''பான் கார்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய வழி இருக்கிறதா?"

- எஸ்.நீலகண்டன், சென்னை.

நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்.

''இருக்கிறது. பான் கார்டின் நிலையை வருமான வரித்துறையின் இணைய-தளமான new.incometaxindia.gov.in மூலம் தெரிந்து-கொள்ளலாம். அந்த இணையதளத்தில் பான் என்று கொடுக்கப்-பட்டிருக்கும் இடத்தில் க்ளிக் செய்தால், பான் கார்டு சார்ந்த விஷயங்களைக் கையாளும் அமைப்பு-களான UTITSL (Utitsl.co.in) மற்றும் NSDL (nsdl.com) ஆகியவற்றுக்கான லிங்க் இருக்கும்.

நீங்கள் எந்த அமைப்பின் மூலம் விண்ணப்பம் செய்திருக்கிறீர்களோ அதை க்ளிக் செய்தால், அந்த அமைப்புக்கான இணையதளத்துக்குச் செல்ல-முடியும். அந்தத் தளத்தில் நம்முடைய விண்ணப்பப் படிவ எண், பெயர், பதிவு எண் போன்ற தகவல்களைக் கொடுத்தால் நம் பான் கார்டு விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். உங்களுக்கு பான் கார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டால் 'அலாட்டட்' என்ற தகவல் கிடைக்கும். ஒருவேளை, அலாட் ஆகாவிட்டால் 'பெண்டிங்' என்ற தகவல் கிடைக்கும்.''

''சமீபத்தில் ஒரு மெடிக்ளைம் பாலிசி எடுத்தேன். ஏற்கெனவே ஒரு மெடிக்ளைம் பாலிசி எடுத்திருக்கிறேன். இப்போது, நான் புதிதாக எடுத்த பாலிசியை கேன்சல் செய்ய விரும்புகிறேன். அதற்காக நான் கட்டிய பிரீமியத்தைத் திரும்பப் பெறமுடியுமா?''

- எம்.சசிகுமார், சென்னை-41.

வேணுகோபால், டிவிஷனல் மேனேஜர், நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி.

''இரண்டாவதாக எடுத்த பாலிசியை கேன்சல் செய்து பிரீமியத்தைத் திரும்பப் பெறமுடியும். ஆனால், அந்த பாலிசி எவ்வளவு காலம் செயலில் இருந்ததோ, அதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டு, பிரீமியத்திலிருந்து கழிக்கப்படும். இது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கேற்ப மாறுபடும்.''

''என் சகோதரருக்கு சமீபத்தில் அணுமின் நிலையத்தில் வேலை கிடைத்துள்ளது. பல ஆண்டு காலமாக மெடிக்ளைம் பாலிசிதாரராக உள்ளார். இந்நிலையில், இந்தப் புதிய வேலையின் மூலம் அவருக்கு ஏதாவது கதிர்வீச்சு தொடர்பான நோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு அவர் க்ளைம் செய்யமுடியுமா?''

- ஆர்.சேகர், திருநெல்வேலி.

''பொதுவாக, அணுக்கதிர் வீச்சு சார்ந்த நோய்களுக்கு க்ளைம் செய்யமுடியாது. மற்ற நோய்களுக்கான சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.''

''புதிதாக வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டு-மென்றால், 'அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருடைய அறிமுகம் தேவை' என்கிறார்கள். கடன் கேட்டால் கேரன்டி கையெழுத்து கேட்பதில் நியாயம் இருக்கிறது. என் பணத்தை நான் சேமிக்க வங்கிக் கணக்குத் தொடங்கினாலும் இது தேவையா..? கொஞ்சம் விளக்குங்களேன்... ப்ளீஸ்?''

- ஆர்.சங்கர், சென்னை-5.

ஆர்.கே.சுவாமி மண்டல மார்க்கெட்டிங் மேனேஜர், பேங்க் ஆஃப் பரோடா.

''சேமிப்பு நோக்கத்தில்தான் வாடிக்கையாளர் வங்கிக்கு வருகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், சில நேரங்களில் விரும்பத்தகாத செயல்-கள் சில நடந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் வாடிக்கையாளரைப் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள அவரை அறிமுகப்படுத்திய நபர் பயன்படுவார் என்பதுதான் அடிப்படை எண்ணம். ரிசர்வ் வங்கியின் கே.ஒய்.சி (KYC-Know Your Customer) நிபந்தனையின்படி, ஒவ்வொரு வங்கியும் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கும்போது இது அவசியமாகிறது!''

''நான் தனியார் கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் ஒன்றை நடத்தி வருகிறேன். என்னிடம் பயிற்சி எடுக்க வரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்க வேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும்?''

- எஸ்.கிருஷ்ணசாமி, சென்னை-17.

''நீங்கள் நடத்தும் இன்ஸ்டிடியூட்டின் கம்ப்யூட்டர் கோர்ஸ் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, அந்த கோர்ஸ், வங்கி வைத்திருக்கும் கடன் கொடுக்கத் தகுதியுடைய கோர்ஸ் பட்டியலில் இருக்க-வேண்டியது அவசியம். அப்போதுதான் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.''

''ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பர்சனல் லோன் எடுத்தேன். அப்போது, உத்தரவாதமாக 7 முன்-தேதி-யிடப்பட்ட காசோலைகள் கொடுத்தேன். கடன் தொகையை முழுவதுமாகச் செலுத்திவிட்டேன். இந்நிலையில், அந்த காசோலையைத் திருப்பிக் கேட்க முடியுமா?''

- கே.முருகன், கோவை.

''நிச்சயமாக முடியும். கடன் தொகையை முழுவதுமாகச் செலுத்திவிட்ட நிலையில் பயன்படுத்தப்படாத காசோலைகளை அவர்களே திரும்பத் தந்துவிடுவார்கள். அப்படித் தரவில்லை என்றால் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.''