Published:Updated:

அடுத்த படி ஏற ஆயத்தமாகிறோம்!

அடுத்த படி ஏற ஆயத்தமாகிறோம்!

அடுத்த படி ஏற ஆயத்தமாகிறோம்!

அடுத்த படி ஏற ஆயத்தமாகிறோம்!

Published:Updated:
நடப்பு
அடுத்த படி ஏற ஆயத்தமாகிறோம்!
 

அடுத்த படி ஏற ஆயத்தமாகிறோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த படி ஏற ஆயத்தமாகிறோம்!

ல்லது செய்பவர்களை எல்லோருமே, ‘நூறாண்டு வாழவேண்டும்’ என்று வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்து கார்ப்பரேஷன் வங்கிக்குப் பலித்திருக்கிறது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் கார்ப்பரேஷன் வங்கி, அண்மையில் செஞ்சுரி போட்டிருக்கிறது. கார்ப்பரேஷன் வங்கிக்கு ஒரு கங்கிராட்ஸ் சொல்ல அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மங்களூர் சென்றோம்.

சிரித்த முகத்தோடு வரவேற்றார் வங்கியின் சி.எம்.டி சாம்பமூர்த்தி! பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவைச் சந்தித்த 22-ம் தேதி அது. அங்கிருந்து தொடங்கியது பேட்டி...

‘‘பங்குச் சந்தை வரலாறு காணாத அளவுக்கு 1100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து எல்லோரையும் பயமுறுத்தி இருக்கிறதே..?’’

‘‘பங்குச் சந்தை என்பது, இயல்பாகவே ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகத்தான் இருக்கும். இன்றைய சரிவு எப்படி வரலாறு காணாதது என்கிறோமோ, அதுபோல கடந்த சில மாதங்களில் கண்ட வளர்ச்சியும் வரலாறு காணாதது தானே! இந்த அளவு ஏற்றம் இருந்தபோதே இறக்கமும் எதிர்பார்க்கப்பட்டதுதான்.

உற்பத்தி, சேவை, விவசாயம் என எல்லாத் தொழில்களும் வளர்ச்சி கண்டு வருவதால், இது நம் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகளை உண்டாக்காது. அளவுக்கு அதிகமாக ரிஸ்க் எடுத்த சிலரை வேண்டுமானால் பயமுறுத்தி இருக்கலாம்.

சாமானியர்களுக்கும், நிதித் துறையில் உள்ள எங்களைப் போன்ற வங்கிகளுக்கும், மற்றவர்களுக்கும் இது எந்த பாதிப் பையும் ஏற்படுத்தப்போவதில்லை... பயத்தையும் ஏற்படுத்த வில்லை.’’

‘‘நிதியமைச்சர் சிதம்பரம் ‘குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் பரவாயில்லை. சிறு வங்கிகள் ஒருங்கிணைக்கப் பட்டு, பெரிய வங்கிகளாக வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், கிராமப்புற மக்களுக்கு நல்ல சேவை கிடைக்க, பெரிய வங்கிகள் உதவாது என்ற கருத்து இருக்கிறதே?’’

‘‘கிராமப்புற மக்களின் தேவைகளுக்கு வங்கிகள் உதவவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதேசமயம், கிராமங்களுக்கு உதவ, அதிக எண்ணிக்கையில் கிளைகள் கொண்ட வங்கிதான் தேவையே அன்றி, வங்கிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘சிறு வங்கி’ என்று நிதியமைச்சர் சொல்வது, குறைந்த மூலதனம் கொண்ட வங்கிகளைத்தான். குறைந்த மூலதனத்தை வைத்துக்கொண்டு எந்த வங்கியும் பெரிதாக எதையும் சாதித்துவிடமுடியாது. மூலதன அளவில் அவை பெரிதாக இருந்தால்தான் சர்வதேச போட்டிகளைச் சமாளிக்கமுடியும். அப்போதுதான், அதிக கிளைகள் திறக்கவும் வலு கிடைக்கும். இன்றைக்கு இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கி யான ஸ்டேட் பேங்க்கால்தானே, கிராமம்தோறும் கிளை திறக்கவும் நிர்வகிக்கவும் முடிகிறது.’’

‘‘இந்தத் திசையில் வருங்காலத்தில் கார்ப்பரேஷன் பேங்க், சிறு வங்கிகள் வேறு எதையாவது தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் திட்டம் வைத்திருக்கிறதா?’’

‘‘இன்றைய நிலையில் அப்படியான திட்டங்கள் இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். அப்படியரு வாய்ப்பு வந்தால், தயாராக இருக்கிறோம்.’’

‘‘அடுத்த ஆண்டிலிருந்து வங்கிகள் பேசல் மிமி வரையறைகளை அமல்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் எந்த அளவுக்கு தயாராகி இருக்கிறீர்கள்?’’

‘‘பேசல் மிமி வரையறைகளை அமல்படுத்த வேண்டும் என்பது மேஜிக்போல ஒரு நொடியில் வேறு ரூபம் எடுப்பதல்ல. படிப்படியாக வங்கிப் பணத்துக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் வழிமுறைகளை அமலாக்குவதுதான் இது. இதற்கு உடனடி தகவல் சேவை, அதைக் கையாள பயிற்சிபெற்ற பணியாளர்கள், உயர்தரமான சேவையளிக்கக்கூடிய மென்பொருட்கள் போன்ற சில முக்கிய அம்சங்களின் தேவையும் இருக்கிறது. இதில் சில பயிற்சிகளைப் பெற, எங்கள் வங்கி ஊழியர்களை ஹாங்காங் போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கிறோம். ஒவ்வொரு படியாக ஏறிச்செல்ல எல்லா ஆயத்தங்களும் நடக்கின்றன.’’

‘‘அண்மையில் வெளியான உங்கள் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ( FY 2005-06 ) வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் ( CAR- Capital Adequecy Ratio ) குறைந்திருக்கிறதே? அதை அதிகரித்துக் கொள்ள பொதுமக்களுக்கு மீண்டும் பங்குகளை விற்பீர்களா?’’

‘‘ஒரு வங்கியின் பல்வேறு நடவடிக்கைகளைப் பொறுத்து, அதன் மூலதன தன்னிறைவு விகிதம் மாறுபடும். அடுத்த ஆண்டு அது மீண்டும் அதிகரிக்கலாம். அது மிகக்குறைந்து பாதாளத்துக்கு செல்லும்போதுதான், முதலீட்டா ளரோ, டெபாசிட் செய்பவரோ வங்கியின் பாதுகாப்பு குறித்து கவலைப்படவேண்டும்.

ஆனால், குறைந்திருப்பதாகச் சொல்லும் அளவிலேயே எங்கள் வங்கியின் மூலதனத் தன்னிறைவு விகிதம் 13%-க்குக் கீழே செல்ல வில்லை. வர்த்தக வங்கிகளுக்கு குறைந்தபட்ச அளவாக 9% என்று நிர்ணயித்துள்ளது ரிசர்வ் வங்கி. அதைவிட இப்போது 4%-க்கு மேல் இருப்பதால், நாங்கள் மிக வலுவான நிலையில் இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்து, பேசல் மிமி நடைமுறை யின்படிகூட இப்போதைக்கு தேவைப்படும் குறைந்தபட்ச மூலதன தன்னிறைவு விகித அளவைவிட 4% அதிகமாக உள்ளது. எனவே, மீண்டும் பங்கு வெளியிட வேண்டிய உடனடி அவசியம் இல்லை.’’

‘‘இன்றைய இந்திய பொருளா தாரம், தொழில் துறை, பங்குச் சந்தை நிலவரம் போன்றவற்றின் அடிப்படையில் வரும் நாட்களில் முதலீடு செய்ய பொருத்தமான துறைகள் என எவற்றைச் சொல்லலாம்?’’

‘‘வங்கித் துறை என்றுதான் சொல்ல வேண்டும். (பெரிதாகச் சிரிக்கிறார்) முதலீடு என்பது ஒருவருடைய வயது, இலக்கு, முதலீட்டின் காலஅளவு என பல விஷயங்களைப் பொறுத்தது. இன்றைய நிலையில் மட்டுமல்ல... எப்போதுமே பங்குச் சந்தையில் குறுகியகால முதலீடு செய்வது ஆபத்தானது. குறைந்தபட்சம், 3 முதல் 5 ஆண்டு என்ற நீண்டகால அடிப்படையில் டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோ மற்றும் அதன் உதிரி பாகங்கள், அடிப்படை கட்டமைப்பு பணி, இரும்பு, சிமென்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். வங்கி கடன் வழங்குவதைப் பொறுத்த அளவில் இன்றைக்குக் கல்வி தொடர்பான துறையும் கவர்ச்சிகரமானதாக தெரிகிறது’’ என்று சொல்லி, புன்னகையோடு விடைகொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism