Published:Updated:

புறப்பட்டது புதிய படை

புறப்பட்டது புதிய படை

புறப்பட்டது புதிய படை

புறப்பட்டது புதிய படை

Published:Updated:
நடப்பு
புறப்பட்டது புதிய படை
 


மூன்றுவித பார்வை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புறப்பட்டது புதிய படை

ளமையும் அனுபவமும் சேரும் புதிய பரிமாணத்தை இன்றைய மாணவர்களுக்குத் தரும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது விகடன் நிறுவனம். கல்லூரி மாணவர்களுக்குப் பத்திரிகையாளர் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை திறம்படச் செயல்படுத்தி வருகிற விகடன், இந்த வருடத்துப் பயிற்சிக்காக பல்வேறு சல்லடைத் தேர்வுகளுக்குப் பின் 51 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது. அவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் ஜூலை 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடந்தது.

புறப்பட்டது புதிய படை
புறப்பட்டது புதிய படை

புதிய மாணவப் பத்திரிகை யாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தரும் விதமாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினார்கள். முதல் நாள் விழாவில் கலந்துகொண்டவர்களில் நாணயம் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான புகழேந்தியும் ஒருவர். இவர் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முன்னாள் மாணவர் என்பது கூடுதல் சிறப்பு!

‘எழுதும் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும்?’ என்பது புகழேந்தியின் பேச்சின் அடிநாதம். ‘‘நீங்கள் எழுதும் ஒரு பக்க கட்டுரையை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் காகிதத்துக்காக பல நூறு மரங்கள் அழிக்கப்படுகின்றன. அந்தப் பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும். சமூக மேம்பாட்டை உருவாக்காத எழுத்து வெறும் குப்பை.

புறப்பட்டது புதிய படை

‘கத்தியைவிட பலம் வாய்ந்தது பேனா’ என்று சொல்வார்கள். கத்தியை இரண்டு விதமாகப் பயன்படுத்தலாம். ஒருவர் உயிரை எடுக்கவும் கத்தி பயன்படும். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் கையில் இருக்கும் கத்தி ஓர் உயிரைக் காக்கவும் பயன்படும். பேனாவும் அப்படித்தான். உயிரைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும். சமுதாயத்தின் தேவையற்ற விஷயங்களை வெட்டி எறியப் பயன்படவேண்டும். உங்கள் எழுத்தால் ஒரு தனிநபர்கூட பாதிக்கப் படக் கூடாது’’ என்றார் அழுத்தமாக.

அடுத்தநாள் பேசிய வி.ஐ.பி-க்கள் எளிமையான உதாரணங்களுடன் மாணவர்களின் உள்ளத்தைத் தொடும் விதமாகவும் பேசினார்கள். அவர்களில் ‘ஒரு பத்திரிகையாளரின் திறமைகள் பண்புகள் எப்படி இருக்கவேண்டும். கனமான செய்தியை எப்படி எளிமையாக்கி தரவேண்டும்’ என்று பல நியதிகளையும் கோட்பாடுகளையும் விளக்கிப் பேசினார் ‘மாஃபா’ பாண்டியராஜன். ‘எப்படிச் செய்தியைச் சேகரிக்க வேண்டும்?’ என்று கூறும்போது, ‘‘எல்லா விஷயங்களிலுமே மூன்றுவிதமான பார்வை இருக்கிறது. முதலில் ஓவியப் பார்வை அல்லது போட்டோ பார்வை. நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி எழுதுவது. அடுத்தது, உணர்வுப் பார்வை... நடந்த விஷயங்களில் உங்களுடைய உணர்வு என்ன என்பதைச் சேர்த்து எழுதுவது, மூன்றாவதாக கொள்கை பார்வை... ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு விஷயத்தை அணுகுவது... ஒரு நிகழ்வை எப்படிப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டும். அதில் மற்றவர்களிடம் இருந்து எப்படி வேறுபடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே கட்டுரை சிறப்பாக அமையும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பலர் சொல்லத்தயங்கும், சொல்ல விரும்பாத விஷயத்தையும் சொல்லும் துணிச்சல் வரவேண்டும்’’ என்றார்.

புறப்பட்டது புதிய படை

மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தில் பணியாற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதில், மிகச்சிறந்த மாணவப் பத்திரிகையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சி.திலகவதி, சு.பத்ரிநாராயணன், ஜே.ராஜ்வினோத், அ.பரஞ்ஜோதி, ச.டிஸ்னி ஆகியோருக்கு, விகடன் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் சிறப்புப்பரிசு வழங்கிப் பாராட்டினார்.

ஆண்டுதோறும் சிறப்பாகப் பணிபுரியும் மாணவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பேனா பரிசு கொடுக்கும் விகடன் வாசகர் பி.சத்தியநாராயணன், இந்த ஆண்டு ஆறு பேருக்கு பரிசு கொடுத்தார்.

மூன்றுநாள் முகாமுக்குப் பிறகு புத்துணர்ச்சியோடு களமிறங்கிய மாணவர் பட்டாளம் சுறுசுறுவென செய்தி சேகரிக்க ஆரம்பித்து விட்டது.

வாழ்த்தி, வரவேற்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism