ஸ்டூடன்ட் நம்பர் 1 |
மாணவர் கலக்கல் |
|
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரமேஷ் பேசுகிறார்...
|

‘‘எ ன் குடும்பச் சூழ்நிலைதான் என்னை வீடியோகிராஃபரா ஆக்கியிருக்கு. எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். ஒரு சகோதரி, ஒரு சகோதரன். சாப்பாட்டுக்கே கஷ்டம். ஆனா, படிச்சே ஆகணும்னு ஆர்வம். அதனால்தான் பகுதிநேரமாக ஏதாவது வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தேன். இதோ இப்போது வீடியோகிராஃபராக வேலைசெய்து மாதம் இரண்டாயிரம் சம்பாதிக்கிறேன். படிப்புச் செலவும் செட்டிலாகிடுது. குடும்பத்துக்கும் கொடுத்து உதவறேன்! காலேஜ் நேரம் பதினொன்று முதல் மூன்றரை மணிவரைதான். மீதி நேரங்களில்தான் என்னுடைய வேலை. கல்யாணம், பண்டிகை போன்ற விசேஷங்களுக்குப் போய் வீடியோ எடுப்பேன். பெரும்பாலும் காலைல இல்லாட்டி சாயங்காலம்தான் இதுமாதிரி ஃபங்ஷன்கள் நடக்கும். அதனால எனக்கு படிப்பும் கெடுறதில்லை. தொழிலும் பாதிக்கிறதில்லை. இந்தத் தொழிலில் ஒழுக்கம் ரொம்ப முக்கியம். ஒழுக்கம் இல்லாமல் நடந்துகிட்டோம்னா நாளைக்கு லோக்கல் விசேஷங்களுக்குப் போகும்போது, ‘ஐயோ... இவனா... வேண்டாம்’னு சொல்லிடுவாங்க. அதனால எங்க முதலாளிக்கும் கெட்ட பெயர். இந்த மாதிரியான கெடுபிடிகள் இருப்பதால் பர்சனாலிடியும் தானாக வளருகிறது. இப்போது வீடியோவைப் பற்றி அக்குவேறு ஆணி வேறா தெரியும். தொழிலையும்
கத்துக்கிட்டேன். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கலைனா நிச்சயம் இதைச் சொந்தமா
செய்ய ஆரம்பிச்சுடுவேன். அப்போ நிறைய லாபம் கிடைக்கும்!’’ |