்சி பிறக்கும்...'' என்று ஏதோ ஆன்மிக நிகழ்ச்சிக்குப் போய்வந்தவர் போல கதை சொல்ல ஆரம்பித்தார்.

''உங்கள் சாக்லேட்டுக்கும் சந்தைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா..?'' என்று அவர் போக்கிலேயே விட்டோம்.

''இனிப்பான சாக்லேட் போல பங்குகளின் விலை ஏறிக்கொண்டே போகும்போது சுவையாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் சந்தை கரைகிறதே என்று கவலைப்பட்டால் முந்திரி போல பாதாம் போல சல்லிசான விலைக்குக் கிடைக்கும் பங்குகளை அனுபவிக்கமுடியாமல் போய்விடும்! இப்போது புரிகிறதா?'' என்றார்.

''ஜென் தத்துவம் போல இது ஷேர் தத்துவமா..?'' என்றதும், கலகலவெனச் சிரித்த ஷேர்லக், ''முன்பே சொல்லியிருந்தது போல, பட்ஜெட்டுக்குப் பிறகு சந்தை சரிவைச் சந்தித்திருக்கிறது. சென்செக்ஸ் புள்ளிகள் முன்பு உச்சத்தில் இருந்ததற்கும் இப்போது உள்ள நிலைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தி-யாசம். சந்தை சரிவுக்கான காரணங்கள் தொடரும்பட்சத்தில் 14500 புள்ளிகள் வரை கூட போகலாம் என்ற பேச்சிருக்கிறது. அதனால், எப்போதும் 'சந்தை'கொத்திப் பாம்பாக கவனமாக இருக்க-வேண்டும்...'' என்று எச்சரிக்கை கொடுத்தார்.

''அப்படியானால் இனி சந்தை கீழ் நோக்கித்தான் பயணிக்குமா..?'' என்று பதற்றத்தோடு கேட்டோம்.

''இதே மாதிரியான பதற்றம், ஃபோர்ப்ஸ் பத்தி-ரிகையின் டாப் 10-ல் இடம் பிடித்த இரண்டு இந்திய சகோதரர்களுக்கும் வந்திருக்கிறது. இருவரும் ரகசியமாகச் சந்தித்து, சந்தையை மேலேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசியதாகத் தகவல். இருவரும் இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்போகும் நிதி நிலை அறிக்கையில் பங்குதாரர்களுக்கு பல ஆச்சரியமான பரிசுகள் காத்திருக்க வாய்ப்புண்டு.''

''அப்படி என்ன பரிசு?''

''இந்தச் சகோதரர்களில் ஒருவர், போனஸ் பங்குகள் தந்ததன் மூலம் அண்மையில் நாடு முழுக்கவும் பேசப்பட்டார். அவரது மற்றொரு நிறுவனம் மிக நல்ல லாபத்தில் இயங்குகிறது. அதன் கடந்த ஆண்டு விற்பனை, அதன் முந்தைய ஆண்டை விட 166 மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் விரைவில் பெரிய அளவில் டிவிடெண்ட் வழங்கும் அறிவிப்பு வரக்கூடும். மேலும், இந்நிறுவனம் ஏற்கெனவே நிர்வகிக்கும் திட்டங்களைத் தவிர, ஃபைனான்ஸ், பர்சனல் லோன் என புதுப் புது திட்டங்களை அறிமுகப்படுத்திகொண்டே இருக்கிறது. கைவசம் 'கேப்பிட்டல்' வளமாக இருந்தால் இந்த நிறுவனப் பங்குகளை வாங்கலாம். நல்ல லாபம் தருவதாக இருக்கும்.

இவருக்குச் சொந்தமான 'கம்யூனிகேஷன்' நிறுவனத்தின் பங்குகளும் பலன் தருவதற்கான வாய்ப்

புண்டு. இந்த நிறுவனத்துக்கு ஜி.எஸ்.எம். லைசென்ஸ் கிடைத்திருப்பதால், இதன் வியாபாரமும் இனி வரும் காலங்களில் சூடுபிடிக்கும். இப்போது இறங்கிக்கிடக்கும் இதன் பங்குகள் மீதும் கவனம் செலுத்தலாம். மற்றொரு சகோதரருக்குச் சொந்தமான, ரீஃபைனரி பிஸினஸூக்கு பேர் போன 'இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனமும், நல்ல டிவிடெண்ட் உடன் போனஸ் கொடுக்கப் போகிறதாம்'' என்றார்.

''இப்போது நம்பிக்கையோடு சந்தையில் இறங்கலாமா?'' என்று கேட்டோம்.

''பெரிய அளவில் இறக்கம் இருப்பதால் 'ஏ' குரூப் நிறுவனப் பங்குகளை கொஞ்சமாக வாங்கி வைக்கலாம். ஏப்ரல் மாதத்தில் அனைத்து நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளையும் பார்த்து, பின்பு முதலீட்டைத் தொடங்குவது புத்திசாலித்தனம். இன்னும் சிலர், 'இனி சந்தை மேலேறுவதற்குதான் அதிக வாய்ப்புகள்' என்றும், 'அதனால் இப்போதே வாங்குவது நல்லது' என்-

றும் சொல்கிறார்கள். புதிய மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகளை வாங்க ஆரம்பிக்கும்போது தன்னாலேயே உயரும் என்பது அவர்களின் பார்வை...''

''இப்போது எதில் போட்டாலும் லாபம்தான் இல்லையா?''

''பல நட்சத்திர பங்குகள் தங்களுடைய ஐ.பி.ஓ. விலைக்கே வந்து நிற்கின்றன. அவற்றில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். வங்கிகளில் மிகவும் பின்நோக்கி வந்துள்ள எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி போன்றவற்றின் பங்குகளை வாங்கி வைக்கலாம். இவற்றின் நிதி நிலை அறிக்கையின்போது நல்ல டிவிடெண்ட் கொடுப்பதற்கு வாய்ப்புகளும் இருக்கின்றன.

இன்னும் கொஞ்சகாலத்துக்கு ரியாலிட்டி சார்ந்த பங்குகள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் மதிப்பு குறைந்துவருவதும், நிறுவனங்களின் போட்டியும், ஹோம் லோன் வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதும்தான் இதற்குக் காரணங்கள். கட்டுமான நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கும் அவசரம் காட்டவேண்டாம். கப்பல் துறையில் ஏராளமான ஆர்டர்களைப் பிடித்து வைத்திருக்கும் ஏ.பி.ஜி. ஷிப்யார்டு, பாரதி ஷிப்யார்டு போன்றவற்றின் பங்குகள் ஆதாயம் அளிக்க வாய்ப்புள்ளது''-பரிந்துரை மற்றும் எச்சரிக்கை டிப்ஸ்களை ஒன்றாகவே வழங்கினார்.

ஜன்னல் வழியே வீசிய காற்றை முகத்தில் வாங்கிய ஷேர்லக், ''காற்றைக் காசாக்கும் அந்த நிறுவனத்தின்பக்கம் ஒரு கண் வைத்திருங்கள். 'சுஸ்.. சுஸ்..' என்று காற்று பாட்டுக்கும் வீசிக்-கொண்டே இருப்பதால் அந்நிறுவனத்தின் இறக்கைகளும் வேகமாகச் சுற்றுகின்றன. காற்றை மட்டுமில்லை.. கரன்ஸியையும் வாரிக்கொடுக்கும் என்று நம்பலாம்.

மெட்டல்ஸூக்கு ராம்விலாஸ் பாஸ்வான் தடைக்கல் போட்டபடியே இருப்பதால், அது தொடர்புடைய நிறுவனங்கள் பின்னடைவில்தான் இருக்கின்றன. மேலும் அமெரிக்காவிலும் டிமாண்ட் குறைவாக இருப்பதால் இன்னும் கொஞ்ச காலத்துக்கு மெட்டல் சம்பந்தப்பட்ட பங்குப் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. இத்துறையில் ஸ்டெர்லைட் நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. அதன் விலை குறைந்திருப்பதால் நம்பிக்கையோடு வாங்கலாம்'' நேரடியாகவும், மறைமுகமாகவும் டிப்ஸ் கொடுத்தார்.

''குறுகியகால அளவில் சந்தை எப்படி இருக்கும்..?'' என்றதும்,

''குறுகிய கால அளவில் என்றால் காலை முதல் மதியம்வரையா..? பலரும் அப்படித்தான் செயல்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஓராண்டு என்பதுதான் குறுகிய காலத்தின் அளவுகோல். அந்த அடிப்படையில் ஃபார்மா, பவர், இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் துறைகள் எல்லாம் சிறப்பாக இருக்குமாம். கம்பெனிகளைக் கண்டுபிடிப்பது உங்கள் பொறுப்பு'' என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.