Published:Updated:

ஜாப் நியூஸ்!

ஜாப் நியூஸ்!

ஜாப் நியூஸ்!

ஜாப் நியூஸ்!

Published:Updated:
வேலை
அழைப்பு மணி
 


ஜாப் நியூஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாப் நியூஸ்!

‘‘வெ ளிநாட்டு வேலையைக் குறைவான செலவில், சிக்கலின்றி வாங்கிக் கொடுக்கிறோம்’’ என்கிறார் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன ( Overseas Manpower Corporation ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிந்துமாதவன்.

‘‘வெளிநாட்டு வேலையை விரும்பும் எவரும் இங்கே தங்கள் பெயரை நேரிலோ தபால் மூலமோ பதிவு செய்துகொள்ள முடியும். வெளிநாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வுசெய்து தரும்படி எங்களிடம் கேட்கும். நாங்கள் வேலைக்காகப் பதிவு செய்துள்ள வர்களில் தகுதியானவர்களுக்கு அழைப்பு அனுப்புகிறோம். விரும்பும் வேலையில் குறைந்தபட்சம் இரண்டாண்டு அனுபவமும் பாஸ்போர்ட்டும் இருக்கவேண்டியது அடிப்படைத் தகுதி. சாதாரண பணியாளர்கள் 450 ரூபாயும், பொறியாளர், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 790 ரூபாயும், மருத்துவர்கள் 1,010 ரூபாயும் பதிவுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 112 ரூபாய் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, வெளிநாடு செல்லும்போது பதவியைப் பொறுத்து சேவைக்கட்டணம் வாங்குகிறோம்’’ என்றார்.

இந்நிறுவனத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருக் கிறார்கள். 20 நாடுகளில் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நர்ஸாகப் பணியாற்ற பரீட்சை எழுதி பாஸாகவேண்டும். இதை எழுதும் நர்ஸ்களுக்கும் இந்நிறுவனம் பயிற்சி வகுப்பு நடத்திவருகிறது.

வேலைக்காக மலேசியா செல்பவர்கள் அங்கு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பை, அந்நாட்டு அரசுடன் இணைந்து நடத்துகிறது. பயிற்சி முடிவில் வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் இருந்தால்தான், மலேசியா நாட்டு வேலையில் சேர விசா வாங்கமுடியும்.

அரசு நிறுவனம் என்பதால் நம்பி இறங்கலாம்.

படம்: ம.அமுதன்

தி ருச்சியில் இயங்கிவரும் நிதி நிறுவனம், விரைவில் தொடங்க உள்ள திருச்சி, சேலம், மதுரை, கோவை மற்றும் சென்னை கிளைகளில் பணியாற்ற ஆட்கள் தேடுகிறார்கள்.

சேல்ஸ் மேனேஜர் பதவிக்கு மார்க்கெட்டிங் துறையில் அனுபவமுள்ள பட்டதாரிகள் அல்லது எம்.பி.ஏ முடித்தவர்கள்

சேல்ஸ் எக்ஸிகியூடிவ் வேலைக்கு, டிகிரி முடித்தவர்கள் அனுபவம் இருந்தாலும் இல்லா விட்டாலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் நடை முறையில் உள்ளவாறு வழங்கப்படும். ஆர்வமும் துடிப்பும் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:

ஸ்டாக் போக்கஸ் ஃபைனான்ஸியல்
சர்வீஸஸ் பி.லிட்,
சி-177, மூன்றாவது தளம்,
ஸ்ரீ பாலாஜி ஆர்கேட்,
10-வது குறுக்குத் தெரு மேற்கு,
தில்லை நகர், திருச்சி-18.
தொலைபேசி: 0431 2740 874/ 5502 909,
இ-மெயில்: care@stockfocusfin.com

ஐ- சர்ச் நிறுவனம், அனிமேஷன் தயாரிப்புத் துறையில், Character Modeler, Texturing Artist, Lighting Artist, Matte Painters, Paint Effect Artist, Animators, SFX Artist, VFX Artist, Match Move Artist மற்றும் Production Manager.

அனிமேஷன் ப்ரீ புரொடக்ஷன் துறையில், Character Designer, Background Artist, Layout Artist, Story Board Artist, Story Board Director மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் துறையில் Sr.Compositor, Roto Artist, Wire Removal - Tracking Artist போன்ற பல்வேறு பணிகளுக்கான ஆட்களைத் தேர்வு செய்துவருகிறது. 2 வருட அனுபவத்துடனும் Maya/Max - Scripting போன்றவற்றில் திறமையுடனும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். நல்ல சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:

இ-மெயில்: isearchcv@atbmholdings.com

ஜாப் நியூஸ்!

மிழகத்தின் சில நகரங்களில் உள்ளவர்கள், வீட்டிலிருந்தே பார்க்கும் வேலை பற்றிச் சொல் கிறார், பெங்களூரைச் சேர்ந்த பி.என்.ஏ டெக்னாலஜி கன்சல்டிங்கின் நிர்வாக இயக்குநர் வி.ரங்கநாதன்.

‘‘ஐ.டி மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த பொருள்களை விற்பனை செய்யும் new.bnaitmart.com என்ற இணையதளத்தை அண்மையில் தொடங்கி இருக்கிறோம். கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை வாங்க ஆன் லைனிலேயே தேர்வு செய்துகொள்ள முடியும். அதற்கான தொகை மற்றும் கூரியர் செலவைச் சேர்த்து அனுப்பி வைத்தால், பொருள்கள் வீடு தேடி வந்துவிடும். இப்பொருட்களை வாங்க விரும்பி ஒருவர் இத்தளத்தில் நுழைந்தால், அவர் சரியான பொருளைத் தேர்வு செய்ய லைவ்சர்வ் ( LivServ ) என்ற சாஃப்ட்வேர் உதவுகிறது. இதில், வாடிக்கை யாளரின் கேள்விகளுக்கு இன்னொரு முனையில் இருக்கும், நன்கு விவரம் தெரிந்த ஒருவர் நேரடியாகப் பதில் அளிப்பார்.

இந்த லைவ்சர்வ் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்த வருடத்தில் மட்டும் தலா 50 பேர் பணிபுரியும் மையங்களை திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், கோட்டயம் போன்ற இடங்களில் அமைக்க இருக் கிறோம். இவ்வேலையைப் பெற பிளஸ் டூ முடித்திருந்தாலே போதுமானது. தப்பில்லாமலும், வேகமாகவும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் திறன் இருப்பது அவசியம். அப்பகுதியைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்றவர்கள், குடும்பப் பெண்கள்கூட விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மூன்று மாதம் முறையாகப் பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை உண்டு. மாதத்தில் சுமாராக 25 மணி நேரம் மட்டும் அலுவலகம் வந்து பணி புரிய வேண்டி இருக்கும். மீதி நேரத்தில் வீட்டில் இருந்தபடியே பணி செய்யலாம்’’ என்கிறார், ரங்கநாதன்.

படம்: ஜே. ராஜ் வினோத்

ஜாப் நியூஸ்!

செ ன்னையில் இயங்கிவரும் மனிதவள ஆலோசனை நிறுவனமான ‘ஹைபி கால்சோன்’, தகவல்தொழில் நுட்பம், நிதிநிர்வாகம், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது.

1) பி.இ, எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்ஸி (கம்ப்யூட்டர் சயின்ஸ்)-ல் 60% மதிப்பெண் பெற்று, தேறியவரா நீங்கள்..? உங்களுக்காகக் காத்திருக்கிறது. சாஃப்ட்வேர் டிரெய்னி வேலை. தமிழ்நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்கள் ( trainee01 ) என்ற தலைப்பிட்டு கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

2) பி.இ, எம்.சி.ஏ, முடித்து VB, SQL Server- ல் 2 வருட அனுபவம் பெற்றிருந்தால் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை காத்திருக்கிறது. ASP and Crystal report தெரிந்திருந்தால் முன்னுரிமை தருகிறார்கள். ( vb 01) என்ற தலைப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

3) அனலிஸ்ட் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு, எம்.பி.ஏ முடித்த புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதத்தில் நல்ல அறிவும் ஆங்கிலப் புலமையும் ஆராய்ந்து பார்க்கும் திறனும் இருக்கவேண்டும். இரவு நேரப் பணிகளுக்கும் தயாராக இருந்தால் நல்லது. ( mba 01) என்ற தலைப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

4) நான் வாய்ஸ் எக்ஸிகியூடிவ் ( Non Voice Executive ) பணி காத்திருக்கிறது. டிகிரி முடித்த, ஆங்கிலப் புலமை மற்றும் கம்யூனிகேஷன் திறமை கொண்டவர்கள் விண்ணப்பிக்கவும். பணிகளில் ஷிஃப்ட்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களாக இருந்தால் நல்லது. ( nv 01) என்ற தலைப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

மேற்சொன்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:

HIFY CALL Z0NE,

34/27, முதல் தளம், தாமோதர மூர்த்தி சாலை, சென்னை - 10.
தொலைபேசி: 98413 11813 / 93827 37745

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism