Published:Updated:

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

Published:Updated:
நடப்பு
எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?
 

 

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

தே ர்தல் அறிக்கையில் சலுகைகளை அள்ளித் தெளித்திருந்த தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்! ‘பக்...பக்’ இதயத்துடன் காத்திருந்தவர்களுக்கு வரியில்லாத பட்ஜெட்டைக் கொடுத்து வயிற்றில் பால் வார்த்திருக்கிறது அரசு.

இந்த நிம்மதி ஒருபுறமிருந்தாலும், கூடவே ‘நிர்வாகத்தை நடத்தத் தேவையான நிதியைத் திரட்ட என்ன செய்யும்... நிலைமையை எப்படிச் சமாளிக்கும் இந்த அரசு?’ என்ற கேள்வியும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பட்ஜெட் பற்றிய பார்வையாகவும் அரசு எப்படிச் சமாளிக்கும் என்ற அந்தக் கேள்விக்கு விடை தேடியும் சிலரிடம் பேசினோம்.

தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத்தலைவர் சொரூபன், ‘‘விலைவாசி அதிகரித்து வந்த நிலையில், இந்த பட்ஜெட் அறிவிப்பால், சமையலுக்கு பயன்படும் கடலை எண்ணெய், பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றின் விலை டின்னுக்கு முப்பது ரூபாய் குறைந்து இருக்கிறது. பருப்புவகைகள் விலையும் மூட்டைக்கு 150 முதல் 300 ரூபாய்வரை குறைந்திருக் கிறது. இதனால் வியாபாரி களும் வணிகர்களும் அதிகமாகக் கொள்முதல் செய்து, மக்களுக்குக் குறைந்த விலையில் தரமுடியும். மேலும், தமிழக அரசு, வரும் ஜனவரி முதல் தேதி முதல் மறுவிற்பனை வரியையும் நீக்க உள்ளதால், இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. இது எல்லா தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட்’’ என்றவர்,

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

‘‘இதனால் ஏற்படும் வருமான இழப்பை சரிகட்ட புதிய வரிகள் விதிப்பதுதான் வழக்கம். தமிழக அரசும் எதிர்காலத்தில் இதுபோல வரிகளை விதித்து நிலைமையைச் சமாளிக்கும் என்று தெரிகிறது. அது மக்கள் கழுத்தை இறுக்கிப் பிடிக்காமல் இருக்கவேண்டும். அதுதான் மக்களுக்கு நல்லது’’ என்றார்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சென்னையில் இரண்டாவது டைடல் பார்க் மற்றும் கோவை யில் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கும் சில தொழிலதிபர்கள், சிறு மற்றும் குறுந்தொழில்களின் வளர்ச்சி பற்றி எந்தக் கருத்தும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பதைக் குறையாகச் சொல்கிறார்கள்.

‘‘தொழில் தொடங்குவது பற்றிய புதிய முயற்சிகள், வேலை வாய்ப்புகள் பற்றி ஏதும் அறிவிப்பு இல்லை. வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் 150 முதல் 300 ரூபாய்வரை என்ற கணக்கில் செலவிடும் தொகை மட்டுமே ஆண்டுக்கு 110 கோடி ரூபாய். இப்படி மீன்களைக் கொடுப்பதைவிட, இந்தத் தொகையைச் செலவழித்து தொழிற்சாலைகளை அமைத்தால், அவர்களுக்கு மீன் பிடிக்க ஏரிகளை உருவாக்கிக் கொடுத்த மாதிரியும் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கும் உதவும்’’ என்றார்கள்.

தொழில்களைப் பற்றிய அறிவிப்பு இல்லாவிட்டாலும், தொழில் நகரமான திருப்பூரை மாநகராட்சியாக அறிவித் துள்ளது, அந்த ஊரின் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

திருப்பூர் பற்றிய ‘ஊர்’வலம் கட்டுரையில் (டிசம்பர்1, 05 இதழ்) ‘எங்கள் நகருக்கு கலெக்டர் அனுபவம் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நகராட்சி கமிஷனராக நியமிக்க வேண்டும். மாவட்டத்தையே நிர்வகிக்கும் ஆற்றல் படைத்த போலீஸ் அதிகாரி வேண்டும்’ என்ற திருப்பூர்வாசியின் ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தோம். அது இந்த பட்ஜெட்டில் மாநகராட்சி அறிவிப்பாக மலர்ந்திருக்கிறது.

இதுபற்றிப் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரான சக்திவேல், ‘‘மாவட்டத் தலை நகருக்குத்தான் மாநகராட்சி அந்தஸ்து கொடுப்பார்கள். இந்தியாவிலேயே மாவட்டத்தின் தலைநகரம் அல்லாத ஒரு நகரத்துக்கு மாநகராட்சி அந்தஸ்து கிடைக்கப் போவது திருப்பூருக்குதான். மாநகராட்சியாவதால் வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசால் நிறைய நிதி ஒதுக்கமுடியும். அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம் அபரிமிதமான வளர்ச்சியை அடையும். திருப்பூரின் வர்த்தகம் மேன்மேலும் பெருகும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

திருப்பூர் சாய கம்பெனிகள் சங்கத் தலைவர் ‘சேர்மன்’ கந்தசாமி, ‘‘மக்களுக்கு, சுத்தமான குடிநீர், மின்சாரம், சுகாதாரம் போன்ற வசதிகள் இன்னும் மேம்படும். இதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சாலைகளை அகலப்படுத்துவது, வட்டச்சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பது போன்றவற்றால் பல வசதிகள் நவீனமாகக் கிடைக்கும்’’ என்றார்.

எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு?

‘‘தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் மதிப்புக்கூட்டு வரி அமல்படுத்தியது தொழில் துறையினருக்கு உற்சாகம் தரும்’’ என்றார் ‘மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸி’ன் செக்ரெட்டரி ஜெனரல், சுப்பிரமணியன்.

‘‘ஆண்டுக்கு பத்துலட்சத்துக்கு மேல் வணிகம், தொழில் நடத்தும் அத்தனை பேரும் இந்த மதிப்புக் கூட்டு வரியின் கீழ் இருப்பார்கள். அவர்கள் டிரான்ஸ்சாக்ஷன் ஐடென்டிடி நம்பரும், பான் நம்பரும் வாங்கி முறையாக வருமான வரி செலுத்துவார்கள். இதனால் அரசும் தொழில் நடத்துபவர்களும் எந்தவித உரசலும் இல்லாமல் செல்லமுடியும். அரசுக்கும் சேரவேண்டிய வரி நிலுவையில்லாமல் கிடைக்கும். இதனால் அரசும் தொழில் துறைக்குச் செய்யவேண்டிய நல்ல திட்டங்களை, உதவிகளைத் தடையில்லாமல் வழங்கமுடியும். இதனால், பெருகும் வருமானத்தைக் கொண்டு அரசு தன் தேவைகளைச் சமாளித்துக்கொள்ள முடியும்’’ என்றார்.

ரியல் எஸ்டேட் துறை பற்றிப் பேசிய பிரபல கட்டடக் கலை நிபுணரான கோபிநாத் ராவ், ‘‘துணை நகரங்கள் திட்டத்தை அரசு மேற்கொள்ள இருப்பதால், தற்போது நகருக்குள் குடியிருப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கித் தருவதில் உள்ள சிரமங்கள் குறையும். அடுத்ததாக, அபரிமிதமான ரியல் எஸ்டேட்டின் விலை ஏற்றம் ஓரளவு மட்டுப்படும். நகருக்கு வெளியே அமையும் திட்டங்களால் அந்தந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்புகள் உடனடியாகக் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் இது மக்களுக்கு அவசியமானதும், தேவையும் கூட! ஆனால், அரசே இத்திட்டங்களை நேரடியாக மேற்கொள்வதை விட, தனியார் நிறுவனங்களே கட்டி, சுங்கவரி (டோல் டேக்ஸ்) வசூலிப்பதன் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ளச் செய்யலாம். இதனால், அரசுக்கு அதிக செலவு இல்லை’’ என்றார்.

வரி போட்டு வசூலித்து மக்களைச் சுமையில் ஆழ்த்தி வருமானம் பார்க்க வேண்டும் என்பதை விட, மறைமுகமான பல திட்டங்கள் மூலம் அரசு வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம் என்பது நல்ல விஷயம்தான். அதற்கு தெளிவாகத் திட்டமிட்டுக் கொண்டால், எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism