இரண்டு பாலிசி இருந்தால் என்ன செய்வது?

இன்ஷூரன்ஸை அதன் காரணத்துக்காக எடுப்பவர்களை விட, எதிர்கால முதலீடு, வரிச்சலுகை, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தல் போன்ற காரணங்களுக்காக எடுப்பவர்களே நம்மில் அதிகம். அதிலும் ஒன்றுக்கு இரண்டாக பாலிசி வைத்-திருப்பவர்களின் எண்ணிக்கை ஏராளமாக உண்டு. இவர்கள் அனைவரும் ஏதாவது பிரச்னையில் சிக்கும்போதுதான் க்ளைம் பற்றி யோசிக்கிறார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டு பாலிசி எடுத்திருப்பவர்கள், இழப்பீடு பெறும் சமயத்தில்தான் குழம்பிப்போவார்கள். குறிப்பாக மெடிக்ளைம் பாலிசி வைத்திருப்பவர்களுக்கு இந்தக் குழப்பம் அதிகமாகவே இருக்கும். 'இரண்டு இடத்திலும் இழப்பீடு பெறத் தகுதி இருக்கிறது... அதனால் இரண்டு இடங்களிலும் க்ளைம் செய்யமுடியுமா..? இரண்டு இடத்திலும் ஒரிஜினல் பில் கேட்பார்களே, அப்போது என்ன செய்வது..?' என்று ஏதேதோ சந்தேகங்கள். இந்தச் சந்தேகங்களைக் களைய, இன்ஷூரன்ஸ் ஆலோசகர் திருமலையைச் சந்தித்தோம். தெளிவாக விவரித்தார்.

''பொதுவாக ஒருவரே பல பாலிசிகள் எடுத்திருந்தாலும் பொதுக் காப்பீட்டில் பகிர்வு (contribution) முறையிலும், ஆயுள் காப்பீட்டில் தனித் தனியாகவும் பாலிசிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். உதாரணத்துக்கு, ஒருவர் தலா பத்து லட்சம் ரூபாய்க்கு இரண்டு மெடிக்ளைம் பாலிசிகளை இருவேறு நிறுவனங்களில் எடுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... திடீர் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டு எட்டு லட்ச ரூபாய் செலவாகிவிடுகிறது. அவர் இரண்டு நிறு-வனத்-திலும் தலா எட்டு லட்ச ரூபாய் இழப்பீடு பெற-முடியுமா?

முடியாது! மருத்துவமனை சிகிச்சைக்கான ஒரிஜினல் ரசீது ஒன்றுதான் இருக்கும். அதை வைத்து ஒரு நிறுவனத்திடம்தான் இழப்பீடு கோரமுடியும். இரண்டு பாலிசிகள் இருக்கும்பட்சத்தில், அந்தச் செலவை இரு காப்பீடு நிறுவனங்களும் ஆளுக்குப் பாதியாகத் தரும். பாலிசி எடுத்தவர் இழப்பீடு பெற்றதுபோக எஞ்சியுள்ள தொகைக்கு அடுத்தமுறை சிகிச்சை மேற்கொள்ளலாம்'' என்றார்.

''இரு பாலிசியையும் வெவ்வேறு தொகைக்கு எடுத்திருந்தால் இழப்பீடு எப்படிப் பெறுவது..?''

''இதையும் ஓர் உதாரணம் மூலம் விளக்கினால் எளிதில் புரியும். ஒருவர் 'ஏ' என்ற காப்பீட்டு நிறுவனத்தில் 8 லட்ச ரூபாய்க்கும், 'பி' என்ற காப்பீடு நிறுவனத்தில் 2 லட்ச ரூபாய்க்கும் மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 லட்ச ரூபாய் செலவாகிவிடுகிறது. இப்போது, காப்பீடு எடுக்கப்பட்ட தொகையின் விகிதாசாரத்துக்கு ஏற்ப காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும். இங்கு 'ஏ' நிறுவனம் 1.60 லட்ச ரூபாயையும், 'பி' நிறுவனம் 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக அளிக்கும்.

அதேநேரம் டேர்ம் பாலிசி-களின் நிலை வேறு. அதில் ஒருவரே மூன்று டேர்ம் பாலிசிகளை வெவ்வேறு நிறு-வனங்களில் எடுத்-திருக்கிறார் என்றால், இறப்பு ஏற்படும் பட்சத்தில் முழுபாலிசித் தொகையை மூன்று நிறு-வனங்களும் தனித்தனியாகக் கொடுத்துவிடும்'' என்ற திருமலை, 'உஷாராக இருக்கவேண்டிய' சில விஷயங்களைப் பற்றியும் விளக்கினார்.

''வீடு வாங்கினால் மெடிக்ளைம் காப்பீடு இலவசம் என்பதுமாதிரி இப்போது இன்ஷூரன்ஸ் என்பது இலவசப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. ஏற்கெனவே, தனியாக பாலிசிகளை எடுத்திருக்கும்-போது, இந்த இலவச பாலிசிகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் பலருக்குச் சந்தேகம் இருக்கிறது. காப்பீடு என்பது சட்டப்படி ஓர் ஒப்பந்தம். இதில் வாங்குபவர், விற்பவர் என்று இரு தரப்பினர் இருக்கிறார்கள் என்பதால், இதில் இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கிரெடிட் கார்டு வாங்கினால் இலவசக் காப்பீடு தருவதாகச் சொல்லிவிட்டு, மறைமுகக் கட்டணம் எதுவும் வசூலிக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.

தற்போது பெரும்பாலான பரிமாற்றங்கள் எலெக்ட்ரானிக் முறையில் நடப்பதால் எழுத்துப்-பூர்வமான அனுமதி இல்லாமலேயே பல விஷயங்கள் நடக்கின்றன. எனவே, உங்களுக்கு அனுப்பப்படும் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டில் காப்பீடுக்காக ஏதாவது பணம் பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்-காணிக்க வேண்டும். மேலும், வீட்டுக்கடன் வாங்கும்போது தீ காப்பீட்டை இலவசமாக அளிப்பதாகச் சொல்வார்கள். இதற்காக வங்கிக்குப் பெரிதாக ஒன்றும் செலவாகிவிடாது. உதாரணமாக, 10 லட்ச ரூபாய் தீ காப்பீட்டு பாலிசிக்கு அதிகபட்ச ஆண்டு பிரீமியம் 650 ரூபாய்தான். இந்த சில நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு அதிக வட்டிக் கடனில் சிக்கிக்கொள்ளாதீர்கள். காப்பீடு என்பது தனி நபர் விருப்பத்துக்கு உட்பட்டது என்பதால், அதனை உங்கள் மீது யாரையும் திணிக்க அனுமதிக்காதீர்கள். பாலிசி எடுக்கும் முன் எது எதற்கு எவ்வளவு ரிஸ்க் கவரேஜ், எவ்வளவு சேதத்துக்கு இழப்பீடு உண்டு போன்ற விவரங்களை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்'' என்றார்.

''ஒருவரே எத்தனை தனி நபர் விபத்து பாலிசி எடுத்திருந்தாலும், அத்தனைக்கும் இழப்பீடு பெற வாய்ப்பு இருக்கிறதா?'' என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது. இதுபற்றி பொதுக் காப்பீட்டுத் துறையைச் சார்ந்த சிலரிடம் கேட்டபோது,

''விபத்துக் காப்பீடு எடுக்கும்போது, 'புரபோசல் ஃபார்ம்' என்ற படிவம் தருவார்கள். அதில் நீங்கள் ஏற்கெனவே, ஏதாவது தனி நபர் விபத்து பாலிசி எடுத்திருந்தால், அதுபற்றிக் குறிப்பிட வேண்டும். அந்த பாலிசி தொகையைக் கழித்து, உங்களின் சம்பளத்துக்கு ஏற்ப புதிய பாலிசியின் காப்பீடு தொகை நிர்ணயிக்கப்படும். இறப்பு ஏற்படும்போது, இந்த இரு பாலிசிகளுக்குமான இழப்பீடுத் தொகை தரப்-பட்டுவிடும். ஒருவர், தன் வருமான வரம்புக்கு மீறி காப்பீடு எடுப்பதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. அதிகத் தொகைக்கு பாலிசி எடுப்பதற்காக புரபோசல் படிவத்தில் தவறான தகவலைக் கொடுத்-தால், இழப்பீடு கோரும்போது பிரச்னை ஏற்பட வாய்ப்-பிருக்கிறது.

அதே நேரத்தில் ஊனம் ஏற்பட்டு இழப்பீடு கோரி-னால், ஊனத்துக்கான ஒரிஜினல் சான்றிதழைக் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது, இரண்டு பாலிசி எடுத்திருக்கும் விஷயத்தைச் சொன்னால், முதல் காப்பீட்டு நிறுவனமே மற்ற காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கும். இரு நிறுவனங்களும் தங்கள் பாலிசித் தொகை மற்றும் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப தனித்தனியே இழப்பீடு வழங்கும்'' என்றார்கள்.

- எஸ்.ரம்யா