Published:Updated:

ஒரே காசிலே ரெண்டு லாபம்!

ஒரே காசிலே ரெண்டு லாபம்!

ஒரே காசிலே ரெண்டு லாபம்!

ஒரே காசிலே ரெண்டு லாபம்!

Published:Updated:
சேமிப்பு
ஒரே காசிலே ரெண்டு லாபம்!
 


ஒரே காசிலே ரெண்டு லாபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரே காசிலே ரெண்டு லாபம்!

டிப்பு முடித்த கையோடு கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலையிலும் சேர்ந்துவிட்டான் வெங்கடேஷ். பெங்களூரில் இருந்து ஒருநாள், இரண்டு நாள் லீவில் தலைகாட்டிவிட்டுப் போகும் அவன், வேலையில் சேர்ந்து 2 வருடத்துக்குப் பிறகு இந்த முறை, ஒருவார லீவில் வீட்டுக்கு வந்திருந்தான்.

அவன் வாங்கி வந்த ஸ்வீட்ஸ், வீட்டில் செய்த தின்பண்டங்களோடு பீச்சுக்குப் புறப்பட்டது வெங்கடேஷ் குடும்பம். அவனுடைய அண்ணன் பெருமாள் அப்பாவுடன் கூட்டுக் குடித்தனமாக இருக்கிறார். பீச்சில் குழந்தைகள் கடலலை பக்கமாக விளையாட, அப்பாவுக்கும் மகன்களுக்கும் தின்பண்டங்களை எடுத்துக் கொடுத்துவிட்டு அம்மாவும் அண்ணியும் குழந்தைகள் பக்கம் கவனமாகிவிட்டார்கள்.

‘‘என்ன வெங்கடேஷ்... கைநிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டே... நாங்க கேட்காட்டியும்கூட எங்களுக்கும் மாசாமாசம் பணம் அனுப்பறே... உனக்குனு ஏதாவது சேர்த்து வைக்கலாமே..! ஆர்.டி மாதிரி ஏதாவது போட ஆரம்பிச்சுட்டியா..?’’ கேக் துண்டு ஒன்றை வாயில் போட்டபடி சப்ஜெக்ட்டை ஆரம்பித்தார் அப்பா.

அண்ணன் தன் பங்குக்கு, ‘‘ரெக்கரிங் டெபாசிட்ல போட்டால் பணம் சேர்ந்ததும் அதை அப்படியே எடுத்து டெபாசிட்டாகப் போடலாம் அல்லது ஏதாவது பாண்ட் வாங்கலாம்’’ என்று ஐடியா கொடுத்தார்.

வெங்கடேஷ் ஒன்றும் சொல்லவில்லை. ஆமோதிப்பது போல தலையாட்டியவன்,

‘‘கரெக்ட்ப்பா! சேமிக்கத்தான் வேணும். ஆனா ஆர்.டி தான்னு இல்லை. வேற வழிகளில்கூடச் சேமிக்கலாம்’’ என்றான்.

‘‘மாசா மாசம் சேமிக்கறதுக்கு வேற என்ன வழி இருக்கு? நானெல்லாம் இன்னமும் ஆர்.டி தான்டா போடுறேன்’’ \ இது அண்ணன் பெருமாள்.

வெங்கடேஷ் நிமிர்ந்து உட்கார்ந்தான். அண்ணனைப் பார்த்துக் கேட்டான். ‘‘ஆர்.டி போட்டுச் சேர்த்த பணத்தை என்ன செய்வாய்?’’

‘‘இதென்ன கேள்வி... முதிர்ச்சி அடைஞ்சதும் எடுத்து ஒரு பேங்க்ல எஃப்.டி போடுவேன்.’’

‘‘சரிண்ணா... எதுக்காக எடுத்து எஃப்.டி-யில் போடறோம்... கூடுதல் வட்டி கிடைக்கும். நல்ல முதலீடாக இருக்கும் என்று தானே?’’

‘‘ஆமாம். தெரிஞ்சதுதானே... அதில் என்ன சந்தேகம்?’’ என்று அப்பா கால் மாற்றி உட்கார்ந்துகொண்டு ஆச்சரியமாகக் கேட்டார்.

‘தம்பி புத்திசாலி என்று தெரியும். ஏதோ சுவாரஸ்யமாகச் சொல்லப்போகிறான்’ என்று அனுமானித்துவிட்டார் பெருமாள்.

‘‘இப்ப எல்லாமே ஃபாஸ்ட் ஆகிடுச்சுப்பா. ஓடற கார்ல டயர் மாத்தற காலம் இது! சேமிக்கும்போதே முதலீடும் செய்யணும். சேமிப்பது... அப்புறம் முதலீடு செய்வது என்றெல்லாம் காத்திருக்க வேண்டுமா என்ன?’’ என்றான் வெங்கடேஷ்.

‘‘என்னடா சொல்ற நீ? பணத்தைச் சேர்த்தால்தானே, பிறகு முதலீடு செய்ய முடியும். பெங்களூர் நல்ல கூல் க்ளைமேட்தானே என்னாச்சு உனக்கு!’’ என்று கேலி செய்தார் அப்பா.

‘‘சேமிக்கிறபோதே முதலீடும் செய்யவேண்டும் என்பதுதான் நம்ம திட்டம். இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. நான் மாசாமாசம் என் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட கம்பெனியோட ஷேர்களை வாங்கிட்டே வர்றேன்’’ என்று வெங்கடேஷ் சொல்ல...

‘‘ஏன்டா! ஷேர் வாங்குறதுதான் சேமிப்பு + முதலீடா?’’ என்று அப்பாவும் அண்ணனும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

‘‘சொல்றேன் இருங்க. நான் வேலை கிடைச்சு பெங்களூர் போனதுமே மாசம் 1,000 ரூபாய் சேமிக்கறதா முடிவு பண்ணினேன். அதை எப்படிச் சேமிப்பது என்ற யோசனையில் இருக்கும்போதுதான் ஒரு ஷேர் புரோக்கர் நண்பரைப் பார்த்தேன். அவர்தான் ஷேரில் சேமிக்கும் ஐடியாவைச் சொன்னார்...’’ என்று நிறுத்தினான் வெங்கடேஷ்.

‘‘ஷேர் மார்க்கெட் ரிஸ்க் இல்லையா..?’’ என்று பதறினார் அப்பா.

‘‘சின்ன வயசில் ரிஸ்க் எடுக்காமல் எப்போது எடுப்பது? பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனங்களில் சிறப்பாக லாபம் பார்க்கும் ஓரிரு ஷேரைத் தேர்ந்தெடுத்து, அதன் பங்குகளை வாங்கலாம். டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, ரிலையன்ஸ் இப்படி எத்தனையோ நிறுவனங்கள் நன்றாக இருக்கின்றன. அவற்றின் ஷேர்களை நாம் வாங்கலாம். அதற்கு நிறைய பணம் வேண்டும் என்பதுமில்லை. மாதாமாதம் ஆயிரம் ரூபாய்க்கு என்ன வருமோ, அந்த ஷேர்களை வாங்கினால் போதும்’’ என்ற வெங்கடேஷ், ஒரு செய்தித்தாள் கட்டிங்கை எடுத்துக் காட்டினான்.

அதில், 13 ஆண்டுகளுக்கு முன்பு ‘இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்கு வெளியிட்டபோது, ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து பங்குகளை வாங்கி வைத்திருந்தால், அவற்றின் இன்றைய மதிப்பு இருபத்தோரு லட்ச ரூபாய்’ என்று அதன் தலைவர் நாராயணமூர்த்தி சொல்லியிருந்தார். ‘‘அதுபோன்ற நல்ல நிறுவனங் களைப் பார்த்து வாங்கி வைக்கவேண்டும். நல்ல நிறுவனப் பங்குகளாக வாங்கிச்சேர்ப்பது நல்ல முதலீடு தான். பங்குகளின் மதிப்பு உயர உயர... நம் சேமிப்பும் தன்னால் வளர்ந்துகொண்டே இருக்கும். மொத்தமாக ஒரே நாளில் ஐம்பது, நூறு ஷேர்கள் வாங்குவதைவிட, இதில் கூடுதல் வசதி என்னவென்றால், பங்குகள் பல விலைகளில் நமக்குக் கிடைக்கும். அதிகமான விலைகளில் போய் ஒரேயடியாக மாட்டிக் கொள்ள மாட்டோம்’’ என்றான் வெங்கடேஷ்.

அப்பாவும் அண்னனும் வெங்கடேஷ் சொன்னதைப் பற்றி தீவிரமாகக் கவனித்தார்கள்.

ஒரு சார்ட் போட்டுக் காட்டினான் வெங்கடேஷ்.

‘‘சத்யம் கம்ப்யூட்டர்ஸோட ஷேர் விலை 2004-ல் 250 ரூபாய் இருந்தது. இரண்டே வருஷத்திலே மூணு மடங்கு ஏறிடுச்சே... கவனிச்சீங்களா..?’’ என்றான். அப்பாவும் அண்ணனும் ரொம்பவே சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

நீங்களும் யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism