Published:Updated:

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

Published:Updated:
வேலை
வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!
 

 

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

டலைப் பாதுகாக்க இயற்கை உணவுகள், நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், மனதைப் பாதுகாக்க..?

வேலையில் இருக்கும் பிரஷர், தொழிலில் இருக்கும் போட்டியால் ஏற்படும் மனத்தளர்ச்சி போன்ற பல காரணிகள் ஒருவரது வெற்றிக்குத் தடையாக இருக்கும். மனதளவில் மாற்றத்தை உண்டாக்கினாலே அவர் தடைகளைக் கடந்து வெற்றியை எட்ட முடியும்.

அப்படித் தடைகளை உடைத்தெறியும் மனவளத்தை உண்டாக் கும் வேலையைச் செய்துவருகிறது ‘ஒன்லி சக்ஸஸ்’ என்ற நிறுவனம். மனதில் தோன்றும் நெகட்டிவ் சிந்தனைகளை மாற்றி, பாஸிட்டிவான எண்ணங்கள் உருவாக வழி சொல்கிறார்கள்.

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

இதன் நிறுவனர், தலைமை நிர்வாகி வித்யாசங்கர், ‘‘எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் உங்களின் முன்னேற்றத் துக்கு எதுவெல்லாம் தடையாக இருக் கிறதோ அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு, அதற்குப்பதிலாக நல்ல எண்ணங்களை மூளையில் பதியவைக்க முடியும்.

மனிதனின் மூளையில் வலதுபக்கம், இடதுபக்கம் என இரண்டு பிரிவுகள் உண்டு. டீச்சர்கள், அக்கவுன்டன்ட் போன்ற ஒரே மாதிரியான வேலை களைச் செய்பவர்கள் இடதுபக்க மூளையையும், கிரியேட்டிவிட்டி சார்ந்த கலைத்துறைகளிலும் ஆராய்ச்சித் துறைகளிலும் இருப்பவர்கள் வலதுபக்க மூளையையும் பயன்படுத்துவார்கள்.

நாங்கள் மூளையின் இரண்டு பக்கத்தையும் சமமாகப் பயன்படுத்த பயிற்சி கொடுக்கிறோம். இதற்காக பல வழிமுறைகளைக் கையாள்கிறோம். ஒரே பயிற்சிமுறை அனைவருக்கும் பொருந்தாது. பிரச்னைகள், தொழில், வேலையைப் பொறுத்து மாறுபடும்.

பயிற்சியைப் பொறுத்தவரை ஒவ்வொருவர் கையிலும் காற்றடைத்த பலூன்களையும், ஒரு ஊசியையும் கொடுத்துவிடுவோம். ஒரு நிமிடத்தில் ஒருவர் எத்தனை பலூன்களை உடைக்கிறார் என்பதுதான் போட்டி. கையில் இருக்கும் ஊசியைக்கொண்டு, வேகமாக அடுத்தவர் பலூன்களை உடைக்க ஆரம்பிப்பார்கள். நிகழ்ச் சியின் கடைசியில் பார்த்தால் சிலரது கையில் உள்ள பலூன்கள் உடையாமல் இருக்கும். தன் கையில் இருக்கும் பலூன்களை உடைத்திருந்தால் எளிதாக வேலை முடிந்திருக்கும். ஆனால், தன்னிடம் இருக்கும் வாய்ப்புகளை விட்டுவிட்டு, அடுத்தவரிடம் தேடி ஓடிக்கொண்டு இருக்கிறாகள் சிலர். இதைத்தான் முதலில் புரிய வைப்போம்.

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

ஊழியர்கள் வேலை மீதே விருப்பம் இல்லாமல் இருந்தால் நிறுவனத்தின் உற்பத்தி பாதியாகக் குறைந்துவிடும். அப்போது அவர்களது ஆர்வ மின்மைக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்குவதற்கான பயிற்சி தருவோம்.

இதுபோலவே, மன அழுத்தத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் தொழில் அதிபர், சுற்றியுள்ள அனைவரின் மீதும் எரிந்துவிழுவார். அதனால், மொத்த வேலையும் பாதிக்கப்படுவதோடு, ஊழியர்கள் மனமும் புண்படும். அவருக்கு மனஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும் பயிற்சியைத் தருவோம். தடைகளைக் கடந்து வெற்றியை நோக்கி ஓடவைப்பதுதான் எங்கள் லட்சியம். ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும் திறமையை நாங்கள் வெளியே கொண்டு வருகிறோம். அவ்வளவுதான்!’’ என்றார் உற்சாகமாக.

குழந்தைகள் மற்றும் பெரிய தொழில் நிறுவன ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது, வருகிற நபர்களின் தேவைக்கேற்ப தங்கள் பயிற்சி முறையில் சிறிய மாற்றங்களைச் செய்கிறார்கள். இந்தப் பயிற்சிக்கான கட்டணமாக 7,500 ரூபாய் வசூலிக்கிறார்கள். மன வளப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் நாணயம் விகடன் வாசகர்களுக்கு பயிற்சிக்கட்டணத்தில் சிறப்புச்சலுகை தரவும் தயாராக இருக்கிறார் வித்யாசங்கர்.

வெற்றி வேண்டுமா... வழி சொல்கிறோம்!

இதே நிறுவனத்தில் பயிற்சியாளராகும் வாய்ப்பும் இருக்கிறது. இங்குள்ள நான்கு நிலைகளையும் படித்து முடித்தபிறகு, தனிப்பட்ட பயிற்சி எடுத்துக் கொள்வோர் பயிற்சியாளராகலாம்.

‘‘பயிற்சியாளரான பிறகு மாதம் ரூபாய் இருபதாயிரம் வரை சம்பாதிக்கலாம். இதற்கான வாய்ப்புகள் மிகவும் அபரிமிதமாக உள்ளது. நாங்களே பெங்களூர், அபுதாபி போன்ற இடங்களில் கிளைகளைத் துவங்கியிருக்கிறோம். மேலும், இந்தியா முழுவதும் விரிவாக்க உள்ளதால் பயிற்சியாளர்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்’’ என்றார் வித்யாசங்கர்.

மன ஆரோக்கியத்தோடு பணமும் கிடைத்தால், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism