பிரீமியம் ஸ்டோரி
வேலை
ஸ்டூடன்ட் நம்பர் 1
 


ஸ்டூடன்ட் நம்பர் 1

ஸ்டூடன்ட் நம்பர் 1

விஜய் பேசுகிறார்...

ஸ்டூடன்ட் நம்பர் 1

‘‘அ ப்பா கட்டட மேஸ்திரி. என் செலவுகளுக்கு அவர் கையை எதிர்பார்க்க முடியாது. அதனால், நானும் அவர் பின்னாலேயே கட்டட வேலைக்குக் கிளம்பிட்டேன். செங்கலை வெச்சு, சிமென்ட் பூசி அழகா வீட்டை உருவாக்கவும் தெரியும். அதே வீடுகளுக்கு கம்பி கட்டவும் தெரியும். இப்போ என் மாத வருமானம் 3,000 ரூபாய்!

விடுமுறை நாட்களில் கட்டட வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அதில் கிடைக்கும் வருமானத் தைக் கொண்டு காலேஜ் ஃபீஸ், மற்ற தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள அந்தப் பணம் ரொம்பவே பயன்பட்டது. ஆனால், முழுநேரமும் செய்ய வேண்டிய வேலை அது என்பதால் காலேஜ் திறந்தபிறகு வேலைக்குச் செல்லமுடியவில்லை.

எனக்கு காலேஜ் ஒன்பது முதல் இரண்டு மணி வரைதான். மற்ற நேரங்கள்ல சும்மாதான் இருந்தேன். அப்பதான் கட்டட வேலைக்குக் கம்பி கட்டுற யோசனை வந்தது. கல்லூரி உள்ள நாட்களில் இரண்டு மணிக்குமேல் போய் கம்பி கட்டும் வேலையைப் பார்ப்பேன். சனி, ஞாயிறுகளில் முழு நேரமும் கட்டட வேலைதான்.

இது கான்ட்ராக்ட் அடிப்படையிலான வேலைதான் என்பதால், மேஸ்திரி தயவு இருந்தால் போதும், நாம் எப்போது வேண்டுமானாலும் வேலைக்குப் போய்வரலாம். கட்டட வேலையைப் பொறுத்தவரையில் வெளியில் இருந்து பார்த்தா, கஷ்டம் போலத்தான் தெரியும். ஆனா, உள்ளே இறங்கிட்டா... ரொம்ப சுலபம். என்னதான் கம்ப்யூட்டர் உலகமா இருந்தாலும், கட்டடங்களை செங்கல் வெச்சு, எங்கள மாதிரி ஆட்கள்தான் கட்டியாகணும். அதனால இந்த வேலைக்கு எப்பவுமே டிமாண்ட்தான்!

நாம வாழ்நாள் முழுசும் செங்கலும் சிமென்டும் பூசிக்கிட்டேயும் இருக்கத் தேவையில்லை. அப்படியே ஆட்களை வளைச்சுப் பிடிச்சு ஒரு கட்டடத்தையே உருவாக்குற மேஸ்திரியாகவும் மாறலாம். படிச்சுக்கிட்டே உயர்றோம். படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால் பார்ப்பேன். இல்லாவிட்டால் பார்ட்-டைம் வேலையையே நிரந்தரமாக்கிட வேண்டியதுதானே!’’

ஸ்டூடன்ட் நம்பர் 1

வெங்கடேஷ் பேசுகிறார்...

ஸ்டூடன்ட் நம்பர் 1

‘‘ப குதி நேர வேலையும் பார்க்கவேண்டும். அந்த வேலை படிப்புக்கான நேரத்தையும் விழுங்கி விடக்கூடாது என்பவர்களுக்கு ஏற்ற வேலை இது.

பொதுவாக சிக்கன் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அதிகம் விற்பனையாகும். இந்த வேலையும் சனி, ஞாயிறு மட்டும்தான். வாரத்தில் இரண்டேநாள்தான் வேலை. நாளன்றுக்கு 175 ரூபாய் சம்பளம். இது 200 ரூபாய் வரை அதிகரிக்கும்.

வேலை நேரம் அதிகமாக இருக்குமோ என்று யோசிக்கவேண்டாம். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம்தான் வேலை. காலை பத்தில் இருந்து ஒன்று வரை மற்றும் மதியம் இரண்டில் இருந்து ஆறு வரைதான்.

இந்த வேலையின் மூலம் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் பிராண்டட் சிக்கனின் விற்பனையை உயர்த்துவது.

நகர் முழுதும் இருக்கும் சூப்பர் மார்க்கெட்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நான் பணிபுரியும் நிறுவன சிக்கனின் தரம், சுவை மற்றும் சுத்தத்தைப் பற்றிக்கூற வேண்டும். நான் சேல்ஸ் பிரமோட்டராக இருக்கும் சூப்பர் மார்க்கெட் சேத்பட்டில் இருக்கிறது. இதுபோல சென்னை முழுதும் எக்கச்சக்கமான சூப்பர் மார்க்கெட்களில் இந்தப் பிரிவு உள்ளது.

மேலும், விற்பனைக் கணக்கையும் குறித்து வைக்கவேண்டும். எனக்கான ஊதியம் நிறுவனத்தாரிடம் இருந்து வரும். மாதத்துக்கு எட்டு நாள் வேலை செய்தால் 1,400ல் இருந்து 1,600 வரை கிடைக்கும்.

என்னுடைய தந்தை நடராஜன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அப்பாவைத் தொந்தரவு செய்யாமல், என் உழைப்பில் இருந்து பெறும் ஊதியத்தின் மூலம் என் புத்தகச் செலவையும், சுய தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது என்பது பெருமிதமான விஷயம்தானே!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு