''பங்கு ஒருங்கிணைப்பால் என்ன லாபம்?"

''புதிய பங்கு வெளியீட்டைக் கொண்டுவரும் நிறுவனம் அப்போது ஒரு விலைப்பட்டையை நிர்ணயிக்கிறது. ஆனால், சந்தையில் அந்தப் பங்கு பட்டியலிடப்படும்போது அதிகமான விலைக்குக் கைமாறும் நிலை இருக்கிறது. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதா?''

- அ.கணேஷ்குமார், மதுரை.

''நீங்கள் சொல்லும் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் செபி இறங்கி-யிருக்-கிறது. பங்கு வெளியீட்டின்போது, விலைப்பட்டை (Price Band) வைப்பது போல் பங்குகள் பட்டியலிடப்படும் போதும் கொண்டுவருவது பற்றிய கருத்தை பல தரப்பினரிடமிருந்து செபி வரவேற்றிருக்கிறது. ஐ.பி.ஓ-வின் போது 250 கோடி ரூபாய் வரை திரட்டிய நிறுவனங்களின் பங்கின் விலை, அதிகபட்சம் 25% அதிகமாகப் பட்டியலிடப்பட அனுமதிக்கலாம் என்-பது செபியின் முன்வரைவாக இருக்கிறது. விரைவில், இது தொடர்-பான ஆணை பிறப்பிக்கலாம் என்று எதிர்-பார்க்கப்படுகிறது. இவைதவிர, பங்குகளைப் பட்டியலிடப்படும் காலத்தைக் குறைக்கவும் செபி திட்ட-மிட்டிருக்கிறது.''

''ஒரு நிறுவனம் அதிகபட்சம் எத்தனை சதவிகிதம் டிவிடெண்ட் வழங்கலாம்?''

- ஏ.முத்துகிருஷ்ணன், திருவாரூர்.

''இதற்கென்று தனியே விதி ஒன்றும் கிடையாது. ஒரு நிறுவனம் விரும்பினால் எத்தனை சதவிகிதம் வேண்டுமானாலும் டிவிடெண்ட் வழங்கலாம். அல்லது வழங்காமலும் இருக்கலாம். அண்மையில், கனரக பொறியியல் துறையைச் சேர்ந்த ஸ்மால் கேப் பன்னாட்டு நிறுவனமான டிசா இந்தியா (Disa India) 2006-07-ம் நிதி ஆண்டுக்கு அதன் முதலீட்டாளர்களுக்கு 2000%, அதாவது பங்கு ஒன்றுக்கு 200 ரூபாய் டிவிடெண்ட் வழங்கியுள்ளது.

இதன் டிவிடெண்ட் ஈட்டு (Dividend Yield) விகிதம் சுமார் 10% ஆக இருக்கிறது. டிவிடெண்ட் அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு சில தினங்களில் அந்த நிறுவனப் பங்கின் விலை சுமார் 35% அதிகரித்தது. டிசா நிறுவனம், இந்த அளவுக்கு அதிக டிவிடெண்டை அளிக்கக் காரணம், 2007, டிசம்பருடன் முடிந்த நிதிஆண்டில் இதன் நிகர லாபம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருப்பதுதான்.

அதேநேரத்தில், பொதுவாக அரசுத்துறை வங்கிகள், அதிகமாக டிவிடெண்ட் கொடுப்பதாக இருந்-தால் ஆர்.பி.ஐ-யின் முன் அனுமதி பெற்று வழங்கு-வது நடைமுறையாக இருக்கிறது. இதற்கு விதி-விலக்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio) 11%-க்கு மேல் கொண்டிருக்கும் வங்கிகள், அவை விரும்பும் டிவி-டெண்டை பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கிக்கொள்ளலாம்.''

''பட்டப்படிப்பு முடித்துள்ள நான், என்.சி.எஃப்.எம்.கோர்ஸ் முடித்துவிட்டு, பங்குச் சந்தை சார்ந்த பணியில் ஈடுபட விரும்புகிறேன். இதற்கு நான் என்ன செய்ய-வேண்டும்?''

- சி.நவநீதன், சென்னை-18.

''தேசிய பங்குச் சந்தை, என்.சி.எஃப்.எம். (NSE Certificate of Financial Market) என்ற பெயரில் கோர்ஸ் ஒன்றை நடத்துகிறது. இந்த கோர்ஸ் மூலதனச் சந்தை, டெரிவேட்டிவ், டெபாசிட்டரி என்பன போல் பல பிரிவுகளில் நடத்தப்படுகிறது. உங்களுக்கு விருப்பமுள்ள பிரிவைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வுக்குத் தயாராவதற்கு என்று தனியே பாடப் புத்தகம் (Work BooK) இருக்கிறது. அதைப் படித்தால் போதும். பாடப் புத்தகம் மற்றும் தேர்வுக்காக தேசிய பங்குச் சந்தை பெயரில் 1,000 ரூபாய் டி.டி. எடுத்து அனுப்பவேண்டும். விடுமுறை நாட்கள் தவிர்த்து, திங்கள் முதல் வெள்ளி வரை எல்லா தினங்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது.

சென்னை, மயிலாப்பூரிலுள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் கூடுதல் தகவல்களைப் பெற-முடியும். அதன் முகவரி

National Stock Exchange of India,
7th Floor, Arihant Nitco Park,
90, Dr.Radhakrishnan Salai,
Mylapore,
Chennai - 600 004.
Tel 044 -2847 5100
Fax 044 -2847 3633

''நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், தங்களின் சுய லாபத்துக்காக செய்யும் பல விஷயங்கள், அதன் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களைப் பாதிக்கச் செய்யுமே, அதைத் தடுக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா?''

- அமர்நாத், மும்பை.

''நீங்கள் சொல்லும் விஷயங்களை உள்ளடக்கி புதிய கம்பெனி சட்டத்தை (Company Law) கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இதன்படி, நிறுவனத்தின் இயக்குநர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி உறவினர்களை அதிகத் தொகைக்கு மூலப் பொருட்கள் சப்ளை செய்பவர்களாக நியமித்தல், நிறுவனத்தின் சொத்தை குத்தகைக்கு வழங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும். மேலும், இதுபோன்ற விஷயங்களுக்கும் பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலையும் பெறவேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், நிறுவனங்கள் நஷ்டப்படுவதைத் தடுக்கமுடியும். மேலும், நிறுவனத்துக்குள் நடக்கும் எந்த விஷயமும் வெளிப்படையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் உறவினர்கள் முன்அனுமதியில்லாமல், பங்குகளில் முதலீடு செய்வதற்கும் தடை இருக்கிறது.''