அள்ளிக் கொடுக்கும் தங்கம்..!

ஒருபக்கம் பங்குச் சந்தை சடசடவென கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தங்கத்தின் விலை தடதடவென அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி 1-ம் தேதி ஒரு கிராம் (22 கேரட்) 986 ரூபாய் என விற்ற தங்கம், மார்ச் 10-ம் தேதி 1,182 ரூபாயை எட்டிப்பிடித்தது. இப்படி கிராம் ஒன்றுக்கு 196 ரூபாய் (19.87%) அதிகரித்துள்ளதைப் பார்த்தவர்கள், பங்குகளில் போட்ட பணத்தைத் தங்கத்தில் போட்டிருக்கலாமோ என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். இன்னொருபக்கம் இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்குமா என்பது தெரியாத நிலையில், தங்கத்தை வாங்குவதா, வேண்டாமா என்ற தயக்கமும் முதலீட்டாளர்களிடம் எட்டிப்பார்க்கிறது.

தங்கத்தின் இந்த கிடுகிடு விலை உயர்வு குறுகிய காலத்தில் முடிந்துவிடுமா, இதை நம்பி முதலீடு-களைச் செய்யலாமா என்ற சந்தேகங்களை சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் துணைத்தலைவரான உதயகுமாரிடம் கேட்டோம்.

''இப்போது மட்டுமில்லை... பங்குச் சந்தை எப்போதெல்லாம் இறக்கம் காண்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கும். கொஞ்சகாலம் கழித்து அந்த நிலை மாறி சகஜமாகிவிடும். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ளது அந்த வகை அல்ல. இது நீண்ட கால விலை ஏற்றத்தின் ஆரம்பம். எனவே இந்த விலை ஏற்றம் தொடரும்'' 'பளிச்' என்று சொன்ன உதயகுமார், தொடர்ந்தார்.

''இந்தியப் பங்குச் சந்தையை நிலைகுலைய வைத்துள்ள அதே அமெரிக்கக் காரணங்கள்தான் தங்கத்தின் விலையை அதிகரிக்கவும் வைக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துவருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது. அதே சமயம் தங்கத்தின் விலையும் உயர்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த தேக்கநிலை, உடனடியாக சரியாகக் கூடிய விஷயம் அல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையின் ஆரம்பத்தில் இருந்தால் அது மூன்று வருடங்-களுக்குள் சரியாகும் என்று நம்பலாம். இப்போது அந்த நிலையில்தான் அமெரிக்கப் பொருளாதாரம் உள்ளது என்பதால், இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள் ஆபரணத் தங்கமாக வாங்குவதை விட, சுத்தமான 99.9, 99.5 மதிப்புள்ள தங்கமாக வாங்குவது நல்லது. அப்போதுதான் அதனை விற்கும்போது அப்போதைய சந்தை விலைக்கே விற்கமுடியும். தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கமாடிட்டி சந்தை வாய்ப்புகள் எல்லாம் உள்ளன. அவையும் ஏற்றவைதான் என்றாலும், அவற்றின் ரிஸ்க்குகளை அறிந்திருக்க வேண்டும். அத்தகைய திட்டங்களின் நுழைவுக் கட்டணம், வெளியேறும் கட்டணம் போன்றவற்றைத் தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது. தெரியாதவற்றில் ஈடுபட்டு நஷ்டப்படுவதைவிட, தெரிந்த வழியில் முதலீடு செய்வது நல்லது'' என்றார்.

தேசியப் பங்குச் சந்தை, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சின் உறுப்பினரும், சோனா ஃபைனான்-ஸியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் இயக்குநருமான பழனியப்பன் பேசும்போது, ''பங்குகளின் விலையைப் போல தங்கத்தின் விலையும் தினம் தினம் ஏறி, இறங்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரி 9-12% வருமானம் கொடுத்துவந்த தங்கம், கடந்த ஓர் ஆண்டில் கொடுத்த வருமானம் 12-15%. ஆனால், இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவாக 35% வரை கொடுத்துள்ளது. இந்த அளவுக்கான அதிக வருமானம்தான் முதலீட்டாளர்களைத் தற்போது யோசிக்க வைத்துள்ளது. ஆனால், எல்லா வருடமும் இதேபோன்ற வருமானம் கிடைக்கும் என்பதற்கு உறுதி எதுவும் சொல்லமுடியாது என்ற யதார்த்தத்தையும் முதலீட்டாளர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள சர்வதேசக் காரணங்களை வைத்துப் பார்த்தால் தங்கத்தின் விலை உயர்வு, குறைந்தது இன்னும் மூன்று மாதங்களுக்காவது நீடிக்கும். வரும் ஆண்டுகளிலும் இந்த விலை அதிகரிப்பு தொடரும் என்றாலும், இந்த மூன்று மாதத்தில் அந்த அதிகரிப்பின் வேகம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இந்த காலத்துக்குள்ளாக 10 கிராம் தங்கத்தின் (24 கேரட்) விலை 13,000 ரூபாயைத் தாண்டு-வதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே தங்கம் வாங்குபவர்கள் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது நல்லது. இனிவரும் காலங்களில், தங்கத்தின் மீதான முதலீடு ஆண்டுக்கு 25% வருமானத்தைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் இந்தியா-வில் அறிமுகமாகி ஒரு வருடமாகிவிட்டது. இதுவரைக்கும் சராசரியாக 35% ரிட்டர்ன் கொடுத்துள்ளது. நுழைவுக் கட்டணம் இல்லாத இத்திட்டத்தில் முதலீடு செய்தால், தேவைப்படும்போது யூனிட்டுகளை விற்றுப் பணமாக்க முடியும். இது தவிர, கமாடிட்டி சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்ய மார்ஜின் தொகையை மட்டும் செலுத்தி முதலீடு செய்யலாம் என்றாலும்,

டெலிவரியின்போது தங்கம் கொடுக்கவேண்டும். அந்தச் சமயத்தில் விலை அதிகரித்துவிட்டது என்று கான்ட்ராக்டை தள்ளிப்போடலாம். ஆனாலும், அது பெரும்பாலும் நஷ்டத்தையே தருகிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் நோக்கமே, அது எக்காலத்திலும் பாதுகாப்பானது என்பதுதான். அதனால், இம்மாதிரியான அதிக ரிஸ்க் உள்ளவற்றைத் தவிர்க்கலாம்'' என்றவர்,

''இப்போது பங்குச் சந்தையும் முதலீடு செய்வதற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது என்பதால், உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை தங்கத்துக்கு ஒரு பகுதி, குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல நிறுவனங்களின் பங்குகளுக்கு ஒரு பகுதி என இரண்டு விதமாகப் பிரித்துக்கொள்ளலாம். இரண்டும் வளர்ந்து ஆரோக்கியமான லாபத்தைத் தரும்'' என்று புதிய வகை ஆலோசனை ஒன்றையும் சொல்கிறார் பழனியப்பன்.

தங்கம் எப்போதும் மவுசு குறையாத முதலீடு என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முயற்சித்துப் பாருங்கள்.

- ஆர். ரெங்கராஜ்