Published:Updated:

மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!

மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!

மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!

மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!

Published:Updated:
தொழில்
மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!
 

 

மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!

டீ ச்சர் டிரெய்னிங், பி.எட் படிப்பு படித்தவர்கள் எல்லாம் அரசு வேலையை எதிர்பார்ப்ப தால், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தட்டுப்பாடு!

ஆசிரியர்களின் தட்டுப் பாட்டை போக்க, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ முடித்தவர் களுக்குப் பயிற்சிகொடுக்க ஆரம்பித்திருக்கின்றன மாண்டிஸோரி பயிற்சி பள்ளிகள். இந்தப் பயிற்சி எடுத்தால், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைக்கும். ஆர்வம் இருந்தால், தனியே ஒரு ப்ளே ஸ்கூல்கூட ஆரம்பிக்க முடியும்.

இப்போது சென்னையில் பல மாண்டிஸோரி பயிற்சிப் பள்ளிகள் முளைக்க ஆரம்பித்திருக்கின்றன. இங்கெல்லாம் 25 முதல் 40 வயது வரையுள்ள திருமதிகள் கூட்டம் அலை மோதுகிறது. குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக ஏ.பி.சி.டி...யையும், ஒன், டூ, த்ரீ... யையும் விதவிதமாக கலர் காகிதங்களிலும் வெட்டி டிஸைன் செய்கிறார்கள். உடைந்த கலர் கண்ணாடித் துண்டுகளை பலவித மாடல்களில் ஒட்டி பொம்மை செய்து பயிற்சி எடுக்கிறார்கள்.

மிஸ் ஆக விரும்பும் மிஸஸ்கள்!

சென்னை அண்ணாநகரில் அரசு அங்கீகாரம் பெற்ற மாண்டிஸோரி பயிற்சிப் பள்ளி வைத்திருக்கிறார் ஜெயலட்சுமி. ‘‘இந்தப் பயிற்சி மையத்தில் படிப்பவர்கள் எல்.கே.ஜி துவங்கி ஐந்தாம் வகுப்பு வரை சொல்லித் தர முடியும். வீட்டில் இருந்துகொண்டு வேலைதேடும் திருமதிகள் மாண்டிஸோரி பயிற்சியில் சேர்கிறார்கள். பயிற்சி முடித்த வுடன் எளிதில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் வேலை கிடைக்கிறது. இவர்களுக்கு மாதம் நான்காயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே பயிற்சி நேரம். பெண்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறோம். காரணம், தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலும் பெண்களுக்குத்தானே அதிக வாய்ப்பு இருக்கிறது!’’ என்றார் ஜெயலட்சுமி.

இவரே தொடர்ந்து, ‘‘மாண்டிஸோரி பயிற்சிப் பள்ளிகளில் சின்னக் குழந்தைகளின் தேவைகள், விருப்பங்களை நிறைவேற்றும் பயிற்சிகளும், பள்ளி நிர்வாகம் மற்றும் கணினி பயிற்சியையும் அளிக்கிறோம். கூடவே, சிறுவர்கள் விரும்பும் காகித பொம்மைகள், வண்ண வரைபடங்கள் போன்றவற்றை உருவாக்கவும் கற்றுக் கொடுக்கிறோம். இது ஆறு மாத பயிற்சி! இதுவே முதுகலை பட்டயப்படிப்பு என்றால் கூடுதலாக இன்னும் சில பாடங்களைச் சொல்லித்தருவோம். பயிற்சிக்கான கட்டணம் நான்காயிரம் ரூபாயிலிருந்து ஏழாயிரம் வரை இருப்பதாலும் எளிதில் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த கோர்ஸ் முடித்த பலருக்கு சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உடனடியாக வேலையும் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் நாற்பதாயிரம் தனியார் தொடக்க பள்ளிகள் இருக்கின்றன. ஒரு பள்ளிக்கு குறைந்தது நான்கு ஆசிரியர்கள் புதிதாக வேண்டும் என்றாலும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களுக்கு தேவை உள்ளது. இதனால், மாண்டிஸோரி பள்ளியில் படிப்பவர்களுக்கு வேலை நிச்சயம்’’ என்கிறார் ஜெயலட்சுமி.

மாண்டிஸோரி பள்ளிகளில் பயிற்சி எடுத்தால் வேலையும் கிடைக்கும். சுயமாகத் தொழில் தொடங்கவும் முடியும் என்பது நல்ல விஷயம் தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism