Published:Updated:

வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!

வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
கடன்
வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!
 

 

வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!

வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!

டுத்தர குடும்பங்களின் கனவுகளில் முதலிடம் சொந்த வீடுதான்... மாதாமாதம் ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டே போகிறது கட்டுமானப் பொருள்களின் விலை. வீடுகட்டத் தேவையான தொகையைத் திரட்ட முடியாமல் கையைப் பிசையும் நிலை. ‘சொந்த வீடு என்பது பகல் கனவாகிவிடுமோ’ என்று கலங்கி நிற்பவர்களைக் கைதூக்கி விடுவது தான் வீட்டுக் கடன் திட்டங்கள்.

‘‘வீடு வாங்குவது எளிமை யாகிவிட்டது’’ என்று நம்பிக்கை யூட்டினார் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல உதவி பொது மேலாளர் (மண்டலம் 1) நாராயணன். ‘‘மாதச் சம்பளக்காரர்கள் முதல் சுயதொழில் செய்பவர்கள் வரை யார் வேண்டுமானாலும் வீட்டுக் கடன் பெறலாம்.

மாதச் சம்பளக்காரர்களுக்கு 45 வயதுக்கு கீழ் உள்ளவர் எனில் மாதச் சம்பளத்தைப்போல 60 மடங்கும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 48 மடங்கும் கடனாகத் தருகிறோம். சுய தொழில் செய்பவர் எனில் வருட வருமானத்தைப்போல் 5 மடங்கு வரை கடனாகப் பெறலாம்.

வீட்டில் மனைவியோ, மகன் அல்லது மகள் வேலையில் இருந்தாலோ அவர்களுடைய வருமானத்தையும் சேர்த்துக்காட்டி கூடுதலாகக் கடன் பெறலாம். வீடு கட்டுவதற்கு மட்டுமன்றி வீடுகட்ட நிலம் வாங்க, பழைய வீட்டை புதுப்பிக்க, புதிய வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க போன்றவற்றுக்கும் கடன் வழங்குகிறோம்.

நிலையான வட்டிவிகிதம் மற்றும் மாறுபடும் வட்டி விகிதம் என இரண்டு வகையான வட்டி விகிதங்கள் உண்டு. அவரவர் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். வாங்கும் தொகைக்குத் தகுந்தவாறு குறைந்த பிரீமியத்தில் இன்ஷூரன்ஸ் வசதியும் செய்து கொடுக்கிறோம். இதனால் கடன் வாங்குபவர் எதிர்பாராதவிதமாக இறக்க நேர்ந்தால் கடன் சுமை அவரின் குடும்பத்தினருக்குப் பாரம் தராமல் இருக்கும். இலவச விபத்துக் காப்பீடும் இத்திட்டத்தில் இருப்பது கூடுதல் போனஸ்’’ என்று வங்கியின் வீட்டுக் கடன் பற்றிய அடிப்படையான தகவல்களைச் சொல்லிவிட்டு, தங்கள் வங்கியில் உள்ள சிறப்புத் திட்டங்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார்.

வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!

‘எஸ்.பி.ஐ மேக்ஸி கெயின்’ திட்டம். ‘‘எங்களிடம் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு கண்டிப்பாக எங்கள் வங்கியில் கணக்கு இருக்கவேண்டும். ஒருவர் 10 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய நடப்புக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அந்தத் தொகையைக் கழித்து கொண்டுதான், கடனுக்கான வட்டியைக் கணக்கிடுவோம். அவர் தன்னுடைய சம்பளத்தைக் கொண்டுவந்து வங்கியில் போட்டு வைத்துவிட்டால், அது வீட்டுக் கடன் தொகையில் உடனடியாக குறித்துக் கொள்ளப்படும். அந்தத் தொகையைக் கழித்துவிட்டு வட்டி கணக்கிட்டுக் கொள்வோம். அவர் அந்தக் கணக்கில் இருந்து செலவுக்கு பணம் எடுக்க எடுக்க கடனுக்கான வட்டி கணக்கீடும் மாறும். இடையே சேமிப்பு நோக்கத்தில் போடப்படும் பணமும் இந்த வட்டிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மாதாமாதம் தவணையாகக் குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்வோம்.

நடப்புக் கணக்கில் பயன்படுத்தப் படாமல் இருக்கும், பணத்தின் அளவுக்கு ஏற்ப வட்டி குறையும். தேவைப்படும்போது பணத்தை எடுத்து பயன்படுத்தவும் செய்யலாம்.

அடுத்து ‘எஸ்.பி.ஐ ரியாலிட்டி’ என்ற சிறப்புக் கடன் திட்டத்தின் மூலம் வீடு கட்ட நிலம் வாங்கலாம். கடன் வாங்கிய 5 வருடத்துக்குள் வீடு கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. நிலம் வாங்கிய பிறகு தேவைப்பட்டால் வீடு கட்டவும் இன்னொரு கடன் வழங்குகிறோம்.

‘எஸ்.பி.ஐ ஃப்ரீடம் லோன்’ என்பது அடுத்த வகை. வழக்கமாக வாங்கப்படும் நிலமோ, வீடோதான் கடனுக்கு அடமானமாக எடுத்துக்கொள்ளப்படும். சிலர் தங்களின் புதிய வீட்டை அடமானமாக்க விரும்பமாட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் வாங்கும் கடனுக்கு ஈடான மற்ற சொத்துக்களையோ, என்.எஸ்.சி பத்திரங்கள், எல்.ஐ.சி பாலிசி முதலியவற்றையோ காட்டினால் போதுமானது.

வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!

வாடிக்கையாளர் தங்களின் பொருளாதார நிலைக்குத் தகுந்தவாறு நிலையான மற்றும் மாறுபடும் வட்டி விகிதங்களை இணைத்துப் பயன்படுத்தலாம். கடன் தொகையில் 50% முதல் 75% வரை மாறுபடும் வட்டி விகிதமும், 25% முதல் 50% வரை நிலையான வட்டி விகிதமும் இத்திட்டத்தின் மூலம் பயன்படுத்தலாம்.

வீட்டுக் கடனில் ஏ.ஸி வாங்கலாம்!

இத்திட்டங்கள் அனைத்துக்கும் 15% பணத்தைக் கையிருப்பாகக் காட்ட வேண்டியது அவசியம்.

ஏற்கெனவே இருக்கும் வீட்டுடன், புதிதாக இன்னொரு வீட்டை வாங்கவும், பழைய வீட்டைப் புதுப்பிக்கவும், வீட்டுக்குத் தேவையான சோபா முதல் ஏ.ஸி வரை பொருட்கள் வாங்கவும் ‘எஸ்.பி.ஐ ஆப்டிமா அடிஷனல் ஹோம் லோன்’ என்ற பெயரில் கடன் தருகிறோம். இத்திட்டத்துக்கு 20% பணத்தைக் கையிருப்பாகக் காட்டவேண்டும். வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு இருப்பதும் கூடுதல் போனஸ். அனைத்துத் திட்டங்களிலும் மறைமுகக் கட்டணங்களோ, சர்வீஸ், டாகுமென்டேஷன் சார்ஜோ கிடையாது’’ என்ற நாராயணன்,

‘‘மற்ற வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வீட்டுக் கடன்களை எடுத்துக்கொள்ளும் சிறப்புத் திட்டமும் இருக்கிறது. வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவதில் இருந்து, வீடுகட்டி, ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி ரெஜிஸ்டர் செய்வது வரை ஆகும் செலவுகளைக் கடனாக அளிக்கிறோம். வீட்டுக் கடன் மேளாக்களை நாங்கள் அடிக்கடி நடத்துவதே மக்கள் வீட்டுக் கடன்களை இன்னும் எளிதாகப் பெறவேண்டும் என்பதற்காகத்தான்! வீட்டுக் கடன் வாங்குபவரை ஊக்குவிக்க, தனிநபர் கடன்களிலும் 0.25% குறைவான வட்டியில் கொடுக்கிறோம்’’ என்றார்.

சொந்த வீட்டுக் கனவுக்கு உரமாக இருக்கிறது இதுபோன்ற வாய்ப்புகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு