Published:Updated:

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

Published:Updated:
நடப்பு
‘ஊர்’வலம் - நாகர்கோவில்
 

நாகர்கோவில்

ரப்பர், மீன்வலை தருதே வேலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

டுக்கி விழுந்தால் கல்வி நிறுவனங்கள்... எழுந்தால் மருத்துவமனைகள்... தமிழும் மலையாளமும் கலந்த மொழி பேசும் மக்கள்... நாலாபுறமும் தென்னைமரங்கள்... ரம்மியமான ரப்பர் தோட்டங்கள்... மிதமான வெயில், குளுமையான காற்று என மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவிலில்தான் இந்த இதழ் ‘ஊர்’வலம்.

கேரளாவின் ஒரு பகுதியாக இருந்து, 1956\ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டாலும் இன்னும் மலையாள மணம் மிச்சமிருக்கிறது. தமிழர்களும், மலையாளிகளும் சரிசமமாகக் கலந்திருக்கின்றனர். புகழ்பெற்ற நாகராஜா கோயில் அமைந்திருப்பதால் நாகர்கோவில் எனப் பெயர் பெற்றதாம். இந்தியாவிலேயே முழு எழுத்தறிவு பெற்றவர்கள் வாழும் ஊர் என்ற விசேஷத் தகுதியும்கூட இந்த ஊருக்கு உண்டு.

விவசாயமும் அதுசார்ந்த தொழில்களும் பெருகிக்கிடந்தாலும் இந்த ஊரின் பேரைச் சொன்னாலே ரப்பர்தான் நினைவுக்கு வரும். இங்குள்ள தட்பவெப்பநிலை ரப்பர் மரங்கள் வளர ஏதுவாக இருப்பதால், 300 வருடங்களாக இங்குள்ளவர்களின் வருமான வாய்ப்பாக இருக்கிறது ரப்பர். அருகில் உள்ள கலியல் என்னும் ஊரில்தான் இந்தியாவிலேயே தரமான ரப்பர் பால் கிடைக்கிறது. ரப்பர் பால், அதை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் என பலரை வாழ வைக்கிறது ரப்பர். பலத்த மழைகாலங்கள் தவிர்த்து, தினமும் நாகர் கோவில் பகுதியில் 100 டன் ரப்பர் பால் உற்பத்தியாகிறது.

‘ஊர்’வலம் - நாகர்கோவில்
‘ஊர்’வலம் - நாகர்கோவில்

பதினைந்துக்கும் மேற்பட்ட ரப்பர் பேண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. ‘‘இங்கு தயாரிக்கப்படும் ரப்பர் பேண்ட்கள் இந்தியா முழுவதும் செல்கின்றன. அம்மோனியா கலந்த ரப்பர் பாலை வாங்கி, சாயம் கலந்து இரும்புக் குழாய்களில் வார்த்து, நன்றாகக் காயவைத்து, பிறகு நீரில் போட்டு கொதிக்க வைத்து, அரை இன்ச்சிலிருந்து எட்டு இன்ச் வரையான சைஸில் ரப்பர் பேண்ட்களாக மெஷினில் வெட்டி எடுப்போம்’’ என்றார் ரப்பர் பேண்ட் தொழிற்சாலை நடத்திவரும் மணிகண்டன்.

‘‘ரப்பர் பாலின் திடீர் விலையேற்றத்தால் எங்களைப்போன்ற சிறு தொழில் நடத்து பவர்கள் உற்பத்திச் செலவுக்கு தகுந்த விலை கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறோம். கேரள அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து, தங்கள் மாநில சிறுதொழில் நடத்துபவர்களைக் காப்பது போல, நம் மாநில அரசும் எங்களைக் கொஞ்சம் கவனித்தால் நல்லது’’ என்றார் மணிகண்டன் ஆதங்கத்துடன்.

ரப்பர் சார்ந்த தொழில்களுக்கு சற்றும் சளைக்காமல், வேலை வாய்ப்பை அள்ளித் தருவதாக இருக்கிறது மீன்வலை தயாரிக்கும் தொழில். ‘‘குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மீன்வலைத் தயாரிப்புக்கு ஏற்றதாக இருக்க, இந்த ஊரைச்சுற்றி மட்டும் பெரிதும் சிறிதுமாக சுமார் 125 மீன்வலை தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன’’ என்றார் இந்தியாவின் இரண்டாவது பெரிய மீன்வலை ஏற்றுமதி நிறுவனமான ‘குமரன் ஃபிஷ் நெட்’ உரிமையாளர் குமரேசன்.

‘ஊர்’வலம் - நாகர்கோவில்
‘ஊர்’வலம் - நாகர்கோவில்

‘‘இங்கு தயாரிக்கப்படும் மீன்வலைகள் பெருமளவில் இலங்கை, எகிப்து, ஸ்பெ யின், கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டிலும் இதற்கு நல்ல மார்க்கெட் உள்ளது. மாதம் 600 மெட்ரிக் டன் அளவுக்கு 8 மில்லி மீட்டரில் இருந்து 250 மில்லி மீட்டர் கண்ணி இடைவெளி வரைக்குமான மீன்வலைகள் இங்கு தயாராகின்றன. இந்தப் பகுதியில் இத்தொழிலின் வருட டர்ன் ஓவர் 100 கோடி ரூபாய்க்குமேல் இருக்கும்’’ என்ற குமரேசன் தொடர்ந்து,

‘‘இத்தொழிலில் வருடம் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கிறது. மீன் வலைக்கான மூலப் பொருளை உற்பத்தி செய்வது, மீன்வலை தயாரிப்பது என இந்தத் தொழிலில் வேலை வாய்ப்பு பெருகிக் கிடக்கிறது. வேலைக்கு ஆட்கள் போதாமல் அருகாமை ஊர்களிலிருந்து வரவழைக்கிறோம். கொஞ்சம் படித்தவர்களாக இருந்தால் மாதம் 3,000 ரூபாய்வரைகூட, வருமானம் பெறலாம்’’ என்றார் குமரேசன். இத்துறையில் 90% மேல் வேலை வாய்ப்பைப் பெற்றிருப்பவர்கள் பெண்கள்.

மாவட்ட தொழில் மையம் (டிக்) இந்த ஊரின் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘‘தொழில் தொடங்க தாராளமாகவே கடன் வழங்கி வருகிறோம்’’ என்றார் ‘டிக்’ மையத்தின் பொது மேலாளர் பழனிவேலு.

‘‘புரவிஷனல் ஸ்டோர், பேக்கரி தொடங்க என, இந்த வருடம் மட்டும் ‘புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்’ கீழ் பலருக்குக் கடனும் மானியமும் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். எட்டாம் வகுப்புக்கும் மேல் படித்த 18 லிருந்து 35 வயது வரையுள்ள அனைவரும் இத்திட்டத்தில் கடன் பெறத் தகுதியானவர்கள். 45 வயது வரையான பெண்களுக்குக் கடன் தரும் சிறப்புத் திட்டமும் உண்டு. தனிநபராக அதிகபட்சம் 2 லட்சம் வரையும், கூட்டாக 10 லட்சம் வரையில் கடன் பெறலாம். இதில் 5 முதல் 16% பணத்தை கையிருப்பாகக் காட்டவேண்டியது அவசியம்’’ என்றார்.

‘ஊர்’வலம் - நாகர்கோவில்
‘ஊர்’வலம் - நாகர்கோவில்

தென்னை மரங்களும் அங்குள்ளவர்களுக்கு தெவிட்டாத வேலை வாய்ப்பைத் தருகின்றன.

இளநீர், தேங்காய் என தென்னை மரத்தின் உரிமை யாளர்களுக்கு வருமானத்தைத் தருவது மட்டுமன்றி தென்னை மட்டையைக்கொண்டு கயிறு முறுக்கும் தொழில், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது.

‘‘தென்னை மட்டையில் இருந்து பல்வேறு வகையான பிரஷ்கள் மற்றும் கயிறுகள், கால்மிதிகள் என 86 விதமான பொருட்களைத் தயாரிக்கலாம். அத்தனைக்கும் ஏற்றுமதி வாய்ப்புகளும் உண்டு’’ என்கிறார் கன்னியாகுமரி மாவட்ட கயிறு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் யசோதரன்.

‘‘நார்களாகப் பிரித்தெடுத்த பின்பு கிடைத்த ‘பித்‘ எனப்படும் தூளை நீண்டகாலமாக உரமாக மட்டுமே பயன்படுத்தி வந்தோம். அதற்கு ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் துகள்களை செங்கல் போலக் கட்டிகளாக மாற்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ருமேனியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அங்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். தூள்களைப் பதப்படுத்தி, நீளமான பெரிய ஷீட்கள் வடிவில் மாற்றியும் ஏற்றுமதி செய்கிறோம். அங்கே தக்காளி போன்ற சிறிய காய்கறிச் செடிகள், பூச்செடிகள் போன்றவற்றை இந்த ஷீட்களில் வளர்க்கிறார்கள். இந்தியாவிலும் இதைப்போன்று விவசாய முறை வளர்ந்தால் இங்கும் சப்ளை செய்யமுடியும்’’ என்ற யசோதரன், ‘‘நாகர்கோவில் பகுதியில் மட்டுமே தென்னை மட்டையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் வருட டர்ன் ஓவரே 10 கோடிக்கு மேல் இருக்கும். எங்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் விதமாக 20% வரை மானியம் கொடுக்கிறது அரசு’’ என்றார் சந்தோஷத்துடன்.

‘ஊர்’வலம் - நாகர்கோவில்
‘ஊர்’வலம் - நாகர்கோவில்

‘‘நாகர்கோவிலைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தென்னை, கயிறு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளன. பெண்கள் வீட்டில் இருந்தபடியே நார்களை வாங்கி, கயிறு முறுக்கிக்கொடுத்து மாதம் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். தென்னை மட்டை சார்ந்த தொழில்கள் மூலம் 2,000 பேருக்கும் மேல் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். படிக்காதவர் களாக இருந்தால்கூட உடல் உழைப்பின் மூலம் மாதம் 4,000 வரை சம்பாதிக்கலாம்’’ என்றார் யசோதரன்.

ஊரின் பருவநிலைக்கு ஏற்ப காய்கறி பழங்களும் பெருமளவு பயிரிடப்படுகின்றன. வாழைத் தோப்புகளும் அதிகமாக இருக் கின்றன. வடசேரி பகுதியில் இருக்கும் 104 ஆண்டுகள் பழமையானதாக, 500 கடைகளுக்கு மேல் கொண்டதாக இருக்கிறது கனகமூலம் மார்க்கெட்! இந்தச் சந்தையில் தினமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் காய்கறியும் திங்கள், வியாழக் கிழமைகளில் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு வாழைத்தார்களும் விற்பனையாகின்றன. நெல்லை, தூத்துகுடி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் கேரளாவுக்குச் செல்வது இந்தச் சந்தை வழியாகத்தான்.

இட நெருக்கடி காரணமாக பொருட்களை மார்க்கெட்டுக்கு அருகில் ரோட்டில் வைத்து விற்பனை செய்யவேண்டி இருப்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்கம், திருநெல்வேலி சாலையில் 12 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தனியார் மார்க்கெட்டைக் கட்டி வருகின்றனர். அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமாரவேல், ‘‘27 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த மார்க்கெட்டில் 700 கடைகள் அமைய இருக்கிறது. ஏழரைக்கோடி ரூபாயை நபார்டு வங்கியும், ஏழரைக்கோடி ரூபாயை ஸ்டேட் வங்கியும் கடனாகக் கொடுத்துள்ளன. மீதி 12 கோடி ரூபாய் எங்கள் சங்கத்தின் மூலம் கொடுத்துள்ளோம். இந்த வளாகத்திலேயே விவசாயிகளுக்கு அரசின் உதவிகள், மானியங்கள் வாங்கித் தரவும் நவீன விவசாய உத்திகளைச் சொல்லித்தர, ஆலோசனை மையமும் அமைக்க இருக்கிறோம். கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘பயோ மாஸ் பிளான்ட்’ ஒன்றைத் தொடங்கும் திட்டமும்கூட இருக்கிறது’’ என்றார்.

‘‘இந்த ஊர் மக்கள் ரசனை மிகுந்தவர்களாக இருப்பதால் மர வியாபாரம் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது’’ என்றார் கிறிஸ்டோபர் சா மில்லின் உரிமையாளர் பிரதீப். ‘‘வீடுகள் கட்டும்போது மர வேலைப்பாடு நிறைந்த கதவுகள், ஜன்னல்கள் என 50% வரை மரம் சார்ந்த பொருட்களையே இங்குள்ள மக்கள் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ‘படாக்’ மரத்தை ஆப்ரிக்காவிலிருந்தும், ‘வயலட்’ மரத்தை தென் அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறோம். இந்த இரண்டு மரங்களுக்குத்தான் இப்போது ஏக டிமாண்ட். இங்கு மட்டும் 60 மர இழைப்பு மில்கள் இருக்கின்றன. மரவேலை தெரிந்த கார்பென்டர்கள் ஒருநாளைக்கு 200 ரூபாய் வரையும் மில்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் தினம் 180 ரூபாய் வரை சம்பாதிக் கிறார்கள்’’ என்று கூறினார் பிரதீப். இத்தொழிலின் வருட டர்ன் ஓவர் 40 கோடியாம்.

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

நாகர்கோவில் பகுதிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இருப்பதால், அங்கு மூலிகை வளம் மிகுந்திருக்கிறது. 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த எம்.எஸ்.எஸ் ஆசான் நிறுவனம் மூலிகைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. வசம்பு, கண்டங்கத்திரி, சித்தரத்தை என 2,000 வகையான மூலிகைகளை ஏற்றுமதி செய்கிறார்கள். ‘‘மருந்து உற்பத்தி செய்வதற்கென தனியாக லேப் ஒன்றை வைத்திருக்கிறோம். எங்களிடம் 300 வகையான சித்த மருந்துகள் தயாரிப்பதற்கான உரிமம் இருக்கிறது’’ என்ற ஆசான் நிறுவன உரிமையாளர் சங்கர், 300 ஏக்கரில் மூலிகை வளர்ப்பதற்கு எஸ்டேட் வைத்துள்ளார். இந்த ஊரில் புதிதாக மூலிகை ஏற்றுமதி செய்ய வரும் நிறுவனங்களுக்கு வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது என்பது அவரிடம் பேசியபோது நமக்குப் புரிந்தது.

இத்தனை தொழில்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்க, இந்த ஊரின் நீண்டநாள் தொழில் களான கைத்தறி மூலம் டர்க்கி டவல் தயாரிக்கும் தொழிலும், சௌராஷ்டிரா பட்டு நெசவுத்தொழிலும் நலிவடைந்து கிடக்கின்றன. ‘‘30 தொழிற்சாலைகள் இருந்த ஊரில் இன்று ஏழு தொழிற்சாலைகள்தான் இருக்கின்றன’’ என்று வருத்தத்தோடு பேச ஆரம்பித்தார் டர்க்கி டவல் உற்பத்தியாளரான ரகுநாதன். ‘‘50 கோடி ரூபாய் டர்ன் ஓவருடன் இருந்த இந்தத் தொழிலை நம்பி 500 குடும்பங்கள் பிழைத்தன. சோவியத் ரஷ்யா உடைந்ததும், அங்கிருந்த ஏற்றுமதி வாய்ப்புகள் கை நழுவிவிட்டன. மத்திய அரசும் கைத்தறி துணி ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை நிறுத்திவிட்டது. தற்போது உற்பத்தியாகும் டவல்களை ஒரே ஒரு நிறுவனம் மட்டும் வாங்கி ஏற்றுமதி செய்கிறது. அதுவும் நின்றுவிட்டால் இதனைச் சார்ந்து வாழும் குடும்பங்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே இத் தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கைகள் எடுத்தால் நல்லது’’ என்றார்.

‘‘10 வருடங்களுக்கு முன்பு 500 தறிகள் ஓடிக்கொண்டிருந்த இடத்தில், இன்று 25 தறிகள்தான் இருக்கின்றன’’ என்று தன் பங்குக்கு கொட்டித் தீர்த்தார் ‘சௌராஷ்டிரா பட்டு’ நெசவு செய்யும் நாகமணி. ‘‘மில் தறியில் நெய்யப்படுகிற பட்டுச் சேலைகளை மக்கள் விரும்பி வாங்குவதால், இந்தத் தொழிலுக்கு இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. திருநெல்வேலியில் இருந்து மூலப்பொருளை வாங்கி வந்து சேலை நெய்து கொடுக்கிறோம். ஒரு சேலை நெய்ய ஒருவாரம் ஆகும். அதற்கு 800 ரூபாய் கூலி கிடைக்கிறது அதைக் கொண்டுதான் பிழைப்பை ஓட்டுகிறோம்’’ என்றார் வருத்ததுடன்.

உழைப்புக்கு அஞ்சாத ஊராக இருக்கிறது நாகர் கோவில். வெறும் கையை வீசிக்கொண்டு வந்தாலே போதும், பிழைக்க வழி சொல்லிக் கொடுத்துவிடும் நகரமாகவே இருக்கிறது நாகர்கோவில்.

தென்னையில் புதிய வாய்ப்புகள்...

தே ங்காயைப் பவுடராக்கியும், இளநீரை பாக்கெட்டுகளில் அடைத்தும், தேங்காய் ஓடுகளை ஐஸ்க்ரீம் கப்களாகவும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஒன்றிரண்டு இங்கே உள்ளன. இன்னும் பலர் வந்தாலும் வருமான வாய்ப்புள்ள தொழில் இது! கேரளாவில் இத்தொழில்கள் அரசின் உதவியுடன் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றன. தமிழக அரசும் கவனித்தால் பரவாயில்லை.

இரண்டுவடக் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. பெரும் பாலான நிறுவனங்கள் மூன்றுவடக் கயிறுகளை மட்டுமே தயாரிக்கின்றன. இரண்டு வடக்கயிறுகளை தயாரித்தால், அவர்கள் மேலும் லாபம் பெறலாம்.

ஒருவர் சொந்தமாக தென்னை மட்டையிலிருந்து நார்களைப் பிரித்தெடுக்கும் யூனிட்களைத் தொடங்க 6 லட்சம் வரை செலவாகும். ஸ்பின்னிங் யூனிட் தொடங்க 10 லட்சம் வரை செலவாகும். வருடத்துக்கு முதலீட்டில் 15% லாபம் கிடைக்கும். இதற்கு வங்கிகளில் கடனும் கிடைக்கிறது. இத்தொழிலுக்கான கடனில் 25 சதவிகிதத்தை மானியமாகத் தந்து ஊக்கப்படுத்துகிறது கயிறு வாரியம்.

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கயிறு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக உற்பத்தியாகும் கயிறுகள், மிதியடிகள், கார்பெட்டுகள் வருடம் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா முழுவதும் விற்பனையாவது மட்டுமன்றி ஏற்றுமதியும் ஆகிறது. இந்த வருடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேருக்கு வடம் செய்துகொடுத்தது இவர்கள்தான்!

பணம் எங்கே போகிறது..?

வெ ளிநாடுகளில் வேலை செய்பவர்களும், அரசு ஊழியர்கள் இங்கே அதிகம் இருப்பதால், பெரும்பாலும் வீடு, நிலம், தங்க நகைகளை வாங்கிக் குவிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். பிஸினஸில் சம்பாதித்த பணத்தை பிஸினஸிலேயே முதலீடு செய்பவர்கள் குறைவுதான். சிலர் ஷேர் மார்க்கெட்டிலும், மியூச்சுவல் ஃபண்ட்டிலும் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.

அடடே..! அப்பளம்!

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

நா கர்கோவிலுக்கு அருகில் உள்ள கோதை கிராமம் அப்பளத் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் அப்பளங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றன.

கேரள ஸ்பெஷல்!

டசேரி பகுதியில் தயாராகும் வேஷ்டிகளுக்கு, ஓணம் பண்டிகை நேரத்தில் கேரளாவில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. வருடத்துக்கு 25 லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையாகின்றன.

வாய்ப்புள்ள வாழை!

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

ங்கு கணிசமாக விளை யும் செவ்வாழைக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. யாராவது இதை ஏற்றுமதி செய்தால் லட்சங் களைச் சம்பாதிக்கலாம்.

கோடிகளை சுரக்கும் ரப்பர்!

‘ஊர்’வலம் - நாகர்கோவில்

ப்பர் பேண்டுகள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் தவிர, பெரிய ரப்பர் கையுறைகள் தயாரிக்கும் இரண்டு பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் உற்பத்தி செய்யப்படும் கையுறைகள் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ரப்பர் சார்ந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரில் 80 சதவிகிதத்திற்கு மேல் பெண்கள். வங்கிகளும் இத்தொழில் தொடங்கத் தாராளமாகக் கடன்களை அளிக்கின்றன.

- திருவட்டார் சிந்துகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism