Published:Updated:

வேலை தேடித் தரும் வேலை வேண்டுமா..?

வேலை தேடித் தரும் வேலை வேண்டுமா..?

பிரீமியம் ஸ்டோரி
வேலை
வேலை தேடித் தரும் வேலை வேண்டுமா..?
 

 

வேலை தேடித் தரும் வேலை வேண்டுமா..?

வேலை தேடித் தரும் வேலை வேண்டுமா..?

டித்து முடித்து எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்துக் காத்திருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது படிக்கும்போதே ஆட்களைக் கொத்திச் செல்லும் அளவுக்கு ‘கேம்பஸ் இன்டர்வியூ’க்கள் பிரபலமாகிவிட்டன. இவை பொறியியல் கல்லூரிகளில்தான் நடக்கும் என்ற நிலையும் மாறி, கலைக்கல்லூரிகளில் கூட திறமைசாலிகளைத் தேடி வரத்தொடங்கி விட்டனர் நிறுவனத்தார்.

தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த துறைகளான பி.பீ.ஓ, கே.பீ.ஓ போன்ற வேலைகளுக்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். டெக்னாலஜி தெரிந்த இளைஞர்களை அள்ளிக்கொண்டு போய் கைநிறையச் சம்பளம் கொடுக்கிறார்கள். இவர்களது பணப் புழக்கத்தால் நுகர்பொருள் உற்பத்தி, விற்பனை, காப்பீடு, வங்கிகள் போன்ற மற்ற தொழில்கள் எல்லா இடங்களிலும் விருத்தியாகத் தொடங்க... அதற்கும் அக்கவுன்ட்டிங், மேனேஜ்மென்ட் படித்த மாணவர்களைத் தேடி கல்லூரிக்கே வருகின்றன நிறுவனங்கள்.

இன்ஃபோசிஸ், சத்யம், டி.சி.எஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் வருடத்துக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டே இருக்கின்றன. இந்த அபரிமிதமான தேவைகளால் கல்லூரிப் படிப்பு முடியும் இறுதி ஆண்டுதான் கேம்பஸ் இன்டர்வியூ என்று இருந்த நிலை மாறி, இப்போது முந்தைய ஆண்டே தகுதியானவர்களைத் தேடிப்பிடித்து ரிசர்வ் செய்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டது!

இப்போதைய நிலைமை இதுதான். எல்லா நிறுவனங்களும் வேலைக்கு ஆள் தேடுகின்றன. ஆனால், அலைந்து திரிந்து தேட முடியாத நிலையில் சில நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவியாக சிலர், ஆட்கள் தேடித்தரும் வேலையைச் செய்கிறார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், தகுதி திறமையோடு இருக்கும் இளைஞர்களுக்கு வேலை தேடித்தரும் பணியையும் செய்கிறது. இதனால் இப்போது இந்த ‘மேன்பவர் ஏஜென்சி’ நிறுவனங்களிலும் நல்ல வருமானம் கிடைக்கிறது

கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தி தகுதியானவர் களின் பட்டியலைக் கொடுப்பதில் தொடங்குகிறது இவர்களது சேவை. அப்படி மாணவர்கள் அல்லாமல் வேலை தேடும் மற்ற இளைஞர்களையும் தேவை அறிந்து தேர்வு செய்வதும் இவர்களுடைய வேலைதான். இந்த வேலைக்கு இந்தத் தகுதி, அனுபவத்தோடு ஆட்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். கொண்டு வந்து கொட்டி விடுவார்கள். வேலைவாய்ப்பு தேடி தகுதிகளைப் பதிவு செய்வதற்கு என்றே பல இணையதள நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் பதிவு செய்யக் கட்டணம் கிடையாது. ஆனால், அதில் போய் தகுதியான நபர்களைத் தேடும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

அப்படிப்பட்ட இடங்களில் இருந்து பயோ டேட்டாக்களைத் தேர்வு செய்து ஆள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு அனுப்புவது மேன் பவர் ஏஜென்சிகளின் வேலை. அதைப் பார்த்து நிறுவனம் ஓகே செய்யும் லிஸ்ட்டில் இருப்பவர்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி, அதில் செலக்ட் செய்து விட்டால் வேலை கிடைத்துவிடும்.

வேலை தேடித் தரும் வேலை வேண்டுமா..?

ஆள் தேடியவருக்கு ஆள் கிடைத்தாயிற்று... வேலை தேடியவருக்கு வேலை கிடைத்தாயிற்று... இரண்டு பேரையும் இணைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்து கொடுத்தவருக்கு..? இதுபோன்ற மேன் பவர் ஏஜென்சிகள் குறிப்பிட்ட கட்டணத்தை வசூலித்துக் கொள்கின்றன. வருட சம்பளத்தில் 8.33% முதல் 25% வரை கூட கட்டணம் வசூலிப்பது உண்டு. சில நிறுவனங்களுக்கு எம்.டி. ஜி.எம் போன்ற உயர்ந்த பதவிகளுக்கெல்லாம்கூட இந்த மேன் பவர் ஏஜென்சிகள் மூலமாகத்தான் தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு வருட சம்பளம் 20 லட்ச ரூபாய்வரை கூட இருக்கும். அப்படியானால் கமிஷனைக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

பெரிய ஏஜென்சியாக நடத்தித்தான் இதுபோன்ற ஆட்களைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்று இல்லை. சாதாரணமாக வீட்டில் இருந்தபடியே இந்த வேலைகளைச் செய்ய முடியும். ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும்.

எந்த நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களைத் தேடிக்கொண்டு இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற விண்ணப்பதாரர்களை இணையதள பதிவு மையங்களில் தேடிப்பிடித்துக் கொடுக்க வேண்டும். அதற்காக நிறுவனங்களையும், இணையதளங்களையும் தொடர்பில் வைத்துக் கொண்டாலே போதும்.

குடும்பத் தலைவியாக இருக்கும் அபர்ணா கணபதி அப்படித்தான் வீட்டில் இருந்தபடியே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இருப்பது மதுரையில் என்றாலும் பல ஊர்களில் உள்ள நிறுவனங்களுக்கும் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

படித்து முடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் இதைச் செய்யமுடியும். நாம் யாரிடமோ வேலை தேடிக்கொண்டு நிற்காமல் நாம் பலருக்கும் வேலை தேடித் தரலாமே... பணமும் சம்பாதித்துக் கொண்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு