Published:Updated:

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

Published:Updated:
நடப்பு
காக்டெய்ல்
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காக்டெய்ல்

‘‘கை யிருப்பு குறைவு, தேவை அதிகரிப்பால் துவரம் பருப்பின் விலை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. இதேபோன்று பட்டாணி விலை உயரத்தொடங்கியிருக்கிறது. வாங்கி, இருப்பு வைத்துக்கொண்டால் நல்ல லாபம். வெந்தயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் ஒரு குவின்டாலுக்கு 150 ரூபாயும், கிராம்பு கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது’’ என்றார் தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன்.

‘‘மு ருங்கைக்காய் சீசன் தொடங்கியுள்ளதால் வரும் வாரங்களில் அதன் விலை குறையத் துவங்கும்’’ என்று பொதுவான நிலவரம் பற்றிப் பேசிய கோயம்பேடு மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கச் செயலாளர் சந்திரனிடம், ‘‘அதென்ன, தக்காளி விலை இப்படி தறிகெட்டு ஏறிக்கிடக்கிறதே..?’’ என்றோம்.

‘‘தக்காளி கிலோ இரண்டு ரூபாய்க்குக் கிடைத்த நேரத்தில் ஏற்றுக்கூலி, இறக்கு கூலிக்குக்கூட விலை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் விவசாயிகள் மாற்றுப் பயிரைத் தேடிப்போய்விட்டார்கள். அதனால், தக்காளிக்கு டிமாண்ட் ஏற்பட்டு கிலோ 23 ரூபாய்க்குப் போய்விட்டது. இப்போது, விவசாயிகள் பலரும் மீண்டும் தக்காளியைப் பயிரிடத் தொடங்கிவிட்டார்கள். சீக்கிரமே, 12 ரூபாய்க்கு இறங்கும் விலை, ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து ரூபாய் அளவுக்கும் குறைய வாய்ப்பிருக்கிறது’’ என்றார் சந்திரன்.

காக்டெய்ல்

ந்த்ரா பேடியை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த உலக கோப்பை கிரிக்கெட் சீசனில் பரபரப்பே இவர்தான்! அதேபோல பிஸ்கட் சந்தையில் பிரிட்டானியாவுக்கென்று ஒரு தனி இடம் எப்போதும் உண்டு. அது காலத்துக்கேற்ப மாறுபட்ட சுவைகளில், வடிவங்களில் புதிய பிஸ்கட்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும். அதன் ஒரு கட்டமாக ‘மாரிகோல்ட் டபுள்ஸ்’ எனும் பிஸ்கட்டை கடந்த ஒரு வருடமாக பரிசோதனை முயற்சியாக கடைகளில் விற்பனை செய்துவந்தது. தற்போது, அதனைச் சந்தையில் நேரடியாக அறிமுகப்படுத்தி உள்ளது.

இது, ஆரஞ்சு மற்றும் குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லெட் சுவை என இரண்டும் கலந்தது. இந்த மாரியைத்தான் அறிமுகம் செய்திருக்கிறார் மந்த்ரா பேடி.

காக்டெய்ல்

ம்ப்யூட்டர் மயமான நிர்வா கத்தில், வசதிகள் இருக்கிற அளவுக்கு சிக்கல்களும் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தின் நெட் வொர்க்கின் உள்ளே புகுந்து ரகசியங்களைத் திருடும் வேலை இப்போது அதிகமாக இருக்கிறது. இதைத் தடுக்கும் வேலையைச் செய்வதுதான் ‘என்டர்பிரைசஸ் சிஸ்டம் மேனேஜ்மென்ட்!’

அந்த வேலையைச் செய்யும் ‘மேபல்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ராம், ‘‘எதிர்காலத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பைத் தரும் தொழில் இது’’ என்கிறார்.

காக்டெய்ல்

‘‘இவ்வளவு பெரிய வாய்ப்பு உள்ள துறையில் தேவைக்குத் தொடர்ந்து சரியான பயிற்சி பெற்ற ஆட்கள் கிடைக்காததால், நாங்களே தகுதியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து வருகிறோம். இந்த 3-6 மாதங்கள் வரையிலான பயிற்சிக்கு 30 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாய்வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பயிற்சி முடித்தபிறகு சம்பளமே ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சங்கள் வரை பெறும் வாய்ப்புகள் உள்ளன’’ என்கிறார் ராம்.

உங்களுக்கு அதற்கான தகுதியும், திறமையும் இருப்பதாக நீங்கள் கருதினால், ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது!

‘‘செ ன்னையைத் தாண்டி இரண்டாம் கட்ட நகரங்களில் இருக்கும் திறமைசாலிகளையும் தேடிப்பிடிக்கப் போகிறோம்’’ என்றார் ‘ஸ்கோப் இன்டர் நேஷனல்’ நிறுவனத்தின் சி.இ.ஓ\வான ஸ்ரீராம்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் பி.பி.ஓ பணிகளைச் செய்யும் இந்தத் துணை நிறுவனம், எல்லோரையும் போல பட்டதாரிகள்தான் வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்காமல், பள்ளிக் கல்வியை முடித்த நிலையில் இருப்பவர்களைக்கூட திறமை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறதாம். அதேபோல, திறமை இருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்கத் தயாராக இருக்கிறார்கள்.

காக்டெய்ல்

அதிக எண்ணிக்கையில் ஆட்களை எடுத்து வேலைபார்ப்பதைவிட, திறமையான ஆட்களை சரியான எண்ணிக்கையில் எடுத்தால் போதும் என்பதுதான் ‘ஸ்கோப் இன்டர்நேஷனல்’ திட்டம்!

.டி மற்றும் அத்துறை தொடர்பான

சேவைத் தொழில்களை நம் பெருநகரங்களில் இருந்துதான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கும் இந்தத் தொழில்கள் செல்லலாம். ஒட்டு மொத்தமாகவே புதிய திட்டமிட்ட நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். நேரு காலத்தில் உருவான சண்டிகர் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர, அதற்கு பிறகு வேறு புதிய நகரங்கள் அமைக்கப் படவே இல்லை. இனிமேலாவது இதில் அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்தவேண்டும். அப்படிச் செய்வதன்மூலம், பல நகரங்களில் வேலை வாய்ப்பும், அதை வைத்து நாட்டின் பொருளாதாரமும் பெருகும்.

- சென்னை வந்திருந்த, ‘நேஷனல் அசோஸியேஷன் ஆஃப்
சாஃப்ட்வேர் அண்ட் சர்வீஸ் கம்பெனிஸ்’ (நாஸ்காம்) தேசியத் தலைவர்
கிரண் கார்னிக் பேச்சில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism