Published:Updated:

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

Published:Updated:
தொழில்
‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
 

‘மூளை’தனம்

புதுப்புது ஐடியாக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்


வெறுங்கையால் முழம் போட்டு
கோடிகளைப் பிடித்தவர் தரும் பிராக்டிகல் தொடர்!

ருமுறை முதலீடு செய்துவிட்டு ஆயுள் முழுக்க வருமானம் பார்க்கிற பல தொழில்கள் இங்கே இருக்கின்றன. அதேபோல, ஒருமுறை முதலீடு செய்துவிட்டு, அதிலேயே வெவ்வேறு வகை வருமானம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அங்கேதான் வருகிறது புத்திசாலித்தனம். இதை எல்லா மட்டங்களிலும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி வருமானம் பார்ப்பவர்கள் நம்மைச் சுற்றியேதான் இருக்கிறார்கள்.

காலையில் நம் வீட்டுக்கு பேப்பர் வருகிறது... பால் பாக்கெட் வருகிறது. இரண்டையும் வெவ்வேறு நபர்கள் ஒரே சமயத்தில் நம் வீட்டு வாசலில் வந்து தந்து போகிறார்கள். இதையே பேப்பர் போடுகிற பையன், பால் சப்ளை செய்பவரிடம் ஒரு தொகை வாங்கிக் கொண்டு, பால் பாக்கெட்களையும் சப்ளை செய்ய ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பேப்பர் பையனுக்கு ஒரே லைனில் கூடுதல் வருமானம் தானே!

இப்படி ஒரு வேலையோடு சேர்ந்து கிடைக்கிற இன்னொரு வேலையைச் செய்வதைத்தான், வியாபாரத்திலும் அப்ளை செய்து லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

சென்னை, ரெட் ஹில்ஸை அடுத்த காரனோடையில் ஃபார்ம் வைத்திருக்கிற நடேசன், அயராத உழைப்பாளி. கடின மாக உழைப்பது மட்டுமில்லாமல் தன் தென்னந்தோப்பை, மல்ட்டி பிஸினஸ் களமாகவே மாற்றி வைத்திருக்கிறார். தன் தேவைகள் பலவற்றுக்கும் தானே விவசாயம் செய் கிறார். தென்னைக்குத் தண்ணீர் பாய்ச்ச குளம் வெட்டி நீர் விட்டவர், இந்த குளத்துத் தண்ணீரில் மீன்களை வளர்க்க ஆரம்பித்தார். அந்த மீன்களுக்கு கடும் கிராக்கி வர, வண்ண மீன் விற்பனையைத் துவக்கிவிட்டார்.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

தென்னையில் விளைகிற பொருட்களில் ‘வேல்யூ ஆடட்’ என்பார்களே, அந்த வகையில் எண்ணெய் தயாரித்து, அதில் மூலிகை எண்ணெய் என்ற சிறப்பையும் சேர்த்திருக்கிறார். மூலிகைகளை எதற்கு காசு கொடுத்து வாங்கவேண்டும் என்று அதையும் பயிர் செய்கிறார். தென்னையின் அத்தனை பொருளிலும் காசு வருகிறது. இரு மரங்களுக்கு இடையே இருக்கிற இடத்தில் தென்னை நாற்று போட்டு, அதைத் தனியே விற்கிறார். அதிலும் மீந்த இடங்களில் வாழை, பலா, மா என்று மற்ற கன்றுகளையும் போட்டு ஜமாய்க்கிறார்.

‘வரப்பிலே கவனமாகப் பார்த்து வாங்க... அலங்கார மலர்களை மிதிச்சுடப் போறோம்’ என்கிறார். அழகான அந்தப் பூக்கள் பொக்கே ஷாப்களுக்கு விற்கப்பட்டு, மேலைநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறதாம். சின்னதாக ஒரு இளைப்பாறல் குடில் தெரிகிறது. ஆச்சர்யம்... உள்ளே இரண்டு கம்ப்யூட்டர்கள். ‘என் மனைவி ஏற்பாடு. கொஞ்சம் இடம் இருக்கவே, சுத்தி இருக்கிற பெண்களுக்கு கம்ப்யூட்டர் கத்துக்கிற இடமா மாத்திட்டாங்க. அவங்களும் சுய உதவிக் குழுவிலே இருக்காங்க!’ என்கிற நடேசன், மாம்பழ ஜூஸை நீட்டுகிறார். ‘நம்ம தோட்டத்து ஸ்பெஷல் பழம். இந்த வருஷம் விளைச்சல் நல்லா இருந்ததுங்க..!’ என்கிறார்.

ஒரு தோப்பில் இத்தனை விஷயங்கள் சாத்தியமா..! என்று வியப்போடு சுற்றி வந்தால் பளீரென அடிக்கிறது மின்னல். ‘மொத்த தோப்புலயும் இங்கே மட்டும்தான் வெயில் வரும். அதான், ஒரு சூரிய அடுப்பு போட்டுட்டேன். இதிலே ஒரு மணி நேரம் குக்கரை வெச்சா, தளதளனு அரிசி வெந்து சாதமாகிடுது. சுவையும் நல்லா இருக்கு. குக்கர் சீக்கிரம் சூடாக, மேலே கறுப்பு பெயின்ட் அடிச்சுட்டேன். ரெண்டு மணிநேரம் வேகற சாதம், ஒரே மணி நேரத்திலே வெந்துடுது!’ என்கிறார் நடேசன், நவீன விஞ்ஞானியாக.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

மூளைக்கு ஓய்வே கொடுக்காமல், தன் 26 ஏக்கர் இடத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்று யோசித்திருக் கிறார் பாருங்கள்... அதுதான் வெற்றி ஃபார்முலா. தென்னந் தோப்பு... சுகமாக காற்று வருகிறது என்று கட்டிலைப் போட்டு, காலாட்டிக்கொண்டு கதை பேசாமல் துறுதுறுவென சிந்தித்துக்கொண்டே இருக்கிறார். அடுத்தகட்டமாக தென்னை மரத்தில் மிளகு கொடியைப் படரவிட்டு விவசாயம் செய்யும் திட்டமும் வைத்திருக்கிறார் நடேசன்.

தி.நகரில் இருக்கிற கடைகளையே எடுத்துக்கொள்ளுங் களேன். ‘ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் துணிகள் விற்க ஆரம்பித்து, மக்களின் தேவைகளை உணர்ந்து கேன்டீன், செருப்பிலிருந்து பருப்பு வரை விற்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளி இடங்களைவிட விலை குறைவு என்பதால், ஏதோ ஒன்றை வாங்க வருகிறவர்கள், பின்னாளில் பயன்படும் என்று வாங்கவேண்டும் என்று வாங்கத் திட்டமிட்டு வராத இன்னொரு பொருளையும் வாங்கிச் செல்கிறார்கள். இது, ஒரு புது உத்திதானே!

இதை உங்கள் விஷயத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் ஒரு வாடகை இடத்தில் சிறிய தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதில் இன்னொரு தொழிலுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறதா..? அதில் இறங்க, என்ன தேவைப்படும். கடைக்கான அடிப்படை செலவுகள் கரன்ட், பராமரிப்பு என்று ஏற்கெனவே நீங்கள் செய்வது போக கூடுதலாகத் தேவைப்படுவது என்ன..? புதிய செக்ஷன் ஒன்று துவங்கும்போது, அந்தப் பொருளுக்கான சிறிய அளவு முதலீடு மட்டும் இருந்தாலே போதும். கடையின் மேல் இருக்கிற நம்பிக்கையில் பல மொத்த வியாபாரிகளும் தங்கள் பொருளை நம்பி உங்களுக்குக் கடனாகத் தரக்கூட முன்வருவார்கள். தேவைப்பட்டால் அதைப் பார்த்துக்கொள்ள ஒரு பணியாளைப் போட்டு சம்பளம் தரவேண்டி இருக்கும். ஒரே இடத்தில் இரட்டை வருமானம் வர ஆரம்பித்து, முந்தைய தொழிலுக்கு இணையான வருமானத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிடுமே!

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

இந்த யோசனை தொழிலுக்குத் தொழில் மாறுபடும். சில்லறை விற்பனையா, சேவைத் தொழிலா என்பதைப் பொறுத்து இதற்கான யுக்தியை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.

என் நண்பர் ஒரு பிரின்டிங் பிரஸ் வைத்திருக்கிறார். காலையில் ஒன்பது மணிக்கு பிரஸ்ஸைத் திறப்பார். எது எப்படியானாலும் இரவு ஒன்பது மணிக்கு மூடிவிடுவார். இது, பல வருடப் பழக்கமாக, பாலிசியாகவே அவர் கடைப்பிடிக்கிற பழக்கம். சிலநாட்கள் முன்பு எதேச்சையாக அவரைச் சந்தித்தபோது, ‘எப்படிப் போகுது பிரஸ்..?’ என்றேன். ‘நல்லாப் போகுது... லேட்டஸ்ட் டெக்னாலஜி எது வந்தாலும் இறக்கிடறேன்ல! ரெகுலர் கஸ்டமர்களுக்கு சர்வீஸ் பண்ணவே நேரம் சரியா இருக்கு. எங்க ஆர்டர்கள் பலதை வெளியே குடுத்து, சின்னச் சின்ன ஆட்கள் பலரையும் டெவலப் பண்ணிட்டிருக்கேன். இன்னொரு யூனிட் போட நல்ல இடமா தேடிட்டிருக்கேன்’ என்றார்.

உடனே சொன்னேன். ‘எதுக்கு இன்னொரு யூனிட்... எதுக்கு தனி மெஷின்..? இப்போ இருக்கிற மெஷினுக்கே நல்ல கெப்பாசிட்டி இருக்குதே! அப்படி இருக்கும்போது, நல்ல திறமையான ஓர் ஆளைப் போட்டு நைட் ஷிஃப்ட் ஓட்டலாமே! ஆட்கள் சம்பளம், மெஷினுக்கான கரன்ட் செலவு, இந்த ரெண்டுதானே... இதுக்காக நீங்க கூடுதலா பண்ணப் போற செலவு. வர்ற ஆர்டர்களை எடுத்து கூடுதல் ஷிஃப்ட் பண்ணும்போது உங்க மாத வருமானம் அப்படியே டபுள் ஆகுமே! இதுக்கு நீங்க கையை விட்டு எதுவுமே கொடுக்க வேண்டாம். ஆட்கள் சம்பளமாகட்டும்... மத்த செலவுகளாகட்டும்... மாத முடிவில்தான் தரப்போறீங்க. அது உங்க நைட் ஷிஃப்ட்ல வர்ற வருமானத்திலே இருந்தே கொடுத்துட முடியுமே! இந்த இரண்டாவது ஷிஃப்ட்ல வர்ற வருமானத்தை அப்படியே எடுத்து வெச்சா, அது உங்க புது யூனிட்டுக்கான முதலீடா மாறி நிற்கும் இல்லையா!’ என்றேன். உற்சாகமாகக் கிளம்பிப் போனார்.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

இப்படி நமக்குள் இருக்கிற யானை பலம் தெரியாமல் ‘அமைதியாக, சந்தோஷமான வருமானம் வருகிறதே!’ என்று முடங்கி விடுகிறோம். வியாபாரத்தில் இருக்கிறவர்கள் எவருக்கும் ‘போதும் என்ற குணம்’ எப்போதுமே வரக்கூடாது. அடுத்து என்ன, அடுத்து என்ன..? என்று மனசு முழுக்கத் தேடலோடு, புதிய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு புகுந்து வர வேண்டும்.

வாட்டர் சப்ளை பண்ணுகிற நிறுவனத்தின் வேன் ஒன்று, கேன்களை அடுக்கி கடை, கடையாக இறக்கிக்கொண்டே போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ‘இது மட்டும்தானா..? இதிலேயே கூடுதலாக கடைக்குப் பயன்படுகிற ஒரு பொருளைக் கொண்டு சென்றால் என்ன..?’ என்று கேட்டால், ‘இதுக்கே இடம் டைட்டா இருக்கு. இந்த வெயிட்டுக்கு மேலே என்ன ஏத்த முடியும்..?’ என்பார். நியாயமான வாதம்தான். வெயிட்தானே ஏற்றக்கூடாது. எடை குறைந்த பொரி, சிப்ஸ் போன்ற தயாரிப்புகளை சப்ளை செய்தால், ஒரே போக்குவரத்து செலவில் கூடுதல் வருமானம் பார்க்கமுடியும் இல்லையா..? இப்படி நம் செலவுகளில் அதிகபட்சமாக ஆகிற இனம் எது என்று பார்த்து, அதில் இரட்டை வருமானப் பயன்பாடாக மாற்ற முடியுமா என்று சிந்திக்கலாம்.

நாள் முழுக்க பிஸினஸ் என்று ஓடிக் கொண்டே இருக்கிற நீங்கள், அதன் எதிர்காலம் பற்றியும் உங்கள் பிஸினஸுக்குள் மறைந்து கிடைக்கிற லாபத்தையும் தேடிக் கண்டடையுங்கள். மற்றவர்களைவிட அதிக வளர்ச்சியும் வியாபார விருத்தியும் அடையுங்கள். ஆல் த பெஸ்ட்!

முடிவிலிருந்து தொடங்குங்கள்!

ரங்கு நிறைந்த விழா அது. கடைசி இருக்கையில் அமர்ந்த ஆசாமிக்கு மேடையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மேடையும் கொஞ்சம் மசமசப்பாகத்தான் தெரிந்தது. ஒரு வெற்றியடைந்த தொழிலதிபருக்கான பாராட்டுக் கூட்டம் அது என்பது மேடையில் கூடியிருந்த பலரது பாராட்டு உரைகளில் இருந்து தெரிந்தது.

பெரிய கோடீஸ்வரரான அந்தத் தொழிலதிபர், ‘எப்படியெல்லாம் தன் புத்தி சாதுர்யத்தாலும் வியாபார நுணுக்கத்தாலும் மேலேறி வளர்ந்துவந்தார்... கடும் உழைப்பால் முன்னேறிய அவரால் கைதூக்கி விடப்பட்டவர்கள் எத்தனை பேர்... புதிய பொருட்கள் பலதின் அறிமுகம்... நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அவரது பங்கு’ என்று வாழ்த்தியவர்களின் உரையைக் கேட்கக் கேட்க... கடைசி இருக்கை ஆசாமிக்குள் ஒரு தெளிவு. ஒவ்வொருவரும் பேசப் பேச மேடை தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பாராட்டுக்கு ஆளான தொழிலதிபரின் முகம்கூட பளிச்சென்று தெரிந்தது. அட, அப்படியே அந்த ஆசாமியின் முகம். தன்னைத்தான் அவர்கள் பாராட்டுகிறார்களா என்று அசந்துபோனார் ஆசாமி!

எப்போதுமே தான் என்னவாக பேசப்பட வேண்டும் என்ற க்ளைமாக்ஸிலிருந்து சிந்திக்க ஆரம்பியுங்கள், என்பதற்காகச் சொல்லப்படும் கதையின் உல்டா இது.

ஜெயிக்கும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு வியாபார ஓட்டத்தை ஆரம்பியுங்கள். ஜெயிப்பது நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism