பிரீமியம் ஸ்டோரி
தொழில்
டிப்ஸ்!
 

 

டிப்ஸ்

டிப்ஸ்!
டிப்ஸ்!

‘சொ த்துக்களை வாங்குபவரும் விற்பவரும் தங்களுடைய புகைப்படத்தை பத்திரத்தில் ஒட்டவேண்டும்’ என்ற புதிய விதியை தமிழக அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதில் நமக்கான வருமான ஐடியா ஒளிந்திருப்பதைக் கவனித்தீர்களா?

பத்திரப்பதிவு அலுவலகத்துக்குப் பக்கத்தில் இன்ஸ்டன்ட்டாக புகைப்படம் எடுத்துத்தர, ஒரு ஸ்டூடியோவை அமைக்கலாம். உடனடியாக போட்டோ கொடுப்பதால், அதற்கென்று கூடுதல் கட்டணம்கூடக் கேட்கலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள், கேமராவுடன் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டால், அவர் அவ்வப்போது எடுத்துத்தரும் டிஜிட்டல் படங்களை கேமரா சிப்பில் பதிவுசெய்து உதவியாளரிடம் கொடுத்தனுப்பினால் ஸ்டூடியோவில் இருப்பவர் பிரின்ட் எடுத்துக் கொடுக்கலாம். அல்லது ஏதாவது ஒரு போட்டோ ஸ்டூடியோவிடம் பிரின்ட் போட்டுக்கொடுப்பதற்கு பேசி வைத்துக்கொண்டால் இதன்மூலம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம்.

ஜெ.ஜெகதீஷ், சென்னை-83.

டிப்ஸ்!

ங்கள் பிள்ளைகளை காரில் அழைத்துச் சென்று பள்ளிக்கூடத்தில் விடுபவரா நீங்கள்..? உங்களுக்கு பெட்ரோல் செலவுக்கு பணம் கிடைக்க ஒரு அசத்தலான ஐடியா! உங்கள் குழந்தை படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உங்கள் ஏரியாவில் இருக்கலாம். அவர்கள் ஆட்டோவிலோ, ரிக்ஷாவிலோ போவார்கள்.

அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட கட்டணத்துக்கு உங்கள் காரிலேயே அந்தக் குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம். இதனால், அந்தக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான பயணம் கிடைக்கும். உங்களுக்கும் பெட்ரோல் செலவுக்குப் பணம் கிடைக்கும்.

பெ.ஹேமலதா, திருச்சி-21.

டிப்ஸ்!

திகமாக பெண்கள், குழந்தைகள் கூடும் இடங்களான பார்க், கடற்கரை, தீம் பார்க்குகள், போன்ற இடங்களுக்கு வரும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு மெஹந்தி வரைந்து காசு பார்க்கலாம். மெஹந்தி போட்டுவிடும் தொழில் நல்ல வரவேற்பைப் பெறும். தற்போது மெஹந்தி கோன் போன்ற பேக்குகளில் கிடைக்கின்றன.

இரண்டு கைகளுக்கும் வரைவதற்கு ஐந்து ரூபாய் கட்டணமாகப்பெறலாம். ஒரு கோனின் விலையே ஐந்து ரூபாய்தான். அது இரண்டு பேருக்கு அதாவது நான்கு கைகளுக்கு வரும். நல்ல கலாரசனையுடன் வெவ்வேறு டிஸைன்களில் வரையத்தெரிந்தால் கூடுதல் சிறப்பு. மெஹந்தி விரும்பாத குழந்தைகளும் பெண்களும் கிடையாது. ஆகவே, அதையே நம் களமாக்கி பணம் சம்பாதிக்கலாம்.

எஸ்.டேனியல் ஜூலியட், கோவை-1.

டிப்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு