பிறவிப்பயன் தொடரும் |

இன்ஷூரன்ஸ்
என் சேவகன்! |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘இ ன்சாட் 4சி’ என்ற தொலைத்தொடர்பு விண்கலத்தைச் செலுத்த முயன்று, அது கடலுக்குள் பல்டி அடித்த தினம், எதிர்வீட்டுப் பையன் ஜாலியாகக் கேட்டான். ‘‘ஆன்ட்டி... இந்த மாதிரி திட்டத்துக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்னு வசதி இருந்தால், இன்ஷூரன்ஸ் கம்பெனி திவாலாகிடும் இல்லையா... விண்கலத்தை ஏவுவதற்கு 256 கோடி ரூபாய் செலவு செய்திருக்காங்க...’’ என்றான். ஆனால், உண்மையில் விண்கலத்தைச் செலுத்தும் திட்டத்தை இன்ஷூர் செய்துகொள்ளலாம். ‘த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி’ போன்ற பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இப்படி இந்திய விண்வெளித்திட்டத்தை இன்ஷூர் செய்கின்றன. ஆனால், வெளிநாட்டில் இருந்து விண்கலத்தை ஏவும் திட்டங்களுக்குத்தான் இன்ஷூரன்ஸ் செய்யும் முறையைக் கொண்டிருக்கிறது இஸ்ரோ. அதனால், இந்த முறை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட இன்சாட் 4சி திட்டத்துக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்படவில்லை. ஏனென்றால், இன்ஷூரன்ஸ் எடுக்கும் இஸ்ரோ நிறுவனமும் அரசாங்கத்தைச் சேர்ந்தது... இன்ஷூரன்ஸ் கொடுக்கும் நிறுவனமும் அரசாங்கத்தைச் சேர்ந்தது. ஆக, நஷ்டம் எப்படியும் அரசாங்கத்தையே சேரும் என்பதால்தான் இன்ஷூரன்ஸ் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். சரி,நாம் எண்டோவ் மென்ட் பாலிசிக்கு வருவோம். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது சிறப்பான எளிமையான காப்பீடு என்றால், எண்டோவ் மென்ட் கொஞ்சம் வருமானம் தரக்கூடிய வகையைச் சேர்ந்தது. கடந்த இதழில் டேர்ம் பாலிசி பற்றிச் சொல்லும்போது சொன்ன எல்.ஐ.சி-யின் ‘நியூ பீமா கிரண்’ திட்டம் இப்போது நடைமுறையில் இல்லை. அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன். கவனித்துச் சொன்ன சேலம் வாசகர் சந்திரனுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்! வழக்கமான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் போலவே இதுவும் பாலிசிதாரர் (பாலிசி காலத்தில்) இறந்தால் ‘டெத் பெனிஃபிட்’ என்றும் பாலிசியில் குறிப்பிடப்பட்ட கால வரையறை முடியும்வரை உயிருடன் இருந்தால் ‘சர்வைவல் பெனிஃபிட்’ என்றும் உரிமத்தொகையைக் கொடுக்கும். இரண்டிலுமே ஆயுள் இன்ஷூரன்ஸ் தொகைக்கு மேலே ஒரு முதலீட்டு லாபத்தொகையும் ( return ) இருக்கும். இதன் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸைவிட அதிகமாக இருக்கும். மணிபேக் என்ற வகை எண்டோவ்மென்ட் பாலிசியும் உள்ளது. இதில் பாலிசி முடிந்தபின் கிடைக்கும் சர்வைவல் பெனிஃபிட்டை பாலிசி முதிர்வடையும் வரை காத்திருந்து பெறுவதற்குப் பதிலாக, பாலிசி காலத் திலேயே சில தவணைகளாகப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கான 20 வருட பாலிசி என்று எடுத்துக்கொண்டால் சாதாரண எண்டோவ் மென்ட்டில் பாலிசி காலமான 20 வருடங்களுக்கு பிறகு ஒரு லட்சம் ரூபாய் உரிமத்தொகையாக வந்து சேரும். அதுவே மணிபேக்காக இருந்தால் 5 வருடங்களுக்கு ஒருமுறை உரிமத்தொகையில் 25% கொடுத்துவிடுவார்கள். பாலிசிதாரர் உயிரிழந்தால் முழு உரிமத்தொகையும் கிடைக்கும். ஆக இரண்டு வகை பெனிஃபிட் உள்ள பாலிசி இது. மணிபேக் மற்றவகை எண்டோவ்மென்ட் பாலிசிகளை விட அதிக பிரீமியம் கொண்டது. பொருளைப் பொறுத்து விலையும் இருக்கும் இல்லையா? அதிகபட்ச பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட பாலிசி வகைகளில் முழு ஆயுள் ( whole life ) என்ற வகையும் ஒன்று. இதற்கு முன் பார்த்த பாலிசி வகைகள் குறிப்பிட்ட வயது வரம்புக்குள்தான் கிடைக்கும். நாம் பாலிசி எடுக்கும்போது உள்ள வயதைப் பொறுத்து இந்த வயது வரம்பு நமது பாலிசி காலத்தைக் கட்டுப்படுத்தும். இத்திட்டத்தில் பாலிசி காலம் என்பது பாலிசிதாரரின் ஆயுள் முழுவதும் நீடிக்கும். இதனால்தான் இதற்கு முழு ஆயுள் திட்டம் என்று பெயர். இதில் இரண்டு வாய்ப்புகள் உண்டு. ஒன்று, குறிப்பிட்ட வயது வரை பிரீமியம் கட்டிவிட்டு ஆயுள் முடியும்வரை பாதுகாப்புப் பெறுவது (அல்லது மெச்சூரிட்டித் தொகையைப் பெற்றுக்கொள்வது). இரண்டாவது ஆயுள் முழுவதும் பிரீமியம் கட்டிக்கொண்டு வருவது. ஹோல் லைஃப் என்பது சிலருக்கே ஏற்ற பாலிசி. வயதான காலத்தில் பிரீமியமும் கட்ட முடிந்தவர்கள் அல்லது மெச்சூரிட்டி பணத்தை எதிர்பார்ப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். பல வகை கம்பெனிகள் கொடுக்கும் பல வகை எண்டோவ்மென்ட் பாலிசிகள் அல்லது ஹோல் லைஃப் பாலிசிகளில் நமக்கு ஏற்ற பாலிசியை 18-20 வயதில், முதன்முதலாகச் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே எடுத்துவிடுவது நல்லது. இவ்வாறு உங்கள் குடும்பப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு வழி வகுத்துவிட்டீர்கள் என்றால் அடுத்த கட்டத்தில் தீவிரமாகப் பணத்தை முதலீடு செய்ய நினைக்கலாம். இதற்கு யூனிட் லிங்க்ட் பாலிசி ஒரு சாய்ஸ். அதைப் பற்றி...
|