Published:Updated:

அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!

அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!

பிரீமியம் ஸ்டோரி
சிக்கனம்
அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!
 

 

அட, டிராஃபிக் குறையுமே!

ஹை, புகை ஒழியுமே!

அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!
அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!

செ ன்னை போன்ற முக்கியமான நகரங்களில் பெரிய பிரச்னையே போக்குவரத்து நெரிசல்தான். ‘‘கார்கள் பெருகி விட்டதுதான் முக்கியமான காரணம். தெருவெல்லாம் கார்களாகிவிட்டதால் மூன்று முக்கியமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. முதலாவது, சுற்றுசூழல் பாதிப்பு, அடுத்தது நெரிசலில் காத்திருப் பதால் நேரம் விரயமாவது, மூன்றாவதும் முக்கியமா னதுமான எரிபொருள் செலவு அதிக அளவில் விரயமாகி, செலவு வைப்பது! இந்த மூன்றாவது விஷயத்தைச் சரிசெய்துவிட்டாலே முதல் இரண்டு பிரச்னைகளும் தானாகவே தீர்ந்துவிடும்’’ என்றார் தென்னிந்திய ஆட்டோமொபைல் சங்கச் செயலாளர் எம்.கே. சுப்பிரமணியன்.

இவர் விவரிக்கும் ‘கார் பூல்ஸ்’ என்ற திட்டம் ஒரு கனவு உலகத்தையே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதாக இருக்கிறது.

‘‘ஆளுக்கு ஒரு கார் எடுத்துக் கொண்டு சுற்றுவதால்தானே நெரிசல் ஏற்படுகிறது. ஒரே ஏரியாவில் குடியிருக்கும் ஆட்கள் வேலை பார்ப்பதும் ஒரே ஏரியாவாக இருந்தால், எல்லோரும் ஒரே காரில் பயணித்து செலவை மிச்சப் படுத்தலாம். அப்படி ஒரு திட்டம்தான் ‘கார் பூல்ஸ்’ ( Car Pools ). வீட்டில் இருந்து ஆபீஸுக்கு, ஆபீஸில் இருந்து வீட்டுக்கு என்று மட்டும் காரைப் பயன்படுத்துபவர் கள் ஒன்றுசேர்ந்து கொள்ளலாம். நான்குபேர் சேர்ந்துகொண்டால், ஒவ்வொருவர் காரையும் ஒவ்வொரு நாள் பயன்படுத்தலாம். செலவு எல்லோருக்கும் சமமாகத்தான் வரும். செலவை கால் பங்காகக் குறைத்துவிடலாம்’’ என்ற சுப்பிரமணியன், இந்தத் திட்டம் பரவலாக மேலை நாடுகளில் புழக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்.

‘‘பொதுவாக நம் ஊரில் அடுத்தவருக்கு நான் கார் ஓட்ட வேண்டுமா என்ற ஈகோ இருக்கிறது. அதோடு, தனி காரில் செல்வதுதான் சுதந்திரம், ஜாலி என்ற எண்ணங்களும் இருக்கின்றன. இதெல்லாம்தான் நம் பட்ஜெட்டை எகிற வைக்கும் விஷயங்கள். சிங்கப்பூரில் இருப்பதுபோல் ‘காலை 9 மணி முதல் 11 மணி வரை காரில் நான்கு பேருக்கு குறைவாக பயணம் செய்தால் வரிவிதிப்பு’ என்ற முறையைக் கொண்டுவந்தால் மக்கள் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது. இந்தத் திட்டத்தில் வாகனத்தின் பராமரிப்புச் செலவும் குறையும்’’ என்ற சுப்பிரமணியன்,

‘‘இந்த ‘கார் பூல்ஸ்’ திட்டத்தை விவரித்து தென்னிந்திய ஆட்டோமொபைல் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இ\மெயில் மூலம் கடிதம் அனுப்பியிருக்கிறோம். அந்த சங்கத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆயிரம்... விருப்பமும் வாய்ப்பும் உள்ள உறுப்பினர்கள் தங்கள் ஏரியா, அலுவலகம் இருக்கும் ஏரியா, புறப்படும் நேரம், வீடு திரும்பும் நேரம் ஆகிய தகவல்களைத் தெரிவித்தால் அதை வைத்து கார் பூல்ஸ் முறையில் இணைப்பை ஏற்படுத்தமுடியும். நம் ஊர் மக்களை கன்வின்ஸ் செய்து திட்டத்துக்குள் கொண்டு வருவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!
அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!

‘‘ஒ ரு லிட்டர் பெட்ரோல் போட்டால் வண்டி அறுபது கிலோ மீட்டர்தூரம்தான் ஓடுகிறது. பெட்ரோல் போட்டு கட்டுபடியாகறதில்லை’’ என்று சலித்துக் கொள்ளும் ஆசாமியா நீங்கள்..? அதே அளவு பெட்ரோலில் மேலும் 15 கிலோமீட்டர் ஓட்டுவதற்கு உங்களுக்கு வழி சொல்லித் தருகிறார்கள் ஜோஸ் மற்றும் ஸ்ரீனிவாஸ். இவர்களுடைய ‘ஐ.எஃப் இன்ஜினீயரிங்’கில் ஐந்தாண்டுகள் நடத்திய தொடர் ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைத்த ‘ஃபியூவல் சேவர்’ கருவிதான் கூடுதல் மைலேஜைப் பெற்றுத் தருகிறது. இதை உருவாக்கியுள்ள ஜோஸ் பி.டெக் பட்டதாரி. ஸ்ரீனிவாஸ் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அணுக்கரு இயற்பியல் மற்றும் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர்.

‘‘பெட்ரோலில் 60 முதல் 65% வரை மட்டுமே எரியும். மீதி புகையாக வெளியேறிவிடும். அதை முழுவதும் எரிப்பதன் மூலமாக கூடுதல் மைலேஜைப் பெறமுடியும். எங்கள் கண்டுபிடிப்பு அதைத்தான் செய்கிறது. இதன்மூலம் கூடுதலாக புகை பரவி காற்று மாசுபடுவதும் தடுக்கப்படுகிறது’’ என்கிறார்கள். எலக்ட்ரோ மேக்னடிஸம் தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்த ஃபியூவல் சேவரில் எலக்ட்ரானிக் சர்க்யூட் மற்றும் இயற்கை காந்தம் இருக்கிறது. ஐந்து வருட வாரன்டி கொண்ட இதை 1,500 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

அட, டிராஃபிக் குறையுமே! ஹை, புகை ஒழியுமே!

கடந்த மூன்று மாதமாக ஃபியூவல் சேவரை தன் ‘கவாசகி கேலிபர்’ மோட்டார் பைக்கில் பயன்படுத்தி வரும் ரவிச்சந்திரன், ‘‘சிக்னலில் காத்திருக்கும்போது வண்டி ஆஃப் ஆகவில்லை. வண்டியில் இருந்து சத்தம் எழுவது நின்றுபோய், ஓட்டுவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது. 70 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது’’ என்கிறார்.

டீசலில் இயங்கும் வாகனங்களிலும் ஃபியூவல் சேவர் பொருத்திப் பயன்படுத்தியபோது, 25% எரிபொருள் சிக்கனம் ஏற்பட்டதோடு புகை வருவதும் நின்றிருக்கிறது.

கார், பஸ், லாரிகளில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு பெரிய அளவில் உருவாக்க ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். ‘‘அநேகமாக, இச்சாதனம் வரும் 2007-ன் ஆரம்பத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது’’ என்கிறார் ஸ்ரீனிவாஸ்.

இப்போதைய சூழலுக்கு மிகத்தேவையான கண்டுபிடிப்புதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு