Published:Updated:

வளர்ச்சிக்கு வழி!

வளர்ச்சிக்கு வழி!

வளர்ச்சிக்கு வழி!

வளர்ச்சிக்கு வழி!

Published:Updated:
வேலை
வளர்ச்சிக்கு வழி!
 

 

வீட்டில் விசேஷம்... அலுவலக வேலை...

எது உங்கள் சாய்ஸ்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளர்ச்சிக்கு வழி!

ப்போதுமே நாம் செய்யும் வேலைகளில் சாய்ஸ் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வளர்ச்சியும் இருக்கும். முக்கியமான தருணங்களில் எடுக்கும் முடிவுகள்தான் அலுவலகத்தில் நம் இடத்தைத் தீர்மானிக்கும்.

அப்படிச் சில சம்பவங்களையும் அதில் நாம் தேர்வு செய்யவேண்டிய வாய்ப்புகளையும் சோதிக்கிறார் ராமகிருஷ்ணன் . தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் ‘பி.எஸ்.ஏ சிக்கால் டெர்மினல்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இவர். பிராஜெக்ட் உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் துறையில் நிபுணத்துவம் பெற்ற இவர், 30 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு துறைகளிலும் நிறுவனங்களிலும் பணியாற்றிய பன்முகத்தன்மை உடையவர்.

வளர்ச்சிக்கு வழி!

ங்கள் திறமையை அடையாளம் கண்டு வேலை கொடுத்த நிறுவனம்தான். ஆனால், வேறு நிறுவனத்தில், இதே வேலைக்கு இரட்டிப்பு சம்பளம். அப்போது...

1) வேலையை உதறிவிட்டு புது நிறுவனத்தில் சேர்ந்துகொள்வீர்களா?

2) நெட்டையோ, குட்டையோ இங்கேயே காலம் தள்ளிவிடுவோம் என இருப்பீர்களா?

3) உங்கள் நிறுவனத்திலேயே ‘எனக்கு இந்தச் சம்பளம் வேண்டும். இல்லாவிட்டால் வேறு நிறுவனத்தில் அழைப்பு உள்ளது’ என்று தெரிவிப்பீர்களா?’

அதே வேலை. ஆனால், இரண்டுமடங்கு சம்பளம் என்றால் புதிய நிறுவனத்துக்குத் தாராளமாகச் செல்லலாம். உங்களுடைய திறமைதான் மூலதனம். எங்கு உங்கள் திறமைக்கு அதிக ஊதியம் கிடைக்கிறதோ, அங்கு செல் வதில் தவறில்லை. எந்த நிறுவனமாக இருந்தாலும் யாரும் சும்மா உட்கார்ந்திருப்பதற்குச் சம்பளம் தருவதில்லை.

ஆயுள் முழுக்க ஒரே நிறுவனத்தில் வேலைசெய்வது என்பதெல்லாம் மலையேறிவிட்டது. உண்மையானவர் நம்பிக்கையானவர் என்பதற்காக மட்டுமே ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்ளும் நிறுவனம் இங்கே ஏதுமில்லை.

அதேசமயம், கசக்கிப் பிழிந்து வேலை வாங்குகிறார்கள் என்பதற்காக வேறு ஒரு நிறுவனத்துக்குச் செல்ல நினைத்தால் அது தவறு. இந்தச் சம்பளத்துக்கே இவ்வளவு டார்ச்சர் என்றால் அதிக சம்பளம் தருமிடத்தில் எவ்வளவு இறுக்கிப் பிடிப்பார்கள் என்பதையும் யோசித்துக்கொள்வது நல்லது. உழைப்புக்கேற்ற ஊதியம், திறமைக்கு மதிப்பு இவற்றை எதிர்பார்ப்பதில் தப்பில்லை.

வளர்ச்சிக்கு வழி!

மு க்கியமான முடிவு எடுப்பதற்காக அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் கூடியிருக்கிறார்கள். அங்கே பேசப்படும் ஒரு கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை. அப்போது...

1) உடனே எழுந்து உங்கள் கருத்தைச் சொல்வீர்களா..?

2) கூட்டம் முடிந்தபிறகு பாஸை, தனியாகச் சந்தித்து உங்கள் கருத்தைச் சொல்வீர்களா..?

3) நம் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று வாய்மூடி மௌனியாக இருந்துவிடுவீர்களா?

தனியாக சந்தித்துச் சொல்லலாம், தவறு இல்லை. நமக்கென்ன வந்தது என்று வாய்மூடி இருப்பவரைவிட தனியாகவாவது போய் கருத்துச் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால், எந்தத் தலைவருக்குமே உடனடியாக ரியாக்ட் செய்யும் தளபதிகளைத்தான் பிடிக்கும். அதனால், உடனே எழுந்து கருத்தைச் சொல்வதுதான் நல்ல ஊழியருக்கு அழகு!

ஒருவேளை உங்கள் கருத்து வலுவானதாக இருந்தால், கூட்டத்தின் போக்கே மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. அப்படியில்லாமல் தனியாகப் போய்ச் சொன்னால், கூட்டத்தில் பேசிய விஷயங்களை மாற்றமுடியாது. அதனால், எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிப் பழகுங்கள்.

வளர்ச்சிக்கு வழி!

வீ ட்டில் ஒரு விசேஷம்... அதேநாளில் அலுவலக வேலையாக வெளியூர் செல்லவேண்டிய இக்கட்டான நிலை... இரண்டிலுமே மாற்று ஏற்பாடு செய்யமுடியாதபோது, உங்கள் ரியாக்ஷன்..?

1) அலுவலகத்தில் நிலைமையை எடுத்துச்சொல்லி, வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்களா..?

2) வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பயணத்தை ஒப்புக்கொள்வீர்களா..?

வீட்டுக்காக ஒதுக்கும் நேரத்தில் எப்போதுமே கைவைக்கக் கூடாது. ‘நாங்க இருக்கிற வேலைய விட்டுட்டு வந்திருக்கோம். இவருக்கு மட்டும் வேலை முக்கியமாப் போச்சு!’ என்பதுபோல உறவினர்கள் நினைத்துவிடக்கூடும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டில் ஃபங்ஷனை வைத்துக்கொண்டு நீங்கள் அலுவலக வேலையாகச் சென்றாலும் உங்கள் மனதெல்லாம் வீட்டு ஞாபகமாகவே இருக்கும். அதனால், வேலையிலும் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியாது. எனவே, நேர்மையாக, உண்மையாக அலுவலகத்தில் சொல்லி, ஆபீஸ் டூருக்கு வேறு ஏற்பாடு செய்துகொள்ளச் சொல்லலாம். அதுவும் நம் முன்னேற்றத்துக்கு முக்கியம். இதனால் மட்டுமே உங்களைப் பற்றிய மதிப்பீடு அலுவலகத்தில் மாறிவிடாது.

வளர்ச்சிக்கு வழி!

ங்களுடைய கல்வித்தகுதிக்கும், கொடுக்கப்படுகிற வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். அப்போது...

1) இவ்வளவு பெரிய படிப்பும், திறமையும் உள்ள என்னை, ஒன்றுக்கும் உதவாத துறையில் போட்டுவிட்டார்களே எனச் சோர்ந்துவிடுவீர்களா?

2) உங்களுக்குத் தெரியாதவற்றைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக நினைப்பீர்களா?

3) ‘படித்த படிப்புக்கேற்ற வேலைக்கா பஞ்சம்?’ என்று வேறு பொருத்தமான வேலை தேட ஆரம்பிப்பீர்களா?

முதல் பதிலைத் தேர்ந்தெடுத்தவர்கள், இரண்டாவது பதிலை முயற்சிக்கவேண்டும். காரணம், உங்களுக்கு அறிமுகம் இல்லாத துறையில் நீங்கள் ஜெயிக்கும்போது, உங்கள் திறமை பலமடங்கு பிரகாசிக்கும். அந்தச் சவால், உங்களை புதுப்புது தளங்களில் சிந்திக்கவைக்கும்.

இன்னும் சொல்லப்போனால், படிப்பு என்பது வேலைக்கான தகுதி அல்ல. நீங்கள் பார்க்கும் வேலையில் கிடைக்கிற பாடம்தான், வாழ்க்கைக்கு வழிகாட்டும். இப்போதெல்லாம் நிறுவனங்களில் ஒரு வேலையை மட்டும் கற்றுக்கொண்டு காலம் தள்ளமுடியாது. பன்முகத்தன்மையோடு பல விஷயங்களையும் தெரிந்துவைத்திருந்தால் மட்டுமே போட்டிகளைச் சமாளித்து முன்னேறமுடியும். அது உங்களின் தலைமைப் பண்பைச் செதுக்கிக்கொள்ளும் உளியாகும். உங்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச்செல்ல நிர்வாகம் எண்ணியிருக்கலாம் என்று பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டு புதிய பயணத்தைத் தொடங்குங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism