Published:Updated:

மிளகாய் இனிக்குமா?

மிளகாய் இனிக்குமா?

மிளகாய் இனிக்குமா?

மிளகாய் இனிக்குமா?

Published:Updated:
தொழில்
மிளகாய் இனிக்குமா?
 

 

மிளகாய் இனிக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிளகாய் இனிக்குமா?

‘இ னிக்குமே..!’ என்கிறார்கள் மிளகாய் பயிரிடும் விவசாயிகள். இது சாதாரண மிளகாய் இல்லை, குடைமிளகாய்! லட்சக்கணக்கில் லாபத்தை அள்ளித் தரக்கூடிய பணக்காயாகவே இருக்கிறது இந்த குடைமிளகாய் பயிர்!

கொஞ்சம் காஸ்ட்லியான பயிர் இது. குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது என்பதால் நம் நிலத்திலும் செயற்கையான குளிர்ச்சி சூழலை உருவாக்கவேண்டும். இந்த மிளகாய், தண்ணீர் தேங்காத செம்மண் பூமியில்தான் விளையும்.

குடை மிளகாய் பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வரும் ஆத்தூரைச் சேர்ந்த சுதர்ஷன் பாபு இதைப் பற்றி விரிவாகப் பேசினார்.

‘‘நெதர்லாந்து நாட்டு விதைகளைக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் சிவப்பு நிற மிளகாய்களுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதை அறிந்து ஐந்து வருடங் களுக்கு முன் இதில் இறங்கினேன். இதைப் பயிரிட ‘க்ரீன் ஹவுஸ்’ எனப்படும் சிறப்பு அமைப்பு தேவைப்படுகிறது. இரும்புத் தூண், பிளாஸ்டிக் ஷீட்களைக் கொண்டு கூடாரம் அமைக்கவேண்டும். இரும்பு கொண்டு அமைப்பதால் 25 ஆண்டுகளுக்குச் சேதமடையாமல் இருக்கும். கூரையை மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளவேண்டும்’’ என்றார்.

மிளகாய் இனிக்குமா?

அரை ஏக்கர் நிலத்தில் இரும்புக்கூடாரம், ஏற்பாடு உள்ளிட்டசெலவுகளுக்கு சுமாராக 15 லட்ச ரூபாய்வரை தேவைப்படும். தவிர, வெப்பத்தைக் குறைக்க ஃபேன்கள், சொட்டு நீர் பாசன ஏற்பாடுகள் போன்றவற்றுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் ஆகும்.

‘‘முதலீட்டுத் தொகை கொஞ்சம் மலைப்பைத் தரலாம். ஆனால், இதில் கிடைக்கும் லாபம் அபரிமிதமானது. இதில், மூன்றரை லட்ச ரூபாய் கையில் இருந்தால், மீதியை வங்கிக் கடனாகப் பெற முடியும். இதில் மத்திய தோட்டக்கலை வாரியத்திலும் 20% மானியம் பெறமுடியும். மிளகாய் பயிரிடுதல் தொடர்பான அனைத்து உதவிகளும் ஆலோசனைகளும் தரத் தயாராக இருக்கிறேன்’’ என்ற சுதர்ஷன் பாபு, இதைப் பயிரிடும் முறை பற்றி விவரித்தார்.

‘‘நிலத்தில் 40 செ.மீ இடைவெளியில் 90 செ.மீ அகல பாத்திகள் அமைத்து செடி நடவேண்டும். விதைகளை வாங்கிவந்து நர்சரியில் சிறு செடிகளாக வளர்த்து பின் நடலாம். ஒவ்வொரு செடிக்கும் இடையில் 25 செ.மீ இடைவெளி இருக்கவேண்டும். அரை ஏக்கரில் 8,000 முதல் 9,000 செடிகள் வரை நடலாம். அவ்வப்போது உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் இடவேண்டும்.

கிட்டத்தட்ட நான்காம் மாதத்தில் இருந்து, அடுத்த மூன்று மாதங்களுக்குக் காய்ப்பு இருக்கும். ஒரு செடியில் சராசரியாக 15 மிளகாய் வரை விளையும். ஒரு மிளகாய் 100 முதல் 150 கிராம் எடை கொண்டதாக இருக்கும். வேலையாட்களுக்கு சம்பளம், உரங்கள் மற்றும் மின் கட்டணங்கள் என்ற வகையில் ஏழு மாதத்தில் அதிகபட்சம் ஒரு லட்சம் வரை செலவாகும். அரை ஏக்கரில் 12,000 கிலோ மிளகாய் கிடைக்கும். ஒரு கிலோ 45 முதல் 60 ரூபாய் வரை சராசரியாக விற்பனையாகிறது. இதன்மூலம் அரை ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் தாராளமாகக் கிடைக்கும். விற்பனை இடத்தைப் பொறுத்து போக்குவரத்துச் செலவுகள் இருக்கும்.

காய்ப்பு முடிந்தவுடன் பழைய செடிகளை பிடுங்கிவிட்டு புதிய செடிகளை ஒருமாத இடைவெளியில் நடலாம். புதிய செடி நட பெரிதாக செலவு இருக்காது. அடுத்த 7 மாதங்களில் அதே ஒரு லட்ச ரூபாய் செலவில் 6 லட்சம் ரூபாய் கிடைக்கும். இப்படி இரண்டு வருடங்களில் மூன்று முறை வருமானம் கிடைக்கும்’’ என்று வருமான வாய்ப்புகளைச் சொன்னார். அந்தக் கணக்கின்படி பார்த்தால், சுமாராக மூன்றாவது வருடத்தில் போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம்.

காலாகாலத்துக்கும் அரை ஏக்கரில் ஒவ்வொரு வருடமும் ஏழரை லட்சம் ரூபாய் சராசரி வருமானம் நிச்சயம் என்பதால், இந்தப் பயிர் விவசாயிகளைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஒரு ஏக்கர் இடம் வைத்திருப்பவர்கள், அதை நான்காகப் பிரித்து, ஒரு பக்கம் நடவு இருக்கும்போது மறுபக்கம் அறுவடை இருக்கும்படி திட்டமிட்டு, விவசாயம் செய்தால் வருடம் முழுக்க காய் சப்ளை செய்யலாம். இரண்டு மூன்று பேர் சேர்ந்து கூட்டாக பயிரிட்டால்... முதலீட்டுச் சுமை தெரியாது.

விவசாய வருமானம் என்பதால் இதற்கு வருமான வரி கிடையாது. இன்ஷூரன்ஸ் வசதியும் உண்டு. கரன்ட் சர்வீஸுக்கு விண்ணப்பிக்கும்போதே, காய்கறி உற்பத்திக்கென்று விண்ணப் பித்தால் மின் கட்டணமும் குறைவு.

மிளகாய் இனிக்குமா?

‘‘இந்த குடை மிளகாய் வகையில எவ்வளவு சரக்கு வந்தாலும் நிற்காமல் ஓடிவிடும்’’ என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் சென்னை கோயம்பேட்டில் காய்கறி மொத்த வியாபாரக்கடை நடத்தி வரும் ஏழுமலை. இவர் 15 வருடமாக இவ்வகை மிளகாய்களை விற்றுவருகிறார். பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை என வெவ்வேறு வகையான நிறங்களில் மார்க்கெட்டுக்கு வருகின்றன. இதில் பச்சை நிற மிளகாய் உற்பத்தி சில சீசன்களில் மிக அதிகமாகவும், சில சீசன்களில் மிகக் குறைவாகவும் இருப்பதால் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சீசனுக்குத் தகுந்தவாறு விற்பனை ஆகும். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமுடைய மிளகாய் குறைவான இடங்களில் பயிரிடப் பட்டாலும் சீரான உற்பத்தி இருப்பதால் 45 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகும்.

கடந்த பத்து வருடங்களாக இவ்வகை மிளகாய் பிரபலமடைந்து வருவதால் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இருந்து, ஃபைவ் ஸ்டார் ஓட்டல்கள் வரை இதற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. காரம் குறைவாக இருக்கிற அதேநேரம், உணவில் சுவை கூட்டும் தன்மை உடையது என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

சிவப்பு மற்றும் மஞ்சள் வகை மிளகாய் தினமும் குறைந்தது 300 கிலோவும், மற்ற பச்சை நிற மிளகாய் 4,000 கிலோ வரையும் விற்பனையாகின்றன. சமையலுக்கு மட்டுமன்றி டெக்கரேஷன்களுக்கும் பயன்படுவதால் இதற்கான தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிமாண்டுக்கேற்ப சப்ளை செய்ய முடியவில்லையே என்பதுதான் எங்கள் வருத்தம்! தமிழ்நாட்டில் மிகக் குறைவான உற்பத்தி இருப்பதால் பெரும்பாலும் இவ்வகை மிளகாய்கள் பெங்களூர், புனே போன்ற பகுதிகளில் இருந்துதான் வருகின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி அதிகரித்தால் சிறப்பாக இருக்கும்’’ என்றார் ஏழுமலை.

‘‘திட்டத்தோடு வாருங்கள். மானியம் கிடைக்க உதவுகிறோம்’’ என்று நம்பிக்கை தரும் குரலில் சொன்னார் மத்திய தோட்டக் கலை வாரியத்தின் துணை இயக்குநர் பாலசுதாகரி. திட்டத்தின் மொத்த மதிப்பில் 20% அல்லது 25 லட்சம் ரூபாய் இதில் எது குறைவாக இருக்கிறதோ அதை வழங்குகிறோம். க்ரீன் ஹவுஸ்களில் வைத்து வளர்க்கப்படும் குடை மிளகாய்களுக்குதான் மானியங்கள் தருகிறோம். முதலில் நாங்கள் திட்டத்தை ஆராய்ந்து அனுமதி கொடுப்போம்... அதனடிப்படையில் வங்கிகளில் கடன் பெற்றவுடன் மானியத் தொகையைப் பெறலாம்’’ என்றார் பாலசுதாகரி.

நீண்ட காலத்துக்கு அதிக வருமானம் தரும் இந்த மிளகாயை நம்பி, தைரியமாக விவசாயிகள் களத்தில் இறங்கலாம்.

கடன் வாங்குவது எப்படி?

மிளகாய் இனிக்குமா?

வ்வகை மிளகாய் சாகுபடிக்கு கடன் தருகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா! இவ்வங்கியின் கோவை மண்டல கிராமப்புற மேம்பாட்டு மேலாளர் ஆனந்தனிடம் பேசினோம்.

‘‘இந்த மிளகாய் பயிர் கடனைப் பொறுத்தவரையில் தகுந்த செக்யூரிட்டி தேவைப்படும். இதில் ஏகப்பட்ட தொகையை க்ரீன் ஹவுஸ் அமைப்பதற்காகவே செலவிட வேண்டும். க்ரீன் ஹவுஸ் அமைப்பது தவணைக் கடன் வகையிலும், பயிர் விளைவிப்பது பயிர் கடன் வகையிலும் வரும். ஆனால், இரண்டுக்கும் தனித்தனி கடன் வழங்காமல் தவணை கடன் வகையிலேயே மொத்த கடனையும் வழங்குகிறோம்.

பொதுவாக, விவசாயிகள் அரை ஏக்கர் அளவில் பயிர் செய்யவே கடன் வாங்குகிறார்கள். எனவே அதற்கான கடன் வழிமுறைகளைப் பற்றியே சொல்லி விடுகிறேன். அரை ஏக்கரில் இவ்வகை மிளகாய் விளைவிக்க நாங்கள் பத்து லட்சம் ரூபாய் வரை கடன் தருகிறோம். மீதமுள்ள தொகையை விவசாயி தனது முதலீடாகப் போட வேண்டும். எங்களது வங்கியில் கடன் பெற பொதுவாக மொத்த உற்பத்தித் தொகையில் விவசாயி தனது பங்காக 25% முதலீடு செய்ய வேண்டும்.

முதல் வருட இறுதியில் ஆரம்பித்து, கடன் தொகையை மாதா மாதமோ, வருடத் தவணையாகவோ திரும்பச் செலுத்தலாம். ஆறு வருடங்களில் கடன் தொகையைத் திரும்ப செலுத்தவேண்டும். வருட வட்டி 11.75%. ஒவ்வொரு வருடமும் தவணைத் தொகை குறைந்து கொண்டேவரும்’’ என்று கடன் விவரம் பற்றி விலாவரியாகச் சொன்னவர்,

‘‘கணக்கிட்டுப் பார்த்தால் இந்த விவசாயத்தில் வருடத்துக்கு 6 லட்ச ரூபாய் வரையில் நிகர லாபம் கிடைக்கும் என்பது எங்கள் கணக்கு. இதை வைத்துப் பார்க்கும்போது கடன் தொகையைக் கட்டுவதில் விவசாயிகளுக்கு எந்தவிதச் சிரமமும் இருக்காது’’ என்றார் ஆனந்தன்.

- ஆர்.லோகநாதன்

தேவை அதிகம்!

பீ ட்ஸா, சாலட், சாண்ட்விச், ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் போன்ற உணவுகளில் இந்த மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. பத்திரிகைகளிலும், டி.வி-க் களிலும் புதிய வகை உணவுகளை அறிமுகம் செய்யும்போது அனைத்திலும் முக்கிய இடம் வகிப்பது இவ்வகை மிளகாயே. இதனால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

சுவையுடன் இருப்பது மட்டுமன்றி இந்த வகை மிளகாயில் வைட்டமின் சி-யும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் உடல் நலத்துக்கும் சிறந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism