Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
நடப்பு
ஷேர்லக் ஹோம்ஸ்
 

 

சிமென்ட்டைக் கவனியுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் ஹோம்ஸ்
ஷேர்லக் ஹோம்ஸ்

ஷே ர்லக் உள்ளே நுழையும்போதே, மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. ‘‘என்ன மழையையும் கூடவே அழைத்து வந்துவிட்டீர்கள்?’’ என்று நாம் கேட்கும்போதே, படக்கென கட்டானது கரன்ட்.

‘‘போச்சுடா!’’ என்றோம். ‘‘எதற்கு சலித்துக் கொள்கிறீர்..? ஜெனரேட்டர் போட்டதும் பளிச்சென்று வெளிச்சம் திரும்பி விடப் போகிறது!’’ என்றவர், கரன்ட் டாபிக் ஒன்றைக் கையில் எடுத்தார்.

‘‘சீக்கிரமே ‘சின்ன தம்பி’யின் மின்சார நிறுவனத்தில் இருந்து போனஸ் பங்கு அறிவிப்பு இருக்கும் என்கிறது பட்சி!’’

‘‘ஓ... என்ன ரேஷியோ..? அதைச் சொல்லும் முதலில்’’ என்றோம்.

‘‘எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், கம்பெனியின் ரிசர்வ் 30 மடங்குக்கு மேல் இருப்பதால், தாராளமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். போனஸ், கூடவே ஷேர் ஸ்பிலிட்டும் இருக்கலாம்’’ என்றார்.

‘‘அட்றா சக்கை. மடியிலே இரண்டு பழம் விழுகிறதா?’’ என்று உற்சாகமாக ஷேர்லக்குக்கு டொமோட்டோ சூப் வரவழைத்தோம்.

‘‘ஆடி மாதம் வந்தாலே தங்கம் விலையெல்லாம் கொஞ்சம் மந்தமாக இருக்கும்னு சொல்வாங்க. இந்த வருட நிலவரம் எப்படி?’’ என்றோம்.

‘‘ஆகஸ்ட், செப்டம்பரில்கூட தங்கத்தின் விலை மந்தமாத்தான் இருக்கும்னு சொல்றாங்க! தீபாவளி சமயத்தில்தான் கொஞ்சம் வியாபாரம் சூடுபிடிக்கும் என்பது எதிர்பார்ப்பு. அப்போதான் விலை கூடும். அதனால், இப்போதே வாங்கி வெச்சுக்கங்க’’ என்று அட்வைஸ் கொடுத்தார் ஷேர்லக்.

அடுத்து ஷேர் செய்திகளுக்குத் தாவுவார் என்று பார்த்தால், ‘‘மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சி ‘பெல்’ நிறுவனம் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது’’ என்று வேறு சப்ஜெக்ட்டை ஆரம்பித்தார். ஜெனரேட்டர் உயிர்பெற, பளீரென வெளிச்சம் பரவியது.

‘‘நடப்பாண்டில் மட்டும் 9,000 கோடிக்கு அதிகமான வணிகம், கடந்தாண்டில் 350 கோடிக்கும் அதிகமான லாபம் என இந்த வருடத்தில் ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தது திருச்சி ‘பெல்’. இதற்கு அடித்தளமாக இருந்தவர் நிர்வாக இயக்குநராக இருந்த கோபாலகிருஷ்ணன். அவர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதுதான் பரபரப்புக்குக் காரணம்’’ என்றார்.

‘‘ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன பிரச்னையோ?’’ என்றோம்.

‘‘கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான், பெல்லுக்குள் பல அதிரடி மாற்றங்கள். வருடத்துக்கு இவ்வளவு வணிகம் செய்யவேண்டும் என்ற ‘ஆண்டு இலக்கு’ முறையை மாற்றி ‘குறுகியகால இலக்கு’ என்ற புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் மொத்த வணிக விகிதமும் அதிகமானதோடு, உற்பத்தியிலும் கணிசமான வளர்ச்சி!’’ என்றார்.

‘‘சரி, என்னதான் பிரச்னை?’’

‘‘இவருக்கும் முன்பு நிர்வாக இயக்குநராக இருந்த அருண்குமார் மாத்தூருக்கும் சரிப்பட்டு வரவில்லை என்ற பேச்சு இருக்கிறது. அதிலும், அங்கே மாத்தூர் இயக்குநராகத் தேர்வுபெற்ற பிறகு விவகாரம் சீரியஸாகி இருக்கிறது. பெல் சேர்மனான பூரியிடம், கோபாலகிருஷ்ணன் புகார் செய்யும் அளவுக்கு பிரச்னை முற்றியது.

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் பெல்லின் கிளை நிறுவனமான நிலக்கரி ஆய்வு நிறுவனத் துக்கு தூக்கி அடிக்கப்பட்டார் கோபால கிருஷ்ணன். பெல்லிலேயே மிக டம்மியான பதவியாகக் கருதப்படும் இதற்குச் செல்ல தனக்கு விருப்பமில்லை என்று கோபாலகிருஷ்ணன் எதிர்ப்பு காட்ட நினைத்துக் கொண்டிருக்க, ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் பொது மேலாளரான சத்தியநாராயணனை திருச்சி பெல்லின் புதிய நிர்வாக இயக்குநராக நியமித்து, டெல்லியில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது. இதன்பிறகுதான் கோபாலகிருஷ்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஊழியர்களின் அன்பைப் பெற்றவர் என்பதால், அங்கே போராட்டங்கள் வெடிக்கும் என்கிறார்கள்’’ என்றார்.

‘‘பின்னிட்டீங்க ஷேர்லக்... அதுசரி! உங்கள் ஏரியாவான பங்குச் சந்தை செய்திகள்..?’’ என்றோம்.

சூப்பை ருசித்துச் சாப்பிட்டபடியே, ‘‘இருக்கு! மயிலாப்பூரில் இருக்கும் தலைவலி தைல நிறுவனப் பங்குகளுக்கு சுறுசுறுப்பு கூடும் என்கிறார்கள். அது தன் கைவசமுள்ள சில இடங்களை விற்றுக் காசாக்கப் போகிறதாம்’’

‘‘அந்த லாபமெல்லாம் பங்கு விலையில் எதிரொலிக்குமாக்கும்’’

‘‘அப்படித்தான் சொல்றாங்க! அதேபோல, ‘மேப்’ தயாரிப்பில் பெயர் பெற்ற தமிழ்நாட்டு குக்கர் கம்பெனியோட சுகாதாரப் பிரிவு ஊட்டம் பெறும் என்கிறார்கள். அதனால் இந்தப் பங்குகளை வாங்கிப்போட இது நல்ல சந்தர்ப்பம் என்றும் செய்தி வருகிறது’’ என்ற ஷேர்லக்,

‘‘சிமென்ட் கம்பெனி ஷேர்களை கவனியுங்கள். குறிப்பாக தமிழக எம்.பி-யின் மூன்றெழுத்து நிறுவனப் பங்குகள் கவனிக்க வேண்டியவை. 150 ரூபாய் ரேஞ்சில் உள்ள இது, விரைவில் இரு சதத்தைத் தொடும் என்கிறார்கள். அதேபோல ஆந்திராவில் ஏராளமான கட்டுமானப் பணி நடைபெறுவதால், அங்கிருக்கும் சிமென்ட் கம்பெனி பங்குகள் எல்லாமே வரும் இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்கு பிறகு றெக்கை கட்டிக்கொண்டு பறக்குமாம்.

அண்மையில் வெளியான கிரெடிட் பாலிசியின் தாக்கமும் இருக்கும் என்பதால், குறுகியகால நோக்கில் எந்தப் பங்கு வாங்கினாலும், கடனே இல்லாத கம்பெனியாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தால் கணிசமான லாபம் பார்க்கலாம்’’ என்று சொன்ன ஷேர்லக் எழுந்தார். ‘‘வர்ட்டா..?’’ என்றபடியே ரஜினி ஸ்டைலில் கிளம்பிப்போனார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism