Published:Updated:

டிக்ஷ்னரி

டிக்ஷ்னரி

டிக்ஷ்னரி

டிக்ஷ்னரி

Published:Updated:
ஆசிரியர்
டிக்ஷ்னரி
 

மார்க்கெட் கேப்பிடலைசேஷன் - பங்குச் சந்தையில் விற்பனையாகும் ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு. அதாவது, அந்த கம்பெனியின் எல்லா பங்குகளையும் ஒட்டுமொத்தமாக வாங்கத் தேவைப்படும் பணத்தின் மதிப்புதான் அந்நிறுவனத்தின் ‘மார்க்கெட் கேப்பிடலைசேஷன்’.

சிவிவி 2 எண் ( cvv2 ) - ‘கார்ட் வெரிஃபிகேஷன் வேல்யூ’ என்பதன் சுருக்கம். இது, கிரெடிட் கார்ட்களின் பாதுகாப்புக்கான ரகசிய குறியீட்டு எண் என்று சொல்லலாம். ‘விசா’, ‘மாஸ்டர்’ போன்ற கார்ட்களில், பின்புறம் கையெழுத்துக்கான இடத்துக்கு சற்று மேலே மூன்று இலக்க எண்ணாக இது குறிப்பிடப்பட்டிருக்கும். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட்களில், முன்புறமுள்ள கார்ட் எண்ணுக்கு சற்று மேலே 4 இலக்க எண்ணாகக் காணப்படும்.

வேல்யூ ஆடட் - மதிப்புக் கூட்டுவது என்பதை இப்படிச் சொல்கிறார்கள். ஒரு பொருளைச் சந்தையில் வாங்கி, நுகர்வோருக்கு எளிதில் பயன்படும்படி, அதில் சில நுட்பமான மாற்றங்களைச் செய்து, மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்பதை இவ்வகையில் குறிப்பிடலாம்.

பைண்டிங் பவர் - ஒட்டும் திறன். கட்டுமானப் பொருட்களில் ஒன்று, மற்றொரு பொருளுடன் எந்த அளவுக்கு விரைவாகவும் நன்றாகவும் ஒட்டிக்கொள்கிறது என்பதைக் குறிப்பிடுவது.

எம்.ஐ.சி.ஆர் கோட் எண் - ‘மேக்னடிக் இங்க் கேரக்டர் ரெகக்னைஷன்’ என்பதன் சுருக்கம்தான் எம்.ஐ.சி.ஆர். இது வங்கி காசோலை எனப்படும் பேங்க் செக்குகளில் 9 இலக்க எண்ணாக இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் இருக்கும் இந்த தனி அடையாள எண்ணைக் கொண்டு, செக்கை வழங்கிய கிளையை அடையாளம் காணமுடியும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism