Published:Updated:

தினசரி வர்த்தகம், நீண்ட கால ஒப்பந்தம்...

ஆதாயம் தருவது எது ?

##~##

கமாடிட்டி சந்தையில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி சில நாட்கள் முதல், சில வாரங்கள் வரை வைத்திருந்து விற்பது ஒரு வகை; தினசரி கான்ட்ராக்ட்களை வாங்கி விற்பது இன்னொரு வகை. இதில் எந்த வகையைப் பின்பற்றினால் லாபம் பார்க்க முடியும் என கிரேட்

வெஞ்சர் கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் வி.ஹரிஹரனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

''ஒவ்வொரு கமாடிட்டிக்கும் ஒவ்வொரு காலக்கெடு இருப்பதால்  நீண்ட கால வர்த்தகம் என்பதெல்லாம் கமாடிட்டி சந்தையில் கிடையாது. காத்திருந்து வர்த்தகம் செய்வதை பொசிஷன் டிரேடிங் என்றும், தினசரி டிரேடிங் செய்வதை டே டிரேடிங் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

டிரேடிங்..!

தற்போது சென்றுகொண்டிருக்கும் கான்ட்ராக்ட் தவிர, அடுத்தடுத்த கான்ட்ராக்ட்களும் வர்த்தகமாகிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், தற்போதைய கான்ட்ராக்ட்-ன் டிரெண்ட் எப்படியிருக்கும் என்பதைக் கணிப்பது சுலபம். ஆனால், அடுத்தடுத்த கான்ட்ராக்ட் வாங்கி வைத்திருக்கும்போது, அடுத்த நான்கைந்து மாதங்களின் டிரெண்டை கணிப்பது சிரமம். மேலும், வர்த்தகமாகும் தொகையிலும் இடைவெளி அதிகமாக இருக்கும். அடுத்தடுத்த கான்ட்ராக்டை புக் செய்வதைவிட, தற்போதைய கான்ட்ராக்டை வாங்கி, அதன் கடைசி ஐந்து நாட்களுக்குமுன்பு விற்று லாபம் பார்த்துவிடுவது நல்லது!  

தினசரி வர்த்தகம், நீண்ட கால ஒப்பந்தம்...

காத்திருப்பது நல்லது!

இரண்டு, மூன்று நாட்கள் இடைவெளியில் காத்திருந்து வர்த்தகம் செய்வதை பொசிஷன் டிரேடிங் என்கிறோம். இது கொஞ்சம் ரிஸ்க்தான். ஏனென்றால், இந்திய நேரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு அமெரிக்கச் சந்தை முடிகிறது. அமெரிக்க கமாடிட்டி சந்தையில் நிகழும் மாற்றங்கள்தான் சர்வதேச சந்தையில் எதிரொலிக்கும். இதன்படி பார்த்தால், நமது இந்திய சந்தை இரவு 11.30 மணிக்கு முடிந்து காலை 10 மணிக்கு தொடங்கும். இந்த இடைவெளியில் சர்வதேச சூழ்நிலை சாதகமாக இருந்தாலும் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியாது.  அதேநேரத்தில், ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு ஆதிக்கம் செலுத்தாதச் சூழ்நிலையில் பொசிஷன் டிரேடிங் லாபம் தரும்.  

தினசரி வர்த்தகம், நீண்ட கால ஒப்பந்தம்...

டே டிரேடிங்!

சரியான ஸ்டாப்லாஸ் முடிவு செய்துகொள்ள வேண்டும். எந்த டிரெண்ட் போய்க்கொண்டிருக்கிறது என்பதைக்  கணித்து உடனுக்குடன் வர்த்தகம் செய்வதன் மூலம் ஆதாயம் பார்த்துவிடலாம். தினசரி வர்த்தகம் தொடங்கும்போது என்ன விலையில் தொடங்குகிறது, டிரெண்ட் எப்படியுள்ளது, சர்வதேச அளவில் வர்த்தகத்தின் போக்கு எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு வர்த்தகம் செய்தால் லாபம் பார்க்கலாம். தினசரி குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் இதற்கு ஒதுக்கும்போது தினசரி வர்த்தக நடவடிக்கைகளின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொள்ள முடியும்'' என்றார் அவர்.

சொல்லுங்க, நீங்க பொசிஷன் டிரேடரா, இல்லை, டே டிரேடரா?  

- நீரை மகேந்திரன்