பிரீமியம் ஸ்டோரி
வேலை
காலேஜ் நம்பர் ஒன்!
 


கல்லூரியில் கிடைக்குது படிப்பும் வேலையும்!

காலேஜ் நம்பர் ஒன்!
காலேஜ் நம்பர் ஒன்!

டித்துக் கொண்டே பகுதிநேரமாக வேலைக்குப் போகிற மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், சில கல்லூரிகளே தங்கள் மாணவர்களுக்கு பகுதி நேர வேலையை ஏற்படுத்தித் தருகின்றன.

அப்படியான முன்னுதாரண இருக்கும் அந்தக் கல்லூரிகளில் சிலவற்றைத் தேடிப் போனோம். உற்சாகமான மாணவர்களையும் ஊக்கம்தரும் நிர்வாகிகளையும் சந்தித்தபோது புதிய டிரெண்ட் உருவாகிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.

சென்னையிலுள்ள ‘விகான் லே’ கல்லூரியில் ஃபேஷன் டிஸைனிங், அட்வர்டைஸிங், எம்.பி.ஏ, மீடியா ஸ்டடிஸ் போன்ற கோர்ஸ்கள் உள்ளன. இந்தப் பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி பல பன்னாட்டு நிறுவனங்களில் பகுதிநேர வேலை வாய்ப்புகளை கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது. காலை 8 மணியிலிருந்து 11 மணி வரை கல்லூரியில் படிப்பு. மதியம் 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வேலை என்று மாணவர்களும் உற்சாகமாக ‘டபுள் ரோல்’ செய்கிறார்கள்.

‘விகான் லே’ கல்லூரியின் கவுன்சிலர் வர்தினி, ‘‘படிக்கும்போதே வேலைக்குப் போவது வெளிநாடு களில் நடைமுறையில் உள்ள நல்ல திட்டம். எங்கள் கல்லூரி இங்கிலாந்தில் இருக்கும் வீகன் லே பல்கலைக் கழகத்துடன் இணைந்தது. எனவே, அங்குள்ள திட்டத்தை இங்கேயும் செயல்படுத்துகிறோம். இதன் முக்கிய நோக்கமே எங்களிடம் படிப்பவர்களின் திறமையை வளர்க்கவும் போட்டிகள் நிறைந்த உலகில் அவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கச் செய்வதும்தான்’’ என்றார்.

முதுகலைப் படிப்பு மற்றும் எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே பகுதி நேர வேலைக்கும் போகத்தொடங்கிவிடுகிறார்கள். இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு கடைசி வருடத்தில் பகுதி நேர வேலை ஏற்பாடு செய்கிறார்கள்.

‘‘படிப்பவர்களின் துறைக்கு ஏற்ப பகுதி நேர வேலைகளை ஏற்பாடு செய்கிறோம். படித்து முடித்தவுடன் முழுநேர வேலைக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். ஏற்கெனவே இரண்டு வருட பகுதி நேர வேலை பார்த்த அனுபவம் இருப்பதால், இங்கு படித்தவர்களுக்கு வெளியில் எளிதாக வேலையும் கிடைக்கிறது. இந்தியாவில் எங்களுக்கு உள்ள பத்து கல்லூரிகளில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைத்துள்ளது’’ என்றார் வர்தினி.

காலேஜ் நம்பர் ஒன்!

டிஸைன் மற்றும் மீடியா துறையின் பேராசிரியர் இம்மானு வேல், ‘‘இன்டர்வியூ என்றால் என்ன? ஓர் அலுவலகம் என்றால் எப்படி இருக்கும், அதன் சட்ட திட்டங்கள் என்ன? மேனேஜரிடம் எப்படி நடந்துகொள்வது என்பது போன்ற தெளிவைப் பெறுவ தற்கு இதுபோன்ற பகுதி நேர வேலைகள் பயனுள்ளதாக இருக்கும்.

எப்படி தலைசீவ வேண்டும் என்பதில் தொடங்கி, என்ன மாதிரியான உடைகளை உடுத்தவேண்டும், ஷூ அணிவதுவரை... ஒரு நேர்முகத்தேர்வுக்கு எப்படிப் போகவேண்டும் என்பதற்கான பயிற்சிகளைக் கொடுக்கிறோம். பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள வாய்ப்புகளைத் தெரிந்து, அதற்குத் தகுதியான மாணவர்களை இன்டர்வியூவுக்கு அனுப்பிவைக்கிறோம். பகுதி நேர வேலையையும், கேரியர் கவுன்சிலிங்கையும் எங்கள் பாடத்திட்டத்தில் ஒன்றாகவே வைத்திருக்கிறோம்’’ என்றார்.

‘‘படித்துக்கொண்டே பகுதி நேர வேலைக்குச் செல்வது சிறந்த அனுபவம்’’ என்றார் ரவி. இவர் இந்த கல்லூரியில் அட்வர் டைஸிங் படித்துக்கொண்டே, ‘நியூ ஹரிசான் நிறுவன’த்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். ‘‘வேலையில் இருப்பதால் படிப்பதை எளிதாக அப்ளை செய்து பார்க்க முடிகிறது. வேலையில் ஏதாவது பிரச்னை என்றால் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்துச் செயல்பட முடிகிறது. நாம் படித்ததற்கும் வேலைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை நேரடியாகப் பார்த்துச் செயல்படுத்த முடிகிறது.

காலேஜ் நம்பர் ஒன்!

யாரை எப்படி அப்ரோச் செய்வது? கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படி திறமையை வெளிப்படுத்துவது? என்பது போன்ற பல விஷயங்களை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். இதற்குச் சம்பளமும் கிடைக்கிறது என்பது போனஸ்தானே!’’ என்றார்.

கரூரில் உள்ள வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இதேபோன்ற ஐடியாவைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பகுதி நேர வேலை செய்கின்றனர். கல்லூரி நிர்வாகமே அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்துள்ளது. பி.எஸ்ஸி ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் 10 பேருக்கு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் சூப்பர்வைஸர் வேலையும், பி.பி.ஏ மற்றும் பி.காம் மாணவர்கள் சிலருக்கு லக்ஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் பிரிவிலும் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

‘‘காலையில் 9 முதல் 4 மணிவரை படிப்பு, மாலை 5 முதல் 8 மணிவரை வேலையும் பார்க்கிறோம். எங்க ளுக்கான சம்பளம் கல்லூரிக்கே அனுப்பப்படுகிறது. அதை கல்லூரிக்கான ஃபீஸில் கழித்துக் கொள்கிறார் கள். நம் உழைப்பு, நம் படிப்புக்கு உதவும்போது களைப்பே தெரியாமல் இருக்கிறது’’ என்று உற்சாக மாகச் சொல்கிறார்கள் மாணவர்கள்.

லஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் மாணவர்களுக்கு வாடிக்கையாளர்களை ஏற்படுத்துவதுதான் முக்கியப் பணி. சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர் எனில் 50 ரூபாயும், நடப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர் எனில் 250 ரூபாயும் இவர்களுக்கு கமிஷனாகக் கிடைக்கிறது. கூரியர் நிறுவனங்களிலும் மாணவர்கள் பகுதி நேர வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

காலேஜ் நம்பர் ஒன்!

பகுதி நேர வேலைக்கான ஐடியாவை உருவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் வள்ளுவர் கல்லூரி யின் தாளாளர் செங்குட்டுவனிடம் பேசினோம்.

‘‘கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் விருப்பப்படி பகுதி நேர வேலை ஏற்பாடு செய்து தருவோம் என்று சொல்லிதான் சேர்த்தோம். நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகிக் கிடக்கின்றன. படிப்பு மட்டுமே மாணவர்களை வேலைக்குத் தகுதி யானவர்களாக மாற்றிவிடாது. படிப்பும் அதனுடன் கூடிய வேலை அனுபவமும்தான்

ள்ளுவர் அறக்கட்டளையின் சார்பில் ஓர் இலவச நூலகமும் நடத்துகிறார்கள். அங்கு ‘வேலைவாய்ப்பு நோட்’ ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதில் நம்மைப் பற்றிய தகவல்களை எழுதிவிட்டு வந்தால் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேடி வரும்போது, நமது முகவரியைக் கொடுத்துவிடுகிறார்கள். கடந்த நான்கு வருடத்தில் மட்டும் எழுநூறு பேர் வேலை பெற்றுள்ளனர்.

திறமையானவர்களை உருவாக்கும் என்பது நான் வாழ்க்கையில் கண்ட உண்மை. எனவேதான், இத்திட்டத்தைச் செயல்படுத்தினேன்.

நிறுவனங்களும் இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவிக்கிறது. திறமையானவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்கின்றனர்.

இந்த மே மாத விடுமுறையில் ‘டேலி அக்கவுன்ட்’ சொல்லி கொடுத்தோம். இதனால், டேலி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் சுமார் 31 பேர் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள். ஆரம்ப காலங்களில் எல்லா பகுதி நேர வேலையிலும் சம்பளம் குறைவாக இருந்தாலும் நாளாக, ஆக திறமைக்கேற்ப சம்பளம் உயர்ந்துகொண்டே போகும். படிப்பு முடிந்தவுடன் வேலையில் அனுபவம் இருப்பதால் அதிக சம்பளத் துடன் வேலையும் எளிமையாகக் கிடைக்கும்’’ என்றார் செங்குட்டுவன்.

‘‘ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களின் எதிர்காலத்துக்காகவும், நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும் தனிப்பிரிவு இருந்தால் சிறப்பாக இருக்கும். பட்டதாரிகள் நிறைய இருந்தும் வேலைக்குத் தகுதியானவர்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் தவிக்கின்றன. அந்தக் குறையைப் போக்க இதுபோன்ற திட்டத்தை அனைத்துக் கல்லூரிகளும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

செயல்படுத்துவார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு