Published:Updated:

உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!

உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!

உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!

உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!

Published:Updated:
சிக்கனம்
உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!
 

 

உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!

‘‘ஆ கஸ்ட் 1981-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து இன்றுவரை நான் வாங்கும் சம்பளத்தொகை மற்றும் செய்த செலவுகளை ஒன்றுவிடாமல் எழுதி வைத்து வருகிறேன். ஹாபியாகத் தொடங்கிய இந்தப் பழக்கமே எனது வாழ்க்கையை ஹேப்பியாக வைத்திருக்கிறது. கணக்குகள் எழுதுவதன் மூலம் தேவையில்லாத செலவுகளைக் கண்டறிந்து, அவற்றைத் தவிர்த்து சிக்கனமாக வாழ்க்கையை நடத்த முடிகிறது’’ என்று நமக்குக் கடிதம் எழுதி இருந்தார் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரி’ன் கோவை, ஆர்.எஸ்.புரம் கிளையில் பணிபுரியும் வாசன்.

குனியமுத்தூரில் இருக்கிறது வாசனின் இல்லம். தன் தம்பி ராஜேந்திரன் குடும்பம் மற்றும் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் வாசன் சிக்கனமான குடும்பத்தை நடத்துவதற்கான வழிமுறைகளை பாயின்ட் பாயின்டாக நம்முன் எடுத்து வைத்துப் பேச ஆரம்பித்தார்.

‘‘தம்பி ராஜேந்திரனும் வங்கி ஊழியர்தான். என்னுடைய அப்பா சுப்பாராவ், ஓய்வுபெற்ற ஆசிரியர். மூவருக்கும் தனித்தனி வீடுகள் இருந்தும் மற்ற இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரே வீட்டில் குடி இருக்கிறோம். இதனால் மற்ற இரண்டு வீடுகள் மூலம் கிடைக்கும் வாடகை கூடுதல் வருமானமாகிறது. அதோடு, டி.வி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களையும் தனித்தனியே வாங்கவேண்டிய அவசியமில்லை.

சிக்கனமாக வாழ விரும்புகிற ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடிக்கலாம். ஒற்றுமையே பலம். கூட்டுக் குடித்தனம்ங்கறதால எந்த சந்தோஷத்தையும் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. குழந்தைகளுக்கும் நல்ல பாதுகாப்பு’’ என்றவர், அடுத்து சிக்கன டிப்ஸ்களை ‘சிக்’ என எடுத்து வைத்தார்.

‘‘நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயையும், புதிதாகச் சம்பாதிக்கும் பணமாகக் கருதவேண்டும். கடந்த இருபத்தைந்து வருட காலமாகவே எனது வருமானத்தையும் எழுதி வெச்சிருக்கேன். செலவுக் கணக்கையும் நாள் தவறாம எழுதி வருகிறேன். மாதக் கடைசியில இந்த மாதத்தின் அத்தியாவசியச் செலவு என்ன... குறைத்திருக்கக்கூடிய செலவு என்ன? என்பதைக் குடும்பத்துடன் உட்கார்ந்து ஆராய்வோம்.

உறவுகள் கூடினால், செலவுகள் குறையும்!

இதற்காக நாம் தனியாக நேரம் எதையும் ஒதுக்கத் தேவையில்லை. தினமும் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து அன்னைக்கு என்ன செலவு செய்தோம்ங்கறதை ரெண்டு நிமிஷம் நோட் பண்ணி வெச்சா போதும். வெளியூர் போயிட்டு வந்தா போக்குவரத்துக்கு, சாப்பாட்டுக்கு, பொழுது போக்குக்கு... இப்படி வகை பிரிச்சு செலவுக் கணக்கை எழுதி வைக்கணும். ஆரம்பத்துல இது கொஞ்சம் கஷ்டமா தெரிஞ்சாலும் பழகினா சுலபமாயிடும்.

மாதம் ஒரு தடவை அந்தச் செலவுக் கணக்குகளை எடுத்து, குடும்பத்தோட ஆராய்ந்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கவேண்டி இருக்கும். அதிலே, எது அவசியச் செலவு, எது அநாவசியச் செலவுனு பிடிபட்டுடும். அநாவசியமான செலவுகளை அடுத்தமுறை தவிர்க்க முயற்சி செய்யவேண்டும். உதாரணமா, ஒரு இடத்துக்கு ஆட்டோவுல போய் இருப்போம். அதுக்கு ஐம்பது ரூபா செலவாகி இருக்கும். ஆனா, அந்த இடத்துக்கு பஸ்லேயோ அல்லது நடந்தோ போயிருக்கலாம். ஒரு பொருள் நம்ம வீட்டுக்குத் தேவையே இருக்காது. ஆனா, விளம்பரத்தைப் பார்த்து ஆர்வக் கோளாறுல வாங்கி இருப்போம். இதுபோன்ற செலவுகளை எல்லாம் கணக்கு எழுதி வெச்சிருந்தாதான் சரிசெய்ய முடியும்.

‘நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம்... எவ்வளவு செலவு ஆகுது... எவ்வளவு மிச்சம் பிடிக்க முடியுது?’-என்கிற விவரத்தை பலர் மனைவிகிட்டேகூடச் சொல்றது இல்லை. அது கூடாது. நம்ம குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் எல்லாம் தெரியணும். அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்ங்கறது குழந்தைகளுக்குத் தெரிஞ்சாதான்... அவங்களுக்கும் குடும்பப் பொறுப்பு வரும். 25 வருஷம் முன்னால நான் வேலைக்குச் சேர்ந்தப்ப, என் மாதச் சம்பளம் 668 ரூபாய். இன்னிக்கு 22,000 ரூபாய். என் குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் ‘எவ்வளவு பிடித்தம்... கையில எவ்வளவு கிடைக்கும்?’ங்கற விவரம் தெரியும்’’ என்ற வாசன்,

‘‘பிளானிங்கும் பட்ஜெட்டும் ஒரு குடும்பத்துக்கு ரொம்ப முக்கியம். எங்க வீட்டுக்கு மாதா மாதம் பட்ஜெட் போட்டுத்தான் செலவு செய்வோம். மொத்தம் எட்டு பேர் கொண்ட குடும்பத்துக்கான வீட்டுச் செலவை எட்டாயிரம் ரூபாய்க்குள்ளே முடிச்சுடுவோம். அதுக்குமேலே போக விட்டதே இல்லை.

டெலிபோன் பில் ஆயிரம் ரூபாய்க்கும் மேல போகக்கூடாதுங்கறதுல உறுதியா இருப்போம். ஒரு மாசம் அதிகமா போயிட்டா... உடனே ஒரு ரெஜிஸ்டர் போட்டு ‘எங்க பேசினோம்... எவ்வளவு நேரம் பேசினோம்’ங்கறதை எழுதி வைப்போம். அதனால, போன் பில் கன்ட்ரோலுக்கு வந்துடும்.

பிப்ரவரி, மார்ச் மாதத்துல பருப்பு, புளி, மிளகாய் விலை ரொம்பக் குறைவா இருக்கும். அந்தச் சமயத்திலே ஒரு வருஷத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி ஸ்டாக் வெச்சுக்குவோம். இதனால கணிசமான தொகை மிச்சமாகும்.

அதேபோல, எந்தப் பொருளையும் வெளியூர்ல வாங்கறதில்லைங்கறதுல உறுதியா இருப்போம். ஒரு பொருள் தூரமா இருக்கற ஒரு ஊர்ல குறைஞ்ச விலைக்குக் கிடைக்கலாம். ஆனா, அங்க போய் அதை வாங்கறது ‘சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கா பணம்’ கதையா ஆகிடும். நாம இருக்கற இடத்துலேயே நல்ல பொருளா வாங்கறதால பணமும் மிச்சம். ஏதாவது குறையிருந்தா மாத்தறதும் சுலபம்.

வீடு, வாகனங்கள் இவற்றுக்காக வாங்கற கடன் நமக்குச் சொத்துக்கள் சேர உதவுது. அதேசமயத்துல சேமிப்பாகவும் ஆகுது. எப்படின்னா... ஒரு பைக்கோட விலை முப்பத்தைந்தாயிரம்னு வெச்சுக்குவோம். அந்தப் பணம் சேர்க்க ஒரு வருஷமோ... ரெண்டு வருஷமோ காத்துக்கிட்டு இருக்கணும். அதன்பிறகும் வாங்க முடியுமாங்கறது சந்தேகம்தான். கடன் வாங்கறதுல என்ன நன்மைனா, அந்தப் பொருளோட பயன்பாட்டை உடனடியா நம்மால அனுபவிக்க முடியுது. கடனுக்கான வட்டித்தொகை குறைவா இருக்குதானு பார்க்கறது முக்கியம். வீடு வாங்கறதுக்கான கடன் இன்கம்டாக்ஸ் பெனிஃபிட் கிடைக்க உதவுது.

என்கிட்ட கார் இருக்கு. ஆனாலும், இப்பக்கூட நான் எங்க போனாலும் பைக்லதான் போவேன். ரெண்டு பேருக்கு மேல போகணும்னாதான் கார் யூஸ் பண்ணுவேன். இதனால் பெட்ரோல் பணம் மிச்சமாகுது. இதையே பைக் வெச்சிருக்கறவங்க வேற மாதிரி ஃபாலோ பண்ணலாம். ஒரு சைக்கிள் வாங்கி வெச்சுக்கிட்டு வீட்டுக்குப் பக்கத்துல உள்ள இடங்களுக்குப் போக அதை உபயோகிக்கலாம்’’ என்று டிப்ஸ்களை வாரி வழங்கினார் வாசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism