Published:Updated:

வெற்றி வழிகள்!

வெற்றி வழிகள்!

வெற்றி வழிகள்!

வெற்றி வழிகள்!

Published:Updated:
நடப்பு
வெற்றி வழிகள்!
 


வெற்றி வழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெற்றி வழிகள்!

ற்கெனவே ஏ.ஸி குளிரில் உறைந்திருந்த அந்த மீட்டிங் அறை அமைதியில் மேலும் உறைந்திருந்தது. தொழிலதிபர்களும் பிஸினஸ் மேதைகளும் வாசலிலேயே விழி வைத்துக் காத்திருந்தார்கள். அவர்களுடைய எம்.பி.ஏ படிப்பின்போது பாடமாகப் படித்த நூல்களை எழுதிய பிஸினஸ் பிரம்மா வருகிறார் என்றால் சும்மாவா!

நிமிட நேரத்தில் மின்னலாக உள்ளே நுழைந்தார் பிலிப் காட்லர். ‘பிஸினஸ் உலகின் குரு’ என்று கொண்டாடப்படும் மனிதர். ஒரு ஸ்பெஷல் பயணமாக இந்தியா வந்த காட்லர், சென்னையில் ‘கிரேட் லாக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ ஏற்பாடு செய்திருந்த ‘இந்திய நிறுவனங்களின் தொழில்நுட்பமும் மார்க்கெட்டிங்கும்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் அள்ளி வீசிய டிப்ஸ்களை அப்படியே வாரிக்கொண்டார்கள் கூடி இருந்தவர்கள். அதில் கொஞ்சம் டிப்ஸ்கள்...

‘‘மார்க்கெட்டிங் என்றாலே விளம்பரம்தான் என்பது நம் மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்ட விஷயமாக இருக்கிறது. இன்றைய வியாபார வளர்ச்சியில் பொருளைப் பற்றி மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை; அவர்களை வாங்கத் தூண்டத் தேவையில்லை. நுகர்வோரைத் தக்க வைத்துக்கொண்டாலே போதும். அதற்கான உத்திகளைச் செய்வதுதான் மார்க்கெட்டிங். அதில் விளம்பரங்களின் பங்கும் உண்டு, அவ்வளவுதான்!

மார்க்கெட்டிங் என்பது பொருட்களை மையப்படுத்தாமல், வாடிக்கையாளரை மையப் படுத்தி இருக்கவேண்டும். அப்போதுதான் அவரது திருப்தி, ஈடுபாடு போன்றவற்றைத் தெரிந்து அதற்கேற்ப நம் சரக்கை தயாரிக்க, விற்க முடியும். விஷயமில்லாத பொருட்களை விற்பது நீண்ட நாளுக்குச் சாத்தியப்படாது.

பலத்த போட்டிகள் நிறைந்த வியாபார உலகம் இது. எனவே உங்களது தயாரிப்புகளுக்கு தனிப்பட்ட பிராண்டை உருவாக்குங்கள். அதை நிலை நிறுத்துங்கள். வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது, உணர்ச்சிப்பூர்வமாகவும், தங்களது தேவைக்கான தீர்வாகவும், தரமானதாகவும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களை விசுவாசிகளாக மாற்றும் வேலையை பிராண்ட் செய்யவேண்டும்.

போட்டிகளை முந்திச்செல்லுங்கள். உங்கள் தயா ரிப்பைப் போன்ற பொருட்கள் சந்தையில் உடனுக் குடன் வந்துவிடும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற, புதிய குணங்களோடு மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம். அப்போதுதான் நிலைத்து நிற்கமுடியும்.

நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில், நீண்டகாலமாக மக்கள் புழக்கத்தில் இருக்கிறதா... புதிய மார்க்கெட்டிங் உத்தியைத் தேர்ந்தெடுங்கள். அது உங்களை மற்றவர் களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும். தரத்தை மட்டுமல்ல... விலையையும் உயர்த்துங்கள். இந்த அணுகு முறை தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கும். ‘ஏன் உங்கள் பொருளைத் தேடி வந்து வாங்கவேண்டும்?’ என்ற அனுபவத்தை வாடிக்கையாளர் உணரும் வகையில் கொடுங்கள்.

ஏன் எல்லோரும் காட்லரைத் தேடி வருகிறார்கள்..? என்பது, அங்கிருந்து கிளம்பும்போது புரிந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism