Published:Updated:

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

Published:Updated:
நடப்பு
‘ஊர்’வலம் - திருவள்ளூர்
 

 

சின்ன நகரம்... பெரிய வாய்ப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

மிழ்நாட்டின் விளிம்பு... ஆந்திரா பார்டரில் இருக்கிறது திருவள்ளூர்... சென்னைக்கு அருகில் இருப்பதாலேயே பல வரங்களையும் சில சாபங்களையும் பெற்றிருக்கும் இந்த ஊரில்தான் இந்த இதழ் ‘ஊர்’வலம். தமிழும், தெலுங்கும் கலந்து பேசும் மக்கள் வாழ்கிற இந்த ஊரின் டாப் 10 விஷயங்களைப் பட்டியலிட்டோம்!

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

சுனாமிக்குப் பிறகு திருவள்ளூரில் உள்ள நிலங்களின் விலை 10 மடங்கு அதிகமாகிவிட்டது. சென்னையிலிருந்து திருத்தணி வரை உள்ள அனைத்து நிலங்களும் விற்பனையாகிவிட்டதாம். புதிதாக நிலம் வாங்க விரும்பும் சென்னைவாசிகள் திருவள்ளூரை நோக்கி வருவதால் விலையேற்றம் கடுமையாக இருக்கிறது. நிலம் விற்பதற்கு ஏராளமான புரோக்கர்கள் இருந்தாலும், முறையாகப் பதிவுபெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இல்லை. சென்னை - திருத்தணி சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் நிலங்களின் விலையேற்றம் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. திருவள்ளூரின் டாப் லாபம் தரக்கூடிய விஷயம் ரியல் எஸ்டேட்தான். எனவே அதற்குதான் முதல் இடம். இப்போதே ஒரு சென்ட் நிலம் 25,000 முதல் 30,000 வரை விற்பனையாகிறது. நிலம் வைத்திருப்பவர்களும் ரியல் எஸ்டேட் புரோக்கராக நினைப்பவர்களும் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்!

தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு, இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.

சென்னையை நோக்கிப் படையெடுக்கும் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு பழைய மகாபலிபுரம் சாலை புகலிடம் என்றால் மற்ற வாகனம், உதிரிபாகங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், எலெக்ட்ரிக்கல் பொருள் தயாரிப்பாளர்களுக்கும் திருவள்ளூர்தான் புகலிடம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், காக்கலூர், மாதவரம், கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் அரசின் தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. இவைதவிர, சில இடங்களில் தனியாரின் தொழிற்பேட்டைகளும் உள்ளன. தமிழ்நாட்டிலேயே வேகமாக வளரும் மாவட்டமாக திருவள்ளூர் ஆகிவிட்டதால் வேலைவாய்ப்புகளும் பெருகிவருகின்றன. இதனால், மாவட்டத் தலைநகரான திருவள்ளூரும் வளர்ச்சி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

அதேபோல, கல்யாண மண்டபங்கள் நிறைந்த நகரமாகவே இருக்கிறது திருவள்ளூர். இவ்வளவு சிறிய நகரத்தில் மொத்தம் 60 மண்டபங்கள் இருக்கின்றன. ‘‘குறைவான வாடகை, தண்ணீர் வசதி, இடவசதி போன்றவை இருப்பதால் 35 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் திருமணம் செய்ய திருவள்ளூருக்கே வருகிறார்கள்’’ என்ற முருகேச முதலியார் கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் ராஜேந்திரன், ‘‘சென்னையில் உள்ளவர்களும் சிலசமயம் கல்யாணத்தை இங்கேயே வைப்பார்கள். ஏனென்றால், இங்கே நடத்தினால் 15 மடங்கு செலவு மிச்சமாகும்’’ என்றார். சின்னதாக மண்டபம் கட்டினால்கூட நல்ல லாபம் சம்பாதிக்க முடியும் என்னும் அளவுக்கு இந்தத் தொழிலுக்கு டிமாண்ட் இருக்கிறது.

4,500 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை வாடகைக்கு மண்டபங்கள் கிடைக்கின்றன. இந்தக் கல்யாண மண்டபங்களின் வருட வர்த்தகம் 3 கோடிக்கு மேல்.

இந்த ஊரைப் பொறுத்தஅளவில் ஓட்டல்கள் சிறிய அளவிலேயே உள்ளன. ‘‘கலெக்டர் அலுவலகம் திருவள்ளூரில் இருப்பதால், இங்கே வந்து செல்பவர்களின் வசதிக்காக நிறைய சிறிய உணவகங்களும் வந்துவிட்டன. சென்னை விரிவடைந்து கொண்டே வருவதால், இன்னும் 5 வருடங்களில் திருவள்ளூர் வளர்ச்சி அடைந்துவிடும். அப்போது அதனைச்சார்ந்து உணவகங்களும் வரும்’’ என்றார் ஆனந்தா ஓட்டலின் உரிமையாளர் ஆனந்த். அதிகரித்துவரும் டிராஃபிக், சென்னைக்கு வெளியில் இருக்கும் விமான நிலையம் இவற்றால் திருவள்ளூர் \ ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் வரும் நவீன ஓட்டல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

திருவள்ளூரில் குறிப்பிடத்தகுந்த தொழிலாக இருப்பது ரைஸ்மில்கள். ‘‘நெல் உற்பத்தி அதிகமாக இருப்பதால் அதனையட்டி ரைஸ் மில்களும், அரிசி வியாபாரமும் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன’’ என்றார் சக்தி டிரேடர்ஸின் உரிமையாளார் ராஜன். ‘‘திருவள்ளூர் பகுதியில் மட்டும் 20 ரைஸ் மில்களுக்கு மேல் உள்ளன. இங்கிருந்து சென்னைக்குதான் அதிகமாக சப்ளை செய்கிறோம். புதுக்கோட்டை, விருதுநகர் வரைக்கும் கூட இங்கிருந்து அரிசி செல்கிறது. கோழித்தீவனம் தயாரிக்க சேலம், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு குருணை அரிசி இங்கிருந்து செல்கிறது. அரிசி வர்த்தகத்தின் ஒரு நாள் டர்ன் ஓவர் 5 லட்ச ரூபாய்க்கு மேல்’’ என்றார் அவர்.

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

தஞ்சாவூர் மாவட்டத்தை அடுத்து அதிக அளவில் நெல் உற்பத்தியாகும் மாவட்டம் திருவள்ளூர். ஆகையால், விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களும் நிறைந்திருக்கின்றன. இதற்கு மூன்றாவது இடம் கொடுக்கலாம்.

நெல் மட்டுமன்றி பூக்கள், காய்கறிகளும் கணிசமாகப் பயிரிடப் படுவதால் அதற்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிமருந்துகள் வாங்க சுற்றுப்புற மக்கள் வருவது திருவள்ளூரைத் தேடித்தான். விவசாயப் பொருட்கள் விற்பனைக் கென்றே ஐந்து பெரிய கடைகள் திருவள்ளூரில் உள்ளன. ‘‘மழையை நம்பி விவசாயமும், விவசாயத்தை நம்பி எங்கள் தொழிலும் இருக்கிறது’’ என்றார் சந்துரு ஸ்டோர்ஸின் உரிமையாளர் சந்துரு. ‘‘பல்வேறு ரக நெல் விதைகள், பூச்சி மருந்துகளின் விற்பனை என இத்தொழிலின் வருட டர்ன் ஓவர் 10 கோடிக்கு மேல் இருக்கும். இதுதவிர, விவசாயத்துக்குத் தேவையான டிராக்டர் போன்ற வாகனங்கள், அதற்கான உதிரி பாகக் கடைகளும் கணிசமான அளவு இருக்கின்றன. பக்கத்திலேயே ஆந்திரா இருப்பதால், அங்கிருந்து நெல் குறைந்த விலையில் ரெட் ஹில்ஸ் மார்க்கெட்டுக்கு அதிகமாக வருவதால் இங்குள்ள விவசாயிகள் சரியான விலை கிடைக்காமல் தவிக்கின்றனர்’’ என்று இந்தத் துறையினர் சந்திக்கும் சிக்கலையும் சொன்னார் சந்துரு.

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

மிகச்சிறிய பேருந்து நிலையம் மட்டுமே உள்ளது. ஷேர் ஆட்டோ, மினி பஸ்கள் இல்லாத நகரம் இது! சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் இருப்பதால் அனைத்துப் பேருந்துகளும் திருவள்ளூரைக் கடந்துதான் செல்கின்றன. அவை பஸ் நிலையத்துக்கே வராமல் திருவள்ளூரின் வெளிப்புறச் சாலையிலேயே சென்றுவிடுகின்றன என்பது ஒருகுறை.

சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில் பாதை இருப்பதால் திருவள்ளூர் மக்களின் முக்கியமான போக்குவரத்து ரயில்தான். அரைமணி நேரத்துக்கு ஒருமுறை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு ரயில் இருக்கிறது. தினமும் 5,000 முதல் 7,000 பேர் ரயிலில் சென்னைக்குப் போய் வருகின்றனர்.

திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு பஸ் போக்குவரத்தும் அதிகமில்லை. திருவள்ளூரில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கும் போக்குவரத்து வசதி இல்லாதது ஒரு குறை. அதனால், போக்குவரத்து, நான்காம் இடத்துக்குப் போகிறது.

பாதிக்கிணறு தாண்டியது போல ஐந்தாவது இடத்தில் கல்வி. சென்னை அருகிலேயே இருப்பதால், அனைவரும் சென்னையில் போய் படிப்பதையே விரும்பு கிறார்கள். 12 உயர்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தப் பகுதியில் இப்போதைக்கு 4 இன்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இன்னும் சில வரவிருக்கின் றன. கல்லூரிகளை ஒட்டி உள்ள ஜெராக்ஸ், ஸ்டேஷனரி, கடை களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

நான்கு வருடங்களுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் இல்லாத நகரமாக இருந்த திருவள்ளூரில், இப்போது நான்கு தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. ஒரு அரசு மருத்துவ மனையும் இருக்கிறது. இன்னும் ஐந்து வருடங்களில் இத்துறை இரண்டு மடங்காக வளர்ச்சியுறும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனைச்சார்ந்த மருந்து கடைகளுக்கும் வாய்ப்பு உள்ளது. ‘‘இப்போது இருக்கும் நிலைமையின்படி, பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத நடுத்தர மருத்துவமனைகளுக்கு, வரும் காலங்களில் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் சூர்யா மருத்துவமனையின் டாக்டர் முருகப்பன். இன்னும் வளர வேண்டிய துறை என்ற அடிப்படையில் ஆறாவது இடம் மருத்துவத்துக்கு!

‘‘வணிக வாய்ப்புகள் சுமாராகத்தான் இருக்கிறது’’ என்றார் திருவள்ளூர் வணிகர் சங்கத் தலைவர் திருவடி. ‘‘பாத்திரக்கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகைக்கடைகள், அரிசிக் கடைகள் போன்றவைதான் இங்கு முக்கியமாக வணிகம் நடைபெறும் இடங்கள்.

இங்குள்ள மளிகைக்கடைகளின் வருட டர்ன் ஓவர் 15 கோடிக்கு மேல். ஆனால், டிபார்ட்மென்ட் ஸ்டோர் மாதிரியோ, சூப்பர் மார்க்கெட் மாதிரியோ முழுமையான கடைகள் அதிக எண்ணிக்கையில் இல்லை. அதுபோன்ற தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

இந்த மளிகைக்கு இருக்கும் இன்னொரு ஆபத்து, திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமம் என்ற கணக்கில் மாதம் முழுவதும் நடைபெறுகிற சந்தைகள்தான். அங்கு மளிகைப்பொருள்கள் முதல் காய்கறிவரை குறைந்தவிலையில் கிடைக்கின்றன. இதனால், மளிகைக் கடை விற்பனை குறைந்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

பெரிதும் சிறிதுமாக ஜவுளிக்கடைகள் இருந்தாலும் கல்யாணம், பண்டிகை போன்ற விஷேசங்களுக்கு, சென்னைக்குச் சென்றே இங்குள்ள மக்கள் துணிகளை வாங்குவதால் இத்தொழில் கொஞ்சம் பாதிக்கப்படுகிறது. இதே கதிதான் இங்குள்ள பாத்திரக்கடைகளுக்கும்’’ என்றார் திருவடி. அவர் கணிப்புப்படி பார்த்தால் வணிகத்துறை ஏழாவது இடத்தில்தான் இருக்கிறது.

எட்டாவது இடம் சுற்றுலாவுக்கு! இங்குள்ள வீரராகவர் கோயில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. அமாவாசை அன்று மட்டும் 15,000 பேர்களுக்கு மேல் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். மற்ற நாட்களில் திருப்பதி செல்பவர்கள் இங்கேயும் வந்து செல்வார்கள். அரசு முயற்சி செய்து சரியான வசதிகள் செய்து கொடுத்தால் திருப்பதி செல்பவர்கள் இங்கேயும் அதிகமாக வருவார்கள். அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.

உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக இருப்பது இந்த ஊரின் பொழுதுபோக்கு! மக்கள் பொழுதைக் கழிப்பதற்கு பூங்காக்களோ, பொழுதுபோக்கு இடங்களோ பெரிய அளவில் இல்லை. வீரராகவர் கோயிலை விட்டால், சினிமா தியேட்டர் என்ற அளவில்தான் மக்கள் வெளியே வருகிறார்கள். டி.வி பார்ப்பதுதான் இவ்வூர் மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு. நல்ல கேளிக்கை பூங்காவை அமைத்தால் மக்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும். இப்போதைக்கு ஒன்பதாவது இடம்!

‘உள்கட்டமைப்பா! அப்படியென்றால்..?’ என்று கேட்கும் அளவுக்கு நெருக்கடியான ஊராக இருக்கிறது திருவள்ளூர். கிட்டத்தட்ட ஊரையே வலம்வர வேண்டும் என்று சொல்கிற மாதிரி திரும்பிய பக்கமெல்லாம் ஒருவழிச் சாலைகளாக இருக்கின்றன. இதற்கு மேல் இந்த ஊரை எப்படி வசதியானதாக மாற்றலாம் என்பதை அறுவை சிகிச்சை போல அவசரமாக யோசித்து செய்வது நல்லது. இதனால் உள்கட்டமைப்பு கடைசி இடத்தில் இருக்கிறது!

குட்டி மீன்கள்... கோடி ரூபாய்!

‘ஊர்’வலம் - திருவள்ளூர்

தி ருவள்ளூர் அருகில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மீன் விதைப்பண்ணைகள் படு பிரபலம். இங்கிருந்துதான் தமிழ்நாடு முழுவதும் மீன்கள் விற்பனையாகின்றன. கட்லா, ரோகு, கெண்டை, கேட் பிஷ் என 7 வகையான மீன்களை மேற்கு வங்காளம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி இங்கே வளர்த்து விற்பனை செய்கிறார்கள். குளம், ஏரிகள் போன்றவற்றில் வளர்ப்பதற்கும், தனியாக தொழிலாக வளர்ப்பவர்களும் மீன் குஞ்சுகளை வாங்கிச் செல்வதால் மீன்களுக்கு எப்போதும் டிமாண்ட்தான். இத்தொழிலின் வருட டர்ன் ஓவர் 5 கோடி ரூபாய்க்கு மேல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism