Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

Published:Updated:
தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை!
 

 

மந்திர வாசகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஸினஸ் குட்டிக்கதை

டை வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு ஈ, காக்கா இல்லை. வெறுப்பாக இருந்தது விஜய்க்கு.

அவன் இந்தத் தெருவில் துணிக்கடை தொடங்கியபோது, இந்தப் பகுதியில் வேறு துணிக்கடைகள் இல்லை. எனவே, இவன் கடையில் எந்நேரமும் கூட்டம் மொய்த்துக் கிடக்கும். வியாபாரம் சக்கைப்போடு போட்டது.

ஒரு வருஷம்கூட ஆகியிருக்காது; அடுத்து இருந்த ஒரு பெரிய கட்டடத்தை வாடகைக்குப் பிடித்து, இன்னொரு பெரிய துணிக்கடையைத் திறந்துவிட்டான் ஒரு மகா பாவி! அருகாமை கடை வந்ததிலிருந்து விஜய் கடையில் கூட்டம் குறைந்து போயிற்று. லாபத்தில் குறைத்துக்கொண்டு, விலைகளையும் கையைக் கடிக்காத அளவுக்குக் குறைத்துப் பார்த்தான்... பலன் இல்லை.

எரிச்சலாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், இவன் கடையின் வலப்பக்கமும் ஒரு புதிய துணிக்கடை முளைத்துவிட்டது. துணிக்கடை வைத்தால் துணியை மட்டும் விற்றுவிட்டுப் போகவேண்டியதுதானே... அதை விட்டுவிட்டுத் தங்கள் கடைக்கு வருகிற பெண்களுக்கு எல்லாம் இலவசமாகக் கையில் மெஹந்தி போட்டுவிடுகிறோம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். அதிலிருந்து, மொத்தப் பெண்கள் கூட்டமும் அங்கேதான்! இந்த அழகில் ஆடி மாதம் பிறந்ததும் இரண்டு பக்கக் கடைக்காரர்களும் முகப்பே தெரியாத அளவுக்கு பெரிது பெரிதாக சினிமா செட் போல கடையை அலங்கரித்து விட்டார்கள். கூடவே இலவச அறிவிப்புகள் வேறு!

இரண்டு சுமோ வீரர்களின் மத்தியில் சிக்கிக்கொண்ட ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி விஜய்யின் கடை நசுங்கிப் போய்விட்டது. தெருவின் அந்தப் பக்கத்தில் இருந்து வருபவர்கள் வலப்பக்கக் கடைக்கும், இந்தப் பக்கத்திலிருந்து வருபவர்கள் இடப்பக்கக் கடைக்கும் சென்றுவிட, ஒரு சில ரெகுலர் கஸ்டமர்கள் தவிர, இவன் கடைப்பக்கம் வர ஆளில்லை.

என்னவாவது செய்து கடையை நிமிர்த்தவேண்டும்! என்ன செய்யலாம்? யோசித்த விஜய் ராத்திரியோடு ராத்திரியாக ஒரு காரியம் செய்தான். அடுத்த நாள் காலையில் கடையில் கூட்டம் அப்பியது. தரமான துணிகள் என்பதால், தொடர்ந்து பழைய மாதிரி கடை பிக்-அப் ஆகிவிட்டது. புதிய வாடிக்கையாளர்கள் வந்தனர்.

அப்படி என்ன மாயம் செய்தான் விஜய்..?! இரண்டு பக்கத்துக் கடைகளும் தங்கள் கடை போர்டையே மறைத்து அலங்காரங்கள் செய்து வைக்க, விஜய் தன் கடைப் பெயருக்கு கீழே பளீரென்று எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ‘கடையின் பிரதான நுழைவாயில் இங்கே இருக்கிறது’ என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்தான். அதுதான் கூட்டத்தை இழுத்த மந்திர வாசகம்!


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism